(Reading time: 16 - 31 minutes)

12. நிழல் நிஜமாகிறது - ஸ்ரீலக்ஷ்மி

யிற்று.. எல்லாம் முடிந்து விட்டது.. மொத்தத்தில், எதையோ, கேட்கப் போய் எதை எதையோ பேசி விட்டாள் துளசி.. தன்னையே நொந்துக் கொண்டவள், தலையை பிடித்துக் கொண்டாள்.

இன்று தனக்கு என்னவாயிற்று என்றே தெரியவில்லையே.. 'தன் சரணைப் போய் எப்படி ஆண்மையற்றவன் என்று என்னால் சொல்ல முடிந்தது.. சரண் தன் மீது கோபம் கொண்டு அடித்ததில் எந்த தவறும் இல்லை.. தனனை கேவலமான பெண் என்று தான் நினைத்திருப்பான்.. அவனை பெரிய இவளை போல திட்டினேனே?.. நான் மட்டும் என்ன ஒழுங்கா?.. பணத்திற்காக, பாட்டிக்காக என்றாலும், குழந்தை பெற்று தர நினைத்து தானே இருந்தேன்?'...

'எப்படி வந்தது அந்த வார்த்தை என் வாயில் வந்தது.. நினைக்க நினைக்க தன் மேலேயே வெறுப்பு தோன்றியது.. என் உயிர் ராமை இப்படி கூறி விட்டேனே?.. என் மனதால் கூட நான் அப்படி நினைக்க வில்லையே.. சே.. இபொழுது தான் கொஞ்சம் நன்றாக போய் கொண்டிருந்தது.. இனி அவன் முகத்தில் எப்படி விழிப்பது.'

Nizhal nijamagirathu

ஒரு முடிவுக்கு வந்தவள், அப்படியே சோர்ந்து படுத்து விட்டாள்.

அங்கு சரணும், தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.. ' என் உயிர் காதலியை , என் பெண்டாட்டியை அடித்து விட்டேனே.. அதைவிட, நிறை மாத கர்ப்பிணிப் பெண்ணை அடித்தது எந்த விதத்தில் நியாயம்?.. என்ன உரிமை இருக்கிறது அவள் மேலே எனக்கு.. கை நீட்டி ஒரு பெண்ணை அடிக்க.. தாலியை மட்டும் கட்டி விட்டால் எனக்கு அவள் மேல் உரிமை வந்து விடுமா என்ன? அவள் மேல் என்ன தப்பு இருக்கிறது.. யாராக இருந்தாலும், அவள் நிலையில் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.. ஏதோ பாவம் அவளாக இருக்கப் போய் வெறும் கேள்வியோடு நிறுத்தி விட்டாள்.. எந்த தைரியத்தில் அவளை அடித்தேன்.. திருப்பி என்னை அடித்திருந்தால் தெரிந்து இருக்கும்.. உண்மையை மறைக்க, நாம் செய்தது, விஷயம் வேறு விதமாய் முடிந்து விட்டதே..

இனி, உண்மையை சொன்னாலும் அவள் என்னை நம்புவாளா? காட்டாயம் நான் வேறு எதையோ மறைக்க மேலே இன்னொரு பொய் சொல்லுகிறேன் என்றே சொல்லுவாள்.. ரொம்பவும் தன்மானம் பார்ப்பவள்.. இனி இதை, எப்படி எடுத்துச் செல்வது.. நம்பிக்கை இல்லாதவளுடன் எப்படி என் எதிர்காலாத்தை தொடங்குவது?.. ம் ..என் காதல் முளையிலேயே கிள்ளப் பட்டு விட்டது.. நல்லவேளை, இதை நான் அவளிடம் சொல்லவில்லை.. விழயம் தெரிந்திருந்தால், என்னை காரித் துப்பாதாத குறையாய் முடிந்திருக்கும்.. இனி, இதை, என் காதலை மனதினிலேயே போட்டு புதைத்துக் கொள்ள வேண்டியது தான்.. வேறு என்ன செய்ய முடியும்?.'.. என்று யோசித்தவாறு தன் எண்ணங்களில் முழ்கி இருந்தவன், ஒரு முடிவு எடுத்தான்..

