(Reading time: 12 - 24 minutes)

மாஸா – 02 - மது கலைவாணன்

"ய் என்ன சொல்ற. எதுக்கு கடத்தனம்?. உணர்ச்சிவசப்படாத." என்றான் அஷ்வின்.

"நான் தெளிவா இருக்கேன். போலீஸ் பைரவி கிட்ட 'confidentiality' maintain பண்ண சொல்லுவாங்க. அப்புறம் நமக்கு இந்த சம்பவத்த பத்தி எந்த தகவலும் கிடைக்காது. அதனால போலீஸ் இவங்கள தொடர்பு கொல்றதுக்கு முன்னாடி இவங்களுக்கு அந்த சம்பவத்த பத்தி தெரிஞ்ச எல்லா informations'யும் நம்ம தெரிஞ்சுக்கணம்." என்றாள் மித்ரா.

"இப்போ நான் சொல்றத மட்டும் செய். அவங்க கார்'க்கு முன்னாடி போய் பைக்கில sudden break போடு. அவங்க கார நிறுத்துவாங்க. டிரைவர் எறங்கி வந்து சண்டை போடுவார். அப்போ கார்குள்ள பைரவி மட்டும் தான் இருப்பாங்க. நீ  டிரைவரோட சண்டை போடற  நேரத்துல நான் அவங்க கார எடுத்துட்டு கெளம்பிடுவேன். டிரைவர் அவசரமா கார நோக்கி ஓடுவார். அப்போ நீ பைக்ல எஸ்கேப் ஆகிடு. Nijamuddin outer ring road'ல meet பண்ணுவோம்." என்றாள் மித்ரா.

Maasaஅஷ்வின் கார் முன்னாடி சென்று sudden break போட்டான். மித்ராவின் பிளான் படியே அனைத்தும் நடந்தது. மித்ரா தன்னை கடத்தி கொண்டு செல்வதை உணர்ந்த பைரவி அதிர்ச்சியில் இருக்க , அஷ்வின் outer ring road நோக்கி சென்று கொண்டிருந்தான்.

தைக்களம் இப்பொழுது பைரவி காரினுள்..

"கார நிறுத்து. இல்லைனா போலிசுக்கு call பண்ணுவேன்." - பைரவி.

"ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க. நீங்க பெரிய ஆபத்துல இருக்கீங்க மேடம்." - மித்ரா.

இருவரும் பேச ஆரம்பித்த அந்த நேரத்தில் பைரவியின் மொபைல் சிணுங்கியது. Caller "Private Number" என்று வந்தது.

"அந்த call'அ attend பண்ணாதீங்க மேடம்" என்றாள் மித்ரா.

"call பண்றது போலீஸ் கமிஷனர். இந்த சம்பவத்துல உங்களுக்கு ஏதோ தொடர்பு இருக்குனு போலீஸ் சந்தேக படறாங்க.அதனால உங்கள locker cell'அ வெச்சு விசாரிக்க போறாங்க." என்று பொய் சொன்னாள் மித்ரா.

"இந்த கதைக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். நீ யாரு?. இப்போ என்ன எங்க கூட்டிட்டு போற?" என்றாள் பைரவி.

"இப்போ எங்க போறோம்?" என்று கேட்டுகொண்டே call attend செய்தால் பைரவி. அந்த நிமிடம் , மித்ராவின் அதிர்ஷ்டம், பைரவியின் மொபைல் low battery காரணமாக switch ஆனது. call தானாக cut ஆனது.

"பாதுகாப்பான இடத்துக்கு போறோம். ஒரு பத்து நிமிஷம் மேடம். இதோ அந்த இடம் வந்துருச்சு." என்றாள் மித்ரா.

plan செய்த படி மித்ரா , அஷ்வின்  ring road வந்தடைந்தனர்.

இடம்: nizamuddin outer ring road

"அந்த சம்பவத்துக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு madam. நீங்க அத சொன்னா தான் நான் உங்களுக்கு உதவி செய்ய முடியும்." என்று மித்ரா பைரவியிடம் கூறினாள்.

"உங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தர் தான் உங்கள காப்பாற்றி யாகனம்னு எங்கள அனுப்பிச்சார்." என்று கூறினாள் மித்ரா.

பைரவி மித்ரா சொல்வதை நம்பவில்லை.

பேச்சில் கில்லாடியான மித்ரா பல பொய்களை கூறி பைரவியை பேச வைத்தாள்.

"எனக்கு உன் மேல் இன்னும் நம்பிக்கை வரவில்லை. நான் சொல்லும் இந்த தகவலை கொண்டு ராக பாவனாவை யார் திருடியது என்று கண்டுபிடிக்கவும் முடியாது." - பைரவி.

"Its ok. உங்களுக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லுங்க மேடம். பிளீஸ்." - மித்ரா.

"நான் தான் ராக பாவனாவை ஆராய்ச்சி மையத்திடம் கொடுத்தேன்." - பைரவி.

"ராக பாவனா என்றால் என்ன?. உங்களுக்கு அது எப்படி கிடைத்தது." - மித்ரா.

பைரவியோடு சேர்ந்து நாமும் கால சக்கரத்தில் பின்னோக்கி  பயணிப்போம் ...

மெத்தி எனும் கிராமத்தில் , கோவிந்தம்மாள் என்ற 80 வயது மூதாட்டியே எனது கர்நாடக சங்கீத குரு. நான் அவரிடம் 7 ஆண்டுகள் சங்கீதம் பயின்றேன். எனது 7 ஆண்டுகள் பயிற்சிக்கு பின் ஒரு நாள் இரவு , வேறு ஒரு கிராமத்திற்கு இசை உலா போவதாக என் தாயாரிடம் கூறி என்னை சங்கரன் கோவில் அருகாமையில் உள்ள பாழடைந்த அரண்மனைக்கு அழைத்து சென்றார் கோவிந்தம்மாள்.

