(Reading time: 18 - 35 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 13 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" த்யா " என்ற அலறல் சத்தம் கேட்டதும் உறைந்தே தான் போனாள்  சாஹித்யா .. காரணம் அந்த குரலுக்கு சொந்தகாரன் சந்தோஷே தான் ! அவன் ஏன் இங்கு வந்திருக்கிறான்  என்ற கேள்வியிலும் ,  என்ன ஆயிற்று என்று பதற்றத்திலும்  அவனை நோக்கி ஓடி வந்தாள்  சாஹித்யா .. அவனோ இதழில் உதித்த புன்னகை சற்றும் மாறாமல் அப்படியே நின்றான் .. உயிரே போய்  விட்டிருந்தது அவளுக்கு ஒரு நொடியில் .. அவனோ அவள் அவனுக்காக துடிப்பதை பார்த்து சிலிர்த்தான் .. அவன் புன்னகையில் பதற்றம் மறைந்தாலும் கூட அவனை மேலிருந்து கீழென பார்வையினாலேயே அளந்தாள்  சத்யா ..

" ஹே என்னடா பயந்துட்டியோ ?" என்று அவன் கேட்ட நொடி அவளது இறுகிய அணைப்பில் இருந்தான் சந்தோஷ் .. சுற்றும் முற்றும் பார்த்தான் சந்தோஷ் .. அனைவரின் பார்வையும் அவர்களின் மீதே படிந்தது .. மெல்ல அவளை விடுவிக்க அவன் முயன்றும் அவனை இம்மியளவும் விலகாமல் விசும்பினாள் சத்யா ..

ஏன் என்று முழு காரணம் புரியாமலேயே அழுதாள்  அவள் .. காதல் , சந்தோஷ் , அவனது நலம் என ஒரு புறம் பயமும் , நண்பனிடம் இன்னும் பிரச்சனையை சரிபடுத்தவில்லை என்ற தவிப்பும் ஆதாரமாய் அவனை பார்த்தவுடன் மொத்தமாய் அவளை உடைய வைத்தது .. அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தவர்களில் ஷீலாவும் ஒருத்தி.. ! சத்யா - அருள் இருவரையும் பிரிப்பதற்காகவே ஷீலாவும் அவள் அண்ணன் அகிலும்  கங்கணம் கட்டி இருந்தனர் .. எப்போதும்போல , சத்யாவிற்கே தெரியாமல் அவளை பின்தொடர்ந்த ஷீலா , இங்கு கண்ணீருடன் நின்றவளை பார்த்ததும் உச்சி குளிர்ந்தாள் ...

Enna thavam seithu vitten

" நாம நினைச்சது எல்லாம் தானாகவே நடக்கிறது போலிருக்கே " என்று முனுமுனுத்தவள், ஸ்கூட்டியை எடுத்து கொண்டு அங்கிருந்து பறந்தாள்  நேராய் தன் தமையனை பார்க்க! இதை எல்லாம் அறியாதவளாய் இன்னமும் விசும்பி கொண்டிருந்தாள் சத்யா .. சந்தோஷாலேயே  அவளை சரி படுத்த முடியாமல் போக, பார்வையால் வானதியிடம் விடைபெற்றுவிட்டு   அவளை  தன்னோடு அழைத்து செல்ல தயாரானான் .. தன் கரம் பற்றி அவன் உரிமையாய்  நடந்த விதத்தில் சமாதனம் அடைந்திருந்தாள்  சாஹித்யா.. அவளிடம் ஏதும் கேள்வி கேட்காமல் காரை ஓட்ட தொடங்கினான் சந்தோஷ் .. அவன் கார் வெளியேறிய நேரம் , சரியாய் ஆபிசினுள் நுழைந்தான்  அருள்மொழிவர்மன் ..

" அருள் "

" நதி அது சந்தோஷ் கார் மாதிரி இருக்கே ! " என்றவன் , ஆராயும் பார்வையுடன் அனைவரையும் பார்த்தான் ..

" அருள் நாம உன்  ரூமில் பேசலாம் " என்று தணிந்த குரலில் ..அதுவே சரியென தோன்றவும், அன்றைய வேலைகளில்  முதலில் கவனம் செலுத்த தொடங்கினான் அருள் .. சிறுது நேரத்தில் வானதியை தனது அறையில் அழைத்து பேசினான் .. நடந்தது அனைத்தையும் கூறி முடித்தாள் வானதி ..

" சந்தோஷ்க்கு ஒண்ணுமில்ல தானே டீ ?"

ம்ம்ம்ம் இல்ல .. விளையாட்டிற்கு தான் அப்படி கத்தினார் நினைக்கிறேன் ..ஆனா சத்யா தான் அவர் கூப்பிட்ட விதத்தில் பதறிட்டா ..

" எங்கயோ உதைக்கிற மாதிரி இருக்கு வானதி !"

" என்ன சொல்ல வர்ற நீ ? "

" அதாவது , நாம எங்க இருக்கோம்னு இடம் பொருள் ஏவல்  பார்க்காமல் விளையாடுற அளவிற்கு சந்தோஷ் நடந்து கொள்வான்னு எனக்கு தோனல !"

" பின்ன , அவர் சத்யான்னு கத்தினதுக்கு பின்னாடி பெரிய காரணம் இருக்குனு நீ சொல்ல வர்றியா ?  ரொம்ப துப்பறியும் கதைகளை படிச்சு படிச்சு நீ குழம்பி போயிருக்க அருள் " என்றாள்  வானதி அசுவாரஸ்யமாய் ..

