(Reading time: 35 - 69 minutes)

10. நிழல் நிஜமாகிறது - ஸ்ரீலக்ஷ்மி

ன்று அதிகாலையில் படுக்கையில் இருந்து மெல்ல எழுந்தமர்ந்த துளசி, தலை சுற்றுவது போல இருக்க, மீண்டும் படுத்தவள், ஒருவேளை சட்டென்று வாக்கிங்க்கு டயமாகிவிட்டது என்று எழுந்ததால் இருக்கலாம் என்று எண்ணியவள், சிறிது நேரம் கழித்து, மெல்ல எழுந்து முகம் கழுவி, காலை வாக்கிங்க்கு தயாரானாள். மீண்டும் தலை சுற்ற, என்னடா இது என்று, பேசாமல் படுக்கையில் அமர்ந்து விட்டாள்.. வயிற்றில் ஏதோ பட்டாம்பூச்சி பறப்பது போல் ஒரு சிறு அசைவு.... பின் சில நொடிக்குள் கீழ் வயிற்றில் ஏதோ முட்டுவது போல் ஒரு சங்கடம்... பயத்துடன் நன்கு நிமிர்ந்து அமர்ந்தவள்,... "ராம்" என்று ஒரு குரல் கொடுத்தாள்.

காலை நடை பயிற்சிக்கு தயாராகிக் கொண்டிருந்த ராம், துளசியின் சத்தமான அழைப்பில் பயந்து உடனே ஒடி வந்தவன், துளசியின் வெளிறிய முகத்தைப் பார்த்து, "என்னம்மா, என்னவாயிற்று? ஏன் கூப்பிட்டாய்?"

வயிற்றை பிடித்துக் கொண்ட துளசி, " என்னவென்று தெரியவில்லை ராம்... ஏதோ வயிற்றில் இனம் புரியாத சங்கடம்.... என்னவோ முட்டுவது போல் இருக்கு. அன் ஈஸியாக பீல் பண்ணுகிறேன்... எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறது"

Nizhal nijamagirathu

"ஒன்றுமிருக்காது துளசி, எதற்கும் அம்மாவைக் கூப்பிடுகிறேன்", என்று அவன் திரும்பும் போதே, காலை ஜீசுடன் உள்ளே நுழைந்தார் சியாமளா.

"என்ன துளசி, என்ன சொல்லுகிறான் என் பேரன்.... உன்னை எட்டி எட்டி உதைத்து ஃபுட்பால் விளையாடுகிறானா" எனக் கேட்டார்.

வியந்த பார்வையுடன் திகைத்து அமர்ந்திருப்பவளைப் பார்த்து, "என்ன பார்க்கிறாய்... நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே தான் வந்தேன்... உன் பிள்ளை உன்னுடன் ஏதோ பேச நினைத்து உன்னை தட்டி தட்டி கூப்பிடுகிறான் போல" என விளையாட்டாகச் சொன்னவர், "பயப்படாதே துளசி...அது வேறொன்றுமில்லை... ஐந்தாம் மாதம் தொடங்கிவிட்டது அல்லவா.... அதான் குழந்தை அசைகிறான்.... அம்மா நான் உன் வயிற்றுக்குள் வளர தொடங்கி விட்டேன்.... என்னை இனி நீ நன்றாக கவனி, இல்லை உன்னை இப்படித்தான் உதைப்பேன் என்று உனக்கு சொல்லுகிறான்" என்று ஜோக்காக சொன்னவர், "எதற்கும் ஒரு முறை டாக்டரிடம் சென்று வாருங்கள்"

"சரிம்மா , என்ற ராம் துளசியிடம் திரும்பி, " துளசி... இன்று நீ வாக்கிங் வர வேண்டாம். சிறிது படுத்து எழுந்துவிட்டு, குளித்து தயாராகி விடு... நான் டாக்டர் சுபாவிடம், அதற்குள் பத்து மணிக்கு அப்பாயின்மெண்ட் வாங்கி விடுகிறேன்.... இன்று வேண்டுமானால் கம்ப்யூட்டர் கிளாசுக்கு லீவ் சொல்லிவிடு"

"சரி....எப்படியும் எனக்கு கம்ப்யூட்டர் கிளாஸ் இன்று 12 மணிக்குத்தான். வீக்கிலி டெஸ்ட் இருக்கிறது.. டாக்டரிடம் போய் விட்டு, அப்படியே நீங்கள் என்னை கிளாஸில் டிராப் செய்து விடுங்கள்" என்றாள் துளசி.

