(Reading time: 15 - 29 minutes)

09. நேசம் நிறம் மாறுமா - தேவி

ண்ணும்பொழுதி லெல்லாம், -- அவன்கை இட்ட விடத்தினிலே

தண்ணென் றிருந்ததடீ; -- புதிதோர் சாந்தி பிறந்ததடீ

எண்ணியெண்ணிப் பார்த்தேன்; -- அவன்தான் யாரெனச் சிந்தைசெய்தேன் கண்ணன் திருவுருவம் – அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ

                                                              பாரதியார்                  

Nesam niram maaruma

தி கோபத்தோடு தன் அறைக்கு வந்தவன் பால்கனியில் நின்று தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான். வெண்மதி வரவும் அவளைப் பார்த்தவன் மீண்டும் திரும்பி விட்டான்.

இந்த விபத்திற்கு பின்தான் ஆதி மதியோடு சகஜமாக இருக்கிறான். இப்போ அத்தை கேட்க சொன்னதை கேட்டால் மீண்டும் தன்னை ஏறெடுத்து பார்க்க மாட்டான் என்று எண்ணியவள் , சரி அதற்கு எப்படியும் இன்னும் நாள் இருக்கிறது. பிறகு அவனிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி விட்டு விட்டாள்.

கொஞ்சம் விட்டமின் மாத்திரைகள் மட்டும் இன்னும் தொடர்வதால், வழக்கம் போல் அவனுக்கு மாத்திரை எடுத்துக் கொண்டு அவனிடத்தில் சென்றாள். அவள் அருகில் வரவும் தன் கோபத்தைப் பற்றி கேட்க போகிறாள் என்று எண்ணியவன், அவள் மாத்திரையை நீட்டவும் அவளை நேராக பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டான்.

அவள் திரும்பவும் , “சாரி.. உங்க வீட்டில் எல்லோரும் இருக்கும் போது நான் அப்படி வந்திருக்க கூடாது” என்றான்.

மதி “அதுக்கு என்கிட்ட ஏன் சாரி கேட்கரீங்க?” என்றாள்.

அவன் மொபைலில் மதி அப்பாவின் நம்பரை அழைத்தவன், அவர் எடுக்கவும்,

“மாமா, ஆதி பேசுறேன்”

சொல்லுங்க ஆதி. என்ன ஆச்சு?

“சாரி. நான் அப்படி பாதிலே எழுந்து வந்திருக்க கூடாது. இனிமேல் இப்படி பண்ணமாட்டேன் . அத்தை கிட்டேயும் சொல்லிடுங்க.”

“அதனால என்ன பா? பரவால்ல.. நீங்க ரெஸ்ட் எடுங்க. குட் நைட

“குட் நைட் “ என்று வைத்தான். பிறகு படுக்க வந்தான்.

அவன் பேசுவதை கவனித்த மதி சிரித்துக் கொண்டே படுக்க ஆயத்தமானாள். சற்று பெரிய பெட் தான் என்றாலும், அவனுக்கு வசதியாக படுக்க வேண்டும் என்று, அவள் அங்கே உள்ள திவானில்தான் படுப்பாள்.

எப்போதும் போல் அங்கே படுத்தவள் , அத்தை ஏன் அப்படி சொன்னார்கள் என்று யோசித்தாள். நாம் சொன்னால் ஆதி கேட்பரா? அவருக்கு ஏன் சொந்த ஊருக்கு போக பிடிக்கவில்லை. யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. அவள் அறிந்த வரை மாமாவிற்கு தெரியும் என்று தோன்றவில்லை. தெரிந்திருந்தால் அவர் இதற்குள் அவளிடம் சொல்லியிருப்பார். அதிதி, சூர்யாவிற்கும் தெரியாது. அத்தைக்குதான் தெரிந்திருக்கலாம். ஆனால் சொல்ல மாட்டார்கள். அவர்தான் நேரம் வரும்போது உன்னிடம் சொல்கிறேன் என்று ஏற்கனவே சொல்லி விட்டாரே?

ஆதியிடம் கேட்கலாம் .. ஆனால் அந்த துர்வாசருக்கு கேட்கும் முன் கோபம் தான் வருது. என்ன பிறவியோ ? கோபம் மட்டும் மூக்குக்கு மேல் வருது. ரொமான்ஸ் வரதுக்கு என்ன பண்றதுன்னு தெரியல. கடந்த சில நாட்களாக அவன் பழகும் விதத்தை பார்த்து, அவளுக்கு ஏனோ இப்போது வந்தனா இழப்பினால்தான் இப்படி இருக்கிறான் என்று தோன்றவில்லை. வேறு ஏதோ விஷயம் இருப்பதாக தோன்றியது. மேலும் இதுவரை அவள் எண்ணியது போல் ஆதியின் பெற்றோருக்கு வந்தனா இறந்த வருத்தமே தவிர, அவள் மருமகளாக வரவில்லை என்ற வருத்தம் இருப்பதாக தோன்றவில்லை. சொல்லப் போனால் அதிதி அளவிற்கு யாரும் பீல் பண்ணுவது போல் கூட தெரியவில்லை. இப்படி பலதும் யோசிதுக் கொண்டே தூங்கி விட்டாள்.

தியும் யோசனையோடு படுத்தான். மதியைப் போல் நடந்தைப் பற்றி எண்ணவில்லை அவன். தன் சொந்த ஊர் நினைவில் இருந்தான். அவன் இன்று மதி அவளிடம் ஏன் கோபம் என்று கேட்பாள். சொல்லலாம் என்று எண்ணியிருந்தவன், அவள் எதுவும் கேட்காதது அவனுக்கு எரிச்சலையும், ஏக்கத்தையும் உண்டு பண்ணியது. மதியை பற்றி எண்ணிக் கொண்டே தூங்கியும் விட்டான்.