'இனி துளசியை எந்த காரணம் கொண்டும், குழந்தை பிறக்கும் வரை, தேவையில்லாமல் பேசக் கூடாது.. எப்படியும், அவளே நம்மை விட்டு விட்டு போய் விடுவாள்.. அட்லீஸ்ட், போகும் போதாவது நல்ல மனநிலையில் செல்லட்டும்.. இந்த கரணுக்காக பார்க்கப் போய், இப்படி இது என் தலையில் விழுந்து விட்டதே.. அன்றே, கரண் இறந்தவுடனேயே துளசிக்கு மட்டும் சொல்லி இருந்தால் இப்படி நான் இன்று இந்த இக்கட்டில் மாட்டி இருந்திருக்க வேண்டாம்..போதாதற்கு இறக்குமுன் கரண் வேறு அவளை நல்லவிதமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்கி கொண்டு விட்டான், அய்யோ பாவம் பாட்டிக்கு அதிர்ச்சி தர வேண்டாம் என்று நினைத்தோம்.. எல்லோருக்கும் பாவம் பார்க்கப் போய், நான் தான் பாவமானேன்.. அய்யோ, ஒன்றை மறந்து விட்டேனே,. துளசி என்னை விட்டு விட்டு போனால் நம் பெற்றோர் எப்படி எடுத்துக் கொள்வார்கள்.. அவர்கள் என்னவோ, அவசர கதியில் எங்கள் திருமணமானாலும், துளசியை தன் மருமகளாகவே நிஜமாகவே எண்ணத்தொடங்கி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.. எங்களுக்குள் எல்லாம் குழந்தை பிறந்தால் சரியாகி விடும் என்று அம்மா நம்புகிறார்கள்..... அவர்கள் துளசி, குழந்தையை கொடுத்து விட்டு போனால், எப்படி தாங்குவார்கள்'...

இதற்கெல்லாம், காலம் தான் பதில் சொல்ல வேண்டும், ஒரு முடிவுக்கு வந்தவன், ' எப்படியானாலும், துளசிக்கு எதிர் காலத்திற்கு என்று சிலவற்றை தகுந்த எற்பாடு செய்ய வேண்டும்.. கரண் கேட்டு கொண்டதுபடி, அவளுக்கு வேண்டியதை முதலில் செய்வோம்.. முடிவை அவள் கையில் விட்டு விடுவோம்.. இனி எதற்கும் அவள் வருந்தக் கூடாது.. அவள் கண்களில் சொட்டு கண்ணீர் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.., முடிந்தால், நாளை அவளிடம் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்,' மெல்ல நித்திரா தேவியிடம் தன்னை கொடுத்தவன், விடியலில் போது தன்னை மறந்து உறங்கலானான்.

று நாள் விடியல் காலையில் எழுந்த துளசி, ஒரு தீர்மானத்திற்கு வந்தவள், கீழே, சோபாவில் அமர்ந்திருந்த சியாமளாவிடம், " அத்தை, இனி எனக்கு கீழே ஒரு ரூம் கொடுங்கள்.. என்னால் மாடியேருவது கடினமாக இருக்கிறது, " என்றாள் மெதுவாக.

"ஆமாம் , துளசி, நானே, உன்னிடம் சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்.. எங்கள் ரூமிற்கு அடுத்த அறையை நீ பயன் படுத்திக் கொள்.. அது சற்று சிறிய ரூம் தான்.. சரண் வேண்டுமானால் மாடியறையிலேயே தங்கட்டும்.. உனக்கும் மாதம் ஆகி விட்டது.. இந்த மாதக் கடைசியில் எப்பொழுது வேண்டுமானால், டெலிவரி ஆகலாம்.. ஏதாவது அவசரம் என்றாலும், நாங்களும், பக்கத்திலேயே இருப்பதால் பார்த்துக் கொள்ளலாம்.. மதியம், வள்ளியின் துணையோடு உன் பொருட்களை கீழே வைத்து விட சொல்லுகிறேன்" என்றார் சியாமளா.

