(Reading time: 5 - 9 minutes)

13. என் உயிர்சக்தி! - நீலா

'டூயட்டா?? ரொமான்ஸா??? இவக்கூடயா?? வலிய போய் யாராவது புலிக்கிட்ட தலைய கொடுப்பானா மச்சி.. நேவர்!'

பிரபுவின் இந்த பேச்சிற்கு பூங்குழலீக்கு கோபம் வந்தாலும் கண்களில் நீர் துளியுடன் இருந்தாள்.

டேய் என்ன டா பேசற?! - வெற்றி.

En Uyirsakthi

அப்போ எதுக்கு அவளை கல்யாணம் செய்தீங்க பிரபு? உங்க ஆட்டத்திற்கு ஒரு அளவே இல்லையா? என்ன உங்களை கேட்கறதுக்கு ஆளே இல்லைனு நினைச்சீங்களா? என்னை ப்ரியாவை எல்லாம் ட்ரீட் செய்த மாதிரி குழலீயை ட்ரீட் செய்யலாம்னு நினைக்காதீங்க! அதற்கு நாங்க...நான் கண்டிப்பா பர்மிட் செய்ய மாட்டேன்! உங்களுக்கும் அவளுக்கும் இருக்கிற ரிலேஷன்ஷிப் என்ன னு புரிஞ்சி நடந்துக்கோங்க!

வெற்றி யாழினியின் கைகளை பற்றி பேசாதே என்று சமிக்ஞை செய்தான்.

'விடு அனி! பேசட்டும் விடு!' என்றாள் குழலீ ஒரு விதமான ஏளனத்துடன் முகத்தில் புன்னகையுடன்!

பட் தேங்க்ஸ் மிஸ்டர் பிரபு!' என்றாள் பூங்குழலீ.

அவன் உன்னை எப்படி பேசறான்... நீ தேங்க்ஸ் சொல்லறியா?? என்ன தாலி கட்டிய அடுத்த நிமிஷமே அவன் மேல காதல் பொங்கி வந்துட்டோ? - அனிதா யாழினி.

யாழினி.. சும்மா இரு!' என்றான் வெற்றி. அவன் யாழினி என்று அழைத்தே தன் கோபத்தை காட்டி விட்டான்.

இப்போது பதில் வந்தது குழலீயிடம் இருந்து.

காதலா??? அதுவும் இவன் மீதா?? வாட் நான்சேன்ஸ் யூ ஆர் டாக்கிங் அனி? அதற்கேல்லாம் தனி தகுதி வேண்டும் டார்லிங்... உனக்கு தான் தெரியுமே! என்னோட லிஸ்ட் ல ஏதாவது மேட்ச் ஆகுதானு நீயே சொல்லு! ஒன்னு மட்டும் சொல்லனும் பிரபு... இந்த வாய்... இந்த ஆணவம் தான்.. உங்களுக்கு கிடைக்க வேண்டிய எதையும்... நீங்க விரும்பின பொண்ணுல இருந்து...எல்லாவற்றையும் கிடைக்க விடாமல் செய்யறது! அதற்கு தண்டனையா தான் நீங்கள் எதிர்பார்க்கும் அழகுடன் இருக்கும் பெண் உங்க மனைவியாய் வராமல் நான் உங்க மனைவி ஆகியிருக்கேன்!

ஹேய்... என்ன நீ.? ரொம்ப அதிகமா பேசற!

ப்ளீஸ் பிரபு! கொஞ்சம் அமைதியா வரீங்களா? நான் போய் எக்ஸாம் எழுதனும்... நீங்க சொல்லுறத எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்க முடியாது'

சிறிது தூரம் வரை காரின் உள்ளே கனத்த அமைதி நிலவியது. இரண்டு நாட்களாய் இல்லாத போக்குவரத்து நேரிசல்....இன்று!

டேய் மச்சி வேற ரூட் எடுடா... இப்படி போனா ட்ராப்பிக் இன்னும் அதிகமா தான் இருக்கும்... மணி ஆகிட்டேயிருக்கு டா... பத்து மணிக்குள்ள அங்க இருக்கனும்!

சரி டா மாப்பள... நான் பார்த்துக்குறேன்.. கூல்!

'எக்ஸாம் என்னவோ எனக்குத்தான்... நானே அமைதியா வரேன்! இவன் என்னவோ இவ்வளவு சீன் போடுறான்... வெற்றிக்கு தெரியாதா? நீ இப்போ வேற ரூட் பத்தி சொல்லனுமா?? என்ன ஃபிலிம் காட்டறியா?? மகா நடிகன் தான்!'

