(Reading time: 29 - 58 minutes)

07. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

தவிற்கு மிக அருகில் அமர்ந்திருந்தவளை நோக்கி கண்சாடையால் உள்ளே வா என்றான் ஆதிக். என்ன செய்யப்போகிறான் என புரியவில்லை ஆயினும் அவன் சொன்னதைச் செய்தாள் ரேயா. அறையின் அடுத்த பகுதிக்கு சென்றவன் அவசரமாக அவன் நேற்று அணிந்திருந்த சட்டையை எடுத்து அணிய தொடங்கினான்.

இதுவரை அவள் அவனைப் பார்த்திருந்த ஒவ்வொரு முறையும் அவள் ரசனையை கவர்ந்த விஷயங்களில் ஒன்று அவனது ஷர்ட்ஸ். ஒவ்வொன்றிலும் எதோ ஒரு தனித்தன்மை இருக்கும், அதோடு அது அவனுக்கு அபாரமாய் பொருந்தும்.

புருவம் உயர்த்தி கேள்வி போல அவனது ஒரு பார்வையில் தான் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உறைக்க, அவசரமாக பார்வையை திருப்பினாள். அங்கும் கண்ணாடியில் அவன் தான் தெரிந்தான். இவள் முக வெட்கம் அவனுக்கு தெரியுமோ?

Eppadi solven vennilaveஇந்த சூழ்நிலையிலும் இவள் மனம் எங்கு செல்கிறது?

“அங்கிள் தூங்குவாங்க, வந்திருக்கிறது வேற யாரோ, இன்நேரம் வீட்டிக்கு சர்வன்ட்ஸ் யாராவது வந்து இருப்பாங்களா? நீ வந்ததைப் பார்த்து உனக்கு காஃபி எதாவது கொண்டு வந்திருக்கலாம்..இல்லனா அது புனி…” அவளிடம் மெல்லிய குரலில் வினவினான்.

அவசரமாக கடிகாரத்தைப் பார்த்தாள். “பானு அக்கா வந்திருப்பாங்க…பட் இது என் ரூம் கிடையாதே…”

“ஃஸ்டில் நீ இப்பதான உள்ள வந்த அதைப் பார்த்திருப்பாங்க….நான் உள்ள இருக்கிறதுதான் யாருக்கும் தெரியாது…..சோ நீயே இங்க இருந்து அப்பா ஒரு நிமிஷம்னு சொல்லு வந்திருக்கவங்க சொல்ற பதில்ல அடுத்து என்ன செய்றதுன்னு பார்க்கலாம்…”

“ அப்பா ஒரு நிமிஷம்..” அவன் சொன்னதை செய்தாள். இதயம் படபடக்க

“சின்ன பாப்பா….நான் தான் பானு….காஃபி கொண்டு வந்துருக்கேன்…வீட்டுக்கு விருந்தாள் போல…”

அவன் முகத்தைப் பார்த்தாள்.

“ஆமா, அத்தானும் அண்ணியும் வந்திருக்காங்க, நீங்க காஃபியை கீழ டைனிங் டேபிள்ள மூனு பேருக்குமா வைங்க… சேர்ந்தே சாப்டுறோம்…” அவன் உதடசைக்க அதை இவள் சத்தமாக சொல்லி முடித்தாள். அப்புறம் தான் புரிந்தது இவள் அவனை அத்தான் என சொல்லி இருக்கிறாள் என. பானு அப்பாவிடம் உளறிவிட்டால்?

மிரண்டு போய் அவனைப் பார்த்தாள். “நீங்க நிஜமாவே எனக்கு அத்தானா?” கேட்கும் போதே அழுகை வருகிறது அவளுக்கு.

“அப்போ 1000 தடவை இப்போஷிஷனைப் பத்தி என்ன நினச்ச நீ?”

இதற்கு என்ன பதில் சொல்வாள் அவள். அதோடு இதற்கு மேல் நின்று பேசிக் கொண்டு இருக்கவும் வழி இல்லை. அவசரமாக சென்று கதவைத் திறந்தாள். பானு தரை தளம் நோக்கி செல்வது தெரிந்தது. அவள் பார்வைக்கு மறையட்டும் என நிமிட நேரம் நின்றாள்.

ரேயாவை கடந்து எதிர் அறைக்கு சென்றான் ஆதிக். அவன் சென்றதும் இவளுக்கு இந்த அறையைவிட்டு வெளியேற தேவை இல்லை என தோன்றிவிட்டது.

அறைக்குள் சென்று மீண்டுமாய் கதவை தாழிட்டுக் கொண்டாள். அவன் வாசம் சுவாசமாய்…..ஏனோ உற்சாகமாய் இருந்தது. அப்படியே பின் புறமாக மெத்தையில் சரிந்தாள். இரு கைகளையும் இரு புறமும் நீட்டினாள். ஒரு கையில் தலையணையும் மற்றொரு கையில் ஒரு சிறு பொருளும் அகப்பட்டது.  அவனது மொபைல்.

ஆர்வமாய் அதை எடுத்தாள். கதவின் தாழ்பாளிற்கு சென்று திரும்பியது பார்வை.

என்ன செய்யலாம் இப்பொழுது? ம்கூம் அது அவன் பெர்சனல்….நோ நோண்டிஃபையிங்..எதோ எங்கோ சொல்ல…ஒரு நொடி தயங்கிவள் இது அவன் மொபைல்தானான்னு நான் வெரிஃபை செய்ய போறேன்…கண்டிபிடித்த சமாதானத்தை சொல்லிக் கொண்டே அவன் மொபைலின் போட்டோ கேலரிக்குள் சென்றாள்.

