(Reading time: 46 - 92 minutes)

20. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

வறான நேரங்களில் நாம் எடுக்கும் சரியான முடிவுகள் வாழ்வை அழகாக்குகின்றன. சரியான நேரத்தில் சரியான இடத்தில நாம் எடுக்கும் சிறு தவறான முடிவு வாழ்வை புரட்டி போட்டு அழிவுக்கு வழி வகுக்கின்றது.

காரை செலுத்தி கொண்டிருந்த பிரகாஷ் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டு பெற்றோரிடம் பேச துவங்கினான். கடந்த காலத்தின் சரியான நேரத்தில் எடுத்த தவறான முடிவை பற்றிய விளக்கத்தை தர தயாரானான்.அன்று மதுவை கண்ட அந்த நொடியே அவளிடம் இருந்த ஏதோ ஒன்று தன்னை ஈர்த்து விட்டதை அவன் உணர்ந்தான். அவள் அவனிடம் காட்டிய ஒதுக்கம் அவனுக்கு பண்பாடு மிக்க தமிழ் பெண்ணின் மரியாதையாக தான் பட்டது.

அன்றிலிருந்து அவளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்து ரசித்து அந்த நினைவுகளை தனதாக்கி கொண்டான். அவளை ஆதியுடன் பார்க்கும் போது ஏனோ மனம் இருவரும் நண்பர்கள் என மட்டும் தான் நினைத்தது.

Nenjamellam kathal

ஆனால் ஆதி அப்படி அல்ல.. பார்த்த மாத்திரத்திலேயே இனம் கண்டு கொண்டான் பிரகாஷை. காதல் கொண்ட மனது ஆயிற்றே. அதனால் தான் அவன் மது மீது கோபம் கொண்டதே.

பிரகாஷ் தன் பெற்றோரிடம் உண்மையை கூறிகொண்டிருந்த அதே நேரம் ஆதியும் மதுவை பிரிந்து போனதற்கான காரணத்தை கூற தொடங்கியிருந்தான். எந்த ஒரு உணர்ச்சியையும் மனதில் காட்டிக் கொள்ளாமல் எங்கோ வெறித்த படி அதை கேட்டு கொண்டிருந்தாள் மது.

ஆதி பிரகாஷ் இருவருமே தங்கள் வாழ்வை புரட்டி போட்ட அந்த ஒரு வாரத்தை நினைவுகளால் நிகழ் உலகிற்கு கொண்டு வந்தனர்.

து உடன் பேசாமல் அவள் மீதுள்ள காதலை உணர்த்தாமல் இனியும் தன்னால் கோபத்தை வைத்து கொண்டிருக்க முடியும் என ஆதிக்கு சற்றும் தோன்றவில்லை.எப்படி தன் காதலை வெளிபடுதவது என குழம்பி கொண்டிருந்தவனுக்கு முதலில் நினைவுக்கு வந்தவள் ஆராதனா தான்.

தொலைபேசியில் அவளை தொடர்பு கொண்டு காதல் சொல்ல போவதை மட்டும் மறைத்து பெண்களுக்கு பிடித்தவை பிடிக்காதவை என அலசி ஆராய்ந்து தெரிந்து கொண்டு விட்டான்.

மூன்று நாட்கள் முன்னதாகவே நண்பன் ஒருவன் சிபாரிசு செய்திருந்த ஹோட்டலிலும் டேபிளையும் புக் செய்து வைத்திருந்தான்.

பிரகாஷிற்கு நாளுக்கு நாள் மதுவின் அருகாமையில் அவளை எதிரில் காணும் நாட்களில் காதல் மனது தறி கேட்டு ஓடியது.அவன் எல்லாவற்றையும் இயல்பாக ஏற்று கொண்டு கடந்து செல்பவன் தான் ஆனால் மதுவை அவனால் இயல்பன விஷயமாக பார்க்க முடியாது போனது தான் தவறோ?

காதல் இவர் மேல் தான் இப்படி தான் இவ்வளவு தான் வர வேண்டுமென சட்டங்கள் எதுவும் உண்டா என்ன?!

அவனும் தன் காதலை சொல்லி விட முடிவு செய்திருந்தான். அதுவும் ஆதி தேர்வு செய்த ஹோட்டலின் உரிமையாளன் பிரகாஷின் நண்பனை அமைந்தது எவர் தவறாக முடியும்?! அதுவும் ஒரே நாளில் சொல்ல முயற்சித்தது? விதி வலியது..!!

தன் நண்பனை போனில் அழைத்தான் பிரகாஷ்..

"மச்சான் எப்டி டா இருக்க?"

"சூப்பர் டா, நீ?"

'நல்ல இருக்கேன், அப்புறம் என்ன மச்சான் திடீர்னு இந்த ரமேஷ் உனக்கு கண்ணனுக்கு தெரிஞ்சுருகேன்?"

"இல்ல மச்சி உன் ஹோட்டல்ல ஒரு டேபிள் புக் பண்ணனும்"

"பண்ணிடலாமே எந்த டேபிள் மச்சான், எதாவது விசேஷமா டா ?"

"ம்ம்ம் விசேஷம் மாதிரி தான்"

"புரியலையே"

"உனக்கு புரியணும்னு அவசியம் இல்ல. லெப்ட் சைட் கார்னர் ல இருக்க டேபிள் வேணும் டா, அங்க இருந்து பார்த்த ஸ்விம்மிங் பூல் வியு நல்லா தெரியுமே அண்ட் எந்த டிச்டர்பன்சும் இருக்காது"

"ஹே வெயிட் வெயிட், ஒரு நிமிஷம்.."

