(Reading time: 18 - 35 minutes)

09. சதி என்று சரணடைந்தேன் - சகி

னித மனம் வினாக்களின் திறவுக்கோலாகும்!!விசித்ரமான விஷயம் யாதெனின் விடையும் அதனுள்ளே அடங்கி கிடக்கும்.எவ்வாறு இன்பமானது துன்பத்துள் இருந்து வருவிக்கப்படுகிறதோ!அதுபோல,நிகழ்வுகளானது இருதய ராஜ்ஜாங்கத்தில் இருந்து கொணரப்படுகிறது!!

அதை ஏற்பது மனிதனின் பக்குவத்தை பொருத்தே அடங்கியுள்ளது!!

நிச்சயதார்த்த ஏற்பாடுகள் பலமாக நடந்துக்கொண்டிருந்தன.ராகுல்-தீக்ஷா திருமணத்தின் முன்பாக,சித்தார்த்-சம்யுக்தாவின் விவாஹம் நிகழ வேண்டும் என்னு பிரியப்படுகிறார் ரவிக்குமார்.அதனால்,திருமணத்திற்கு இன்னும் மூன்று மாத அவகாசம் உண்டு!! 

Sathi endru saranadainthen

ராகுல் எதையும் கவனிப்பதாய் இல்லை.அவன் எந்த சலனமும் காட்டவில்லை.அவனது நாட்கள் இயல்பாய் நகர்ந்தன.அனுவும்,ஆர்யாவும் நிகழ்த்தும் கேலிகளில் தான் அவனது மண வாழ்க்கை தொடங்க போகிறது என்பது அவனுக்கு நினைவு வந்தது.

அந்நேரம் அவன் எண்ணுவது,

"தேவையில்லாமல் ஒரு பெண்ணின் வாழ்வை அழிக்க வேண்டுமா?"என்பதாகும்!!அவன் எவ்வளவோ போராடி பார்த்தான்.ஆனால் மதுவை மீறி அவனால் எதுவும் செய்ய இயலவில்லை.

பலத்த சிந்தனைகள் ஆட்கொள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான் அவன்.

அவனது கைகள் கீதாவின் படத்தை இறுக அணைத்திருந்தன.திடீரென,ஏதோ காரின் சப்தம் கேட்க அங்கிருந்தப்படி பால்கனியில் வழியாய் எட்டிப்பார்த்தான்.ஏதோ இரண்டு கார் வந்துக்கொண்டிருந்தது.அவன் அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.மீண்டும் கண்களை மூடி கொண்டான்.சற்று நேரம் கழித்து அவன் கையிலிருந்த புகைப்படத்தை யாரோ வாங்க திடுக்கிட்டு கண்விழித்தான்.அவனது விழிகள் குதூகலித்தன.

"பவிம்மா!"-வந்திருந்தது பவித்ரா.

"ஏன்டா!விட்டா நின்னுட்டே தூங்குவ போலிருக்கே!என்ன உடம்பு சரியில்லையா?"

"இல்லைம்மா!காலையில சீக்கிரமா எழுந்துட்டேன் அதான்!"

"ஆமாமா!இனி தூக்கம் வராது!சாப்பிட பிடிக்காது!"

"மா! போதுமா!"-அவன் அந்த பேச்சை

விரும்பவில்லை.

"சரி கீழே வா!"

"ஏன்?"

"வாடா!!"-அவள் ராகுலின் கையை பற்றி அவனை இழுத்தாள்.

அவனும் சென்றான்!!

கீழே சிணுங்கியப்படி வந்தவனின் கண்களில் முதலில் பட்டவன்....ரகு!!

அவனும்,நிரஞ்சனும் ஆதித்யாவுடன் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.

ரகுவை கண்டவனின் கண்கள் சிவந்தன.இன்னும் பகை தீரவில்லையல்லவா!!

ஆதித்யா ராகுலை கவனித்தான்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய்,

"அம்மூ!எல்லாருக்கும் டீ எடுத்துட்டு வாயேன்!"என்று குரல் கொடுத்தான்.

ரகு அப்போது தான் ராகுலை கவனித்தான்.அச்சில் வார்த்தார் போல தன்னையே நேரில் பார்ப்பது போலிருந்தது அவனுக்கு!!

ரகு ஏதோ பேச எழ சரண் அவனை அமைதிப்படுத்தினான்.

"வாடா!டீ குடிக்கிறீயா?"-இயல்பாக கேட்டப்படி மது வந்தாள்.

"வேணாம்மா!"-அவன் மீண்டும் தனது அறைக்கே சென்றுவிட்டான்.

