(Reading time: 14 - 28 minutes)

03. கிருஷ்ண சகி - மீரா ராம்

வா ருணதி… வா… சீக்கிரமே வந்துட்டீயா?... வா…” என வரவேற்ற காவேரி, பவித்ரா என உள்ளே குரல் கொடுக்கவும், பவித்ரா வந்தாள்…

“பவித்ரா… இவங்க இனி நம்ம கூட தான் வேலைப் பார்க்க போறாங்க… பேரு….” என காவேரி சொல்லும் முன்,

“ருணதி…”… “சரிதானேம்மா…” என அவள் கேட்க… காவேரியோ சிரித்தார்…

krishna saki

“நீ இவ கூட போம்மா… இவ உனக்கு எல்லாம் சொல்லுவா….” என காவேரி சொல்ல, ருணதி சரி என்றாள்…

ருணதி பவித்ராவுடன் செல்லத் தயாரான போது, காவேரி அவளிடம், “ருணதி நான் கேட்டேனே பயோடேட்டா கொண்டு வந்தீயாம்மா?...” எனக் கேட்க

“ஓ… சாரி மேடம்… மறந்துட்டேன்… ஒரு நிமிஷம்…” என்றபடி தன் கைப்பையிலிருந்து மடித்து வைத்திருந்த பயோடேட்டாவை எடுத்து காவேரியிடம் கொடுக்க, அவரும் புன்னகையுடன் அதனை வாங்கிக்கொண்டார்…

“ருணதி… வாங்க நாம போகலாம்…” என பவித்ரா அவளை அழைத்துக்கொண்டு செல்ல, காவேரி அந்த பயோடேட்டாவை பார்த்துவிட்டு, டேபிள் மேலே வைத்து ஒரு பேப்பர் வெயிட்டையும் வைத்துவிட்டு அகன்றார்…

பவித்ராவுடன் தன்னுடன் வந்து கொண்டிருந்த ருணதியை ஒருபார்வை பார்ப்பதும், எதுவோ கேட்க நினைப்பதும், பின் ஒன்றும் தெரியாதவள் போல் நடப்பதுமாய் இருக்க,

ருணதி பவித்ராவை கைமறித்து தடுத்தாள் மேற்கொண்டு நடக்கவிடாமல்…

“என்ன ருணதி?...” ஏன் தடுக்குறீங்க?....”

“நீங்க கேட்க நினைச்சத கேளுங்க… அப்புறம் நடக்கலாம்…” என ருணதி இலகுவாக சொன்னதும்,

பவித்ராவின் விழிகளில் ஆச்சரியம் வந்திருந்தது…

“இப்படி அப்புறமா ஆச்சரியப்படுங்க… இப்போ கேட்க வந்ததை கேளுங்க… என்ன கேட்குறீங்களா?... ஹ்ம்ம்?...” என ருணதி ஒருபுருவத்தை மட்டும் உயர்த்திக் கேட்க பவித்ராவோ அவளை அப்படியே இமைக்காது பார்த்தாள்…

“ஹேய்… பவித்ரா…” என பவித்ராவின் முன் தன் கைதட்டி ருணதி அழைக்க, பவித்ரா சுதாரித்தாள்…

“அதெப்படி ருணதி ஒரு புருவத்தை மட்டும் உயர்த்துறீங்க?... இன்டிரஸ்டிங்க்….”

“பவித்ரா… சரி சொல்லுங்க… என்ன கேட்க நினைச்சீங்க?...” என ருணதி கொஞ்சமும் அசராமல் இருகைகட்டியபடி பவித்ராவைப் பார்க்க

பவித்ராவிற்கு என்ன பெண் இவள்… இவளைப் பற்றி இவளிடம் உள்ள ஒருவிஷயத்தைப் பற்றி நான் பெருமையாக சொன்னால், இவள் அதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல், இருக்கிறாள்…. என்ற எண்ணம் வர, அவள் ருணதியை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு,

“நிஜமாவே எனக்கு ஆச்சரியம் தாங்கலை ருணதி…” என்றவள், தான் அவளைப் பற்றி நினைத்ததை சொல்லிவிட்டு, “நீங்க பார்க்க அழகா இருக்கீங்க… நிறைய படிச்சும் இருப்பீங்கன்னும் தோணுது… எவ்வளவோ வேலையும் உங்க படிப்புக்கு கிடைக்கலாம்… இதெல்லாம் விட்டுட்டு இங்க இந்த இல்லத்துல வேலைப் பார்க்கணும்னு உங்களுக்கு எப்படி தோணுச்சுன்னு யோசிச்சு யோசிச்சுப் பார்த்த்தேன்…  காவேரி அம்மாகிட்ட கூட சொன்னேன்… நிஜமாவே உங்களுக்கு இங்க வேலைப் பார்க்க விருப்பம் இருக்குன்னு… ஆனா எனக்கு தான் என் யோசனையை விட முடியலை… எனக்கும் பதில் தெரியலை… உங்ககிட்ட எப்படி கேட்குறதுன்னும் தெரியலை… அதான்….” என்று இழுத்தபடி பவித்ரா ருணதியைப் பார்க்க, ருணதியோ சிரித்தாள் மெதுவாக…

“இவ்வளவுதானா பவித்ரா… இதை முதலிலேயே கேட்டிருக்கலாமே… இதுக்கு எதுக்கு யோசனை எல்லாம்… இது உங்களுக்கு மட்டும் இல்ல… பொதுவா எல்லாருக்கும் தோணுறது தான்… நான் வெறுமனே எனக்கு சந்தோஷம் தர்ற இடத்துல வாழணும்னு ஆசப்படுறேன்னு சொன்னது தான் இப்போ உங்க இந்த யோசனைக்கு காரணம்… சரியா?....” என ருணதி ஒருபுருவம் உயர்த்திக் கேட்க,

