(Reading time: 10 - 19 minutes)

11. காதல் உறவே - தேவி

ஷ்யாமின் பிறந்த நாள் வந்தது. அன்றைக்குக் காலையில் குழந்தைக்கு புத்தாடை அணிவித்து, அனைவரிடமும் ஆசீர்வாதாம் வாங்கச் செய்தார்கள். பிறகு கோவிலுக்கு அழைத்துச் சென்று அபிஷேகமும் அர்ச்சனையும் முடித்தனர். அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அதனையும் முடித்து வீட்டிற்குச் சென்றனர்.

ஷ்யாமிற்கு ராம் ஒரு சைக்கிள் பரிசளிக்க, மைதிலி அழகிய வாட்ச் பரிசளித்தாள். தாத்தா பாட்டி ஒரு வீட்டிற்குள் ஓட்டும் கார் வாங்கிக் கொடுத்திருந்தனர். ராமின் தாத்தா பாட்டி ஒரு அழகிய செயினை பரிசளித்தார்கள்.

மதியம் சபரி, சுபத்ரா வீட்டினர் வந்து விட எல்லோருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. விருந்து முடிந்த பின் மாலை பிறந்த நாள் விழாவிற்கு தோட்டத்தை அழகு படுத்த ஆரம்பித்தார்கள். ராம் சந்தோஷ் இருவரும் ஆர்டர் செய்த கேக்கை வாங்கி வந்தனர்.

Kathal urave

மாலை 5 மணி அளவில் கேடரிங்காரர்கள் வந்து அவர்கள் வேலையை ஆரம்பித்து விட, 6 மணி அளவில் வீட்டிலுள்ளவர்கள் தயாரகி வந்தவர்கள்.

ஷ்யாமிற்கு அழகிய கோட் சூட் போட்டு அழைத்து வந்தாள். மைதிலியும் அவர்கள் ரிசப்ஷன்று போட்டிருந்த ஸ்கை ப்@ டிசைனர் சாரியில் வந்தாள். ராம் எப்போதும் போல் கோட் சூட் என வந்தான். இருவரின் பார்வையும் ஒருவரையொருவர் கவ்வியிருந்தன. கீழே ஏதோ சத்தம் கேட்கவும் சுதாரித்தவர்கள், ஷ்யாம் நடுவில் வர, அவனின் இரு கைகளையும் பிடித்தபடி ராம், மைதிலி வந்தனர். அதைப்பார்த்த குடும்பத்தவரின் கண்களில் நீர் வந்தது. சமாளித்துக் கொண்டு கை தட்டி வரவேற்க, விழா மேடைக்கு வந்தவர்கள், எல்லோரும் வந்த பிறகு கேக் வெட்டினார்கள். ஷ்யாம் கேக் கட் செய்தவுடன், அங்கிருந்த சிறு குழந்தையான அஸ்வினுக்கு ஊட்ட எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். அதற்குள் மைதிலி கேக்கை சிறு துண்டுகளாக்கி தட்டில் போட்டு குடும்பத்தவர் அனைவருக்கும் ஊட்டச் சொல்ல ஷ்யாமும் செய்தான். பிறகு வந்திருந்த விருந்தினர்க்கு கேக் விநியோகம் செய்யப்பட்டது.

பிறகு குழந்தைகளுக்கு பாசிங் கேம், மியுசிகல் சேர் விளையாட்டுகள் வைத்திருந்தனர். எல்லோருக்கும் அந்நதந்த வயதினர்க்கு ஏற்றவாறு பரிசு கொடுத்தனர். குழந்தைகள் ஒருபக்கம் விளையாட, அவசரமாகக் கிளம்பும் விருந்தினர்களுக்கு டின்னர் சர்வ் செய்யப்பட்டது,

இரவு 9 மணி அளவில் குழந்தைகள் அனைவரும் கிளம்பிய பின் தாமதாக வந்த விருந்தினர்களோடு டின்னரை வீட்டினர் முடித்தனர். கேடரிங்காரர்களை அனுப்பி விட்டு தோட்டம் சீர் செய்வதைப் பார்த்து விட்டு ராம் மைதிலி இருவரும் தங்கள் அறைக்கு வந்தனர். பெரியவர்களும், ஷ்யாமும் ஏற்கனவே படுக்கச் சென்றிருந்தனர். ஷ்யாமை மைதிலி தங்கள் அறையில் படுக்க வைத்துவிட்டுத்தான் கீழே மேற்பார்வை செய்ய வந்திருந்தாள்.

