(Reading time: 18 - 36 minutes)

23. நினைத்தாலே  இனிக்கும்... - புவனேஸ்வரி

ந்துரு போன திசையை வெறித்து கொண்டே அமர்ந்திருந்தாள்  நந்திதா . எப்படியாவது அவனை சமாதனம் படுத்தி ஆகத்தான் வேண்டும் . ஆனால் , இது தற்காலிக முடிவாகத்தானே இருக்கும் ? நிரந்தர முடிவாகி போகாதே ? என்றே தோன்றியது அவளுக்கு .. சுபத்ராவின் முகத்தை பார்த்தாள் ..இன்னும் மூர்ச்சையாய் தான் இருந்தாள்  அவள் . அவள் பெண் என்பதை விட , ஒரு காலத்தில் சந்துருவின் நல்ல தோழி என்ற நினைப்பே நந்துவை அவள் மீது பரிதாபம் காட்ட வைத்தது .. எதுவாகியப்போதும் இதை சரி செய்துவிட வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்தவள் , அவனை சமாதானம் செய்ய விழைந்த மனதை கட்டி அடிக்கி வைத்தது ..

" டேய் கதிர் என்னடா பார்த்துகிட்டு இருக்க ? அவளை தூக்குடா , ஹாஸ்பிட்டல் போகலாம் " என்றார் நளினி பரிதவிப்பாய் .. ஒருபக்கம் அவரது குரலில் ஒலித்த அவரசம் , இன்னொரு பக்கம் சந்துருவின் கோவம் .. இரண்டிற்கும் நடுவில் இருதலைகொள்ளி எறும்பாய் சிக்கியவன் அவன்தான் ..

" அம்மா ...சந்துரு " என்றவாறே தயங்கினான் அவன் ..

ninaithale Inikkum

" அவனை நான் பார்த்துகிறேன் நீ முதலில் அவளை தூக்க போறியா இல்லையா ?" என்று கிட்டதட்ட அதட்டியே இருந்தார் அவர் .. அவரது கோபமான முகத்தை பார்க்க தயங்கியபடி சுபத்ராவை கைகளில் ஏந்தி காரை நோக்கி நடந்தான் அவன் . நளினியும் கதிரும் வேகமாய் காரை நோக்கி நடக்க , அவர்களின் பின்னால் நடந்த கவீன்  தற்செயலாய் ஜெனியின் முகம் பார்க்க , அப்போதுதான் ஏதோ நினைவுக்கு வந்தவனாய் அருகில் இருந்த அனுவை  அழைத்தான் ..

" அனு  "

" என்னடா "

" உன் மொபைல் கொடு "

" எதுக்கு ?"

" கொடுன்னு சொல்றேன் ல ?"

" ஹே என்ன குரல் உயருது ? பயம் போச்சா " என்றாள்  அந்த சூழ்நிலையிலும் அசராமல் ..

" அம்மா தாயே , அவசரப்பட்டு கத்திட்டேன் .. தயவு செஞ்சு போனை தர்றியா ?" என்றான் அவனும் ..

அவள் மறுக்காமல் போனை தரவும் , உடனே ஜெனியின் அப்பாவிற்கு போன் போட்டான் அவன் ..

" யாருக்கு டா கால் பண்ணுற?"

" ஜெனி அப்பாவுக்கு "

" ஏன் ?"

அவன் பதில் கூறுவதற்குள் அவளது அப்பா போனை எடுக்கவும் , " ஷ்ஷ்ஷ்ஷ்" என்று அனுவிடம் சமிக்ஞை காட்டினான் அவன் ..

" ஹெலோ அனு  ???"

" சார் நான் கவீன்  "

" ம்ம்ம்ம்ம் "

" சார் , இங்க ஒரு பிரச்சனை  "

" ஏன் என்ன ஆச்சு ? ஜெனி பத்திரம்ன்னு சொன்னேன் தானே ?" என்று பதறினார் பெரியவர் ..

" நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணுமில்ல சார் .. எங்க சீனியர் கு இங்க கொஞ்சம் பிரச்சனை .. அவங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகுறோம் .. ஜெனியை அழைச்சிட்டு போகலாமா ? இல்லை நீங்க வர்ரிங்களா ?" என்றான் கவீன்  சுற்றி வளைக்காமல் ..

" நானே வர்றேன் .. அதுவரைக்கும் .."

" அதுவரைக்கும் மத்தவங்க எல்லாரும் காத்திருக்க முடியாது .. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நானே இங்க வைட் பண்ணுறேன் " என்றான் கவீன் ..

