(Reading time: 8 - 15 minutes)

05. காதல் உறவே - தேவி

றுநாள் ராம், மைதிலி இருவருமாகச் சென்று மைதிலி சேர்மனுக்கு பத்திரிகை கொடுத்தனர். பின் ராம் கிளம்பி விட மைதிலி அலுவலகத்தில் பத்திரிகை கொடுத்துவிட்டு அன்று வங்கிக்குச் சென்று அவள் டெபாசிட்டை செக்காக மாற்றி எடுத்துக் கொண்டாள். மைதிலியின் அப்பாவுடைய வேலை அவள் அம்மாவிற்கும் கிடைத்ததால் ஓரளவு பொருளாதார  சிக்கல் இல்லாமல் தான் மைதிலி இருந்தாள்.

பின் முதல் நாள் ராமின் அம்மா கொடுத்த புடவை, பிளவுஸ் எடுத்துக் கொண்டு டெய்லரிடம் கொடுத்து விட்டு மாலை 5 மணி அளவில் கௌசல்யாவிற்கு போன் செய்து வரலாமா என்று கேட்டாள். அவள் ஆட்டோவில் சென்றபோது ராம் உட்பட அனைவரும் வந்திருந்தனர். அவள் உள்ளே செல்லும் போது ராம் ஹாய் என்று எழுந்து வந்து அவளை அழைத்துக் கொண்டு சென்றான். பெரியவர்கள் வாம்மா என்க, சின்னவர்கள் அனைவரும் ஹாய் என்றனர்;. அவள் அத்தை சிற்றுண்டி காபி எடுத்து வர அனைவரும் டிபன் முடித்தனர். அன்றைய திருமணம், மற்றும் அலுவலகம் தொடர்பான வேலைகளைப் பற்றி பேசி முடித்து விட்டு, சற்றுத் தயங்கி மைதிலி தாத்தாவிடம்,

“தாத்தா எனக்குத் திருமணம் எடுத்துச் செய்வதற்கு யாருமில்லை. ஆனால் அம்மா திருமணத்திற்கு என்று டெபாசிட் செய்திருந்தார்கள். அதை செக்காக மாற்றி எடுத்து வந்தேன். அப்படியே என்னுடைய சேமிப்பில் ஒரு ஐம்பதினாயிரம் ரூபாயும் செக்காக வைத்துள்ளேன். இதை திருமணத்திற்கு என் சார்பாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள். எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்தனர். தாத்தா ஐந்து நிமிடம் யோசனை செய்து விட்டு

Kathal urave“சரி கொடும்மா” என்றார்.

ராம் ஏதோ சொல்ல வர, தாத்தாவும், அப்பாவும் தடுத்துவிட்டனர். மைதிலி தாத்தாவிடம் செக்கைக் கொடுத்தாள். பின் எல்லோரையும் பார்த்து “ என்னைத் தவறாக எண்ண வேண்;டாம். என் அருகில் பெரியவர்கள் யாருமில்லை. என் அப்பா அம்மாவின் ஆத்ம திருப்திக்காகவும், என் திருப்திக்காகவும் ஏற்றுக் கொள்ளுங்கள் ப்ளீஸ்” என்றாள்.  எல்லோரும் தலையசைத்தனர்.

பிறகு ஹாஸ்டலுக்குக் கிளம்பினாள். சாப்பிட்டு விட்டு போகச் சொல்ல, அவள் மறுத்து விட்டாள். அவளை கொண்டு விட கிளம்பியவன் முகத்தைப் பார்த்தவள்

“ராம் கோபமா?” என்றாள்

“உன்னிடம் யாரும் பணம் கேட்டார்களா?”

“இல்லைதான் ஆனால் … என்று இழுக்கவும், ராம் சரி சரி விடு என்றான். பிறகு ஹாஸ்டலில் இறக்கி விட்டு , உனக்கு பாஸ்போர்ட் இருக்கிறதல்லவா என்று கேட்டான். அவள் தலையசைக்கவும் நாளை வருகிறேன். எடுத்துக் கொடு என்று கூறி விட்டுக் கிளம்பினான்.

ங்கே வீட்டிற்குச் சென்றவன், தாத்தாவிடம்  “ஏன் தாத்தா அதை வாங்கினீர்கள்”

“நான் வாங்க வில்லை என்றால், அவளால் முழு மனதுடன் திருமணத்தில் சந்தோஷப்பட முடியாது. இந்தா செக்கை வாங்கிக் கொள்;” என்றார்.

பிறகு தாத்தாவிடம் “தாத்தா திருமணம், வரவேற்பு முடிந்தபின் வேறு எதுவும் வேலை இருக்கிறதா? என்று கேட்டான்.

அவன் தங்கை “என்ன அண்ணா? ஹனிமூன் டிக்கெட் புக் பண்ணணுமா? என்றாள்.

ராம் “ இல்லை வாயாடி. நம் பேமிலி டூர் 10 நாளில் புக் பண்ணிருக்கோமே? மறந்து விட்டதா? என்றான்

அதற்குள் அவன் அம்மா “ஹேய்… அது எப்படி இப்போ போக முடியும்.? நீ முதலில் ஹனிமூன் எல்லாம் போய் விட்டு வா… 2 , 3 மாதங்கள் கழித்துப் பார்க்கலாம்.’ என்றார்.

