(Reading time: 8 - 16 minutes)

11. வானவில் - அமுதவள்ளி

"வர் என் அப்பா நிஷா. நான் எப்படி"

"வாட்? உங்க அப்பாவா? ஆனால் அவர் ஏன்..."

"அஞ் இதை பத்தி இங்கே பேசவேண்டாம். திஸ் இஸ் நாட் ரைட் பிளேஸ் பார் இட். அத்வைத் நீங்க நாலுபேரும் உங்க ரூம்க்கு கிளம்புங்க"

Vanavil

"சரி நிஷா. பை"

"டேக் கேர் ஆப் ஹிம்"

"ஹ்ம்ம்"

"சாது சர்வேஷ் ரூம் உனக்கு தெரியுமா"

"எக்சாக்டா தெரியாது. பட் முகப்பேர் டி.எ.வி ஸ்கூல் பக்கதில அவங்க ரூம் நிஷ்."

"நாம் அங்க போகலாமா?"

"போகலாம் நிஷ்"

"ஹாசி நீ ஓகேன்னு சொல்றதை பார்த்தால் நவீன்காக வராமாதிரி தெரியலை ஹர்ஷக்கு மாதிரி இருக்கு"

"கரெக்டா சொன்ன அஞ்"

"அது உனக்கும் பொருந்தும் சாது. ஹர்ஷாக்கு பதில் சர்வேஷ்"

"போடி குரங்கே."

"நிஷ் என்ன பலத்த யோசனை?"

"நவீனை நினைச்சேன்  ஹாசி. கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் நம்ம பாமிலிபத்தி பேசும்போது அவங்க நவீன் பாமிலிபத்தி சொல்லலை. அதை அவாய்ட் பண்ணாங்க"

"யா நிஷ். NK குரூப் சேர்ந்தவர் மாதிரியே இல்லை. அவ்வளவு பெரிய பணக்காரர் இங்க எதுக்கு வேலை செய்யணும்? எவ்வளவோ தொழில் அவங்களுக்கு இருக்க இந்த கான்டீன்ல அதுவும் ஓனர்ன்னு   யாருக்கும் தெரியாமல் ஏன் வேலை செய்யணும்?"

"சாது உன் கேள்வி எதுக்கும் எனக்கு பதில் தெரியாது. அவங்க   தான் சொல்லணும்"

"டாக்ஸி வந்தாச்சு. கிளம்பலாம்"

"நல்ல வேலை நம்ம நிஷா அத்தை வீட்டுக்கு போக ஆல்ரேடி பெர்மிஷன் வாங்கிட்டோம். இல்லைனால் இப்ப கனி(வார்டன்) நம்மளை தொலைசிருக்கும்"

"கரெக்ட் ஹாசி. கனி  நம்மளை சட்டினி ஆக்கிடும்" 

"நிஷ் நீ அத்தைகிட்ட சொல்லிடு"

"ஓகே அஞ். பிரச்சனை பத்தியும் சொல்றேன். ஏதாவது ஹெல்ப் வேண்டுமனால்  அவங்களை கூப்பிடலாம். சாது நீ சர்வேஷ்க்கு இன்போர்ம் பண்ணிடு"

"ஹ்ம்ம் சொல்றேன். ஸ்கூல்கிட்ட வந்து நம்மளை கூடிட்டு போக சொல்லணும்"

"ஹ்ம்ம். நவீன் என்ன நினைப்பார்ன்னு தெரியலையே. அவர் விஷயத்தில் நம்ம தலையிடறதை விரும்பிளைனாள் என்ன செய்யறது?"

"நம்ம அவங்ககிட்ட பேசலாம் அஞ். அவருக்கு பிடிக்கலைனால் நம்ம கிளம்பிடலாம்"

"ஓகே நிஷ்"

"வீன்"

"சொல்லுடா"

"ஹாசினியும் அவங்க பிரிண்ட்சும் இங்க வராங்க"

"எதுக்கு அவங்களை டிஸ்டர்ப் பண்ற ஹர்ஷ்?"