என்று வாய்க்குள் முனுமுனக்க பிரபு திரும்பி குழலியிடம் 'என்ன?' என்றான். அதே கேள்வியை அதே தோரணையில் அவனை பார்த்து கேட்டு வைத்தாள் குழலீ!

எல்லாம் என் தலையெழுத்து!' என்று தலையில் கை வைத்துக்கொண்டான் பிரபு. 

பிரபு மச்சி...ஹனிமூன் எங்கே டா? பிளான் செய்துட்டியா???

ஹூங்கூம்... அது ஒன்னு தான் குறைச்சல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு மனதில் நினைக்கையில்... யாழினி வாய்விட்டே கூறிவிட்டாள்!

என்ன வெற்றி இப்படி முறைச்சிகிட்டு நிக்கறாங்க...ஹனிமூன் ஒன்னு தான் பாக்கி? அங்கேயும் போய் இப்படி வாய் தகறாரு போடவா? கட்டின பொண்ணை எப்படியெல்லாம் ஹர்ட் செய்யரார்னு நீயே தான் பார்க்கறீயே! அப்புறமா எப்படி இப்படியெல்லாம் கேட்க தோணுது?

ஹலோ மேடம்... பிரபு மேல மட்டும் தான் தவறா? குழலீ எதுவுமே பேசலியா? அவளும் தானே பேசினா?' என்றான் வெற்றி.

ஆனந்த் சார்! அவ பேசினது பதிலுக்கு பதில் ! பின்னே என்ன பேசினாலும் கேட்டுக்கிட்டு சும்மா இருக்க சொல்லறீங்களா? அப்படி மட்டும் எண்ணாதீங்க... நானும் குழலீயும் அப்படி கிடையாது! மோரோவர் நீங்க இப்படி என்னை பேச மாட்டீங்கனு நம்பிக்கை இருக்கு டா ஆனந்த்!

தேங்க்யூ அனி!- வெற்றி

அத விடுடீ குழல் எப்போ பிலடேல்பியா ரிட்டர்ன்? என்றாள் யாழினி!

நியூ இயர் முன்னாடியே வந்திடுவேன்!

நீ எப்போ டா வர?

நான் வரல டா...வெற்றி..

என்னடா சொல்லுற?

ஆமாம் நான் வரலை!

சரி விடு... மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷன் எப்போ? இவ புறப்படுறத்துக்குள்ளே முடிக்கனும் ல?

பிரபுவும் குழலீயும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அமைதியாய் இருந்தனர்.

பண்பலைவரிசையில் 'சாங்க் ஆஃப் தி ஹவர்' டேடிக்கேட் செய்யப்பட்ட பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது..

'ஒரு பாதி கதவு நீயடி...

மறு பாதி கதவு நானடி...

பார்த்துக்கொண்டே பிரிந்திருந்தோம்..

சேர்த்து வைக்க காத்திருந்தோம்!'

டேய் என்னடா ஆச்சு? கேள்வி கேட்டா பதில் சொல்லாம அமைதியா பாட்டை ரசிச்சுக்கிட்டு வர... குழலும் அமைதியா வரா?!

அதற்குள் குழலீயின் எக்ஸாம் சென்டரை அடைந்துவிட பிரபுவுடன் குழலீயும் வேக நடைப்போட்டு உள்ளே நுழைந்தனர். நேரம் ஒன்பது ஐம்பத்தைந்து என்றது கடிகாரம்.

திரும்பி காருக்கு வந்த பிரபுவிடம் அதே கேள்வியை கேட்டான் வெற்றி.

அதற்குள் டீனா டேவிட், ஷாஜித்தா ராமசந்திரன், மலர் செந்தில் என அவள் நண்பர்கள் வந்துவிட்டனர்.

எப்போ ரிஜிஸ்ட்ரேஷன் டா? அவ திரும்பின பிறகா?

இல்லை டா..!

என்னடா சொல்லுற?

மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சிட்டு டா..வெற்றி

என்னது? எப்போ? என்ன டா சொல்லுற? - இப்படி பல கேள்விகள் ஒரே நேரத்தில்!

டேய் பிரபு! விளையாடாதே டா! இரண்டு மணி நேரத்திற்கு முன்னே தான் கல்யாணம் ஆச்சு! அதுக்குள்ள எப்படி ரிஜிஸ்டர் செய்வ? - வெற்றி

சட்டப்படி நாங்க இரண்டு பேரும் டிசம்பர் 8ஆம் தேதியிலிருந்து கணவன் மனைவி டா...

என்னது????

தொடரும்...

Episode # 12

Episode # 14

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.