(Reading time: 7 - 13 minutes)

03. காதல் உறவே - தேவி

ராம் மறுநாள் காலை எழுந்தவுடன் மொபைலில் காலை வணக்கம் மைதிலிக்கு அனுப்பினான். பிறகு உடற்பயிற்சி, குளியல் எல்லாம் முடித்து விட்டு, அலுவலகத்திற்கு கொஞ்சம் தாமதாகத் வருவதாகத் தெரிவித்து விட்டு கீழே வந்தான். எல்லோரும் உணவு மேஜையில் அவனுக்காகக் காத்திருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் காலை வணக்கம் தெரிவித்து விட்டு, சாப்பிட ஆரம்பித்தான். அம்மா, அத்தையைப் பார்த்து “நீங்களும் சாப்பிடுங்கள். பிறகு நாம் தாத்தா அறையில் பேசலாம்.” எனவும், அவர்களும் அமர்ந்தனர். எல்லோர் மனதிலும் கேள்வியே. சந்தோஷ் கிட்டத்தட்ட ஊகித்திருந்தான். உணவு முடிந்த பின், முக்கியமான விஷயம் என்றால் குடும்ப உறுப்பினர் அறையில் பேசுவது வழக்கம். அதன்படி தாத்தா அறையில் அனைவரும் அமர்ந்தனர்.

முதலில் தாத்தா ராமிடம் “ சொல்லுப்பா. நீ யாரையாவது காதலிக்கிறாயா”? என்றார்.

ராம் “முதலில் எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். என் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு இல்லாமல் போயிற்று. இது திட்டமிட்டு நடந்ததல்ல. ஆனால் எனக்கு மைதிலியைப பிடித்திருக்கிறது..” என்றான்.

Kathal urave

எல்லோருக்கும் முதலில் தோன்றியது பெயர்ப் பொருத்தமே. இருந்தாலும் ஜெகந்நாதன் கேட்டார். “அவள் யார்? எப்படி எவ்வளவு நாளாகத் தெரியும் ?”

“அப்பா, அவள் நமக்கு நேற்று நுஎநவெ ஆயயெபநஅநவெ நடத்திக் கொடுத்த அலுவலகத்தில் வேலை செய்கிறாள். மனித வளமேலாண்மை படித்திருக்கிறாள். எனக்கு கடந்த இரண்டு நாட்களாகத் தான் தெரியும்” எனவும் எல்லோரும் திகைத்தனர்.

அத்தை “ஏன் ராம் அதற்குள் அவளைப் பற்றி என்ன தெரியும் என்று திருமண முடிவை எடுத்திருக்கிறாய்?”

ராம் “ஒருவரைப் பார்த்தாலே ஒரளவுக்கு கண்டுபிடிக்க முடியும் அத்தை. அந்த ராமனுக்கும் சீதைக்கும் ஒரு பார்வையே போதுமெனும் போது, இரண்டு நாட்கள் எனக்கு போதாதா? மேலும் அவளிடம் எனக்குப் பிடித்ததே அவளுடைய இயல்பான பேச்சும், அக்கறையும் தான் அத்தை” என்றான்.

கௌசல்யா ராமின் அம்மா “ஆனால் அது மட்டும் போதுமா?

ராம் “நான்தான் சூர்யா குரூப்பின் எம்.டி என்பதே தெரியாமல், என்னிடம் பேசினாள். அது மட்டுமில்லை எந்த பெண்ணைப் பார்த்தாலும் ஏற்படாத ஓர் உரிமை, உணர்வு எல்லாம் இவளிடம் ஏற்பட்டது.”

அப்பா “ இருந்தாலும் இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம் ராம்” என்றார்.

ராம் “அப்பா, நேற்று இரவு தாத்தா கேட்டபோது என்னையறியாமல் என் மனைவியாக அவள் முகமே தோன்றியது. அதைப் பற்றி யோசிப்பதற்குதான் நான் இன்று காலை வரை அவகாசம் கேட்டேன். எனக்கு அவளைத் தவிர யாரும் என் வாழக்கைத்துணையாக வரமுடியும் என்று தோன்றவில்லை.” என்றான்.

ஜெகந்நாதன் தன் அப்பாவைப் பார்த்து “என்னப்பா சொல்கிறீர்கள்?”என்றார்.

சூர்ய நாராயணன் எல்லோரையும் பார்த்து விட்டு, “ராம் எல்லோருக்கும் இரட்டை மனதாக இருக்கிறது. இந்த விஷயத்தைக் கொஞ்சம் ஆறப் போட்டுவிட்டு, ஒரு ஆறு மாதம் கழித்துப் பார்க்கலாமா?” என்றார்.

அப்போது ராம் சற்றுத் தயங்கி விட்டு “தாத்தா, உங்கள் எல்லோருக்கும் அவளை அறிமுகப்படுத்துகிறேன் பார்த்து விட்டு சம்மதமென்றால் , இந்த மாதமே திருமணம் நடத்திக் கொடுங்கள் தாத்தா”

“ஏன்பா ? நீ எதிலும் அவசரப்பட மாட்டாய். இதில் அவசரம் காட்டுகிறாயே” என்றார்.

அப்போது ஜெகந்நாதனும் கௌசல்யாவும் ஒருவரையொருவர் பார்த்து விட்டு, “அப்பா, நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் சதாபிஷேக நாள் பார்ப்பதற்கு ஜோசியரிடம் சென்ற போது ராமின் குரு பலம் பார்த்தோம். அவனுக்கு இன்னும் இரு மாதங்களில் திருமணம் நடைபெறும் என்றும். தவறினால் ஐந்து வருடம் தள்ளிப் போகும் என்றார் ஜோசியர். இப்பொழுது ராம் சொல்வதைப் பார்த்தால்… என்று இழுத்தார் ஜெகந்நாதன்.

