(Reading time: 12 - 24 minutes)

18. என் உயிர்சக்தி! - நீலா

' லவ் யூ சிவா அத்தான்!!'

இந்த வார்த்தைகள் தான் அவன் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.

பிலடேல்பியாவில் இருந்த குழலீக்கும் இதே நினைவு தான்.

En Uyirsakthi

'நான் எவ்வளவு தான் விழுந்து விழுந்து காதல் செய்தாலும் அவனிடம் இருந்து ஒரு ரியாக்‌ஷனும் வர போகிறது இல்ல...இதுக்கு மேல நானா போய் ஐ லவ் யூ' னு சொல்லப்போறது இல்லை. அதே சமயம் அவனுக்கு இல்லைனு சொல்றதுக்கு என்கிட்ட எதுவுமே இல்லை.

இளமை துள்ளுகிற பதினெட்டு இருபது வயதில் இந்த காதல் கத்திரிக்காய் வந்து தொலைச்சிருந்தா கூட பரவாயில்லை.. கட்டதட்ட முப்பது வயசுல இந்த காதல் வந்து தொலைக்கனுமா ?? அதுவும் ஒரு தலை காதல்!'

அவள் மனமோ.. 'உன் காதல் ஜெயிச்சிடுச்சு டீ! அவனை உனக்கு ரொம்ப பிடிக்கும்..அவனையே கல்யாணமும் செய்துகிட்ட! அப்புறமாக என்ன உன் காதல் ஜெயிச்சிடுச்சுல??' என்றது.

ஒரு காதல் ஜெயிக்கனும் னா அது கல்யாணத்தில முடிஞ்சாகனுமா? இருவரும் காதலால் கசிந்துருகி கல்யாணம் செய்து அதே காதலோட கடைசி மூச்சு உள்ள வரை இருந்தா அந்த காதல் ஜெயிச்சிட்டதா அக்சப்ட் செய்துக்கலாம். அடிப்படை அன்பு ரொம்பவும் முக்கியம்!

'இங்க பிரச்சனை என்ன?'

அவன் நிஜமாவே ப்ரியாவை காதலிச்சானா?

பாரு நீயே அவன் ப்ரியாவை காதலிச்சானா ? அப்படினு பாஸ்ட் டென்ஸ்ல தான் சொல்லற?'

ஆமாம் இல்ல?

………………

ப்ரியாவை பத்தி யோசிக்காம உங்க இருவரை பற்றி மட்டும் யோசி.

அவன் தான் என்னை பிடிக்கலைனு சொல்லுறானே? அதுவும் ஒரு கேவலமான காரணத்தை வேறு சொல்லுறானே!

அவன் செயல்கள் அப்படி சொல்லுதா?அன்றைக்கு நடந்தது.....அவன் செய்த காரியம் நினைவிருக்குல்ல?

அன்றைக்கு நடந்ததுக்கு நானும் தானே பொறுப்பு! நான் அவனை உண்மையாகவே விரும்புறேன். எங்களுடைய துன்பத்தையும் இன்பத்தையும் பகிர்ந்துகொள்ள விரும்புறேன். அவனுக்கு அவனோட சந்தோஷம் தானே முக்கியமாய் பட்டுது... என்னை ஒரு பொருட்டாவே கருதல...இவனுக்கு இல்லைனு சொல்ல என்கிட்ட எதுவுமே இல்லைதான். ஆனா எனக்குனு சுயமரியாதை இருக்குல? அந்த சுயமரியாதையை விட்டுக்கொடுத்து நான் அவன் காலடியிலேயே வாழனுமா?

………………….

நேவர்! காதல் யாசகமாய் பெறக்கூடிய பொருள் கிடையாது. பட் என் மனசை நான் தெளிவா எடுத்து சொல்லிட்டேன். அவ்வளவுதான்.

அதுக்கு? அவன் கூட சேர்ந்து வாழற ஐடியாவே இல்லையா???'

யாரு இல்லைனா? ஒரு வார்த்தை... ஓரே வார்த்தை என் மனசு சந்தோசப்படறா மாதிரி ஒரு வார்த்தை சொல்லியிருந்தார்னா... என் மனசு இப்படி வேதனைப்படாதுல?'

அப்புறமும் ஏன் அவனுக்காக உன்னை நீ மாத்திக்கனும்னு பாரக்கிற? முன்னை போல அவன்கிட்ட நடந்துக்குறியா? இல்லையே! அவன்கிட்ட விட்டுக்கொடுத்து தானே போற?? அது அவனுக்குமே பிடிக்கலைனு சொல்லிட்டானே!

ப்ச்ச்...ஏய் நீ சும்மா இரு! ஏற்கனவே நான் ரொம்பவும் குழம்பியிருக்கேன். நீ வேற கிளப்பிவிடாத!' என்று மனதை அடக்கினாள் பூங்குழலீ!

ங்கே இவள் மனம் துடித்துக்கொண்டிருக்க அங்கே பிரபு வேறு மனநிலையில் இருந்தான்.

என் மனைவி என்னை மிகவும் விரும்புகிறாள். என் பிறந்தநாளைக்கு என்னை வாழ்த்தியிருக்கா! இதுவும் நல்லா தான் இருக்கு! தெரியல்ல.. அவளை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேனானு தெரியல!