அவனது செய்கை ஸ்ரேயாவையும்,ரகுவையும் பலமாக காயப்படுத்தி சென்றது!!!மது அவனது அறைக்கு சென்றாள்.அவள் நினைத்தது போலவே ராகுல் ஒரு பெட்டியில் தன் துணிகளை அடுக்கி கொண்டிருந்தான்.

"எங்கேடா கிளம்பிட்ட?"

"கெஸ்ட் ஹவுஸ்!"

"எதுக்கு?"

"நிறைய பேர் வந்திருக்காங்கம்மா!வீட்டில இடம் போதாது அதான்!"-மது அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.ராகுல் அதிர்ச்சியாக அவளை கண்டான்.

"என்னடா நினைச்சிட்டு இருக்க?வந்திருப்பது உன் அப்பாடா!"

"அவர் என் அப்பா இல்லை!"-அவன் கத்தினான்.

"வேணாம்மா!இன்னொருமுறை அந்த வார்த்தையை சொல்லாதே!என்னால தாங்கிக்க முடியாது!"-அவன் அழுதேவிட்டான்.

"ராகுல்!"

"என்னால எந்த காலத்திலும் அவரை ஏற்க முடியாது!நான் பிறக்கறதுக்கு முன்னாடியே என்னை கலைத்திருந்தால் நான் இப்படி அழ வேண்டிய அவசியமிருக்காது!என்னை வளர்த்த புண்ணியவதிக்கு அவ்வளவு நல்ல மனசு!!எல்லா தண்டனையையும் அவங்களே ஏத்துக்கிட்டாங்க!"-மதுவின் விழி கசிந்தது.

"என்னால நிஜத்தை ஏற்க முடியலை!இப்போதும் சொல்வேன்!எனக்கு கீதா தான் அம்மா!என் அப்பா என்னிக்கோ செத்துட்டார்!"-இவற்றை கேட்ட ரகுவின் இதயம் சுக்கலாய் நொறுங்கியது.

"ராகுல்!ரகுவை நீ உன் அப்பாவோட நண்பனா மதிக்கலாமே!!!"

"..........."

"நிரஞ்சனுக்கு கொடுக்கிற ஸ்தானத்தையாவது ரகுவிற்கு தரலாமே!"

"நிரஞ்சனை தாழ்த்த வேணாம்மா!"-அவன் வெறுப்போடு கூறினான்.

ரகுவிற்கு உலகமே சூன்யமாய் ஆனது!!

அன்று அவன் செய்த தவறு எப்படி எல்லாம் தண்டிக்கிறது?ஸ்ரேயாவிற்கு அவன் வாழ்க்கை கொடுத்தான்.செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்தான்!!அவ்வளவு தான்!மற்றப்படி,,இன்றளவும் கீதாவே அவனது இதயம் தன்னில் ஆட்சி செய்கிறாள்.அதன் பலனாக,இன்றளவும் ரகுவின் சுண்டு விரல் நகம் கூட அவள் மேல் தவறான எண்ணத்தோடு பட்டத்தில்லை.இதுவரையில்,ராகுலையே உலகமென கருதி வாழ்கின்றான்.

ஆனால் அவனது உலகம் அவனை ஏற்க மறுக்கிறது.அவன் என்ன செய்வான்??

"நான் கிளம்புறேன் ஆதி!"-ரகுவின் கூற்றால் அதிர்ச்சி அடைந்தான் சரண்.

"என்னடா?"

"ராகுலை பார்க்கணும்னு வந்தேன்!பார்த்துட்டேன்...கிளம்புறேன்!"

"மச்சி!என்ன நீ?"-நிரஞ்சன் கேட்டான்.

"இல்லைடா!கொஞ்சம் வேலை வேற இருக்கு!நான் கிளம்புறேன்."

"அப்பா!அண்ணா எதாவது சொன்னானா?"

"ச்சீ!ச்சீ!இல்லைம்மா!நானே தான் கிளம்புறேன்."

"அதுக்கு அவசியமில்லை!"-மாடியில் நின்றப்படி ராகுல் கூறினான்.

"உங்க நண்பன் தாராளமா இங்கே இருக்கலாம்பா!"-ஆதித்யாவிடம் கூறுவது போல கூறினான்.

"நான் என்னிக்கும் என்னை நாடி வந்தவங்களை ஏமாற்ற மாட்டேன்!அவங்களுக்கு துரோகமும் பண்ண மாட்டேன்!"-அவனது கூற்று ஈட்டியில் நஞ்சினை பூசி நெஞ்சில் பாய்ச்சியதை போல இருந்தது.

"நான் வெளியே போயிட்டு வரேன்மா!"-மதுவிடம் மட்டும் கூறிவிட்டு நகர்ந்தான் ராகுல்!!

தீக்ஷாவின் கைப்பேசி சிணுங்கி ஓய்ந்தது.

அவள் குளித்துவிட்டு தலையை துவட்டியப்படி வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.