(Reading time: 11 - 21 minutes)

10. காதல் உறவே - தேவி

ரு வாரமாகவே மைதிலி அமைதியாக இருந்தாள். அவளுக்கு ஷ்யாமின் பிறந்த நாள், அவளுக்கு அவன் பிறந்த போது பட்ட கஷ்டத்தை நினைவுபடுத்தியது. இத்தனை வருடங்கள் அது நினைவு வந்தாலும் ஷ்யாமைப் பார்த்து அவள் மனம் இவனுக்காக எப்பேற்பட்ட சிரமங்களையும் தாங்கலாம் என்று தோன்றும். அதனால் சந்தோஷமே படுவாள்.

ஆனால் இந்த முறை அவளுக்கு எல்லோரும் இருந்தும் முக்கியமாக கட்டின புருஷன் இருந்தும் தானே ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி, தன்னந்தனியாக வலியைத் தாங்கி குழந்தை பெற்றதும், தானே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததுமே நினைவுக்கு வந்து அவளை வேதனைப்படுத்தியது. அன்று அக்கம் பக்கத்தவரின் உதவியால் ஒரு பாட்டியை ஏற்பாடு செய்து குழந்தையை நாற்பத்தைந்து நாள் வரை குளிப்பாட்ட ஏற்பாடு செய்ததும், பிறகு அவளே கற்றுக் கொண்டு செய்ததும் நினைவு வந்தது.

ஆனால் இன்று யாரிடமும் அவளால் அவளின் கோபத்தையோ வருத்தத்தையோ காட்ட முடியாமல் அவள் தனக்குள் இறுகினாள். 

Kathal urave

இந்த நிலைமையில் தான் அன்று இரவு ராம் அவளிடம் வந்து “மைதிலி, ஷ்யாமின் பிறந்த நாளுக்கு ஸ்கூலில் யார் யாரை அழைக்க வேண்டும்? “

“இத்தனை வருடம் நானும் என் மகனும் மட்டும்தான் கோவிலுக்குப் போய் வருவோம். இப்பொழுது மட்டும் என்ன?”

“அவன் என்னுடைய மகனும் கூட. அவனுக்கு பிறந்த நாள் எப்படிக் கொண்டாட வேண்டும் என்று எனக்குத் தெரியும்”

“உங்கள் மகன் என்பது இப்பொழுது தான் தெரிந்ததா? நான் வெறுப்பில் வீட்டை விட்டுப் போகும் போது உங்கள் மகன் வயிற்றில் இருப்பது உங்களுக்குத் தெரியாதா. என் கண் முன்னாடி நிற்காதே என்றீர்களே? அப்பொழுது என் வயிற்றில் இருந்த உங்கள் குழந்தையையும் சேர்த்துத் தானே சொன்னீர்கள்.? அப்பொழுது அவனும் நானும் தேவைப்படவில்லை. இவனை பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் துணைக்கு ஆளில்லாமல் இந்த நான்கு வருடங்கள் படாத பாடு பட்டேன். பச்சைக் குழந்தையாக அவனை கிரீச்சில் விட்டு வேலைக்குப் போகும் போது தினமும் செத்துப் பிழைத்தேன். அப்பொழுதெல்லாம் உங்களுக்கு அவன் உங்கள் மகன் என்பது நினைவு வரவில்லை. ஷ்யாமின் டெலிவரி சமயத்தில் நான் இறந்து விட்டால் குழந்தை அனாதையாகி விடுவானே என்று எல்லாம் எண்ணி பயந்தேன். அதன் பிறகு தான் என்னுடைய உறவினர்களைப் பற்றி முழுமுயற்சியுடன் தெரிந்துகொண்டேன். இப்பொழுது மட்டும் என்ன?” என்று கோபமும் கதறலுமாக சண்டையிடடடாள்.

ராம் சற்று நேரம் பிரமை பிடித்தாற் போல் நின்றவன், தன் அறைக்குச் சென்று விட்டான். மைதிலி அப்படியே சரிந்து மடங்கி அழ ஆரம்பித்தவள், வெகு நேரம் கதறி விட்டு அப்படியே தரையில் படுத்து விசும்பிக் கொண்டே உறங்கி விட்டாள். தன்னுடைய அறைக்குச் சென்ற ராமிற்கு கண்ணில் நீர் வந்தது. மைதிலி வீட்டைவிட்டுச் செல்வதற்கு முன் எழுதிய கடிதத்தைப் பார்த்தான்.

முதலில் ஸ்ருதியைப் பற்றிப் பேசியபோது ராம் கோபப்பட்டான்தான். ஆனால் அவளுடன் சமரசம் செய்ய முயலவில்லை. சபரி திருமணம் முடிந்து, மைதிலி அவனிடம் பேச வந்தவளை அலட்சியப்படுத்தி ஒரு வாரம் முடிந்திருந்த நிலையில் இப்போது அவன் கோபம் சற்றுக் குறைந்திருந்தது. ஒருவாரமாக அவளைப் பார்க்காமல், பேசாமல் கழித்து விட்டாலும் அவனுக்கும் ஏனோ மனது சரியாக இல்லை. இந்நிலையில் இரண்டு நாள் முன்பு அம்மா சொன்ன விஷயம் வேறு உறுத்த ஆரம்பித்தது, தான் அவளைக் கோபத்தில் கண்டபடி பேசியதையும் அதிலிருந்து அவள் யாரிடமும் பேசுவதில்லை, மேலும் கீழே வருவதில்லை என்பதையும் தெரிவித்திருந்தார். அவனுக்கு தன்னால்தான் அம்மா அவளிடம் கோபப்பட்டார்கள் என்ற போது கஷ்டமாக இருந்தது. அதிலும் அவளுக்குப் பிரசவம் பார்ப்பது முதற்கொண்டு பேசியதைப் பற்றி கேட்டதும் தான் அவன் தன் மனைவியின் நிலை உணர்ந்தான். இந்த நேரம் மகிழ்ச்சியாயிருக்க வேண்டிய நேரம். இப்படியாகி விட்டதே என்று எண்ணியபடி அன்றைக்குச் சற்று சீக்கிரமாக வந்தவன், மைதிலியைத் தேடினான். 