ங்கள் அறைக்குச் சென்றவுடன், மைதிலி ராமிடம் “குட் நைட்” என்று சொல்லிவிட்டுத் திரும்பும்போது, அவளை நிறுத்திய ராம் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான். அவள் திகைத்து நிற்கவும் கன்னத்தில் முத்தமிட்டு “யு ஆர் லுக்கிங் பியுட்டிபுல் மிது”. என்றபடி மறுகன்னத்தில் முத்தமிட்டான்.

அவள் சுதாரித்து விலக, மீண்டும் அவளை கையணைப்பில் கொண்டு வந்தவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு “ஏன் விலகுகிறாய்?” என்றான்.

“எங்களை அழைத்துவரும்போது ஷ்யாமிற்கு அம்மா, அப்பா என்று மட்டும்தானே கூறினீர்கள். வேறு எதற்கும் கட்டாயப்படுத்த மாட்டேன் என்றீர்களே?” என்றாள்.

“நான் அப்படிச் சொல்லவில்லையே. உனக்கு அடியோடு பிடிக்கவில்லையென்றால் என்று சேர்த்துச் சொன்னேன். ஆனால் உனக்குத்தான் என்னைப் பிடிக்கிறதே” என்றபடி மேலும் அவளை இறுக்கி அணைத்தான்.

“உங்களைப் பிடிக்கிறது என்று எப்போது சொன்னேன்”

“நீ சொன்னால்தான் புரியுமா? பார்த்தாலும் புரியும். “ என்றவன் அவள் கழுத்து வளைவில் முகம் பதித்தான். அவன் கைகள் அவள் அங்கங்களை அளக்க ஆரம்பிக்க, மைதிலியும் நெகிழ ஆரம்பித்தாள். அவர்களிருவரும் கடந்த கால துன்பங்களை மறக்க ஆரம்பித்தனர். அவளை அப்படியே தூக்கி தன்னுடைய அறைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, குழந்தை அவளைத் தேடும் சத்தம் கேட்டது.

மைதிலி உடல் நெளித்து இறங்க ஆரம்பிக்க, ராம் அவளை இன்னும் இறுக்கியவன், அவளை அவளுடைய அறைக்குத் தூக்கிச் சென்றான். அவளை பெட்டில் இறக்கி மீண்டும் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டுச் சென்றான்.

ஒரு பெருமூச்சுடன் குழந்தையை தட்டிக்கொடுத்தவள், அவன் தூங்கவும், தன் இரவு உடையை மாற்றிக் கொண்டு படுத்தாள். ஆனால் தூக்கம் வரவில்லை. ராமின் தாபக் குரலும், அவனின் வேகமுமே நினைவு வந்தது.

தன் அறைக்குச் சென்ற ராமிற்கும் உறக்கம் வரவில்லை. மைதிலியின் அழகும், அவன் தொட்டவுடன் அவளின் நெகிழ்வுமே நினைவுக்கு வந்தது. அடுத்த 10 நாளில் சந்தோஷின் திருமணம் முடிந்த பிறகு அவளிடம் பேசவேண்டும் என்று எண்ணியபடி தூங்கினான்.

ன்றிலிருந்து ராமின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. மறுநாள் காலை ஜாகிங் முடித்து விட்டு வந்தவன், “மைதிலி, காபி” என்றான். அவள் திருமணத்திற்கு பின்னர் அவள் தான் ராமிற்கு எல்லா வேலையும் செய்ய வேண்டும். அவர்களிடையேயான பிரச்சினையின் பிறகு அவனும் கேட்பதில்லை. அவளும் போய்க் கேட்பதில்லை. அவன் சமையற்காரரிடமே கேட்டுக் கொள்வான்.