இருவரும் அவரவர் மனதில் தோன்றிய எண்ணங்களை பகிர்ந்து கொண்டிருந்தால், இன்றோடு அவர்கள் இருவரின் வாழ்க்கை மாறியிருக்கும். செய்யாததால் அப்படியே தொடர்ந்தது.

டுத்த நாள் காலை முன் தின கோபம் எதுவும் இல்லாமல் பிரேக் பாஸ்ட் சாப்பிட டைனிங் டேபிளுக்கு வந்தான் ஆதி. அங்கே எல்லோரும் அமர்ந்திருக்க, தானும் அமர்ந்தான்.

காலையில் சாப்பிட வரும்போது அதிதியின் செல்போன் அடிக்க, அதில் ரிங் டோனாக “சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே” பாட்டு கேட்க, சூர்யாவும், மதியும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

அவள் ஆதியிடம் “பாரு அண்ணா,” என்று புகார் படிக்க,

ஆதியோ “சூர்யா, சும்மா இரு” என்று விட்டு “அதிதி நீ வேணா வசீகரா பாட்டு வச்சுக்கோடா செல்லம்” என்று அவனும் சேர்ந்து கிண்டலடித்தான். அதில் அதிதியின் முகம் சிவக்க, அவள் வேகமாக எழுந்து சென்றாள்.

மதி மெதுவாக அவள் அத்தை காதில் “என்ன ஆச்சு அத்தை உங்கள் பிள்ளை துர்வாசர், இன்னிக்கு ஹீரோவாகி இருக்கார். “

“ஏய் .. போக்கிரி .. அவன் எப்பவும் ஹீரோ தான்” என, மதி “நீங்கதான் மெச்சிக்கனும்” என்றாள்.

இவர்கள் இருவரும் ரகசியமாக பேசுவது தன்னை பற்றித்தான் என்று ஆதிக்கு புரிந்தது.

அவன் மதியை பார்த்து என்ன என்பதை போல் புருவத்தை உயர்த்த, மதியோ வேகமாக ஒன்றுமில்லை என்று தலை அசைத்தாள். அவன் மெலிதாக சிரித்தான்.

“சூர்யா, ஆபீஸ்க்கு கொஞ்சம் லேட்டாக போகலாம். மதி, அதியை ஹாலில் வெயிட் பண்ண சொல்லு. நீங்களும் சாப்பிட்டு விட்டு எல்லோரும் ஹாலுக்கு வாருங்கள். நான் பத்து நிமிஷத்தில் வருகிறேன்”  என்று தன் அறைக்கு சென்றான்.

சொன்ன மாதிரி ஆதி பத்து நிமிசத்தில் வர, ஹாலில்  எல்லோரும் இருந்தனர்.

ராகவன் “சொல்லு ஆதி .. என்ன விஷயம்”

“நாம் நேற்றே செய்ய ஆரம்பித்திருக்க வேண்டியது. இப்போ ஸ்டார்ட் பண்ணலாம். சொல்லுங்க .. அதிதி கல்யாணத்திற்கு என்ன என்ன ஏற்பாடுகள் பண்ணனும்.”

அப்போது சூர்யாவிற்கு போன் வர எடுத்து பார்த்தவன் அட நம்ம சார்ட்டர் பாக்ஸ் என்று மனதிற்குள் சொல்லியபடி “சொல்லுங்க வான்மதி..”என்றான். அங்கே சொல்லியதை கவனித்தவன் “ஒ.கே. நான் கொஞ்சம் லேட்டா வருவேன். வந்த பின் பார்க்கலாம்” என்று கூறி வைத்தவன்.

மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்க, வான்மதியின் போன் வந்தவுடன் சூர்யாவின் முகம் மலர்ந்ததையும், அவளிடம் பேசும் போது முகத்தில் தோன்றிய சிரிப்பையும் ஆதி கவனித்தான். ஏதோ யோசித்தவன், பிறகு மற்றவர்களின் பேச்சில் கவனம் வைத்தான். அதற்குள் அதிதிக்கு பிரகாஷிடமிருந்து போன் வர, அவளும் சற்று நேரத்தில் ஆபீஸ் வருவதாக கூறி வைத்தாள்.

“அதி.. உனக்கு தேவையான துணிமணி, நகைகளை முதலில் வாங்கி விடலாம். பிறகு சம்பந்தி வீட்டாரிடம் பேசி விட்டு கல்யாணத்திற்கு தேவையான புடவை, நகைகள் இரண்டு வீட்டருமாக சேர்ந்து வாங்கலாம்” என்றார்.

ஜானகி “அதி.. நீ உன் ஆபீஸ் வேலைகளை எல்லாம் இன்னும் ஒரு பத்து நாளில் முடித்து விடு. அதற்கு பின் கொஞ்சம் கொஞ்சம் வீட்டில் உள்ள வேலைகளையும், வெளி வேலைகளையும் பார்க்க ஆரம்பிக்கலாம்” என்றாள்

மீதி உள்ள வேலைகளை எல்லாம் பட்டியலிட்டு, யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று பிரித்துக் கொண்டனர். மதிக்கு அதிதிக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கும் பொறுப்பு கொடுக்கப் பட்டது. பெரியவர்கள் இருவரும் சீர் வரிசை சாமான்கள் பொறுப்பும், சூர்யாவிற்கு மாப்பிள்ளைக்கு வேண்டியவற்றை வாங்கும் பொறுப்பும் கொடுத்தான். சமையல், மண்டபம் அலங்காரம், போன்ற வெளி கான்ட்ராக்ட் வேலைகளை ஆதி எடுத்துக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.