காலை பத்து மணிக்கு ஹாஸ்பிடல் ஸ்பெஷல் கன்சல்டேஷன் ரூமில் அமர்த்திருந்தனர், துளசியும், ராம் சரணும். "என்னம்மா துளசி, எப்படி இருக்கிறாய்... பார்த்து ஒரு மாதம் ஆகப் போகிறதே... மன்திலி செக்கப்பா?.... என்ன சொல்லுகிறான் உன் குழந்தை..." என்ற டாக்டர் சுபாவிற்கு,

துளசி உடனே, "அதற்குத்தான் வந்திருக்கிறோம் டாக்டர்... டாக்டர் இன்று காலை முதல் வயிற்றில் ஏதோ உறுளுவது போல் இருக்கிறது... பயமாக இருக்கிறது"

"பயப்பட ஒன்றுமில்லை.. ஐந்தாம் மாத தொடக்கத்தில் இருந்து குழந்தை உள்ளுக்குள் அசைய ஆரம்பித்து விடும்.... சரணைப் பார்த்த டாக்டர். சுபா, நீ இங்கேயே இரு, உன்னை பிறகு கூப்பிடுகிறன்", என்றவர், "துளசி... நீ வா" என்று அவளை திரைக்குப் பின்னால் இருந்த 'ஸ்கேன்' ரூமிற்கு அழைத்துச் சென்றவர், அவளை ஸ்கேன் செய்தார். வயிற்றில் அசைந்து நெளிந்து கொண்டிருந்த குழந்தையை மிஷினின் டிஸ்பிளே ஸ்கீரினில் காண்பிதவர், "சரண் உள்ளே வாப்பா" என அழைத்தார்.

சரணுக்கும், துளசிக்கும் ஸ்கீரினில் குழந்தையின் கைகள், கால்கள், முகம் என ஒவ்வொன்றாகக் காண்பித்தவர்...., "இதோ பார்.. குழந்தை சைக்கிள் ஒட்டுகிறது", என கை, கால்களை அசைத்தவாறு தெரிந்த குழந்தையை காண்பித்தார்.

"துளசி, இனி உன் வயிற்றில் குழந்தை அசையும்பொழுது கையை வைத்துப் பார். உனக்கே புரியும் உருண்டு புரளுவது" என்றார்

சரணின் மனதில் ஏதோ இனம் புரியாத பரவசம்... வைத்த கண் வாங்காமல் திரையை பார்த்தவாறு இருந்தவனை கண்ட டாக்டர், "பார்த்தாயா, சரண், குழந்தையை"

இன்னமும் அந்த சின்ன உருவத்தையே பார்த்த பரவசத்திலே மூழ்கிருந்தவன் தலையை ஆட்டி, "டாக்டர், குழந்தை எப்படி வயிற்றிலேயே இப்படி ஆக்டிவாக இருக்கு? " என வாய்விட்டு கேட்டான் சரண்.