துளசியோ மனதில், 'அப்பாடா ஒரு வழியாக அறை ப்ராப்ளம் சால்வ் ஆகி விட்டது.. தேவையில்லாமல், அவனை பார்த்து பேச வேண்டாம்.. இயன்ற வரை, இயல்பாக இருப்பது போல் இருந்து விட்டு, குழந்தையை பெற்று ஒப்படைத்து விட்டு சென்று விட வேண்டும்.. நமக்கு என்ன போயிற்று.... நாம் பாட்டிக்காக ஒப்படைத்த காரியத்தை முடித்து விட்டு செல்வோம்.. யார் குழந்தையாக இருந்தால் தான் என்ன.. குழந்தை தெய்வத்திற்கு சமம்.. எது எப்படியானாலும், இவர்கள் வீட்டு வாரிசாகவே வளரட்டும்'....

'ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்.. சரண் ஏதோ ஒன்றை மறைக்கிறான்.. தன் அண்ணனை காப்பாற்ற அப்படி மறைக்கிறானா, இல்லை எதற்கோ தெரியவில்லை,.. அவன் இதுவரை சொல்ல விரும்பாத எதுவும் இனி எனக்கு தெரியவே வேண்டாம்.. யார்தான் இந்த குழந்தைக்கு தந்தை.. சரண் ஏன் இப்படி செய்தான்'.. பாழும் மனது அவனையே நினைத்து நினைத்து ஏங்கியது.

அன்று ராம் சரண் அலுவலகம் சென்றப் பின், அவளது பொருட்களை, வள்ளியும், ஆறுமுகம் துணையுடன் அந்த சிறிய ரூமிற்க்கு மாற்றினாள் துளசி.

மாலையில் சிறிது நேரம் தோட்டத்தில் சியாமளவுடன் நடந்தவள், சரண் அலுவலகத்தில் இருந்து வரும் முன்பே, இரவு உணவை முடித்தவள், தன் புதிய அறைக்குச் சென்று லேசாக கதவை சாத்திவிட்டு உறங்கி விட்டாள்..

இது எதும் அறியாமல், சரண் அன்று மிகவும் லேட்டாக ஒரு பிசினஸ் டின்னருக்குச் சென்று விட்டு, தனது ரூமிற்கு வந்தான்.. காலையிலேயே துளசியை பார்க்காமலே சென்றிருந்தவன், வழக்கம் போல் தனது பக்கத்து அறையை நோக்கி துளசி என்று அழைத்துக் கொண்டே, அவள் ரூம் கதவை திறந்தவன், அங்கு துளசி இல்லாமல் இருப்பதைக் கண்டு, ஒரு கணம் மனம் நடுங்கி விட்டான்.. சரி பாத்ரூமில் இருக்கலாம் என்று, கதவை தட்டி பார்த்து விட்டு அங்கேயும் இல்லை, என்று தெரிந்து,

'ஐய்யோ, துளசிக்கு என்னவாயிற்று.. எங்கே போனாள்?.. எல்லா இடத்திலேயும் தேடி பார்த்தவன், சட்டென்று எழுந்த சந்தேகத்துடன், அலமாரியை திறந்து பார்க்க, துளசியின் துணிமணிகள் ஒன்றும் அங்கு இல்லாததை கண்டு திகைத்து விட்டான்.. ஒரு வேளே, தன்னை தப்பாக நினைத்துக் கொண்டு எதாவது விபரீத முடிவை எடுத்து விட்டாளா?.. சே..சே.. அப்படி எல்லாம் இருக்காது... என் மீது உள்ள கோபத்தில் நிறை மாத கர்ப்பிணியான அவள் அது மாதிரி முட்டாள்தனமான முடிவை எல்லாம் எடுக்க மாட்டாள்.. என்னை விட்டு விட்டு கோபத்தில் வீட்டை விட்டு போய் விட்டாளா?.. மனசு பதறியது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.