(Reading time: 46 - 91 minutes)

17. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்

ன்ன தேவி?... இவ்வளவு சந்தோஷமா இருக்குற?...” என்ற விஸ்வமூர்த்தியின் கேள்விக்கு துர்காதேவி பதில் சொல்லி முடிக்கும் முன்,

“அண்ணா உங்களுக்கு தெரியாதா என்ன?... நம்ம யுவி இன்னைக்கு திருவிழாக்கு வரான்ல… அதான்….” என்று வில்வமூர்த்தி சொல்லவும்

“அட ஆமால்ல… நான் தான் மறந்தே போயிட்டேன்…” என்றார் விஸ்வமூர்த்தி…. 

Piriyatha varam vendum

“அது சரி… உங்களுக்கு எதுதான் நியாபகம் இருந்துச்சு… இது இருக்குறதுக்கு…” என அம்பிகா சொல்லி குறைபட,

“ஏன் அம்பிகா இப்படி சொல்லுற?...”

“அங்க கோவில் பெரியவர் இன்னைக்கு 10 மணிக்குள்ள கோவிலுக்கு வர சொன்னார் தான… நம்ம பிள்ளைங்க எல்லாரையும் கூட்டிட்டு வர சொன்னார் தான… இப்படி மசமசன்னு நிக்கிறீங்க…”

“அட… ஆமா… அம்பிகா… இரு இரு… யுவிக்கு போன் பண்ணுறேன்…” என அவர் தனது செல்போனை எடுக்க…

“அப்பா… யாருக்குப் போன் பண்ணுறீங்க…” என்றபடி யுவி வர,

“அதானே… யாருக்குப்பா பண்ணுறீங்க… இதோ வரானே இந்த குரங்குக்கா?...” என்றபடி துணாவும், மைவிழியனை கை காட்டி சொல்ல…

அனைவரின் முகத்திலும் புன்னகை அழகாய் தவழ்ந்தது…

“வா யுவி… என்ன மூணு பேரும் ஒன்னாவே வந்துட்டீங்க… ஹ்ம்ம்ம்… ரொம்ப சந்தோஷம்… எங்கே மருமகப் பொண்ணுங்க எல்லாரும்?...” –விஸ்வ மூர்த்தி…

“பின்னாடி வந்துட்டே இருக்காங்கப்பா…” – துணா…

“ஆமாப்பா… அவங்க அம்மா-அப்பா கிட்ட எல்லாம் நலம் விசாரிச்சிட்டு வரணும்ல… அதான்…” – விழியன்….

“இவர் பொய் சொல்லுறார் மாமா… நம்பாதீங்க… நாங்க தான் முதலில் போய் எங்க அப்பா-அம்மாகிட்ட நலம் விசாரிப்போம்னு சொல்லி எங்களை லேட்டா வர சொல்லிட்டார் இவர்….” என மஞ்சரி சொல்லிக்கொண்டே வர,

“ஏண்டா… அவ சொல்லுறது உண்மையா?...” என அம்பிகா அவனின் காதைப் பிடித்து திருக,

“அய்ய்யோ… துணாம்மா… வலிக்குது விடுங்க… “ என அவன் கெஞ்ச…

“நல்லா பிடிம்மா… வலிக்கட்டும்…” என்று துணா ஆர்ப்பரிக்க,

“ஏங்க… சும்மா இருங்க… பாவம்… என் அண்ணன்… அத்தை நீங்க விடுங்க அத்தை… அண்ணனுக்கு வலிக்கப்போகுது…” என்ற பாலா அம்பிகாவின் கையைப் பிடித்து கெஞ்ச…

“டேய்… துணா என்னடா இது… இந்த அளவு சப்போர்ட் பண்ணுறா பாலா…” – அம்பிகா

“அய்யோ அந்த கொடுமையை ஏம்மா கேட்குறீங்க… இந்த ஒரு வாரமாவே இந்த பாசத்தொல்லை தாங்கலைம்மா எனக்கு…” – துணா…

“என்ன மாப்பிள்ளை சொல்லுறீங்க… பாசத்தொல்லையா?...” என கேட்டுக்கொண்டே இந்திரன் வர, அவரைத்தொடர்ந்து, கஸ்தூரி, உமா, சிவநாதன், நீலகண்டன், விஜயா என அனைவரும் வந்தனர்…

பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பிறகு,

“அத ஏன் மாமா கேட்குறீங்க… நாங்க ஹனிமூனில் இருந்து ஊருக்கு வந்து ஒரு வாரமாச்சு… அந்த ஒரு வாரமும், இவங்க பாசத்தை நீங்க பார்க்கலையே… அய்ய்யோ…” என துணா கிண்டல் செய்ய…

“என்னது???... ஒரு வாரமாச்சா?...” என விஸ்வமூர்த்தி ஆச்சரியத்துடன் கேட்க…

“அதானே… டேய்…. எங்கிட்ட நேரா இங்க வந்துடுவேன்னு தானடா சொன்னீங்க… இப்போ என்ன துணா இப்படி சொல்லுறான்?... என்னடா விழியா?... எங்களுக்கு தெரியாம என்ன பிளான் போட்டீங்க?...” என அம்பிகா சிரித்துக்கொண்டே கேட்க…

“அட போங்க துணாம்மா… நாங்களாவது உங்களுக்குத் தெரியாம பிளான் போடுறதாவது?... அதும் உங்க அருமை மகன் உங்களுக்கு தெரியமா பிளான் போட விட்டுடுவானா என்ன?...” - விழியன்…

“அதுவும் சரிதான்… ஆனா, ஏண்டா ஒருவாரம் நீங்க யுவிகூட இருந்ததை சொல்லலை எங்ககிட்ட?...” – வில்வமூர்த்தி…

