(Reading time: 12 - 24 minutes)

08. நேசம் நிறம் மாறுமா - தேவி

காதலடி நீ யெனக்கு காந்தமடி நானுனக்கு

வேதமடி நீ யெனக்கு , வித்தயடி நானுனக்கு

போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே

நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா !

       பாரதியார்

Nesam niram maaruma

வெண்மதி மனதில் உள்ளதை வார்த்தையாக கூறியதும், ஆதி என்ன என்று வினவ, சுதாரித்த மதி “ஒன்றுமில்லை.. உங்கள் அத்தைதான் உங்களை வளர்த்தார்களா என்று கேட்டேன்” என்று சமாளித்தாள்.

அவனும் ஏதோ யோசனையில் அவளின் சமாளிப்பை கவனிக்காமல் விட்டு விட்டான். பிறகு இருவரும் அவரவர் படுக்கையில் படுத்தனர். அதிதியின் மனதில் ஏதோதோ எண்ணங்கள் தோன்றினாலும் பொதுவாக நல்ல மனநிலையே என்பதால் தூங்கி விட்டாள்.

ஆனால் ஆதி அன்று தூங்கவில்லை. சாதரணமாக நினைத்த சில விஷயங்கள் இப்போது வேறு விதமாக தோன்ற ஆரம்பித்தது, சற்று நேரம் அதை பற்றி யோசித்தான். எதேச்சையாக மதியின் புறம் திரும்பியவன், தூக்கத்தில் நிர்மலமாக இருந்த அவள் முகத்தை பார்த்தான். மனதில் ஒரு விதமான அமைதி பெருகியது. சற்று நேரத்தில் அவனும் தூங்க ஆரம்பித்தான்.

றுநாள் காலை வாணியின் அழைப்பில்தான் கண் விழித்தாள் அதிதி. முன்தினம் சூர்யா சென்ற பிறகு, வாணியின் அம்மா தன் கணவரிடமும் , வாணியிடமும் ஜானகி கூறியதாக அதிதி திருமண விஷயத்தை சொல்ல ஏற்கனவே ராகவன் அவரிடத்தில் சொல்லி விட்டதாக கூறினார். அதை கேட்ட வாணி மகிழ்ச்சியோடு அதிதிக்கு பேச முயற்சி செய்ய, அவள் நம்பர் பிஸியாக இருக்கவே சிரித்துக் கொண்டே மறுநாள் காலையில் முயற்சி செய்தாள்.

அதிதி போன் எடுக்கவும் , வாணி

“என்ன மேடம் ... சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா?”

பாட்டு மாதிரி விடிய விடிய போன் பேசி விடிஞ்சது கூட தெரியாம தூங்குறீங்களா?.. என்றாள்.

“ஹே ... வாணி .. என்ன காலையிலேயே?”

“ஹலோ பேச்சை மாத்தாதீங்க ? கேட்டதுக்கு பதில் சொல்லுங்க”

“அதெல்லாம் இல்லை. கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். சரி அது இருக்கட்டும் உனக்கு யார் சொன்னது அண்ணியா?”

யார் எங்க அக்காவா? உன்னை கூட பிடிச்சிரலாம் எங்க அக்காவ பிடிக்க முடியுமா ? அப்பாவும் அம்மாவும் சொன்னங்க.. அது ... இருக்கட்டும் . கன்க்ராட்ஸ். கூடிய சீக்கிரம் குடும்ப இஸ்திரியாக போற.. வாழ்த்துக்கள்”

அடிங்க.. நீங்களும் இந்த ஜோதிலே ஐக்கியமாகனும். ஞாபகம் வச்சுக்கோ

அது நடக்கறப்ப .. பார்த்துக்கலாம். எப்படியும் ஸ்டில் நாங்க வெட்டிதான். நீதான் என்கேஜ்டு.. சோ இனிமேல் பொறுப்பான குடும்ப இஸ்திரியா சீரியல் பார்த்து கண்ணீர் வடிக்க, உங்க ஹஸ்பண்டுக்கு செலவு வைப்பது எப்படி இதெல்லாம் கத்துக்கோ.

உன்னை ... இரு நேர்ல வரேன் ...

