(Reading time: 77 - 154 minutes)

18. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

வர்களைப் பார்த்ததும் கையால் தன் முகத்தை தேய்த்துக் கொண்டான் அவன்.

அவன் கை விரலில் அணிந்திருந்த மோதிரத்தில் ஏ பி.

“சோ நீங்க தான் அதி அலைஸ் ஆண்ட்ரூ…” ஆதிக் தான் முதலில் பேசினான்.

eppadi solven vennilaveகண்கள் பொங்க…. உணர்ச்சி வேகத்தில் அவன்…. அதி.

ஆதிக்கும் ரேயாவும் தேவ குளம் போய் திரும்பிய மறுநாள் காலை  அதாவது இவர்கள் திருச்சியில் இருக்கும் போதே புதைக்கப்பட்டிருந்த உடல் அதிக்குள்ளது கிடையாது என்ற ரிப்போர்ட்டை தந்துவிட்டனர் மருத்துவ குழுவினர்.

அதியின் உடல் யாரின் பார்வைக்கும் வைக்க படாமல் உடனடியாக ரேயாவின் தாத்தாவினால் புதைக்கப்பட்டு விட்டது, என செல்வின் சித்தப்பா வழியாக கேள்விப்பட்டிருந்ததால் எதற்கும் இருக்கட்டும் என மரபணு சோதனைக்கும் சொல்லி இருந்தான் ஆதிக்…அது அதியின் உடல்தானா என உறுதி செய்து கொள்ள….ரேயாவின் ரத்த மாதிரி தான் ரெஃபரன்ஸ் பாய்ண்ட்.

அதியினது என கிடைத்திருக்கும் உடலின் மிச்சங்களின் மரபணுவும் ரேயாவின் ரத்தம் சுமக்கும் மரபணுக்களும் ஒத்துப் போனால் இருவரும் உறவினர் என உறுதிப் பட்டுவிடுமே.

அந்த சோதனை முடிவு அது அதியின் உடல் இல்லை எனதான் உறுதி படுத்தியது. அதோடு கேள்விப்பட்ட வரை அதிக்கு குடும்பத்தின் மேல் பாசம் அதிகம்…..அந்த விஷயத்தில் அவன் உணர்ச்சி பூர்வமாய் செயல் படுபவன். ஆக அதை வைத்தே அதியைப் பிடிக்க முடியுமா என ஒரு யோசனை இருந்தது ஆதிக்கிற்கு.

ஆனாலும் ரேயாவின் அம்மா தயாளினி இந்த அதிக்காய் வருந்தி செத்த போது கூட வராத அதி இப்போதா வந்துவிடப் போகிறான் எனவும் ஒரு சந்தேகம். ஆனாலும் முயற்சி செய்து பார்த்துவிட வேண்டியதுதான் என முடிவு செய்து இந்த பெல்டடி டிராமாவை திட்டமிட்டு ரேயாவிடம் சொல்லி இருந்தான்.

ரேயா கண்காணிப்பவர்கள் முன் அமைதியாக இருந்தால் நம்மை தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவார்கள் தானே என முன்பு சொல்லி இருந்த போதே ஆதிக்கிற்கு கல்ப்ரிட்டுக்கு வலை எங்கு விரிக்க வேண்டும் என தோன்றி இருந்தது.

இவர்களை ஆப்பொனன்ட்ஸ் கண்காணித்தால் அவர்கள் முன் நாடகமாடி அவர்களை நம்பச் செய்து பிடிக்க வேண்டும் என ஆதிக் அப்போதே நினைத்தது தான். ஆனால் இப்போது என்ன நாடகமாட வேண்டும், யாரைக் குறி வைக்க வேண்டும் என புரிந்து விட்டது அவனுக்கு அவ்வளவே. 

தஞ்சாவூர் வீட்டுக்கு வரவுமே ஆதிக்கின் இந்த திட்டம் உறுதியாய் வெற்றி அடைந்து விடும் என கன்ஃபர்மேஷன் கிடைத்தது இன்னொரு வகையில்.  ஆம் வீட்டில் அங்கங்கு மைக்ரஃபோன்ஸ் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது சற்று வெளியே தெரியுமாறு உருவி விடப் பட்டிருந்தது.

அதாவது இவர்களே அவைகளை கண்டு பிடித்து எடுப்பது போல் எடுத்துப் போட்டுவிட்டு தங்களை யாரும் கண்காணிக்கவில்லை என்ற உறுதியுடன்  சந்தோஷமாக வாழ்வை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கண்காணிக்கும் நபருக்கு இருப்பது அதன் மூலம் புரிந்தது ஆதிக்கிற்கு. ஆக அதிக்கான நாடகம் நிறைவேற்றம். அதன் பலன் கண்ணெதிரே அதி.

 என்னதான் இது வரை இதை ஆதிக் சொல்லி வந்திருந்தாலும் மனதளவில் இப்படி ஒரு காட்சியை எதிர்பார்த்திருந்தாலும்…. இந்த சந்திப்பை நேரில் அனுபவிக்க திக்கு முக்காடிப் போனாள் ரேயா.

மெல்ல இவள் அருகில் வந்தான் அதி. அவன் துடித்த கண்கள்…. அழுந்த மூடிய வாய்…. முழு உணர்ச்சிப் பிடியில் அவன் இருக்கிறான் எனப் புரிகிறது.

என்ன தான் கடந்து போன 25 வருடங்கள் அவன் மீது தடம் பதித்திருந்தாலும், ரேயா போட்டாவில் பார்த்தது போல் அதே கம்பீரமாய்….இன்னமும் எந்த திரைப்பட ஹீரோவையும் தோற்கடிக்கும் சார்ம் அண்ட் ஹான்ட்சமாய்…

இவள் அருகில் வந்தவன், மெல்ல இவள் கையைப் பிடித்தான்…

“ ரேயு….”