"இல்லை நவீ. அவங்க நிஷா அத்தை வீட்டிற்கு போறாங்க. அப்படியே இங்க வராங்க"

"ஹ்ம்ம்"

"நவீ. அவங்க பைக் விஷயம் கேட்பாங்க. என்ன சொல்றது?" - அத்து

"உனக்கு பிடிக்கலையென்ரால் நாங்க சொல்லலை" - சவேஷ்

"இதில் என்ன இருக்கு. சொல்லுங்க"

'என் நிஷாவுக்கு  இது தெரியனும். அவளுக்கு தெரியகூடாத  எந்த  விஷயமும் என்கிட்ட இல்லை'

(அப்படிப்போடு  எனக்கும் லவ்க்கும் சமந்தமே இல்லைன்னு லுக் கொடுத்துட்டு என் நிஷாவாம்)

'இவங்ககிட்ட எப்ப இதை சொல்றது? சொன்னால் நிஷாகிட்ட சொல்ல சொல்லு வாங்க. .அவங்க பாமிலி என்னை எப்படி அக்சேப்ட் பண்ணுவாங்க. இப்போ இதை பத்தி யோசிக்கவேண்டாம். பைக் பத்தி யோசிக்கணும். எப்படி அதை திருப்பி வாங்கறது.'

"ஹாய்"

"ஹாய் வாங்க"

"ரூம் நீட்டா இருக்கு."

"ஹர்ஷ் கிளீன் பண்ணுவான் அஞ்சனா"

"ஒ.  ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன் சர்வேஷ். உங்களை பார்த்தால் நம்ம செட் மாதிரி இருக்கே ஆனால் ரூம் நீட்டா இருக்கேன்னு"

"அஞ் உனக்கு நேரம் சரியில்லை. சாது உன்னை   கண்ணாலே எரிசிடுவாள்"

"ஐயோ. பயமா இருக்கு நிஷ். என்னை காப்பாத்து"

"ஏய் என்ன கிண்டலா. கொன்னுடுவேன் ரெண்டு பேரையும்"

"ஹாசி நீ கண்ணால் பேசினது போதும். சின்ன பிள்ளைகளை கெடுக்காதே"

"ஆமாம் நான்தான் உங்களை கெடுக்கிறேன். நீங்க ஒன்னும் தெரியாத பாப்பா" சிவந்த முகத்துடன் சொன்னாள் ஹாசி.

"ஹா ஹா. நான் உங்களுக்கு காபி போடறேன்"

"ஏன் அத்வைத் நீங்க போட்ட காபியை குடிக்கமுடியாம நீங்களே காலேஜ்ல குடிக்கிறீங்க இதில எங்களுக்கு காபி போட போறீங்களா" 

"ஹலோ எங்க காபி நல்லாதான் இருக்கும்"

"அதை நீங்க சொல்லகூடாது"

"எல்லோரும் சொல்லுவாங்க அஞ்சனா. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை"

"யார் கழுதை?"

"ஐயோ. இரண்டு பேரும் நிறுத்துங்க. எப்ப சண்டை போடலாம்ன்னு வெயிட் பண்ணுவீங்களே"

"கரெக்ட் நிஷா. இவங்களை சமாளிக்க முடியலை"

"சாது பேசினது போதும் போய் காபி போடு"

"நான்  ஏன் போடணும்? நீங்க போடுங்க"

"சாது இது உன் ரூம் மாதிரி. அதனால் நீ தான் போடணும்". அனைவரும் சிரிக்க சர்வேஷ் அவளை சைட் அடிக்க

"நிஷா உன்னை"

"பல்லை கடிக்காமல் போய் வேலையை பாரு"

"சர்வேஷ் நீங்க ஹெல்ப் பண்ணுங்க. அவளுக்கு எங்க எந்த பொருள் இருக்குன்னு தெரியாது" என்றாள் ஹாசி கிண்டலாக.

நவீன் இவர்கள் பேசியதை கேட்டாலும் எதுவும் பேசாது யாருக்கும் தெரியாமல் நிஷாவை பார்த்துக்கொண்டிருந்தான்.

"சர்வேஷ் எனக்கு காபி வேண்டாம் பால் போதும்" என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றாள் நிஷா.

"சர்வேஷ் இது தூக்க மாத்திரை. நவீனுக்கு தாங்க."

"நானும் இதைதான் நினைத்தேன் நிஷா. அவன் தூங்கனதும் நாம் பேசலாம்"

"நவீன் தூங்கிட்டாரா?"

"ஹ்ம்ம்" பலத்த அமைதி நிலவியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.