ஆனால் இன்று ராம் அவளைக் கேட்கவும், எடுத்துக் கொண்டு வந்தவள், அவனை ஹாலில் காணாது, மாடிக்குச் சென்றாள். அவன் அவர்கள் அறை ஹாலில் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தான். ப்ளாஸ்கிலிருந்து கப்பில் ஊற்றி “காபி” என்று நீட்டினாள். காபியை வாங்கியவன், அவளையும் இழுத்து அருகில் அமர வைத்து “நீ சாப்பிட்டாயா?” என்றான். அவள் இல்லை என்று தலையாட்டவும், அவள் வாயில் கப்பை வைத்தான். முன்பு அவர்கள் இருவரும் அப்படித்தான் ஷேர் செய்து சாப்பிடுவார்கள். அவள் பாதி காபி குடிக்கவும் மீதியை தான் சாப்பிட்டான்.

மைதிலி எழுந்திருக்க முற்படும்போது “கீழே போகிறாயா?” என்றான். ஆமென தலையாட்டவும்

“அங்கே என்ன வேலை?”

“குழந்தைக்கு பால் எடுத்து வர வேண்டும்.”

“சரி. ஷ்யாமை பால் குடிக்க வைத்து விட்டு வா”

“இல்லை. அவனை ஸ்கூலுக்கு கிளப்ப வேண்டுமே”

“எனக்கு டிரஸ் எடுத்து வைத்துவிட்டுப் போ. அவனை ரெடி பண்ணிய பிறகு அவனோடு வா” என்றான். அவனுக்கு டிரஸ் எடுத்து வைத்துவிட்டுச் சென்றவள், மீண்டும் குழந்தையை ரெடி செய்து கொண்டு வந்தாள்.

“குட்மார்னிங் கண்ணா” என்றவன், “மிது டை கட்டி விடு” என்றான்.

டை கட்டிய பிறகு, கீழே பிரேக் பாஸ்ட்டிற்குச் சென்றார்கள். ராம் அவளை பரிமாறச் சொல்ல, ஷ்யாமை கவனித்தபடி செய்தாள். வீட்டில் எல்லோரும் பாராதது போல் கவனித்தனர். கூடிய சீக்கிரம் இருவரும் சரியாகிவிடுவார்கள் என்று தோன்றியது.

சாப்பாடு முடிந்த பின் ஷ்யாமை டிரைவரோடு ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு கிச்சனுக்குத் திரும்பியவளை அழைத்துக் கொண்டு அப்பாவிடம் “10 நிமிஷத்தில் வருகிறேன். கிளம்பலாம்பா” என்றபடி மாடியேறினான்.

அங்கே அவன் அறையில் பைல், லேப்டாப்பை கொடுத்து ப்ரீப் கேஸில் வைக்கச் சொன்னான். கோட்டை மாட்டியபடி திரும்பியவன் கையில் மொபைல் போனைக் கொடுத்தாள். அவன் அவளை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டு “பை மிது டார்லிங். மாலை பார்க்கலாம்” என்று கீழே இறங்கினான்.

அவன் சென்றபிறகு சாப்பிட்டு விட்டு அத்தை சற்று ஓய்வெடுக்கும் நேரம், தோட்டத்தில் மர நிழலில் அமர்ந்து யோசித்தாள். அவன் பழையபடி அவளிடம் மாற ஆரம்பித்திருக்கிறான் என்று தோன்றியது. முன்பு அவர்கள் தனிமையிலும் சற்று உணர்ச்சிவசப்படும் போதுதான் மிது என்று அழைப்பான். ஆனால் இப்போது யாரும் அருகில் இல்லையென்றாலே மிது என்றுதான் அழைக்கிறான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.