பவித்ரா தலை தானாகவே ஆம் என்று அசைந்தது…

“என் அப்பா, வளர்ந்தது, வாழ்ந்தது எல்லாமே இங்க தான்… ஒரு தருணத்துல அவர் இல்லன்னு ஆனதுக்கு பிறகு நாங்க இந்த ஊரை விட்டு போயிட்டோம்… இப்போ மறுபடியும் இங்க இருக்குற என் அப்பா வீட்டுக்கு வரணும்னு ஒரு ஆசை என் பாட்டிக்கு… அதான்… இங்க வர முடிவு பண்ணினோம்… இங்க வந்தா தங்க இடம் இருக்கும்… ஆனா, வேலைன்னு ஒன்னு வேணுமே… நான் சின்ன வயசில ஸ்கூலுக்கு போகும்போது இந்த இல்லம் தாண்டி தான் போவேன்… அப்போ இருந்து இப்போ வரை இந்த இல்லத்து மேல ஒரு ஈர்ப்பு… இங்க வேலை பார்த்தா என்னன்னு யோசிச்சிட்டிருந்தப்போ தான் கடவுளா பார்த்து அந்த வாய்ப்பை சரோஜா மேடம் மூலமா எனக்கு தெரியப்படுத்தினார்… நான் அதை பயன்படுத்திக்கிட்டேன்… அவ்வளவுதான்..” என்றவள், “இப்போ உங்க யோசனை, சந்தேகம் எல்லாம் சரி ஆகிட்டா?... ஹ்ம்ம்…” என அவள் கேட்க

பவித்ராவோ அவள் சொன்னதை உள்வாங்கிக்கொண்டு, “சந்தேகம் எல்லாம் எதுவும் இல்ல ருணதி… ஒரு சின்ன யோசனை, எண்ணம் மட்டும் தான்… அது கூட இப்போ நீங்க சொன்னதுல தெளிவாயிட்டு…” என சிரித்துக்கொண்டே சொன்னாள்…

“தெளிவானா சரிதான்…” என்றபடி ருணதியும் அவளுடன் சேர்ந்து சிரித்தபடி செல்ல…

“ஹ்ம்ம்.. இன்னொன்னும் கேட்கணும்னு தோணுது… கேட்கலாமா?...” என பவித்ரா கேள்வியாய் ருணதியைப் பார்க்க,

“கேளுங்க.. பவித்ரா…” என்றாள் அவளும்…

“அது வேற ஒன்னுமில்ல… உங்க பேரு ரொம்ப வித்தியாசமா இருக்கு… அதைப்பத்தி தான்…” என்று அவள் கேட்டுக்கொண்டிருக்கும்போது,

“பவித்ரா…” என்ற குரல் கேட்க…

“ஒரு நிமிஷம் இருங்க ருணதி… காவேரிம்மா கூப்பிடுறாங்க… நான் போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடுறேன்…” என பவித்ரா சொல்ல

ருணதியோ, “சரி…” என்றாள்…

“என்னடா இங்க என்ன டைம்பாஸ் பண்ண என்ன இருக்குன்னு நினைக்காதீங்க… இப்போ குழந்தைங்க வர்ற நேரம் தான்… அதுவரை இங்க இந்த இயற்கையை ரசிச்சிட்டு இருங்க… நான் இப்போ வந்திடுறேன்…” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இரண்டாவது முறை, “பவித்ரா….” என்ற காவேரியின் குரல் கேட்க…

“இதோ வந்துட்டேன்ம்மா…” என்றபடி வேகமாக ஓடினாள் பவித்ரா, இல்லத்தின் அலுவலக அறைக்கு….

சற்று நேரம் கழித்து திரும்பி வந்த பவித்ரா, “சாரி ருணதி… ரொம்ப நேரம் ஆக்கிட்டேனா?... சரி வாங்க குழந்தைங்களை பார்க்க போகலாம்…” என அவளை அழைத்துச் சென்றாள்…

பிஞ்சு மழலைகள்… தத்தி தத்தி நடக்கும் அழகையும், கொஞ்சி கொஞ்சி பேசும் அழகையும் பார்க்க கொடுத்து வைத்திடாத பெற்றவர்களை நினைத்து வருந்தினாள் ருணதி…

பிஞ்சுகளை இப்படி கொஞ்சம் கூட

மனதில் ஈரம் இல்லாமல் வீதியில் வீசி

ஏறிபவர்களுக்கு ஏன் புரியவில்லை

குழந்தை கடவுளின் வரப்பிரசாதம் என்று…

நாள் முழுதும் மழலைகள் செய்யும் சிறு சிறு

விளையாட்டுகளில் இருக்கும் அழகைக் காண

கண் கோடி இருந்தாலும் தான் போதுமா???..

ஆனால் ஏன் இதெல்லாம் ஒரு நொடியில்

குப்பையில் போடுவதற்கு முன்

யோசிக்க முடிவதில்லை அவர்களால்…???...

விதியின் சதியில் இதுவும் ஒன்றா?...

யார் யாரோ செய்த பாவங்களுக்கு

இந்த மலர்கள் காலம் முழுக்க

பாரம் சுமத்தல் தகுமா கண்ணா?...

என மனதினுள் வலியோடும், குழந்தைகளை புன்னகையோடும் பார்த்தாள் ருணதி…

நேரம் காலம் தெரியாது அங்கேயே இருந்து அவர்களோடு பொழுதை கழித்தவளுக்கு சாயங்காலம் வந்துவிட்டதை கூட உணரும் நிலை இல்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.