(Reading time: 19 - 37 minutes)

17. வாராயோ வெண்ணிலவே - சகி

காட்டாற்று வெள்ளமானது தன்நிலை பிழறாமல் இருக்கும்வரை நல்லது... சற்று சிந்தியுங்கள்... அகன்று விரிந்த இந்த இயற்கை ராஜ்ஜாங்கத்தில் இறைவனானவன் அழகை மட்டும் கொடுக்கவில்லை.ஆபத்தையும் கொடுத்திருக்கிறான். பொறுமையின் முழு உருவமாக பூமாதேவி துன்பங்களை சகிக்கின்றாள்.ஏற்ற காலம் உதிக்கும் பட்சத்தில் மஹா ரௌத்திரையாக உருவெடுக்கின்றாள்!!! நம்பமுடியவில்லை இன்னும் அவளால் நம்பமுடியவில்லை. தான் தனது நிழலாய் நம்பியது அவள் நிழல் இல்லை.அது மாயை! என் நிழல் எங்கோ இருக்கிறதாம்!! யார் யாரோ தவறிழைக்கின்றார்கள்!!!நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்??? என் வாழ்க்கைக்கு எதிராக காலம் சூழ்ச்சி செய்யும் அளவிற்கு நான் பாவியாகி போனேனா? இந்த சரீரமும்,ஆன்மாவும் பவித்ரமற்று போனதா??? கடும் வேதனையிலும் நம்பிக்கை இழக்காத மனம் உடைந்து சுக்கு நூறானது.

அவள் யாரிடமும் பேசவில்லை.ஏன் அறையைவிட்டு வெளியும் வரவில்லை. மனம் ஒட்டுமொத்தமாக தனிமையையே துணையாக தேடியது. வாழ்வே சூன்யமானது!!! தன் மகள் கிடைத்துவிட்டாள்!!! தவத்தின் பயன் பூர்த்தியானது! காலம் வரமளித்துவிட்டது! ஆனந்தத்தில் துள்ளியது அங்கிருந்தோர் மனம்!

"ஏன் நீங்க அவளை கூட்டிட்டு வரலை?"-தாய் மனம் தவிப்போடு கேட்டது.

Vaarayo vennilave

"பொறுமையா இரும்மா!அவளுக்கு இந்த உண்மை தெரியாமலும் இருக்கலாம்!கொஞ்ச நாள் போகட்டும்!!அவளை வளர்த்தவங்க கூட பேசணும்!"

"ஆனா,அவ என் பொண்ணு!"

"இல்லைன்னு சொல்லலை!கொஞ்ச நாள் போகட்டும்!"

"அப்பா!அக்கா என்ன பண்றாங்க?"-ஆர்வத்தோடே கேட்டாள் காவ்யா.

"கைனகாலாஜிஸ்ட் டாக்டர்!"

"பெயர் என்ன?"

"வெண்ணிலா!"-திவ்யா முகம் அதிர்ச்சியில் உறைந்தது.

"வி.எம். ஹாஸ்பிட்டல் சீப் டாக்டர்!"-யுகேந்திரன் திவ்யாவை பார்த்தான்.

அவள் முகத்தில் கலக்கம்!

"மாமா!அவங்க போட்டோ இருக்கா?"

"ம்...சூர்யா அனுப்பி இருந்தான்!"-தன் கைப்பேசியிலிருந்த தன் மகளின் புகைப்படத்தை காண்பித்தார்.

கண்களின் குறும்பு மின்ன,சூர்ய நாராயணனோடு ஒட்டி கொண்டிருந்த படம்!!!

'அழகா  இருக்காங்கப்பா!"-அங்கிருந்த இருவருக்கு இது உச்சக்கட்ட அதிர்ச்சி!!!

வநிலை என்பது யாது??கண்கள் மூடி அமர்நதிருப்பது தவநிலையா?துறவறத்தை தேர்வு செய்வது தவநிலையா? தவநிலை என்பது யாதென வினவின், மனதின் எண்ணங்களை மறந்து சிந்தை நல்லோர் ஒருவரிடத்தில் சமர்பிப்பதாகும்!!இந்த சமர்பணத்தை மனிதன் தீய வழிகளிலும் பயன்படுத்துகிறான்.அச்சமயம் சத்தியரூபமே அசத்தியமாக அவர்களுக்கு தெரியும்!அவர்கள் மனம்  சிந்திக்க தவறுகிறது.ஆன்மா செயல் இழந்து போகிறது!!நினைவில் கொள்ளுங்கள்... இது நிச்சயம் இருளை நிரப்பிவிடும் வல்லமை பெற்றது. ஆகவே,சிந்தித்து செயலாற்றுங்கள்!!!

தனிமையில் தோட்டத்தில் எதையோ சிந்தித்து கொண்டிருந்தாள் வெண்ணிலா. அவளருகே ஏதோ பாட்டு பாடியப்படி வந்தமர்ந்தான் விஷ்வா!

"ஏ..பைத்தியம்!என்ன யோசிட்டு இருக்க?"-அவள் அமைதி காத்தாள்.

"நான் ஒரு முக்கியமான வேலைக்காக டெல்லி போறேன்!நீயும் வரீயா?"