“இந்த கேள்விக்கு பதில் நான் சொல்லுறேன் மாமா…” என பாலா சொல்ல…

அனைவரின் பார்வையும் அவளிடத்தில் சென்றது…

“என்ன பாலா… நீ ஏன் சொல்லலை?... நேத்து பேசினப்போ கூட ஊருக்கு வந்துட்டேன்னு போனில் சொல்லலையே நீ?... என்னடா எதும் உடம்புக்கு முடியலையா?...” என உமா அக்கறையாக கேட்க…

“ஆமா பெரியம்மா… இத்தனை நாள் உடல்நலம் இல்லாம இருந்த மனசு இந்த ஒருவாரமா தான் சரி ஆகிருக்கு…” என்றாள் பாலா…

“என்னடி சொல்லுற?... கொஞ்சம் புரியும்படியாதான் சொல்லேன்….” – கஸ்தூரி…

“அத ஏன் கஸ்தூரி… இப்படி படபடன்னு கேட்குற… பொறுமையாத்தான் கேளேன்… நீ சொல்லுடாம்மா… என்ன நடந்துச்சு?...” – சிவநாதன்…

“எல்லாரும் கேட்குறாங்கல்ல… சொல்லு… இந்து…” – இந்திரன்….

அவர் இந்து என அழைத்ததும், கஸ்தூரி, உமா, சிவநாதன் மூவரும் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருக்க…

இந்திரனோ தான் அவளை இந்து என அழைத்தது புரியாமல், மேலும்,

“சொல்லேண்டா இந்து… அப்பாவும் தெரிஞ்சிப்பேன்ல…” – என சொல்ல,

சட்டென்று கஸ்தூரி அவரின் கையைப் பிடித்து, பார்வையால் அவருக்கு புரிய வைக்க…

அப்போதுதான் தான் அழைத்த விதம் அவருக்குப் புரிய, மெல்ல மகளைப் பார்த்தார்…

“சாரிடா… அப்பா ஏதோ…. தெரியாம…” என அவர் முடிக்கும் முன்,

அவள், “இத்தனை நாள் எனக்குத்தான் தெரியலைப்பா… எதுவுமே…” என சொல்ல

அவர்கள் நால்வரின் முகத்திலும் குழப்பம் எட்டிப்பார்த்தது…

“பாலா… நீ என்ன சொல்லுற?... எங்களுக்கு எதுவும் புரியலை…” – கஸ்தூரி…

“தெளிவாவே சொல்லுறேன்ம்மா… இத்தனை நாள் எனக்குள்ள இருந்த அந்த குரோதம், விரோதம், பகை, ஒரு இனம் புரியாத கோபம், எல்லாமே இப்ப எனக்குள்ள இல்லம்மா… யார் யாரோ பேச்சைக் கேட்டு தப்பு பண்ணின நான், உங்க எல்லாரோட பாசத்தையும், என் வள்ளியையும் புரிஞ்சிருந்தா இத்தனை வருஷ கஷ்டம் யாருக்குமே இருந்திருக்காது தானேம்மா…” என சொல்லிமுடித்த வேளை…

“என் வள்ளி…” என்ற ஒரு வார்த்தை அனைவரின் முகத்திலும் இத்தனை நாள் இழந்திருந்த சந்தோஷத்தையும் ஒட்டு மொத்தமாகக்கொண்டு வர,

கஸ்தூரியோ, மகளைப் பிடித்து, “இப்போ நீ என்ன சொன்ன?... மறுபடியும் சொல்லு… சொல்லு பாலா… சொல்லு…. என்ன சொன்ன?...” என திரும்ப திரும்ப கேட்க…

“இது கனவில்லைம்மா… நனவு தான்… இனியும் அந்த ஏக்கம் உனக்கு இருக்காதும்மா… நான் புரிஞ்சிக்கிட்டேன்ம்மா உன்னையும், பெரியம்மாவையும்… உங்களுக்கு நாங்க இரண்டு பேருமே பொண்ணுங்கதான்… ஏனோ, நான் தான் அதை கொஞ்சம் கூட உணரவே இல்லை… ஆனா, இப்போ என் தப்பை நான் உணர்ந்துட்டேன்ம்மா… என் வள்ளியையும் நான் புரிஞ்சிக்கிட்டேன்….” என பாலா சொன்னதும்…

“இல்லடா… நீ எந்த தப்புமே பண்ணலை… நீ என்னைக்குமே என் பொண்ணுதான்…” – என உமா அவள் முகம்பற்றி சொல்ல…

“இவ்வளவு தப்பு செஞ்சும் இன்னும் என் பொண்ணுன்னு சொல்லுறீங்களே… நிஜமாவே என்னை விட அதிர்ஷ்டம் செஞ்சவங்க யாருமே இல்ல இந்த உலகத்துல… அது தெரியாம, இத்தனை நாள் நான் அதிர்ஷ்டம் இல்லாதவன்னு உங்க எல்லாரோட மனசையும் அன்னைக்கு அப்படி பேசி காயம் படுத்திட்டேனே பெரியம்மா…”

“ஒரு காயமும் இல்லை.... எங்க பொண்ணுக்கு கோபமாகூட பேச வரும்னு மட்டும் தான் புரிஞ்சிகிட்டோமே தவிர, நீ சொல்லுற மாதிரி நீ காயப்படுத்திட்டன்னு நான் ஒருநாளும் நினைச்சதில்லை… நீ வேற யாரோ இல்லடா… என் பொண்ணு… நான் தூக்கி வளர்த்த என் பொண்ணு… நீ பேசி எங்களுக்கு வலிக்குமா என்ன?...” என்ற உமா கண் கலங்கிக்கொண்டே சொல்ல…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.