(Reading time: 35 - 70 minutes)

12. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

சித்தியின் வார்த்தையை கேட்ட ஷாலு மிரண்டுதான் போனாள். அதோடு குற்ற மனப்பான்மையும் சேர்ந்து கொள்ள, அவள் அன்று அதன் பிறகு சரித்ரன் கண்ணில் படவே இல்லை. அவன் ஓர் அறையில் இருந்தால் இவள் இன்னொரு அறையில் பம்மினாள். அந்த கண்ணா மூச்சி ஆட்டம் அன்றோடு முடியாமல் அதன் பின்னும் தொடர்ந்த போதுதான் சரித்ரனே அது தற்செயலாக நடக்கவில்லை என்பதை உணர்ந்தான்.

தன் சித்தப்பா வீட்டைத் தவிர எங்கும் அவனை சந்திக்காதவாறு மிக கவனமாக நடந்து கொண்டாள் ஷாலு. சித்தப்பா வீட்டிலுமே இவன் இருக்கும் வேளைகளில் எப்பொழுதும் சித்தியின் வால் பிடித்துக் கொண்டே அலைந்தாள் அவள்.

அதே போல் இவர்கள் இருவருக்கும் பொதுவான உறவினர்கள் வீட்டு விழாவிற்கு செல்ல நேர்ந்தாலும் இவனிடம் கிட்டதட்ட அறிமுகமற்றவன் போலவே பழகினாள்… இல்ல இல்ல…. விலகினாள் ஷாலு.

esvசரித்ரனுக்கு ஷாலு அன்றைய அத்தைக்கும் இவனுக்குமான உரையாடலை கேட்டிருப்பாள் என்ற எண்ணம் வரவில்லை எனினும், அவளின் அந்த நடவடிக்கைகள் தன் அத்தையை நிம்மதியாக உணர வைப்பதை உணர்ந்தவன், அவள் நடவடிக்கைகளுக்கு தன்னாலான ஒத்துழைப்பைக் கொடுப்பதெனதான் முடிவு செய்தான். ஒரு வேளை அத்தையே அவளை இப்படி நடந்து கொள்ளச் சொல்லியும் இருக்கலாம் என்பது அவனது எண்ணம்.

காரணம் வெள்ளிக் கிழமைகளில் சரித்ரன் அவளை கல்லூரியில் இருந்து சித்தப்பா வீட்டிற்கு அழைத்து வரும் அந்த வாய்ப்பு அப்ரப்ட்டாய் இவனுக்கு கேன்சலாகி ஷாலுவின் இன்னொரு சித்தப்பா மகன் மனோஜிற்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த முடிவு நிச்சயம் அத்தையின் கைவண்ணமாய்த்தான் இருக்க முடியும்.

அதோடு “ஷாலு இங்க தங்குறப்ப நீயும் நைட் இங்க ஸ்டே பண்ற மாதிரி இருந்தா இனி நல்லா இருக்காது சரன்…” என இவனிடம் சொல்லி இவனது சனி தங்கல்களுக்கு தடை போட்டதும் அவரே.

இவைகளுக்கு இடையில் அவனுக்கு மகிழ்ச்சி தந்த ஒரே விஷயம் இவன் மொபைலில் எப்பொழுது அழைத்தாலும் அவள் பேசியதுதான்.

அதிலும் முன்பு போல் ஒரு நட்பு ரீதியான பேச்சாக மட்டுமில்லாமல் எல்லை தாண்டாமல் இவன் சீண்டும் நேரங்களில் அவள் சீராமல் சிணுங்கி இவனை இன்பமாய் வதைத்தாள். செல்லமாய் திட்டினாள். சரன் சரித்ரன் எல்லாம் போய் தரன் தரு என்ற நிலைக்கு வந்திருந்தாள்.

அதோடு மட்டுமில்லாமல் அடுத்தகட்டமாக இவனைப் பாதிக்காத வண்ணம் அவ்வப்பொழுது அவனது அம்மாவிடம் இவனையே போட்டுக் கொடுத்தாள்.

“இன்னைக்கு லஞ்ச் ஃஸ்கிப் பண்ணிட்டாங்க அத்த…”

“இன்னைக்கு சிக்‌ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டீன் ஹார்ஃஸ் ஆஃபீஸ்ல இருந்துருக்காங்கத்த….வீட்டுக்கு போங்கன்னு சொன்னா என்ட்ட கோப்படுறாங்க…என்னன்னு கேளுங்கத்த….”

“ ஃபிஃப்த் டைம்மா இன்னைக்கும் வீட்டு கீய உள்ள வச்சுட்டு கதவ லாக் செய்தாச்சு....ஆட்டோமெடிக் லாக் உங்களுக்கு செட் ஆகலைனு சொன்னா கேட்கிறதே இல்லத்த….”

முக்கியமாக தினமும் முக்கால் மணி நேரம் இவனது அம்மா இவாஞ்சலினிடம் கடலை போட்டாள். ஒருவகையில் அவன் குடும்பத்திற்குள் வந்தேவிட்டாள் அவள் என இவனை உணரவைத்தாள்.

வேறொரு நாள் இவன் தன் வீட்டுக் கதவை திறந்ததும் அதிர்ச்சியில் மயங்கி விழாத குறைதான். வீட்டு வேலைக்கென வந்து செல்லும் ஆட்கள் இவனுக்கு உண்டெனிலும் எப்படியும் உடையவர் பாராத வேலை ஒரு முழம் கட்டை என்பதின்படி வீடு பேச்சுலர் பாய் ஹவுஸாக கொஞ்சம் அப்படி இப்படியாகத்தான் இருக்கும்.