மைதிலியை அறையில் காணமல் பால்கனியில் தேடியவன் அங்Nயும் இல்லை என்றதும் தோட்டத்திற்கு போயிருப்பாளோ என்று எண்ணினான். ஆனால் ஏதோ வித்தியாசம் தெரியவே சற்றுக் கவனித்தவன் கண்ணில் பட்டது அவள் டிரஸ்ஸிங் டேபிள் மேல் இருந்த கடிதம். சற்றுத் திகிலுடனே எடுததுப் பிரித்தவன்

“ராம், என் அம்மாவும் இறந்த பின் வாழ வேண்டுமே என்பதற்காக வாழந்து கொண்டிருந்த எனக்கு உங்களைப் பார்த்தவுடன் பிடித்தது. ஆனால் உங்கள் அந்தஸ்து மற்றும் குடும்ப நிலையை அறிந்து நான் என் மனதை அடக்கிக் கொண்டேன். மறுநாள் நீங்கள் வந்து மணக்க கேட்டபோது கூட தயக்கத்துடன் தான் சம்மதித்தேன். ஆனால் நான் எதிர்பாராத வகையில் நம் திருமணம் விரைவாக நடந்தது. அப்போது என் மீதுள்ள  காதலால் என்னைப் பிரிந்திருக்க முடியாமல் திருமணத்தைச் சீக்கிரம் நடத்தினீர்கள் என்று நினைத்தேன். ஆனால் உங்களைப் பொறுத்தவரை கேட்பதற்கு ஆளில்லாத இவளை மணந்து கொண்டால் குடும்பத்தில் பிரச்சினை இருக்காது என்று எண்ணித்தான் மணந்திருக்கிறீர்கள். நீங்களே சொன்னதுபோல் அன்று எனக்கும் காதல் தோன்றவில்லை. ஆனால் உங்களின் குடும்ப அமைப்பும், உங்களையும் எனக்குப் பிடித்திருந்தது. நம் திருமணம் முடிந்த பிறகு நான் முழுமையாக உங்களை நேசித்தேன். உறவுகள் அறியாத என்னைக் திருமணம் செய்தது தவறு என்று எண்ணுகிறீர்கள். ஆனால் உங்களை திருமணம் செய்ததில்தான் எனக்கு உறவுகள் ஏற்பட்டது.

நான் உறவுகளின் அருமையை அறியாத அளவு என்ன தவறு செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. எந்;தப் பெண்ணும் தன் கணவன் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று எண்ணுவாள். அதற்கு உறவுகள் பொருட்டல்ல. நானும் அப்படித்தான்.

எப்போது நீங்கள் என்னை கல்யாணம் செய்து கொண்டதற்காக வருந்த ஆரம்பித்து விட்டீhகளோ, இனியும் நம் உறவு தொடர்வது சாத்தியமல்ல. யாருமேயில்லாத என் வாழக்கைக்கு பிடிப்பு ஏற்படுவதற்காக எனக்குப் பிள்ளை என்ற உறவு கொடுத்திருக்கிறீhகள். அதுவே எனக்குப் போதும். தயவு செய்து என் பிள்ளையை என்னிடமிருந்து பிரித்து விடாதீர்கள். 

நீங்கள் அன்று கூறியது போல் உங்கள் முகத்தில் விழிக்காமல் நான் போகிறேன்.  உங்களுக்குத் தேவைப்பட்டால் வெற்றுப் பேப்பரிலும் கையெழுத்திட்டிருக்கிறேன். உபயோகப்படுத்திக் கொள்ளவும்.

இப்படிக்கு  மைதிலி”

ஓவ்வொரு முறையும் கடிதத்தைப் படிக்கும்போதும் மிகவும் வேதனைப்படுவான். இன்றும் வெகு நேரம் போராடி தன்னுடைய உணர்வைக் கட்டுப்படுத்திக் கொண்டான். பின்னர் மைதிலியின் அறைக்கு வந்தவன், தூக்கத்திலேயே அவள் விசும்புவதைப் பார்த்து அவளை கட்டிலில் ஷ்யாமின் அருகே கிடத்தி முதுகை தடவி விட்டான். சற்று நேரத்தில் அவள் அமைதியாக உறங்கவும் மெதுவாக எழுந்தவன் பின் ஒரு முடிவுக்கு வந்தவனாகச் செனற்hன்.

றுநாள் காலை எழுந்தவுடன் மைதிலிக்கு முன் தின இரவு தான் கோபத்தில் கத்தியதும், அழுது கொண்டே தரையில் படுத்ததும் நினைவுக்கு வந்தது. பிறகு அவள் எவ்வாறு படுக்கைக்கு வந்தாள் என்று யோசித்தாள். ராமைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என்றெண்ணியபடி தன் வேலைகளைச் செய்தாள்.

அப்போது கதவு திறக்க, அவள் எண்ணத்தின் நாயகனே அங்கு நின்றிருந்தான். டிராக் சூட்டில் இருந்தவன், அவளருகில் வந்து “குட்மார்னிங் டார்லிங்” என்று கன்னத்தில் முத்தமிட்டான். அவள் வேகமாக விலகவும் அவளைப் பிடித்து மறுகன்னத்திலும் முத்தமிட்டவன், பிறகு அவளை விடுவித்துத் திரும்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.