அந்த அரண்மனைக்கு ஒரே ஒரு நுழைவு வாயில். அதே போல் அதனை விட்டு வெளியேறும் வாயிலும் ஒன்றே. உள்ளே சென்றபின் கதவடைத்துகொள்ளும். அதன் பின்பு வேறு ஒரு வெளியேறும் கதவினை தேடி கண்டுபிடித்த பின்பே வெளியில் வர முடியும்.

இவை யாவையும் கூறி , இந்த அரண்மனைக்குள் சென்று பத்திரமாக வெளியே வரும் சவாலை என்னை ஏற்கும் படி கேட்டுகொண்டார். கோவிந்தம்மாள் என்னிடம் தெளிவாக கூறியது "இந்த சவாலை நீ ஏற்றுகொண்ட பிறகு பின் வாங்கவே கூடாது.ஆனால் இந்த சவால் உனக்கு பல ஆற்றலை கொடுக்கும்" மேலும் அவர் "இதனை நீ செய்தால் உனக்கு பல நன்மைகள் உண்டு. 7 ஆண்டுகள் உன்னை வழி நடத்திய நான் உனக்கு கெடுதல் செய்ய மாட்டேன்.என்னை உண்மையாக நீ நம்பினால் ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்காமல் இந்த சவாலை ஏற்றுக்கொள்" என்றார். நானும் அவர்பால் உள்ள நம்பிக்கையின் பேரில் சவாலை ஏற்றுகொண்டேன்.

அது இரவு 11 மணி. ஆகையால் மிக மிக பயங்கரமான இருட்டில் அந்த அரண்மனை திகிலாக இருந்தது. நான் அரண்மனைக்குள் நுழைந்தேன். கதவு அடைத்து கொண்டது. எங்கும் ஒரே இருட்டு. என் கை கால்கள் நடுங்கியது. மெல்ல நான் நடக்க துடங்கினேன். அங்கும் இங்கும் ஆந்தைகள் பறப்பது போன்று இருந்தது. என் கால் கொலுசு சத்தம் எனக்கே பயமாக இருந்தது. நான்கு அடிகள் எடுத்து வைத்தபின் ஒரு சுவர் இருப்பதை தொட்டு பார்த்து தெரிந்து கொண்டேன். பின்பு வலது புறமாக நடந்தேன்.

நான் உள்ளே செல்ல செல்ல தண்ணீர் சத்தம் கேட்டது. அது கடல் அலைகளின் சத்தம். அரண்மனைக்குள் எப்படி இப்படி ஒரு சத்தம் என்று யோசித்தேன். சில அடிகள் எடுத்து வைத்தபின் என் கால்களில் தண்ணீர் படுவதை உணர்ந்தேன். அது ஒரு நதி என்று நான் கற்பனை செய்தேன். இன்னும் உள்ளே செல்ல செல்ல ஆழம் அதிகம் ஆனது. தண்ணீரின் வேகமும் அதிகமானது.நான் அதற்கு மேல் செல்லாமல் பின்னோக்கி வந்துவிட்டேன். பிறகு கீழே கிடந்த சில கற்களை எடுத்து முன்னோக்கி வீசினேன். அந்த கற்கள் கொஞ்ச தூரம் பயணித்து தண்ணீரில் விழுந்தன.

இந்த தண்ணீரை கடந்தே ஆக வேண்டும் என்பதை உணர்ந்தேன். பின்பு அங்கும் இங்கும் நான் கால்களை சுழற்றிய பொழுது ஒரு மர பலகையில் என் கால்கள் மோதி ரத்தம் வந்தது. பலத்த காயம் இல்லை. நான் அந்த மர பலகையை கைகளால் பற்றிக்கொண்டு என் பாதி உடல் தண்ணீருக்குள் இருந்த வண்ணம் அந்த நதியினுள் மிதந்து கொண்டு சென்றேன். நான் எங்கு செல்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை.

மரப்பலகை திடிரென்று ஒரு கல்லின் மீது மோதியது.அதனை தொட்டு பார்க்கும் பொழுது , படிக்கட்டுகள் உள்ள மதில் சுவர் போன்று இருந்தது. அதன் மீது ஏறி பார்த்தால் செல்லும் வழி தெரியலாம் என்று நான் எண்ணினேன். அதன் கைப்பிடியை பிடித்து அந்த கல்லின் மீது ஏறினேன். நான் நினைத்தது போல் சின்ன சின்ன படிகள் இருந்தன. மரப்பலகையை பிடித்தவாறு நான் அந்த குறுகிய படிகளில் ஏறினேன். நான் உயரத்திற்கு சென்றேன். நிறைய சிறிய படிகளை ஏறிகொண்டிருக்கும் பொழுது திடிரென்று நான் வைத்திருந்த மரப்பலகை என் கைநழுவி தண்ணீரில் விழுந்தது.

மரப்பலகை இல்லாததால் என்னால் இனி திரும்ப தண்ணீரில் போக முடியாது என்று நான் பயந்தேன். இறுதியாக படிகளை கடந்தேன். வேகமாக காற்று வீசியதை உணர்ந்து நான் உயரத்தில் இருப்பதை தெரிந்து கொண்டேன். அங்கிருந்து  பார்க்கும்பொழுது தூரத்தில் ஒரு சிறிய விளக்கு எறிவது போல் தெரிந்தது. அந்த விளக்கு இருக்கும் இடத்திற்கு சென்றால் ஒரு தெளிவு கிடைக்கும் என்று தோன்றியது. மேலிருந்து கீழே இறங்கினேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.