"ஏண்டா"

"ம்ம்ம்ம்ம் மச்சான் அந்த டேபிள் புக் ஆகிருக்கு டா"

"ப்ச் நல்லா பாரு டா, இந்த வெள்ளிகிழமைய புக் ஆகிருக்கு?"

"ஆமா டா, சரி டைமிங் சொல்லு டா.. ஈவனிங் கிடைக்குமா?"

'மச்சான் சாரி டா புக் பண்ணி இருக்கறதே ஈவனிங் 5.30 டு 8 டா"

"ச்ச, போடா.."

"மச்சான் வேற டேபிள் எடுத்துக்கோ டா இல்லேன்னா ரூப் டாப் ல அர்ரெஞ்ச் பண்றேன் மச்சான்"

"வேண்டாம் டா தேங்க்ஸ்"

"ம்ம்ம் என் பிரெண்டுக்கு பண்ண முடியாம ஏதோ ஒரு ஆதிக்கு பண்றனே ச்ச அது தான் வருத்தமா இருக்கு" உணர்ச்சியின் மிகுதியோ போலியான நடிப்போ தேவைக்கு அதிகமான விவரத்தை உளறி முதல் திரியை கில்லி விட்டான் ரமேஷ்.

"என்ன பேர் டா சொன்ன?"

"ஆதி மச்சான். ஆதித்யன் மகேஷ் டா"

"ஒ, வேற எதாவது இன்பர்மேசன் கொடுத்தாங்கள அவங்க?"

"ம்ம்ம்.. ஆபீஸ் நேம்.. டேய் மச்சான் உன் ஆபீஸ் தான் டா.. ஏதோ பர்சனல் விஷயதுக்குனு இருக்கு..."

"ஒ.. ஐ சி வேற ஏதும் இல்லையா?"

"ம்ம்ம்ம்... ஒரு கேக் ஆர்டர் கொடுத்திருகாங்க.. அதுல பேர் மிதா நு இருக்கு டா"

"மதுமிதா" தன்னையும் அறியாமல் அவள் பெயரை சொல்லி விட்டான் பிரகாஷ்.

"உனக்கு தெரிஞ்சவங்களா டா"

"ம்ம்ம் ரொம்ப தெரிஞ்சவங்க, நானும் அவங்களுக்காக தான் அந்த டேபில புக் பண்ண நினைச்சேன்"

"பிரகாஷ்?"

"எஸ் டா ஐ லவ் ஹேர்"

"ஆனா இந்த ஆதி?"

"தெரியல மச்சான்.. ஒரு 15 மினிட்ஸ் ல கால் பண்றேன் டா மறுபடியும்.. உன் ஹெல்ப் எனக்கு தேவைப்படும்"

"ஓகே மச்சி"

இரண்டாவது குழந்தை பிறந்து அதை கையில் ஆசையுடன் தூக்கி கொள்ளும் போது தன்னை கவனிக்கவில்லையென கோபத்தில் தன் தம்பியையோ தங்கயையோ கிள்ளி வைத்து விட்டு தாயின் மடியில் ஒரு பிடிவாதத்துடன் அமரும் முதல் குழந்தை.

அதே மன நிலையில் தான் இருந்தான் பிரகாஷ், ஆதியை கிள்ளி விட்டு மதுவை தன் கையணைப்பில் வைத்து கொள்ள முடிவெடுத்தான் ஆனால் அதற்கு முன்னர் ஒரு விஷயம் அவனுக்கு தெரிய வேண்டுமே. ஆதி மதுவை விரும்புகிறான் ஆனால் மது?!

அதை அறிந்து கொள்ள அவனுக்கு உதவியது அவன் ப்ரொஜெக்டின் டீம் லீடர் தான். தான் லீடராக இருக்க வேண்டிய ப்ரொஜெக்டில் எங்கிருந்தோ வந்த ஆதி அமர்ந்தது அவனுக்கு கோபம். அவனை பற்றிய தகவல்களை எல்லாம் அக்குவேறு ஆணிவேராக பிட்டு பிட்டு வைப்பவன்.

ஆனால் பிரகாஷ் அவனை சட்டை செய்வது இல்லை. இன்று அவன் உதவி தேவை பட அவனுக்கு அழைத்து விஷயத்தை கறந்தான்.

"அவங்க ரெண்டு பேருக்கும் எப்பவும் ஆகாது, இவன் எப்போ பாத்தாலும் அந்த பொண்ண திட்டிகிட்டே இருப்பன் பிரகாஷ்.. அந்த பொண்ணு பாவம் அன்னைக்கு கூட நன் கார் பார்கிங்ல பார்த்தேனே அந்த பொண்ண சரமாரிய திட்டிட்டு இருந்தான். அவன் ஒரு சாடிஸ்ட்".

டீம் லீடர் சொன்னவையே காதில் ரீங்கரமிட்டு கொண்டிருந்தன.

ஆதி மட்டும் தான் மதுமிதா மேல் காதல் கொண்டுள்ளான் போலும் மதுவை எப்போதும் திட்டுபவன் மேல் அவளுக்கு காதல் வர வாய்ப்பு இல்லையே. இதை தான் பிரகாஷின்  மனம் அடித்து சொன்னது. மூளையும் அதையே நம்பியது.

ஒரு முடிவிற்கு வந்தவன் உடனே தன் நண்பனை தொடர்பு கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.