அடுத்த வந்த அழைப்புகளை ஏற்றவன் கண்கள் சொக்கியது. அப்படியே கட்டிலில் சரிந்தவன் தலைவைக்கும் பகுதியின் மேல்பக்க சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்த பெரிய புகைப்படத்தைப் பார்த்தான். அன்றைய நிகழ்வுக்கு சென்றது மனது. 'நிஜமாவே நீ அழகுதான்டீ குழலீ!' என்றான் வாய்விட்டு. அந்த நேரம் பார்த்து கைபேசி மீண்டும் சினுங்கியது.

எடுத்தான். வெற்றியின் அழைப்பு. வெற்றி, யாழினி, டீனா என்று எல்லோரும் வாழ்த்திய பின்பு டேவிட் பேசினான்.

மாப்பிள்ள சார். பிறந்த நாள் வாழ்த்துக்கள்' டேவிட் தான்.

நன்றி மச்சான். ஆனா அதுக்குள்ள உங்க பாசமலர் தங்கை விஷயத்தை போட்டு உடைச்சிட்டாளா?

தங்கையா? குழலீயையா சொல்லறீங்க?

பின்னே! என் பெண்டாட்டீ அவதானே? அவ பேசும் போதே உங்ககிட்ட கொடுத்திருக்கலாமே?

உங்ககிட்ட பேசிட்டாளா? ப்ச்ச்... நான் ஒரு மடையன் பாருங்க! ஃபேஸ்புக் ல மேடம் கொடுத்திருக்கும் வாழ்த்தை பார்த்துட்டு தான் கால் செய்தோம். மத்தபடி அவங்க வாயை திறந்து சொல்லிட்டாலும். ஆனா நீங்க ரொம்ப லக்கி தெரியுமா?

ஏன் அப்படி சொல்லறீங்க? வெயிட் கலேக்டர் மேடம் என்ன வாழ்த்து சொன்னாங்க? அதுவும் ஃபேஸ்புக்ல?

நீங்களே போய் பாருங்க மாப்பிள்ள!

சஸ்பன்ஸ் வேண்டாம் மச்சான்.. சொல்லிடுங்க! இருங்க... நான் பார்க்கிறேன். 

வாழ்த்து கவிதை ஒன்று போஸ்ட் செய்திருந்தாள். 'கவிதாயினி குந்தவையின் பெட்டகத்தில் இருந்து' என்று கடைசியாக அப்டேட் செய்திருந்தாள். 

என்ன மச்சான்? யாரொ ஒருத்தரோட கவிதையை போஸ்ட் செய்திருக்கா! பட்... கவிதை நல்லா இருக்கு! பொறுத்தமா தான் இருக்கு!

இருக்காதே பின்னே!

யாரு மச்சான் இந்த குந்தவை?

நல்லா கேட்டீங்களே ஒரு கேள்வி! சூப்பர்! நல்லா படிங்க... ஒரு ஒரு வார்த்தையாய் படிங்க! வெயிட்... அவங்க ப்ளாக் லிங்க் அனுப்பறேன்... எல்லா ப்ளாக் போஸ்டையும் படிங்க... படிச்சிட்டு கூப்பிடுங்க அப்போ சொல்லறேன்!' என்று வைத்துவிட்டான் டேவிட்.

தூக்கம் கலைந்துவிட்டது இவனுக்கு! அந்த ப்ளாகில் இருப்பவற்றை படிக்க ஆரம்பித்தான் பிரபு தன் லாப்டாப்பில்!

கவிதை தொகுப்பு அது! காதல் கவிதைகள் என்பதை விட உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருந்தது. காதல், காமம் தாண்டி நிற்மலமான கடலளவு அன்பு இருந்தது அந்த தொகுப்பில்!

கவிதை தொடர் அது....கண்ணனின் மீதான ருக்மணியின் காதல்... வந்தியத்தேவன் மீதான குந்தவையின் காதல்! இந்த இரு நாயகிகளின் கடலளவு அன்பின் வெளிப்பாடு..

'அந்த நாயகிகளுடன் தன் காதலை ஒப்பிட்டு கொள்கிறாளோ இந்த கவிதாயினி? பெண்மையின் காதலை அன்பின் தாக்கத்தை, ஆழத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறாள் இந்த பெண் கவிஞர்!' என்று எண்ணியவாரே டேவிடை அழைத்தான் பிரபு!

என்ன மச்சான் கண்டுபிடுச்சிடீங்களா?' எடுத்தவுடன் கேள்வியோடு தான் தொடங்கினான் டேவிட்.

கவிதைகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு! பெண்களுக்குள்ள இவ்வளவு காதல் இருக்கும்னு...எவ்வளவு அழகா எழுதியிருக்காங்க...யாரு தேவ் இது! தமிழ் மொழியை இவ்வளவு அழகா ஆளுமை செய்திருக்காங்க... உங்களுக்கு தெரிந்தவங்களா? அவங்களை பாராட்டீ ஒரு இ-மெயில் அனுப்பபோறேன்... இல்லைனா நீங்களே என் சார்பாக இதை சொல்லிடுங்க' - பிரபு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.