(Reading time: 20 - 40 minutes)

16. என் உயிர்சக்தி! - நீலா

சில்லென்ற அதிகாலை குளிர் காற்று...

இன்னும் இரண்டு நாட்களில் மார்கழி துவக்கம்... அதற்கு முன்னமே மார்கழி பனியை நன்றாக உணர முடிந்தது. இதில் நான்கு நாட்களாய் மழை வேறு விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்து!

'ஏசியை கூட அணைத்தாச்சு! பட் குளிருதே! ஜன்னல்...கதவுகளைத் திறந்திருக்க கூடாதோ?! சரி...எழுந்து போய் கதவை சார்த்திவிட்டு வரலாம்!' என்று எண்ணியபடியே எழுந்துக்கொள்ள முனைந்தான் பிரபு.

En Uyirsakthi

குழலீயிடம் சிறு அசைவு தெரிந்தது!

'அதுவும் வேறு யாருக்காவது மனைவியாகி இருந்தாலும் இந்த உடம்பில் உயிர் இருந்திருக்காது.'

திரும்ப திரும்ப இதே வார்த்தைகள் அவன் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.

என்ன சொல்ல வருகிறா இவ?? நிஜமாவே என்னை லவ் பண்றாளா? இல்லையா???' என்று மனதில் எண்ணிக்கொண்டிருந்தான். 

'சரி அவ லவ் பண்றது இருக்கட்டும்.. நீ அவளை லவ் பண்ணறல்ல??' - மனது கேள்வி எழுப்பிது. 

'லவ்வா??? தெரியலை! பட் அவளோட அட்டிட்யூட் பிடித்திருக்கு! இது தான் லவ்வானு தெரியலை?'- இவன்

அடப்பாவி! லவ்வா னு தெரியல... ஆனா அவளை கட்டிப்பிடிக்கிற? அதுவும் ஒரு வித எதிர்ப்பார்போட? கடைசியில் அவ சொன்னது போல நீயும் ஒரு ஆண்பிள்ளைனு காட்டறியா??- மனது

ப்ச்ச்...' என்று சலித்துக் கொண்டான். மீண்டும் சிறு அசைவு அவளிடம்! மயக்கம் தெளிகிறது! சுயநினைவு திரும்புகிறது.. 

இப்போ என்ன செய்யனும்? குமாரை கூப்பிடலாம்! ஆனா எழுந்து போக முடியாதே... தான்  அசைந்தால் அவளுக்கு கஷ்டமாயிருக்கும்னு தோன்றியது. 

'நான் உங்க மனைவி என்பது என்கிட்ட பேசனுங்கறதும் இப்போ இன்னைக்கு தானே உங்க நினைவுக்கு வருது... கல்யாணம் முடிஞ்சி ஒரு வாரம் பேசாமல் இருந்ததற்கு சேர்த்து வைத்து பேசறீங்க..'

'அப்போ நான் பேசலைனா வருத்தப்படறாளா?' தன் கையணைப்பில் தோள் மீது சாய்ந்து இருந்த குழலீயின் தலைமுடியை கோதிக்கொடுத்தான். மயக்கம் தெளிந்து கொண்டிருந்தது அவளுக்கு! உடல் இன்னும் நடுங்கி கொண்டுதான் இருந்தது!

கதவை லாக் செய்யனுமே?

'எப்படி இருக்காங்க சிஸ்டர்?' என்று திறந்திருந்த கதவை தாண்டி வந்து கொண்டிருந்தது ராஜ்குமார் - அவனை தொடர்ந்து கீதாவும்.

நீயேதுக்கு இப்போ வந்த?- சீரினான் கீதாவிடம்.

குழலீயை பார்க்க வந்தேன்.. நகரு சிவா... நீ அப்புறமா ரோமான்ஸ் செய்!

ஏய்!'

சும்மா நிறுத்து டா! என்றபடி கொண்டு வந்த தலையணையை வைத்து அதில் வசதியாய் படுக்க வைத்தாள் கீதா.

கீதாவின் ஸ்பரிசத்தில் குழலீ கண் விழித்து பார்த்தாள். சட்டேன்று ஏதோ புரிகிறது! பதட்டத்துடன் எழுந்துக்கொள்ள முனைகையில் அவளால் முடியவில்லை!

கண்களை சுழற்றி பார்த்தவளோ அப்படியே உறைந்து விட்டாள். கலங்கிய விழிகளுடன் அவள் தலையை வருடியவாறு அவளை நெருங்கி அமர்ந்திருந்தான் பிரபு!

கட்டிலுக்கு அருகில் நின்றிருந்தனர் கீதாவும் ராஜ்குமாரும்!

எப்படி எழுந்துக்க முடியும் சிஸ்டர்?

திரும்பி குமாரை பார்த்தாள் குழலீ நடுக்கத்துடன்!

போர்வையை எடுத்து நன்றாக போர்த்திவிட்டப்படி அடுத்த கேள்வியை கேட்டான் குமார்.

எத்தனை நாட்களா சாப்பிடவில்லை??

இல்ல... அது வந்து...' தடுமாறியது குழலீதான்.

இப்போ உங்களுக்கு மயக்கம் தெளியலை னா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்து டிரிப்ஸ் ஏற்ற முடிவு செய்திருந்தேன்.. பரவாயில்லை தெளிந்துவிட்டது!' என்றவாறு ஸ்ட்ரேத் வைத்து பரிசோதித்தான் குமார். 