அவனைப் பார்த்து சிரித்த டாக்டர்.சுபா, "ஆம், உங்கள் குழந்தை நல்ல அரோக்க்யமாக, ஆக்டிவாக வளருகிறது. வெளியுலகைக் காண தன்னை தயார் படுத்திக் கொள்ள தொடங்கி விட்டது", என்றவர், "என்ன துளசி, சந்தோஷம்தானே?"... ஒன்றும் பேசாதவளை, "என்ன துளசி, கற்பனையா?.... இனி, நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முடிந்தவரை வாக்கிங் செய். வயிறு பெரிதாகத் தொடங்கிவிடும்.. நடப்பதற்கு சிரமமாக இருக்கும். மூச்சு வாங்கும்... இதெல்லாம் நார்மலே. சாப்பாட்டில் கவனம் தேவை. நல்ல சத்தான உணவாக சாப்பிடு.... இனி சில தடுப்பூசிகள் போட வேண்டி இருக்கும்.. இன்றே அது பற்றி எழுதி தருகிறேன்.. கரக்டாகா பாலோ செய்", என்று சொல்லி மருந்து, மாத்திரை, ஊசிகளுக்கு பிரிஸ்கிரிப்ஷன் எழுதி சரணிடம் கொடுத்தார்.

நன்றி கூறி விடை பெற்ற தம்பதிகள், வரும் வழி நெடுக ஒர் வித பரவசத்திலேயே இருந்தனர்.

துளசிக்குள், ' இன்று ஸ்கேனில் குழந்தையின் அசைவைக் கண்டதில் இருந்து, இனம் புரியாத பரவசம்... வயிற்றில் ஐந்தாம் மாத தொடக்கத்திலேயே இப்படி குழந்தை விளையாடுகிறதே, நேரில் நம் கையில் தாங்கும் பொழுது என்ன என்ன செய்யும். கடவுளே நான் குழந்தையை பெற்று இவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டுமே.. என்னால் முடியுமா? நீதான் எனக்கு மன தைரியத்தை தர வேண்டும்... சொன்ன சொல்லை காப்பாற்ற போதிய திடத்தை தா..' என்று தன் எண்ணங்களில் மூழ்கி இருந்தாள்.

சரணுக்குமே ஒர் வித பரவசம்... என்னென்னவோ உணர்வுகள்.. அன்று பீச்சில் துளசியை தோளில் தாங்கியதில் இருந்தே மனம் அவள் பால் செல்லத் தொடங்கி விட்டது. அதுவும் இன்று, குழந்தையின் அசைவை பார்த்ததில் இருந்து, கரணைப் பற்றிய நினைவுகளை மறந்து, ' இவள் என் மனைவி, இது என் குழந்தை' என்ற எண்ணமே அவனுக்கு இனித்தது. இது மெய்யாகி, வாழ தொடங்கினால் எப்படி இருக்கும் என்று எண்ணி மகிழ்ந்தவன், தன் எண்ணங்களுக்கு கடிவாளமிட்டு,

"துளசி, குழந்தையை ஸ்கேனில் பார்த்தவுடன் எனக்கு ஒரே பிரமிப்பாக இருக்கிறது... நாமும் நம் அன்னையர் வயிற்றில் இப்படித்தானே இருந்திருப்போம்.... என்ன ஒன்று, நம் அன்னையருக்கு அன்று இந்த ஸ்கேனில் பார்க்கும் பாக்கியமிருந்திருக்காது... வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியைப் பார்த்து ரசிக்க அறிவியல் வளர்ச்சியால் இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது பார்த்தாயா?... அந்த குட்டி குட்டி நீண்ட கைகளையும், கால்களையும் பார்த்தால் நம் மகன் உயரமான குழந்தையோ?.. ரொம்ப சுறு சுறுவென்று வயிற்றில் சுழன்று கொண்டே இருக்கிறான்".... என்றவனை இடைமறித்த துளசி,

"மகன் என்பது உங்களுக்கு எப்படி நிச்சயம்... மகளாக இருந்தால் என்ன சொல்லுவீர்கள்..... தூக்கி என்னிடம் கொடுத்து விடுவீர்களோ?... உங்கள் நலம் விரும்பி டாக்டர் மகன் என்று சொல்லிவிட்டாரா என்ன... வாரிசு என்றால் உடனே மகன் தான் என்னும் உங்கள் ஆண் புத்தியை காட்டி விட்டீர்களே", என்று வெடுக்கென்று சொல்லி தலையை சன்னல் புறம் திருப்பிக் கொண்டாள் துளசி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.