தாத்தா சற்று நேரம் யோசித்து விட்டு “ராம், நாம் எப்பொழுது அவர்கள் வீட்டிற்குச் சென்று பெண் கேட்கலாம்” என்றார்.

ராம் மகிழ்ச்சியுடன் “ தேங்க்ஸ் தாத்தா, ஆனால் அவள் சம்மதம் நான் இன்னும் கேட்கவில்லை. இன்று கேட்டுவிட்டு அவளை நம் வீட்டிற்கு அழைத்து வருகிறேன். நீங்கள் எல்லோரும் பார்த்த பிறகு இன்றே முடிவு செய்து விடலாம். “ என்றான்.

அதைக் கேட்ட அவன் பாட்டி “ ஏன்பா அவள் பெற்றோரிடம் பேச வேண்டாமா?”

தற்கு ராம் “ அவளுக்கு யாருமில்லை பாட்டி. அப்பா சிறு வயதிலேயே தவறிவட்டார். அப்பா இறந்த பிறகு அவர்வழிச் சொந்தங்கள் விட்டுப் போய்விட்டார்கள். அம்மா ஒரே பெண். அவர்களும் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்கள். இப்போது விடுதியில் இருக்கிறாள்” என்றான்

எல்லோரும் திகைத்தனர். அத்தை “யாருமில்லாதவள் என்றால் நம் குடும்பத்தோடு ஒத்து வருவாளா ராம்?” என்றாள்.

ராம் “ நான் திருமணம் பற்றி அவசரமாக முடிவெடுத்ததற்கு அதுவும் ஒரு காரணம். அவளுக்கு என்று யாருமில்லை. அவள் என் வருங்கால மனைவி என்றான பிறகு அவளைத் தனியே விட மனமில்லை. நான் பார்த்தவரை அவள் நம் விசேஷத்தில் நம்முடைய உறவுகளை ஏக்கமாகப் பார்த்தாள். அதனால் நிச்சயம் நம் குடும்பத்தோடு ஒட்டிக் கொள்வாள். நீங்கள் யாரும் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டீர்கள். அதைத் தவிர அவளிடம் குறைபட எதுவும் இல்லை. நான் இன்றே அவளை அழைத்து வருகிறேன்” என்று கூறிவிட்டு அவன் வெளியேறிவிட, குடும்பத்தினர் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

சந்தோஷ் ராமின் பின் சென்று “ஹேய் ராம் !! ராமாயணம் எல்லாம் பிச்சு உதறிட்ட. ஆனாலும் மச்சான் உன்னை மாதிரி ஒரு சாமியார் கிட்டருந்து இப்படி ஒரு வேகமா? எப்பா ………” என்று கலாய்த்தான். அவன் மண்டையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கிளம்பினான் ராம்.

பாட்டி “ராம் லேசில் பிடிவாதம் பிடிப்பதில்லை. பிடித்தால் இப்படித்தான். “ என பெருமூச்சோடு அனைவரும் அவர்கள் வேலையைக் கவனிக்கச் சென்றனர்.

ராம் வீட்டினரிடம் பேசிவிட்ட சந்தோஷத்தில் கிளம்பியவன், பிற்பகல் வரை அலுவலக வேலை எல்லாம் முடித்து விட்டு, மாலை 4 மணி அளவில் மைதிலிக்கு போன் செய்தான். மைதிலி சற்றுத் தயங்கி விட்டு பிறகு எடுத்தாள்; “ஹலோ”

“மைதிலி நான் உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும்.”

“பேசுங்கள்.” என்றாள் சுருக்கமாக.

“போனில் இல்லை நேரில். உன்னால் ஒரு இரண்டு மணி நேரம் பர்மிஷன் சொல்லிவிட்டு வரமுடியுமா” என்று கேட்டான்.

“கட்டாயம் நேரில் தான் பேசியாக வேண்டுமா” என்றாள். ராம் “ஆமாம்”; என்றான்

“சரி”

“உன்னால் வள்ளுவர் கோட்டம் பூங்காவிற்கு வரமுடியுமா”,

“சரி. நான் என் வண்டியில் வந்து விடுகிறேன்.”

“வேண்டாம். ஆட்டோவில் வந்துவிடு. அங்கிருந்து நான் உன்னை டிராப் செய்கிறேன்”

“சரி. வைக்கிறேன்”

மைதிலி யோசனையோடு உள்ளே மேலாளரிடம் சென்று அனுமதி வாங்கிவிட்டுக் கிளம்பினாள். வழியெல்லாம் அவளுக்கு ஒரே யோசனை. முன்தினம் அவனைப் பற்றித் தெரிந்த பின்பு அவனுடன் பேசுவதற்கு அவளுக்குத் தயக்கமாக இருந்தது. எதற்கு வரச் சொல்கிறான் என்று யோசித்தாள். சரி போனால் தெரிகிறது என்று விட்டாள்.

அங்கே ராம் அவளுக்காக் காத்திருந்தான். அவள் உள்ளே வந்ததும் அவளைப் பார்த்துவிட்டு, அவளருகே வந்தவன் அவளை அழைத்துக்கொண்டு சற்று ஆள்நடமாட்டமில்லாத இடத்தில் இருவரும் அமர்ந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.