என்ன அப்படி பார்க்கறீங்க?? இவரு டாக்டர்னு உங்களுக்கு தெரியாதா? - கீதா.

லேசாக புன்னகைத்தாள் குழலீ.

சரி கஷ்டப்படாதீங்க... இந்தாங்க இதை சாப்பிடுங்க..' என்றவாறு அங்கேயிருந்த ஆப்பிள்ளை எடுத்து கொடுத்தாள் கீதா.

வாங்கிக்கொண்டு பிரபுவை பார்த்தாள். சாப்பிடு!' என்றான்.

அவள் சாப்பிட தொடங்கியதும்...'எப்போ இருந்து சாப்பிடலை? எவ்வளவு நாட்களாய்?' என்று உறுமினான்.

சும்மா கத்தாதே சிவா! கத்தயே ஊரை கூட்டிவிடாத... கீழே சொந்தகாரங்க இருக்காங்க.. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட தெரியாது! சடங்கிற்கு நேரம் குறித்து எதுவும் இல்லைனு ஆயிட்டா தப்பாகிவிடும். அமைதியா இரு!'

குழலீயிடம் திரும்பி 'அண்ணி... போனது போகட்டும்... இப்போ இந்த ஆப்பிள்ளை சாப்பிடுங்க... நான் போய் ஜுஸ் ஏதாவது எடுத்துட்டு வரேன். சிவா நீ என் கூட வா சாப்பிட கொடுத்து விடறேன் அதற்குள் ராஜ் ஊசிப்போட்டு விடுவார். என்னால திரும்ப வரமுடியாது... வா வா'

குழலீயை பார்த்துவிட்டு கீழே இறங்கிச் சென்றான் பிரபு.

அவர்கள் சென்றவுடன் இவளை திரும்பி பார்த்த ராஜ்குமார் இவள் முகத்தில் இருந்த ஒருவித கவலையை கண்டு கொண்டான்.

என்ன குழலீ? ஏன் சாப்பிடல? பிரஷர் எவ்வளவு குறைந்து விட்டது தெரியுமா? இன்னும் குறைந்திருந்தாலும் க்ரிடிக்ல் ஆகியிருக்கும்! சாப்பாடு மட்டும் இல்லை.. நீங்க ஏதோ ஒரு வித மன அழுத்ததுல இருக்க... புதுமணப்பெண் இப்படி இவ்வளவு ஸ்டரேஸ் இருக்குனா???'

சிறு அமைதியின் பின்.. 'உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா???

..........................…

எங்க பிரபு ரொம்ப நல்லவன் மா...என்ன அவனை புரிந்துக்கொள்வது கொஞ்சம் கடினம்.. ஆனா...… அய்யோ ஏன் குழலீ உங்க கண் கலங்குது?'

குழலீயின் கண்கள் கலங்கியிருந்தது.. இரு நீர் துளி வழிந்தது.

'அண்ணா...' என்றாள் ராஜ்குமாரை பார்த்து.

சொல்லுமா... உன் விருப்பத்தை கேட்டு தானே முடிவு செய்தாங்க...???

இல்லை வேற ஏதாவது பிரச்சனை இருக்கா?? தயங்காம சொல்லுமா... நான் ஏதாவது உதவ முடியுமானு பார்கிறேன்.'

அமைதி...

சரி.. இப்போ இந்த ஊசியை போட்டுவிடறேன். முன்னமே போட்ட ஊசிதான் இப்போ மயக்கம் தெளிய உதவியிருக்கிறது. ஏசியை ஆன் செய்யறேன்.. குளிர் இருந்ததுனா நிறுத்திடு.. ஜுஸ் சாப்பிட்டு படுத்து தூங்கு... இப்பவே விடிய போகுது.. சோ மிச்சத்தை காலையில பேசிக்கலாம்'

டைம் என்ன??என்ன நடந்தச்சு?? நான் எப்படி இங்க வந்தேன்??

போச்சு! என்ன நடந்தச்சா?

………….........

நீங்க ஏதோ அங்கே ஜன்னல் கிட்ட நின்னு பேசிட்டு இருந்தீங்களாம்.. அவனுக்கு பால் எடுத்து கொடுக்க நீ திரும்பிய போது மயக்கம் வந்து கீழே விழுப்போன உன்னை கைகளில் தாங்கி பிடித்து முதலுதவி செய்திருக்கான் பிரபு. காற்று வருவதற்கு கதவு ஜன்னல் எல்லாவற்றையும் திறந்து வைத்துவிட்டு திரும்பி வந்தும் உனக்கு மயக்கம் தெளியலை... அதனால கீதா மூலமாய் எனக்கு கால் செய்துவிட்டு உன்னை தூக்கி வந்து இங்கே படுக்க வைத்திட நான் வரவும் சரியாய் இருந்தது. அதற்குள் பிரஷர் ரொம்ப குறைஞ்சிட்டு... உடம்பேல்லாம் சில்லிட்டுவிட்டது... அவன் தான் உங்க கை கால்களையேல்லாம் தேய்த்துவிட்டு சூடு வரவழைத்து கொண்டிருந்தான்.... நீங்க மயக்கம் தெளியற வரைக்கும் கூட...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.