“ஏன் .. மாமா , அப்பா, நான் எல்லோரும் அந்த 10 நாள் வேலை எல்லாம் ஒதுக்கி விட்டிருக்கிறோம். தாத்தா, பாட்டியும் அதனால் தான் ஒரு மாதம் இருக்குமாறு வந்திருக்கிறார்கள். பிறகு எல்லாம் கஷ்டம்”

“மடையா.. கல்யாணம் ஆகி முதலில் ஹனிமூன் போகாமல், பேமிலி டூரா போவார்கள் அவள் என்ன நினைப்பபள்”

அதெல்லாம் ஒன்றும் நினைக்க மாட்டாள். நீங்கள் நான் முதலில் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள்

பாட்டி “திருமணம் முடிந்ததும் குலதெய்வம் கோவிலுக்குப் போய் வந்தபின் தான் மறு வீடு மற்ற சடங்குகள் எல்லாம்” என்றார்.

“அப்படியென்றால் கல்யாணதன்று இரவு நெல்லை எக்ஸ்பிரஸில் டிக்கெட் நம் எல்லோருக்கும் எடுத்து விடுகிறேன். மறு நாள் இரவும் அங்கிருந்து திரும்பி வரவும் சேர்த்து எடுத்து விடுகிறேன். “

வரவேற்புக்கு ஏற்பாடு பார்க்க வேண்டாமா?

“அந்த வேலை எல்லாம் நிறுவனத்திடம் கொடுத்து விட்டேன். நாம் அன்று காலை டிபன் முடித்து விட்டு மண்டபத்திற்குச் சென்றால் அங்கேயே மதிய உணவு ஏற்பாடு செய்து விடுகிறேன். பிறகு ரிசப்ஷன் முடிந்தபிறகு வீட்டிற்கு வந்து விடலாம்”

“சரி. அடுத்த இரண்டு நாளில் நம் பேமிலி டூர் போக வேண்டும். எப்படி முடியும்?’”

“நான் மைதிலிக்கும் விசா ஏற்பாடு பண்ணுகிறேன். எல்லோரும் போகலாம். அதனால் நீங்கள் கல்யாண வேலைகளோடு டூருக்கும் ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றான்.

பாட்டி தாத்தாவிடம் “ என்னங்க இவன் இப்படிச் சொல்கிறான்” என்றார்

தாத்தா அதற்குப் பதிலாக “எனக்கு மைதிலி விஷயத்தில் ராம் ரொம்ப அவசரப்படுகின்றான் என்று தோன்றுகிறது. எனினும் இப்போதைக்கு அவன் போக்கில் போகலாம்.” என்றார்.

பிறகு எல்லோரும் உறங்கச் சென்றனர். இப்படியே ஒவ்வொரு நாளும் கழிய, திருமண நாளும் வந்தது. திருமணத்திற்கு முதல் நாள் மைதிலியை ராமின் அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஹாஸ்டலிலிருந்து மணப்பெண்ணாக அழைத்துச் செல்ல முடியாததால், அங்கே சென்று மறுநாள் அங்கிருந்து மைதிலியை அழைத்துச் சென்றனர். மணமகளின் பெற்றோராக ராமின் அத்தை மாமா பங்கு பெற்றனர்.

மணப் பெண் அலங்காரத்தில் மைதிலி தேவதை போன்றிருக்க, ராம் மணமகன் அலங்காரத்தில் கம்பீரமாக இருந்தான். இருவரும் ஒருவரையொருவர் அடிக்கண்ணால் நோட்டமிட, குறித்த முகூர்த்த நேரத்தில் ராம் மைதிலியின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தான்.

த்தனை நேரம் மைதிலியும், ராமும் நடந்தவைகளை எண்ணி தனித்தனியே மறுகிக் கொண்டிருந்தனர், மைதிலி அருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை ஷ்யாம் சிணுங்கினான். பிறகு மணியைப் பார்த்தவள், உறங்க முற்பட்டு அரை குறையாக உறங்க ஆரம்பித்தாள். மறுநாள் காலை எழுந்தவள், அன்றாட அலுவலில் ஈடுபட்டு நடந்தவற்றை தனக்குள்ளேயே புதைத்தாள். அப்படியே 10 நாள் சென்றது.

ராம் இந்தியாவிற்கு கிளம்புவதற்குண்டான ஏற்பாடுகளில் இறங்கியவன், இங்கே ஒரு நல்ல அட்மினிஸ்ட்ரேட்டரை உருவாக்கினான். இன்டர்நெட் மூலம் இங்குள்ள நிர்வாகத்தை கண்காணித்து, இனி தேவைப்பட்டால் இங்கு வந்து செல்லுமாறு முறைப்படுத்தினான். அங்கிருந்து அவன் சென்னை நண்பன் ஒருவனிடம் சில வேலைகளைச் சொன்னான். வீட்டிற்கு அவன் வருவதாகச் சொன்னதற்கு முதல் நாளே சென்னை வந்திறங்கியவனை வரவேற்ற அவன் நண்பன், அவன் சொன்னபடி ஒரு டிராவல்ஸ்லிருந்து கார் வரவழைத்தான். அங்கிருந்து கார் புறப்பட்டது,

மைதிலி கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஒரு மாதிரி அசௌகரியமாக உணர்ந்தாள். தான் கண்காணிக்கப் படுவதாகத் தோன்றியது. மேலும் ராமின் நினைவும் அலைக்கழித்தது.

மைதிலி அன்று அதிகாலை எழுந்து எப்போதும் போல் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். காலிங்பெல் அலறியது. குழந்தையை எட்டிப் பார்த்தாள். வாசல் கதவைத் திறந்தவள், திகைத்து நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.