இடவலமாக தலை அசைத்தாள் ரேயா. கையை உருவிக் கொண்டாள். கண்கள் முகம் எங்கும் இறுக்கம்….

“ரேயா….அந்திரேயா… உங்க பேர்தான்…நேம் வச்சது எங்க அம்மா….அப்டி ஒரு பாசம் உங்க மேல….எப்டி பார்த்தாலும் அவங்கள கொன்னது நீங்க தான்…நீங்க இப்டி டான் மாதிரி ராயல் லைஃப் லீட் பண்ணிட்டுருக்கீங்க…எங்கம்மா உங்கள நினச்சு என்னை கூட விட்டுடுப் போய்டாங்க…”

கோபம் வெறுப்பு அழுகை ஏமாற்றம் எல்லாம் வந்தது அந்த நொடி அவளுக்கு….அம்மாவை இப்டி ஏமாத்தி சாக வச்சுட்டு….

“தயாம்மா இப்ப இல்லன்றதே ரொம்ப பின்னாலதான் கண்ணா எனக்குத் தெரியும்…..” ரேயாவின் இருகையையும் பிடித்துக் கொண்ட அதி

“ஸ்டில் எப்டிப் பார்த்தாலும் நான்தான் ரீசன்…உன்ன அம்மா இல்லாப் பிள்ளயா ஆக்கிட்டனே…உன்ன விட்டுட்டுப் போறப்ப அம்மா எவ்ளவு அழுதாங்களோ….” விம்மி வெடிக்க ஆரம்பித்தான்.

ரேயாவுக்கும் அறிமுகமே அற்றவன்தான் என்றாலும் அவனோடு சேர்ந்து அழ வருகிறது…….இதுதான் ரத்த பாசம் என்பதா….?

இவள் அழுதவுடன் சட்டென சுதாரித்த அதி, ஆதிக்கைப் பார்த்தான்…அவன் என்ன நினைக்கிறான் என ஆதிக்கிற்கு மட்டுமல்ல ரேயாவுக்குமே புரியத்தான் செய்கிறது.

ஆதிக் இவளை அடித்ததை உண்மை என நம்பித்தானே இப்படி இருவரையும் கடத்தி வந்திருக்கிறான் அதி. ஒருவேளை ஆதிக் மேல் கோபப்படுவானோ?

அவசரமாக தன் கணவன் கையைப் பற்றிக் கொண்டு ஒரு டிஃபென்சிவ் லுக் விட்டாள் ரேயா.

” மாப்ள உங்கட்ட கொஞ்சம் பேசனும்….அங்க உட்காரலாம்…” இவர்கள் இருவரும் அதிக்கு எதிரில் உட்கார அதி இவர்கள் இருவரையும் நிறைவாகப் பார்த்தான்.

“இப்டி ஒரு மேரேஜை நாங்க கனவுல கூட எதிர் பார்க்கல….ஜஸ்ட் மார்வலஸ்…பட் எங்களால உங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டமாகிட்டே போகுது….அதுவும் ரேயுவுக்கு…”

“இல்ல ரெண்டு பேருக்கும்தான்…..அப்றம் இன்னொரு விஷயம் என் பேரு ரேயா…நாங்க ரெண்டு பேரும் பேசுறத ஒட்டுக் கேட்றுக்கீங்க அதான் ரேயுன்னு சொல்றீங்க…..ஆதிக் மட்டும் தான் என்ன ரேயுன்னு கூப்டுவாங்க…” என்னதான் சித்தப்பா அழுதவுடன் மனம் கசிந்து போனாலும் இன்னும் காரசாரமாகத்தான் இருக்கிறாள் ரேயா.

அதி சின்ன  சிரிப்புடன் அவள் பேசுவதைப் பார்த்திருந்தான்.….”சரி கண்ணா இனி உன்ன ரேயுன்னு சொல்லலை ஓகேவா…”

“அப்ப இன்னும் ஒட்டுக் கேட்பீங்க அப்டியா?...”

“இல்ல கண்ணா….கண்டிப்பா மாட்டேன்….… அதுக்குதான் நீங்க பார்க்ற மாதிரி மைக்கை எல்லாம் வெளிய எடுத்து விடச் சொல்லிருந்தனே...சோ தட் யு கேன் டிஸ்போஸ் தெம்…அப்றம் நிம்மதியா இருப்பீங்கன்னு நினச்சேன்…”

“குடி இருக்ற வீட்ல அதுவும் பெட் ரூம் வரைக்கும் மைக் செட் செய்திருக்கீங்க….உங்களுக்கு அப்டி யாராவது செய்தா எப்டி இருக்கும்?.....இப்ப எடுக்க சொல்லிட்டா எல்லாம் சரியாகிட்டாமா?” வேற யாரு நம்ம ரேஸ்தான்

“ம்..எனக்கு அப்டி யாராவது செய்திருந்தா அவன் கழுத்த உடச்சுறுப்பேன்…” முனங்கிய அதி….

“இத வச்சது நான் இல்லடா கண்ணா.. எல்லாத்தயும் முழுசா சொன்னாத்தான் உனக்கு புரியும்…” இவளிடம் சொன்னவன்…

“மாப்ள நீங்க இதைக் கேட்டுட்டு  என்ன  முடிவெடுத்தாலும் ஐ அபைட் பை தட்…” ஆதிக்கிடம் முடிவை ஒப்படைத்து விட்டே பேசத் தொடங்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.