"ம்ஹீம்!"

"நீ இல்லாம எனக்கு போர் அடிக்கும்.நீ இருந்தா உன் கூட சண்டைப்போட்டுட்டே இருப்பேன்!வாயேன் ப்ளீஸ்!"

"நான் எப்பவும் யார் கூடவும் அதிக நாள் இருக்க முடியாது விஷ்வா!"

"அதிக நாள் இல்லை பக்கி!2 வாரம் தான்!"

-அவள் கசப்பான புன்னகையை தந்தாள்.

"என்னாச்சு?நீ ஏன் கொஞ்ச நாளா என்னமோ மாதிரி இருக்க?"

"ஒருவேளை விஷ்வா!உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னா என்ன பண்ணுவ?"

"கொன்னுடுவேன்!இன்னொருமுறை இதை சொன்னா உன்னை கொன்னுடுவேன்!"

"............."

"லூசு மாதிரி உளறாம வந்து தூங்கு!பேய் கூட நமக்கு முன்னாடியே போய் தூங்கிடும்!"

"எனக்கு தூக்கம் வரலை!"

"வராது!எப்படி வரும்?எனக்கு உன் நிலை புரியுது வயசு கேளாறு!இங்கே உன்னை பொண்ணு பார்க்க வராங்கன்னு சொன்னாங்க!ஆனா,ஒருத்தனும் எட்டி பார்க்கலை!"-அவனது பேச்சு அவள் முகத்தில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

"இப்போ அது மட்டும் தான் எனக்கு குறைச்சலா?"

"நீ ஏன் சாமியார் மாதிரி பேசுற?வாழ்க்கை வாழ்வதற்காகம்மா!வாழ்ந்து தான் பார்க்க முயற்சி பண்ணேன்!"

"நான் நிறைய முயற்சி பண்ணேன்!என்னால வாழ முடியலை!"

"முதல்ல உன்னை தர்காக்கு கூட்டிட்டு போய் மந்திரிக்கணும்!"

"நான் இல்லாம உன்னால வாழ்ந்துட முடியும்ல விஷ்வா?"-அவன் அமைதி காத்தான்.

"சொல்லு!"

"கோபப்பட வைக்காதே!ஒரு நேரம் போல சத்தியமா இருக்க மாட்டேன்!இதோப்பார் நான் அம்மான்னு சொன்னதை விட நிலான்னு உன் பெயரை சொன்னது தான் அதிகம்!உனக்கும் எனக்கும் குறுக்கே யார் வந்தாலும் அவன் செத்தான்!உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டு போற தைரியம் அந்த ஆண்டவனுக்கே கிடையாது ஞாபகமிருக்கட்டும்!!இன்னொரு முறை இப்படி பேசின மனுஷனா இருக்க மாட்டேன்!"-நிலா திகைப்போடு அவனை பார்த்தாள்.

"எந்திரிச்சு போய் படு போ!நல்லா பாட்டி மாதிரி பேசிக்கிட்டு!போ!"-ஒரு கைக்குழந்தையை மிரட்டுவது போல அவன் மிரட்டினான்.

"போனியா இல்லையா?"-அவள் எழுந்து போய்விட்டாள்.

அவளின் நெருஞ்சி முள் போன்ற சில வார்த்தைகள் விஷ்வாவின் மனதை சலனப்படுத்தின.ஒரு துருப்புச்சீட்டு கிடைத்ததா? தெரியவில்லை.அன்பானது இன்பத்தை ஆக்கவும்,துன்பத்தை அழிக்கவும் இறைவனிடமிருந்து வரம் பெற்றது. அழகான இந்த ஸ்ருஷ்டியில் அன்பானது காற்றை போல் நிறைந்திருக்க மனிதன் அன்பு வேண்டும் என்று அலைகிறான்!!! வேடிக்கையான விஷயம்... ஒருவன் அன்பை எதிர்நோக்கும் போது அதன் சம அளவு அன்பை அவன் தானம் அளிக்கவும் கற்றிருக்க வேண்டும்!!!அது எதையும் எதிர்ப்பார்க்காவிட்டாலும்,ஸ்வீகரித்த அன்பினை மனம் உவந்து தானம் வழங்கினால் மட்டுமே நம்பிக்கையானது உதிக்கும்!இது எனது விதியல்ல!இதுவும் காலத்தின் கட்டாயமாகும்!!!

"மாஹீ!"-இப்போதெல்லாம் சூர்ய நாராயணின் குரல் மகேந்திரனுக்கு திகலூட்டுவதாகவே இருந்தது.

"நிலாவோட அப்பாவை பார்த்தேன்!"-அவர் திகைப்போடு சூர்ய நாராயணனை பார்த்தார்.

"யாரு?"

"பிரசாத்!"

"பிரசாத் ?"

"ஞாபகமில்லையா?"

"நிலாவுக்கு நான் தான் அப்பா!"

"இல்லை..."

"ஏன் நீ புரிஞ்சிக்க மாட்ற சூர்யா! எனக்கிருக்க ஒரே சொத்து என் பொண்ணு தான்!அவ வேற யாருக்கும் சொந்தமில்லை!நிலா என் பொண்ணு!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.