நிறைய நேச்சுரல் சீன்ஸ்…..இப்பொழுதுதான் எடுத்திருக்கிறான். அவன் பேரண்ட்ஸ், அவன் சிஸ்டர்…புனிதா…அப்புறம் யு எஸ் போட்டோஸ்…யார் யரோ இருந்தனர். அவன் தான் எதிலும் இல்லை.

அதை எல்லாம் பார்த்து முடித்தபின்பு இன்னுமாய் அவள் குடைய தொடங்கிய நேரம் அந்த ஃபோல்டர் கண்ணில் பட்டது. அதற்குள் ஒரு போட்டோ. ஷாலுவின் அறையில் இவளும் ஷாலுவும் பேசி சிரிக்கும் ஒரு போட்டோவை ஏ4 ஷீட்டில் ப்ரிண்ட் எடுத்து ஒட்டி வைத்திருக்கிறாள் ஷாலு. அதை அவன் தன் மொபைலில் பதிந்து வைத்திருந்தான்.

ஜிவ்வென்று இருந்தது ரேயாவிற்கு. அடுத்து….இவள் யோசிக்கும் முன் கதவு தட்டப்படும் சத்தம்…..”ரேயு…..திரும்பவும் தூங்கிட்டியா நீ…?” புனிதாவின் குரல். அடித்து பிடித்து எழுந்தவளுக்கு அப்பொழுதுதான் உறைக்கிறது அறையில் வெளிச்சம். விடிந்து எவ்வளவு நேரமானதோ…? கடிகாரத்தைப் பார்க்கிறாள். கிட்ட தட்ட 2 மணி நேரமாக அவன் மொபைலுடன் அவள் நேரம் கடத்தி இருக்கிறாள். கடவுளே….

“இ..இதோ வர்றேன்…” மூனு பேரும் டேபிள்ல காஃபி…சொன்ன எல்லாம் ஞாபகம் வர அச்சச்சோ என்ற உணர்வுடன் அவள் சென்று கதவை திறந்தால் அங்கு அவளை ஒரு விதமாய் பார்த்தபடி முன் நின்றது ஆதிக். அவன் கண்களை சந்திக்க தயங்கி பின்னால் பார்த்தால் புனிதா. இவள் கோலத்தைப் பார்த்த புனிதா வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு கடந்து சென்றுவிட்டாள்.

அவனோ தன் கையை நீட்டினான். அசடு வழிந்தபடி அவன் மொபைலை அவனிடம் கொடுத்தாள். “சீக்கிரம் கிளம்பி வா….குற்றாலம் மலைக்கு மேல போறோம்…” சொல்லிவிட்டு சென்றுவிட்டான் அவன்.

அவசரமாக் குளித்து கிளம்பி கீழே வந்தாள். அப்பா உட்பட அனைவரும் டைனிங் டேபிளில். ஒரு கணம் யோசித்தவள் புனிதா அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். உணவைப் பற்றி தொடங்கிய பேச்சு மெல்ல  சமையல் கற்றுக் கொண்ட கதை, தானே சமைத்து சாப்பிடும் இப்போதைய விடுதி வாழ்வின் சுவாரஸ்யங்கள் என ஆதிக்கை சுற்ற அப்பாவோ அவர் கல்லூரி காலத்தில் விடுதியில் நடந்த உணவு வேளை கலவரங்களுக்கு அதை திருப்பினார். கல கலத்தது இவர்களது உணவு மேஜை.

தன் வாழ்வின் மிக முக்கியமான இரு ஆண்களின் உரையாடலில் தன்னை தொலைத்திருந்தவளுக்கு உணவு உட்செல்லாமலே பசி தொலைந்திருந்தது.

மலையிலும் இவர்கள் நால்வர் ஒரு குழுவாகவும் முன்னும் பின்னும் இவர்களது  பாதுகாப்பிற்காய் வந்த இருவரும், அவர்களில் முன் செல்பவரிடம் பேசியபடி ஒரு வன துறை அதிகாரி எனவும் நடக்க தொடங்கிய போது படு உற்சாகமாக இருந்தது ரேயாவிற்கு.

ஓரளவு உயரம் கடந்தபின் மிகவும் குறுகிப் போனது பாதை. ஒருவராக நடந்தால் இடைஞ்சல் இன்றி நடக்கலாம். இருவராக செல்வதென்றால் கூட ரொம்பவும் கஷ்டம். ஒருவர் பின் ஒருவராக நடக்க தொடங்க, சுற்றிலும் தெரிந்த உயர்ந்த மலை முகடுகளை வேடிக்கைப் பார்த்தபடி நடந்த ரேயாவின் காலை கிழித்தது பக்கவாட்டிலிருந்து நீண்டிருந்த ஓர் முள் குச்சி.

இவளது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…ல் அதை கவனித்த அப்பா இவள் பக்கவாட்டில் நடக்க தொடங்கினார். அது அப்பாவின் சுபாவம் தான். ஆனால் இம்முறை இவள் கையையும் பற்றிக் கொண்டார். மலையின் உயரம் காரணமாக இருக்கலாம். அப்பா முன்னெச்சரிக்கை திலகமாயிற்றே!!

ஆனால் இவளோடு பேசியபடி நடக்க தொடங்கினார். முதலில் அவள் காலில் கிழித்த குச்சியைப் பற்றி தான் தொடங்கியது பேச்சு. ஆனால் அது எப்பொழுது எப்படி என அறியாமலே அவர்களது பேச்சு அவர்களது குடும்ப தொழிலைப் பற்றி திரும்பி இருந்தது. அடி ஆழம் வரை அதைப் பற்றி மகளிடம் விளக்காவிட்டாலும் புரிந்து கொள்ளும் அளவிற்கு சொல்லிக் கொண்டு வந்தார் ராஜ்குமார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.