இன்னிக்கு முடியாது. நான் ஆபீஸ்க்கு கிளம்பறேன். அங்க ஏலியன் வெயிட் செய்துட்டு இருக்கும் . லீவ் நாள்ல  பார்க்கலாம் பை. என்றவள்

“ஹே முக்கியமா ஒன்னு ... ட்ரீட் கொடுக்க ரெடி ஆயிடு. எங்க எப்போன்னு அப்புறம் பேசறேன் பை. “ என்று வாணி வைத்தாள்.

அதியும் சிரித்து கொண்டே பை சொல்லி வைத்தவள் .. சரியான அரட்டை என்று சொல்லி விட்டு அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தவள்.

அதற்குள் பிரகஷ்யிடமிருந்து போன் வர, ஐயோ இப்போ பேச ஆரம்பிச்ச வைக்க மாட்டார். அப்புறம் ஆபீஸ் கிளம்ப முடியாது. என்று எண்ணியவள் “கால் லேட்டர்” என்று மெசேஜ் அனுப்பி விட்டு சென்றாள்.

காலை டிபன் சாப்பிட சென்றால், அங்கே மதி “என்ன அதி மேடம் .. நைட் எல்லாம் ஒரே ட்ரிம்சா? என்று கலாயிக்க, “ஐயோ அண்ணி, நீங்களுமா, இப்போத்தான் வாணிய சமாளிச்சேன். நான் தாங்க மாட்டேன், ஆளை விடுங்க” என்று கிளம்பினாள். போகும் போது ஹாலில் இருந்த அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு பை மா என்று கிளம்பினாள்.

வீட்டில் எல்லோரின் சிரிப்பு சத்தமும் கேட்க ஆதியின் முகமும் மலர்ச்சியாக இருந்தது. அன்றைக்கு ஹாஸ்பிடல் போய் கட்டு அவிழ்க்க வேண்டிய நாள்.

சூர்யா “அண்ணா நான் உங்களை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று விட்டு ஆபீஸ் போகிறேன்” என

வேண்டாம் சூர்யா. நீ கிளம்பு . மதிதான் இருக்கிறாளே

இல்லை அண்ணா. அண்ணியால் மட்டும் முடியுமா.

நான் டிரைவரோடு தான் போகிறேன். ஹாஸ்பிடலில் வீல் சேரில் தானே போக போகிறேன். நீ அந்த பூந்தமல்லி சைட் வேலையை பார்த்து விட்டு அப்டேட் சொல்லு “ என்றான்.

சரி என்று சூர்யாவும் கிளம்பி விட, 10 மணிக்கு மெதுவாக வாகரின் உதவியோடு ஆதியை காரில் ஏற்றினாள் மதி. டாக்டரை பார்த்து கட்டு பிரித்து விட்டு, காயம் ஆறி விட்டதாகவும், பத்து நாட்கள் தொடர்ந்து பிசியோதெரபி செய்யும் படியும் கூறினார் . அந்த டாக்டரை பார்த்து விட்டு அவர் கூறிய படி எக்ஸ்சர்சைஸ் கற்று கொண்டான். மேலும் அவர் ஆதியின் வீட்டிற்கு வந்து தினமும் ஒரு மணி நேரம் பிசியோதெரபி செய்வதாகவும் கூறினார். இதெல்லாம் முடித்து விட்டு அவர்கள் வீடு திரும்ப மதியம் ஆகியது.

ங்கே ஆபீசெக்கு சென்ற சூர்யா காலையிலே வாணி தரிசனத்திற்காக ஏதோ வேலை இருப்பதாக பாவனை செய்து அவன் அறைக்கு அழைத்தான்.

அங்கு சென்ற வாணி “மார்னிங் சார்.. என்ன முகமெல்லாம் ஒரே பளிச்னு இருக்கு. தங்கைக்கு கல்யாணம்னு சந்தோஷமா” என்றாள்.

“அதுவும் ஒரு காரணம். அதோட நமக்கும் லைன் கிளியர் ஆகுதுல்ல அந்த சந்தோஷமும் கூட..”