" ஹே அப்படி இல்ல டி.. சந்தோஷ் எப்படி திடீர்னு இங்க வந்தான்? சாஹித்யா ஆபிசிற்கு வந்ததே எனக்கு அம்மா சொல்லித்தான் தெரியும் ..அப்போ சந்தோஷ்க்கு எப்படி இது தெரிஞ்சது ?"

" ஹே இதில் என்ன பெரிய ரகசியம் இருக்கு ? சந்தோஷ் கால் பண்ணி கேட்டிருக்கலாம் இல்லையா ?"

" சரி அப்படியே கேட்டிருந்தாலும் கூட அவன் ஏன் இங்க வர போறான் ? அதுவும் இப்படி ஒரு அதிரடியா குரல் கொடுத்து எல்லாரையும் பார்க்க வைக்கணும் ?"

" இதை அவர்கிட்டதான் கேட்கணும் ..ஆனா ஒன்னு !"

" என்ன நதி ?"

" சந்தோஷ் சாஹித்யாவின் வருங்கால கணவன் என்பது எல்லாருக்கும் எப்படியாவது தெரியபடுதுறது நல்லதுன்னு தோணுது .. அவ நம்ம வீட்டு பொண்ணு .. இன்னைக்கு நடந்ததை வெச்சு யாரும் சத்யாவை பற்றி கிசுகிசுக்குறது எனக்கு பிடிக்கல...சந்தோஷ் யாருன்னு தெரிஞ்சா தேவை இல்லாத பேச்சுகளை தவிர்க்க முடியும் அருள்  " என்றாள்  வானதி .. இவளும்தான் என் தோழி மீது எத்தனை நேசம் வைத்திருக்கிறாள்  என வியந்தான் அருள் .. அதே நேரம் இன்று நடந்ததை பற்றி சந்தோஷிடம் கேட்க வேண்டும் என்று மனதில் குறித்து கொண்டான். ஆனால் அடுத்து வரும் நாட்களில்  இதை அவன் மறந்துவிடுவான் என்பது பாவம் அவனுக்கே தெரியாமல் போனது ..

ந்தோஷின் காரில், கைகளை கட்டி கொண்டு விழி மூடி சீட்டில் சாய்ந்தபடி இருந்தாள்  சாஹித்யா..

" சத்யு ..."

" ..."

" சத்யூ ....."

" ம்ம்ம்ம்ம் "

" என்மேல வருத்தமா டா ?" என்றான் சந்தோஷ் உண்மையான வருத்தத்துடன் ..

" ப்ச்ச்ச் என்ன சந்து இது ? "

" நான் சும்மா விளையாட்டுக்கு தான் உனக்கு ஷாக் தரலாம்னு நினைச்சேன் ... பட் நீ இப்படி அழுது வைப்பான்னு நான் எதிர்பார்க்கல .."

" அதுக்கு நான்தான் மன்னிப்பு கேட்கணும்.. நானே இப்படி அழுதிடுவேன்னு நினைக்கல .. மனசு சரி இல்லை சந்து .. நான் சந்தோஷமா இல்லைன்னு எனக்கே தெரியுது ..ஆனா அதற்கான காரணத்தை என்னால தெளிவாய் கண்டுகொண்டு சரி படுத்த முடியல .. நானே உங்களை நேரில் பார்த்து கொஞ்சம் மனம் விட்டு பேசணும்னு நினைச்சேன் .. அதான் உங்களை பார்த்தது என்னையும் மீறி கண்ணீராய் எல்லாம் வந்துருச்சு "

" அதனால் என்ன ? ஒருவகையில் கண்ணீர் கூட நல்ல விஷயம் தான் சத்யூ ... பொதுவாக மனதில் அதிகமாய் அழுத்தம் இருக்கும்போது கண்ணீர் விட்டா , பாரம் குறையும்னு சொல்வாங்க .. உனக்கு என்ன மன வருத்தம்னு எனக்கு புரிஞ்சிடுச்சு " என்றான் சந்தோஷ் ..

" எனக்கே புரியாதது உங்களுக்கு எப்படி புரியும் ?"

" உனக்கு புரியலைன்னு யார் சொன்னா ? உன் பிரச்சனை என்னன்னு  உனக்கே தெரியும் சத்யூ .. நீ யாருகிட்ட வேணும்னாலும் உண்மையை மறைக்கலாம் ..ஆனா உன் மனசை நீ  உன்னிடமே மறைக்க முடியுமா ? அருள் தானே உன் பிரச்சனை  ?" என்று கேட்டான் சந்தோஷ் வெற்றி புன்னகையுடன் .." உன்னை நான் கண்டுகொண்டேனடி பெண்ணே " என்பதை அவனது மந்தகாச புன்னகையே பறை சாற்றியது ..

அதை ஏற்றுகொள்ள மறுத்தவளாய்

" அப்படி எல்லாம் ஒன்னுமில்லையே ..உங்களுக்கு யாரு சொன்னது ?" என்று தடுமாறினாள்  சாஹித்யா ..

" இந்த உலகத்துல சாஹித்யாவுக்கு யாரு குடைச்சல் தந்தாலும் அவ கலங்க மாட்டா .. ஏன்னா அவளுக்கு அருள்ன்னு ஒரு நண்பன் இருக்கான் .. அர்ஜுனனுக்கு கண்ணன் மாதிரி ..சத்யாவுக்கு அருள் .. அப்படிபட்டவ , மனதில் இருக்கும் சிறு காயத்திலேயே  உலகமே மாறி போனது போல துவண்டு இருக்கான்னா , அதற்கு காரணம் அருளாகத்தானே இருக்க முடியும் ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.