அவன் பொய் கூறி இருந்திருந்தால் அவர் இந்நேரம் கோபமாய் பேசி இருப்பார் .. ஆனால் அவனோ நேர்மையின்  மொத்த உருவாய் நிமிர்வுடன் அவரிடம் பேசவும் அவரால் மறுத்து பேச முடியாமல் போனது ..

" சரி ..நான் இறக்கி விட்ட இடத்திலேயே வைட் பண்ணுங்க .. வரேன் " என்று போனை வைத்தார் அவர் ..

" ஜெலோ .. " என்றவன் மானசீகமாய் தன்னை திட்டி கொண்டு

" ஜெனி , உன் அப்பா வராராம் .. " என்று கூறிவிட்டு அனு  ஆருவை  பார்த்தான் ..

" நீங்க எல்லாரும் காரில் போங்க .. இவ அப்பா வந்ததும் நான் ஆட்டோ புடிச்சு ஹாஸ்பிட்டல் வந்திடுறேன் "

 என்றான் .. ஆருவும் அனுவும்  எதுவும் பதில் கூறாமல் அவனை புன்னகையுடன் பார்த்துவிட்டு சென்றனர் .. ஜெனி மட்டும் " அடுத்து என்ன ?" என்பது போலவே அமைதியாய் எங்கோ வெறித்து கொண்டு நின்றாள்  ..

ந்துரு காரில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தான் ..

" சந்துரு வண்டிய எடு " என்றார் நளினி . அவனோ தனது காதில் எதுவுமே விழாதது போல நின்று கொண்டிருந்தான் .. அதற்குள் அனு , ஆரு  நந்து மூவரும் காரில் அமர்ந்திருக்க , நந்துவின் மடியில் சாய்ந்தபடி சுபத்ரா இருந்தாள் .. அவள் நிலையை பார்த்து இன்னமும் பயந்தே போனாள்  நந்து .. அந்த பதற்றத்தில் எழுந்த கோபத்தில்

" இது என்ன அத்தை வரட்டு பிடிவாதம் .. ஒரு உயிரின் மதிப்பு அவங்களுக்கு தெரியாதா ? ஒருவேளை சுபத்ராவின் இடத்தில்  நான் இருந்தாலும் உங்கள் மகன் இப்படித்தான் பண்ணுவாரா ?" என்று வெடுக்கென கேட்டாள்  .. ஊசியை இதயத்தில் துளைத்தது போல வலியுடன் அவளை நிமிர்ந்து பார்த்தான் சந்துரு .. மருந்திற்கும் நந்துவின் பார்வையில் இரக்கமில்லை .. இரக்கம்  இல்லாதது போலவே காட்டிக் கொண்டாள்  .. அவள் வார்த்தைகள் அவனை வதைத்தாலும் , மறுபேச்சு பேசாமல் காரை எடுத்தான் சந்துரு .. அவன் கார் கதவை அறைந்து  சாத்திய வேகத்திலே அவனது கோபம் அவர்களுக்கு புரியாமல் இல்லை . எனினும் அனைவரும் அவனது கோபத்தை கண்டும் காணாதது போலவே இருந்தனர் .

ங்கு , ஜெனியுடன் நின்று கொண்டிருந்தான் கவீன்  .. காவலாய் நின்றானே தவிர எதுவுமே பேசவில்லை அவன் .. இடையில் ஒருமுறை மட்டும் "  பசிக்கிறதா ? ஏதாவது வேண்டுமா ?" என்றான் .. அதற்குள் அவள் " வேண்டாம் " என்று தலையாட்டாவும்

" ஒழுங்கா சாப்டறது இல்லை போலிருக்கு ஜெலோ .. டெக் கேர் யுவர்செல்ப் " என்றான் .. அதுவே அவளுக்கு போதுமானதாய் இருக்க

" ம்ம் " என்றாள்  .. அதன்பின் , அங்கிருந்த இடத்தில் அவளுக்கு அமருவதற்கு இடம் தந்துவிட்டு ஐந்தடி தள்ளியே நின்றிருந்தான்  கவீன்  .. அவளை பார்க்கவும் முடியவில்லை .. பார்க்காமல் இருப்பதும் கடினமாய் இருந்தது .. ஏதாவது  பேசலாம் என்று நினைத்தாலும் அவளது தந்தை வரும் வேளையில் வீண் வம்புகள் வேண்டாம் என்றே தோன்றிட, தற்காலிகமாய் தன்னை தனிமை படுத்தி கொள்வது போல ஹெட்போனை காதில் மாட்டி கொண்டு  அவளை மீது பார்வையை பதித்தான் ..

என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம் , அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்

உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று

உந்தன் காலடி தேடி வந்தேன்

காதல் என்றால் பெரும் அவஸ்தை என்று

உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்

எந்த கழுத்துவரை இன்று காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.