“என்னது நமக்கா” என்று அவள் முறைக்கவும்,

நாக்கை கடித்துக் கொண்டு “அதாவது எனக்கு அப்படி சொல்றதுக்கு பதில் நமக்குன்னு சொல்லிட்டேன்.” என்று சமாளித்தான்.

“அது.. “ என்று வாணி கெத்தாக சொல்லவும் , மனதுக்குள் எல்லாம் நேரம். இரு இதுக்கெல்லாம் அப்புறம் பார்த்துக்குறேன் என்று சொல்லிக் கொண்டான். பிறகு அவளிடம் வேலை சொல்லி அனுப்பியவன் , அவள் கிளம்பவும் “ஷப்பா .. இப்பவே கண்ணை கட்டுதே” என்று சிரித்தான்.

பிரகாஷ் அதிதிக்கு போன் செய்து “ஹே... டாலி. இன்னிக்கும் மீட் செய்யலாமா “ என்று கேட்க

“ஹலோ அதெல்லாம் இல்லை. கூடிய சீக்கிரம் உங்க பேரன்ட்ஸ் பேசி முடிச்சதுக்கு அப்புறம் மீட் பண்ணலாம். “ என்று கூற

“ஹ்ம்ம்.. பார்க்கலாம்” என்று கூறியவன்.. அடுத்த ஒரு மணி நேரத்தில் அதிதியின் அலுவலகத்தில் நின்றான்.

அவனை எதிர்பர்க்கதவள் “ஹே.. என்ன சர்ப்ரைஸ் .. “

“நேத்து வரைக்கும் நீ சம்மதம் சொன்னா போதும்னு நினைச்சேன். ஆனா இனிமே உன்னை பார்க்கம இருக்க முடியாது. நீ வெளில தான வர மாட்ட. நான் உன்னை இங்க வந்து பார்த்துட்டு போறேன்” என்றான்.

அவளும் சிரித்து கொண்டே சரி என்றவள், கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் ஸ்வீட் நத்திங்க்ஸ் பேசியவர்கள், அவள் வேலையை கெடுக்காமல் கிளம்பினான்.

சூர்யா வாணியோடு ட்ரீம்ஸ் அடிக்க, அதிதி பிரகாஷோ நேரிலும், போனிலும் கடலை போட இப்படியே பத்து நாட்கள் சென்றது. ஆதியும் பிசியோதெரபி டாக்டர் சொல்லியபடி செய்தவன், பத்து நாட்களில் நன்றாக நடக்க ஆரம்பித்தவன். அடுத்த சிட்டிங் டாக்டரை பார்த்துவிட்டு ஆபீஸ் போகலாம் என்று எண்ணியிருந்தான்.

அவன் நன்றாக நடக்க ஆரம்பித்தவுடன், பிரகாஷ் தன் வீட்டினரை அழித்து வருவதாக கூறினான். முறைப்படி பெண் பார்ப்பதற்காகவும், மற்ற விஷயங்கள் முடிவு செய்யவும், அன்று கூடியிருந்தனர்.

ஆதி எதிர்பார்க்காதது மதியின் அம்மா, அப்பா, வாணி வந்திருந்தது. வாணியை ஆவது அதிதி அழைதிருப்பாள் என்றாலும், அவள் அப்பா, அம்மா வந்தது ஆச்சரியமாக இருந்தது.

அப்போது தன்னை தானே திட்டிக் கொண்டான். சே.. நாம்தான் அழைத்திருக்கணும். அதைத்தான் விட்டு விட்டோம். போனிலாவது அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று எண்ணினான்.

அவர்கள் வந்ததும், “வாருங்கள் மாமா, அத்தை ,வாணி.” என்று அழைத்தான்.

மதியும் அம்மாவும், கிட்செனில் பிஸியாக இருந்ததால், “மதி .. இங்கே வா” என்று அழைத்தான்.

மீனாட்சியும், சுந்தரமும் ஒருவரைஒருவர் பார்த்து கொண்டனர். அவர்கள் இருவரும் பார்க்க இன்றுதான் அவளிடம் அவன் நேரடியாக பேசுகிறான். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மதியும் வெளியே வந்து “வாங்க அம்மா, அப்பா, வா வாணி” என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.