(Reading time: 20 - 39 minutes)

18. வாராயோ வெண்ணிலவே - சகி

ன்று பிரசாத் கேட்ட வரத்தின்படி தனது இல்லத்தை நீங்க புறப்பட்டாள் வெண்ணிலா. உடைமைகளை எடுத்து வைக்கும் போது மனதே கல்லாய் போனது!!! கண்களை மீறி அழுகை வந்துவிட்டிருந்தது!!

"அக்கா!"-வைஷ்ணவி அழுதே விட்டிருந்தாள்!!

"போகாதீங்க அக்கா!"-வெண்ணிலா ஒரு கசப்பான புன்னகையை வெளியிட்டாள். 

Vaarayo vennilave

"நான் கிளம்புறேன்!உனக்கும்,விஷ்வாக்கும் நடக்க போற கல்யாணத்துக்கு என்னை கூப்பிடுவீங்கல்ல?யாரோன்னு மறந்துட மாட்டீங்களே!"

"அக்கா!அப்படி பேசாதீங்கக்கா!நீங்க அவரோட அக்கா!யார் வந்தாலும் அதை மாற்ற முடியாது!!"

"மாற்றி காட்டிட்டாங்கம்மா!நான் கிளம்புறேன்!"

"வேணாம்கா!"-வைஷ்ணவி அவள் கரத்தைப் பற்றி கொண்டாள்.

நிலா புன்னகையோடு அதனை விலக்கி கிளம்பினாள்!! மாடியிலிருந்து இறங்கி வந்தவளின் கண்கள் சந்தித்து யுகேந்திரனையே!!நினைத்தும் பார்க்கவில்லை இப்படி ஒரு பந்தம் ஏற்படும் என்று!!இறைவன் எவ்வளவு நுணுக்கமாக உணர்ச்சிகளை திரிக்கின்றான்!! அவன் அமைதியாக எழுந்து நின்றான்.மகேந்திரன் கலக்கத்தோடு அருகே நின்றிருந்தார்!!அவள் செல்வதனால் துர்காம்மாவும் கண்ணீர் சிந்தினார். கீழிறங்கி வந்தவள் அவர்களை பார்த்து கசப்பான புன்னகையில்,

"நான் கிளம்புறேன்!"என்று பதில் அளித்து ஓர் அடி எடுத்து வைக்க,

"நில்லு!"என்ற குரல் அவளை தடுத்து நிறுத்தியது.

குரல் வந்த வாசலை நோக்கி நிமிர்ந்தவள் விஷ்வா கோபத்தோடு நிற்பதைக் கண்டு திகைத்து போனாள். அவன் கோபத்தோடு நுழைந்தான்! யுகேந்திரனை பார்த்தவன் கோபத்தோடு அவள் பக்கம் திரும்பி,

"எங்கே கிளம்பிட்ட?"

"நான்...வந்து..."

"விஷ்வா நான்..."

"நீங்க பேசாதீங்க மாமா!"-அவன் கோபத்தில் அவர் வாயடைத்துப் போனார்.

"எவ்வளவு பெரிய உண்மை மறைச்சிருக்கீங்க?இஷ்டத்துக்கு அவ வாழ்க்கையில எல்லாரும் விளையாடுவீங்களா?ஆனா,இவ வாயை திறக்கக் கூடாது!அப்படி தானே?"

"............"

"முதல்ல ஃப்ரண்டுன்னு சொல்லி ஒருத்தி வந்தா,இவ காதலை பிரிக்க பார்த்தா!அப்பறம் இவளையே பழிச்சிட்டு போனா!"-அவன் கூறுவதைக் கேட்டவள் அதிர்ந்து போனாள்.

இவனுக்கு எப்படி அனைத்தும் தெரிந்தது? அவன் தொடர்ந்தான்...

"அடுத்து வந்தவன் மூணு வருஷமா கொடுத்த தண்டனை போதாதுன்னு நீங்க வேற உங்க பங்கை காட்டுறீங்களா?"

"விஷ்வா!"

"பேசாதீங்க அங்கிள்!எனக்கு இவங்க  எல்லாரையும் விட என் அக்கா தான் முக்கியம்!!மற்றவங்களை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை!"-அனைவரது நெஞ்சையும் கிழித்தது அவனது வார்த்தைகள்..

யுகேந்திரன் பக்கம் திரும்பி,

"இதோப் பாருங்க சார்!நிலா எங்கேயும் வர மாட்டா!உங்களை டிஸ்டர்ப் பண்ணதுக்கு மன்னிச்சிடுங்க! நீங்க கிளம்பலாம்!"-யுகேந்திரன் சூர்ய நாராயணனை பார்த்தான்.

"விஷ்வா!கொஞ்சம் அமைதியா இரு!நிலா அவன் தங்கச்சி!"

"அவ என்னோட அக்கா!நான் அவளுக்காக யாரை விட்டு தந்தாலும் யாருக்காகவும் அவளை விட்டுத்தர மாட்டேன்!"-நிலைமை கைக்கு மீறி போனது.

"நீ அன்னிக்கு அப்படி பேசும் போதே நினைத்தேன்!உனக்கு கூட ஒரு வார்த்தை சொல்ல தோணலை தானே!"-நிலா தலைகுனிந்து நின்றாள்.