ஆனால் இப்பொழுது பிக்சசர் பெர்ஃபெக்ட். வீட்டின் இரண்டாவது சாவியை ஷாலுவின் நச்சரிப்பின் பேரில் அத்தை வீட்டில் வைத்தது நியாபகம் வந்தது.

இன்னொரு நாள் கதவைத் திறக்கும் போது டைனிங் டேபிளில் ஃப்ரெய்ட் ரைஸும் மஷ்ரூம் மசாலாவும் காத்திருந்தன. அவனுக்கு பிடித்த காம்பினேஷன். ‘நேத்து கோப்பட்டீங்கல்ல அதுக்கு பனிஷ்மென்ட்…..என் கையால செய்தது…..சித்திட்டு பழகிட்டு வந்தேனாங்கும்…’ என்ற நோட்ஸுடன்

வீட்டின் ஒவ்வொரு அறையிலும் அவளை உணரத் தொடங்கினான் சரித்ரன்.

ஆனாலும் வாரம் ஒரு முறை அத்தை வீட்டில் நேரில் பார்க்கும் அந்த நாளிலும் சாப்பாட்டு வேளையில் கூட இவனோடு வந்து அமராமல் ஓடி ஒழிந்து ‘ஆனாலும் இது டூ மச்’ என்று அவனை ஏங்க வைத்து எரிச்சல் பட வைத்தாள்.

பசித்தவன் கண்ட ஃபுல் மீல்ஸ் கனவு போல் சந்தோஷத்தையும் ஏமாற்றத்தையும் சேர்ந்தே சேர்த்தன நாட்கள்.

இதுவரையிலும் அந்த விலகல் வில்லங்கம் செய்யாமல் நல்லதைத்தான் செய்தது என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால் இன்னொரு வகையில் அது வேறு சிக்கலை கொண்டு வந்து சேர்த்தது.

குடும்ப விழாக்களில் இவன் அருகிலிருக்கும் போதே சில பெருசுகள் “ராஜ்குமார் தன் பிள்ளைக்கு மாப்ள பார்க்கானா இல்லையா? என்ன இன்னும் படிக்க வச்சுகிட்டு இருக்கான்? நமக்கு தெரிஞ்ச நல்ல இடம் இருக்குது, சட்டு புட்டுன்னு கல்யாணத்தை முடிச்சுடலாம்…உன் அண்ணன்ட்ட கேட்டு சொல்லேன்…என இவனது மாமாவிடம் சொல்லி நோகடித்தது எனில்,

ஃபங்க்ஷன்ஸ்ல கூட்டமா சேர்ந்து மொக்க போடுற பையங்க கேங், ஷாலுவுக்கு ஏதோ உறவு முறையில் மாமா மகனான ப்ரவீனை இவன் முன்னயே ஷாலுவுடன் இணைத்து கிண்டலடிப்பதும் அந்த ப்ரவீன் அதற்கு வெட்கமாக சிரிப்பதும் என….சரித்ரன் காதில் புகை என்ன பூகம்பத்தையே வர வைத்தது.

இத்தனைக்கும் ஷாலு அந்த ப்ரவீனிடம் பேசி பழகினாள் என்றெல்லாம் இல்லை. அந்த ஃபங்க்ஷன்க்கு சரன் வந்ததே அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக மட்டும்தான். ஃபஃபே சிஸ்டத்தில் சாப்பாடு. பெரிய லானில் ஒர் ஓரத்தில் சற்று மங்கலான வெளிச்சத்தில் இருந்த ஒரு சர்விஸ் டேபிள் அருகில் நின்று தன் தட்டில் ஃப்ரூட் ஸலாடை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் அவள்.

தனக்கானவைகளை எடுப்பது போல் அவளுக்கு அடுத்துபோய் இவன் நிற்க்கும் போதுதான் இவனைக் கவனித்தவள் சற்று மிரண்டாலும் அதையும் தாண்டி அவள் முகத்தில் பரவவிட்ட அழகான காதலால் இவனை கவிழ்த்துதான் போட்டாள்.

உடுத்தியிருந்த தாவணியும் அவள் இடுப்பில் ஓடிய குட்டி ஹிப் செய்னும் வாயேன் வந்து வம்பு செய்யேன் என இவனை இழுத்தால், அவளோ அவசர அவசரமாக அந்த இடத்தைவிட்டு நகரத்தொடங்க அப்படி அவள் நகர்ந்துவிட்டால் பின்பு அவளைப் பிடிப்பது குதிரைக் கொம்பு என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்தவன், அதற்குள் எதாவது சின்னதாக அவளை சீண்ட நினைத்து அவள் தட்டில் பாதி கடித்துவிட்டு வைத்திருந்த ஜாங்கிரியை எடுத்து தன் வாயில் வைத்துக் கொண்டான்.

அவள் முகம் சிவந்த வேகம் தினம் பார்க்க தோன்றும்.

“ஐயோ…யாராவது பார்த்துட போறாங்க…” அவசர அவசரமாக அவள் நகர விளையாட்டாக மீண்டுமாக அவள் தட்டை நோக்கி எதையோ எடுக்கப் போவது போல் பட்டென கை நீட்டினான் சரித்ரன்.

சட்டென தன் தட்டை பின்னுக்கிழுத்தாள் ஷாலு. அதில் அப்பொழுதுதான் அங்கு வந்திருந்த ப்ரவீனின் கையிலிருந்த தட்டில் இடித்தது இவள் தட்டு. இடம்பெயர்ந்து ப்ரவீன் தட்டில் போய் அமர்ந்தது இவள் தட்டில் எடுத்து வைத்திருந்த ஜாமூன் கிண்ணம்.

“சா…சாரி…” திரு திருவென முழித்தாள் ப்ரவீனை நோக்கி. சரன் விளையாடியதை ப்ரவீன் பார்த்திருப்பனோ என்ற பயம் அவளுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.