(Reading time: 4 - 8 minutes)

08. நீ எனக்காக பிறந்தவள் - பரிமளா கதிர்

ரபி தனது தந்தையை நாடி அவரது அறைக்குள் சென்றார். அங்கு கட்டிலில் படுத்திருந்து விட்டத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.  தந்தையின் அருகில் சென்ற ஆரபி அவரைப் பார்த்து மென்மையாக சிரித்தபடி “அப்பா இன்று எனது பிறந்த நாள்..... என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா” என்று கூறி அவரது கரத்தை பற்றி தனது தலை மேல் வைத்தாள். தனது மகளின் தொடுகையில் அவரது உடலில் சிறு அதிர்வு ஏற்பட்டது. பின்னர் ஆரபியின் தலை மேல் இருந்த தனது கரத்தை வெடுக்கென இழுத்துக் கொண்டார்

அவரின் இச்செய்கை அவளுக்கு பழக்கப்பட்டதாய் இருந்தாலும் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் தந்தை இவ்வாறு நடந்து கொள்ளும் போது அவளின் மனம் வலிக்கத்தான் செய்கிறது.

அவள் சிறு பராயத்தில் தந்தையின் இச்செய்கையின் காரணம் தெரியாது தாயிடம் வந்து அழுவாள். தேவிகாதான் ஏதேதோ காரணம் சொல்லி சமாதானப் படுத்துவாள். ஒரு வயதுக்கு மேல் தனது தந்தை ஒரு வளர்ந்த குழந்தை என்று அறிந்த பின்னர். தாயிடம் இதைப் பற்றி கேட்பதை நிறுத்திக் கொண்டாள்.

Nee enakaga piranthaval

ந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டு பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த ஆரபியை தந்தையின் இருமல் மீட்டெடுத்து வந்தது. கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அவரது முதுகை நீவி விட்டு அவர் குடிக்க தண்ணீர் கொடுத்தாள். அவர் அருந்தி முடிந்ததும் அவரது வாயை துடைத்து விட்டு விட்டு அவரிடமிருந்து  விடை பெற்று வெளியே வந்தாள்.

வெளியே அவளின் தாய் தேவிகாவும் கண்களில் கண்ணீரோடு சோபாவில் அமர்ந்திருந்தாள். யாதவ் தான் அவரை சமாதனப் படுத்திக் கொண்டிருந்தான்.

“என்னத்தை இது நீங்களே இப்பிடி அழுது கொண்டிருந்தால்! எப்பிடி ஆரபி வர்றதுக்கு முதல் முகத்தை துடைச்சு ரெடி ஆகுங்க கோவிலிக்கு போகணும் இல்லையா?” வாசலில் நிழல் ஆட நிமிர்ந்து பார்த்த யாதவ்

“என்ன ஆரா அப்பாவை பாத்தாச்சா இப்பவாவது கோவிலுக்கு போவமா?” என்று கூறி எழுந்து நின்றான்.

இரு பெண்களும் தமது கண்ணீர் முகத்தை துடைத்துக் கொண்டு சந்தோஷமாக கோவிலுக்கு புறப்பட்டனர்.

ர்ஷிகா இரு கைகளையும் மேலே தூக்கி “ஆரபி என்னை தூக்கு என்றாள். ஆரபியும் சிரித்துக் கொண்டே அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தாள். யாதவும் தேவிகாவும் அர்த்தத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  

ஆரபியின் இடுப்பில் ஒய்யாரமாக் அமர்ந்து கொண்ட வர்ஷு ஆரபியுடன் வளவத்துக் கொண்டே இருந்தாள்.   நால்வரும் கோவிலுக்கு சென்று சந்தோஷமாக பிரார்த்தித்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

கொழும்பில்

“ஹலோ முராரி எப்ப இங்கு வந்தீர்கள்? எப்படி இருக்கீங்க?” என்று முராரி கிருஷ்ணனின் குடும்ப வக்கீல் அவனிடம் நலம் விசாரித்தார்.

அவனும் சிரித்து கொண்டே “இன்னிக்கு காலையில தான் சேர் வந்தேன்.” என பதிலளித்து விட்டு வக்கீல் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.  பொதுவான பேச்சுக்களின்  ஊடே அவன் தான் வந்த விஷயத்துக்கு தாவினான். “ அந்த கொட்டல் நம்ம கைக்கு வந்திடுச்சில்ல வக்கீல் சார்?”

“ ஆமா சார் அதை  நம்ம தான் வாங்கியிருக்கோம் அந்த கொட்டல் முதலாளி நீங்க தான் இதை வாங்க விருப்பபடுவதாய் கூறியதும் சந்தோஷமாக நீங்க கேட்ட எமௌண்டுக்கே விற்று விட்டார்.” என்று சந்தோஷமாக கூறினார்.

“சரி சேர் அப்படியென்றால் நான் இன்றே அதை ரெஜிஸ்டர் பண்ணி விடலாம் அந்த முதலாளியிடம்  பேசி விட்டு சொல்லுங்கள். சேர் நான் இன்றே இந்த விவகாரத்தை முடித்து விட்டால் மற்ற வேலைகளை பார்க்க எனக்கு கொஞ்சம் ஏதுவாக இருக்கும் “ என்றான் முராரி.

‘சரி தம்பி நான் இப்போதே அவருடன் பெசுகேறேன்” என்றவர்  தொலை பேசியில் பேசி விட்டு இன்னும் ஒரு மணி நேரத்தில் தான் ரெஜிஸ்டர் ஆபிசுக்கு வருகிறாராம். நாங்கள் இப்போதே கிளம்பினால் தான் சரியாக இருக்கும்.” என்று கூறி முராரியை அழைத்துக் கொண்டு புறப்படார்.

ரெஜிஸ்டர் ஆபீசில் ஆனது பெயருக்கு மாற்றுவதற்கு ஆயத்தம் நடந்த பொது அதனை தடுத்து ஆரபியின் பெயரில் அதனை ரெஜிஸ்டர் செய்தான் முராரி. “எ.எம்.கே “ என தங்கள் இருவரது பெயரையும் சேர்த்து அந்த கொட்டலுக்கு பெயர் வைத்தான். 

ரேஜிஸ்டேஷன்  முடிந்ததும் அந்த கொட்டலின் பழைய முதலாளிக்கும் தனது வக்கீலுக்கும் ஒரு பெரிய கொட்டலில் மிகவும் சந்தோஷத்தோடு விருந்து வைத்தான்.

கோவிலிலிருந்து வந்ததும் ஆரபிக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து பரிமாரினாள் தாய்!!! உண்டு முடித்ததும் வர்ஷுவின் தொல்லை தாங்காமல் அவளோடு ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள் ஆரபி. வர்ஷுவை துரத்திக் கொண்டு ஓடிய பொழுது  அவளது கழுத்தில் இருந்த கிரிஷின்  பரிசான சங்கிலி  அவளுக்கே தெரியாது கீழே விழுந்து விட்டது அது விழுந்த வேகத்தில்  அதன் லொக்கேட் திறந்து கொண்டது. அதில் ஆரபியும் கிரிஷும் சிரித்த வண்ணம் இருந்தனர்.

தொடரும்!

Episode # 07

Next episode will be published as soon as the writer shares her next episode.

{kunena_discuss:755}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.