"நான் இன்னும் உயிரோட தான்!மற்றவங்க மாதிரி மனதளவுலயும் சாகலை!"-முதல் முறையாக நெருப்பை கக்குவது போன்ற அவனது வார்த்தைகள் அங்கிருந்தோர் மனதை காயப்படுத்தின!!!

"இது என்ன நியாயம்?தப்பு பண்ணவங்க யாரோ ஒருத்தர்!அவங்க தண்டனையை அனுபவிக்க தேவையில்லை!இவ,பலனை அனுபவிக்கணுமா?நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அது நடக்காது!"

"இங்கிருந்து ஒரு அடி எடுத்து வைத்த,அப்போ தான் என் கோபத்தை இங்கிருக்கிறவங்க பார்ப்பாங்க!நீ தேவையில்லன்னா!இங்கிருக்கிறவங்க வெளியே போகட்டும்!"-மகேந்திரன் மனம் சுக்கலானது!!!

"இன்னிக்கு இங்கே இருக்கிறவங்க அத்தனை பேரும்!முடிவெடுக்கிற அதிகாரத்தை இழந்துட்டாங்க!"-கோபமாக பேசிவிட்டு  உள்ளே சென்றான் விஷ்வா!!!

திக்கற்ற நிலையில் சிறு வெளிச்சமானது மனித கண்களுக்கு சூர்ய ஒளியை காட்டிலும்,ஆயிரம் மடங்கு பிரகாசத்தை நல்கும்!! இறைவன் அளிக்கும் துன்பங்கள் அனைத்திற்கு வலியானது மனினை மட்டுமல்ல,துன்பத்தை வழங்கிய இறைவனையும் பீடிக்கிறது.துன்பங்களில் விடுப்படும் வழியானது அதனைக்கண்டு ஓடுவதில் அல்ல!!!அதனை எதிர்த்து நிற்பதிலே அடங்கியுள்ளது!!! சரியாக கூற வேண்டுமா??? கூறுகிறேன்!!!

ஆரவாரம் மிகுந்த போர்களம் தன்னில் சுதர்சன சக்கரம் செயல்படாத இடத்திலும் மயக்கும் குழலோசை வெற்றியை  நல்கும்!!! வாழ்வை குலைக்கும் துன்பத்திலும் மன அமைதி ஒன்றே வாழ்வை சீராக்கும்!!!(அட டென்ஷன் ஆகாதீங்க!இதை தான் இவ்வளவு பெரிசா சொல்றோம்) கோபத்தில் ஜன்னல் கம்பியை பலம் கொண்டவரை அழுத்தி கொண்டிருந்தான்!!!

"விஷ்வா!"

"என்கிட்ட பேசாதே!"-வெண்ணிலா அவனருகே சென்றாள்.

"தோழின்னு சொல்லிக்கிற ஒருத்தி!!ஒரு மனுஷனோட சுக,துக்கங்களை சமமா பங்கு போட்டு வாழ்க்கையில தாங்க உதவுவா!உன்னோட தோழியா கேட்கிறேன்!என்னை மன்னிப்பியா?"-விஷ்வாவின் கண்கள் கண்ணீரை சிந்தின.அவன் அவளை அணைத்துக் கொண்டு அழுதான்.

நிலா அவனை சமாதானம் செய்தாள்.

"நீ என்னைவிட்டு எங்கேயும் போக கூடாது!"-அவள் விழி ஈரமானது.

"பாசம்னு சொல்லப்படுற உணர்வு!இதயத்தோட தொடர்பு உடையது!இதயத்துடிப்பு நின்னா மட்டும் தான் அந்த உறவு அறுப்படும்!!"

"..............."

"நீ சின்ன வயசுல ஒருமுறை என்னை அம்மான்னு கூப்பிட்ட ஞாபகமிருக்கா?"-அவன் தலையசைத்தான்.

"நீ என்னோட முதல் குழந்தை விஷ்வா!நான் எப்படி உன்னைவிட்டு போவேன்?இது தற்காலிகம் தான்!நிரந்தரம் இல்லை!"

"நிலா!"

"யாராலும் உனக்கும்,எனக்கும் இடையில இருக்கிற பந்தத்தை மாற்ற முடியாது!விதி எங்கேயோ வாழ வேண்டிய என்னை உனக்கு அக்காவா கொண்டு வந்ததுல்ல!நீ என்னோட வளர்ப்பு!"

"நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்?"-நிலா தன் கையில் என்றோ மகேந்திரன் அணிவித்த காப்பினை கழற்றினாள்.அதனை விஷ்வா கையில் வைத்தாள்.

"நான் எப்போதும் உன்கூடவே தான் இருப்பேன்!ஞாபகம் இருக்கா இது உனக்காக வாங்கினது!நீ போட மாட்டேன்னு சொன்னதும் அப்பா எனக்கு தந்தார்!நான் மறுபடியும் இதை உனக்கே தரேன்!நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன்!"

"என்னை போக அனுமதிப்பியா?"-விஷ்வாவின் மனம் தோற்றுப் போனது!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.