(Reading time: 28 - 55 minutes)

09. நகல் நிலா - அன்னா ஸ்வீட்டி

த்தனை யோசித்தாள் எப்பொழுது தூங்கினாள் என தெரியவில்லை. காலை என எண்ணி நல்லிசை விழித்த நேரம் அவள் கண் முதலில் தேடியது மகனைத்தான். அதன் பின்புதான் அவளுக்கு அவள் எங்கு இருக்கிறாள் என்பதே ஞாபகம் வந்தது. அருகில் மகன் இல்லை என ஒரு நொடி மனம் துணுக்குற்றாலும் அடுத்த நொடியே சமாதானமும் ஆகிவிட்டது. நிக்கியுடன் இருப்பான் என தான் தெரியுமே.

ஆனாலும் இந்த நிக்கிக்கும் அவிவ்க்கும் எப்படித்தான் இப்படி இன்ஸ்டண்டாக பிடித்துப் போனதோ? அவிவ் அவ்வளவு எளிதாக யாருடனும் இப்படி ஒட்டிக் கொள்ளும் குழந்தை கிடையாது….

மனதில் மகனை அலசிக்கொண்டே அறை அறையாய் மகனை தேடிய படி கீழ் தளம் சென்றாள். வீட்டில் எங்கும் அவன் இல்லை. ஆனால் அதிகம் பதற வைக்காமல் அவன் சிரிப்பும் உற்சாக ஒலிகளும் வெளியே அருகில் அவன் இருக்கிறான் என காட்டிக் கொடுத்தன. நிக்கியின் சத்தமும் தான்.

nagal nilaஇவள் புரிந்து கொண்டது போலவே அங்கு நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர் இருவரும். இவள் போய் முறைத்தபடி நின்றாள் அங்கு. அவிவ் இவளைப் பார்த்ததும் நிக்கி பின் பம்மினான் எனில் நிக்கியோ இவளை ஒரு கெஞ்சல் பார்வைப் பார்த்தான் பரிதாப பாவத்துடன்.

“அவிவ் ரொம்ப ஆசப்பட்டான்……உன்ட்ட கேட்கலாம்னு தான் நினச்சேன்….பட் நீ தூங்கிட்டு இருந்தியா….இனி எதையும் உன்ட்ட கேட்காம செய்யலை…”

ஒரு பக்கம் அவிவுடன் நிக்கி பழகுவதா என ஒரு கோபம் சுர் என உள்ளுக்குள் ஏறினால்….இன்னொரு பக்கம் அவளுக்குள் அடுத்த எரிச்சல்.

‘மிரட்டி கொண்டு வந்து  கல்யாணம் பண்ணிட்டு….என்னமோ இவளுக்குத்தான் பயந்து நடுங்கிட்டு இருக்ற மாதிரி என்ன ஒரு சீன்….’

தொடர்ந்து முறைத்தாள்.

“வாட்டர் கூட இப்ப தான் மாத்தினேன்……ஹாட் வாட்டர் தான்….” இன்னுமாய் விளக்கம் சொல்ல முனைந்தான் நிக்கி.

“……………..”

“ஜஸ்ட் இப்பதான் ஒரு 30 மினிட்ஸ்….”

“வாட்…? முதல்ல வெளிய வாங்க……”

அவசர அவசரமாக அவிவுடன் பூலை விட்டு வெளியே வந்தான் நிக்கி. அவனும் அவிவும் முட்டு வரை நீண்டிருந்த ப்ளூ கலர் ஷார்ட்ஸும் வெற்று மார்புமாக….

தண்ணீருக்குள் நிற்கும் போது அது ஒன்றும் விஷயமாக தெரியவில்லை தான்…. இப்பொழுது எப்படியோ உணர்ந்தாள் நிக்கியை அப்படிப் பார்க்க

ஒரு கையில் அவிவை தூக்கியபடி இவளை நோக்கி நிக்கி வர அதற்கு மேல் நின்று அவனைப் பார்க்க இவளுக்கு முடியவில்லை. முதுகு காட்டி திரும்பிக் கொண்டவள்….

“அவன முதல்ல கீழ இறக்கிவிடுங்க…7 வயசு பையனை எப்பவும் இப்டி தூக்கிகிட்டே இருக்றது சரியில்ல….” சிடு சிடென சொல்லியபடி வீட்டைப் பார்த்து நடக்க தொடங்கினாள்.

“தரை ஈரமா இருக்கேன்னு பார்த்தேன்….மத்தபடி தூக்க மட்டேன்…” அவனும் இவளை பின் தொடர்வது புரிகிறது.

இப்டியே இவ கூட எங்க வரை வரப் போறான்?

நேராக கிட்ச்செனுக்குள் சென்று புகுந்து கொண்டாள்.

துவோ அட்டாமிக் பாம் தயாரிக்கின்ற இடம் போல் தாறுமாறா இருந்தது.

என்ன இருக்கிறது? என்ன இல்லை? என சமையலறையை குடைந்தாள்.

அவளுக்கு உடனடியாக தெளிவாக புரிந்த விஷயம் அது பேச்சுலர் கிட்சென் என்பது தான். முறையாய் சமையல் நடந்ததற்கான  எந்த அறிகுறியும் அங்கு இல்லை. சமையலுக்கு ஆள் கூட இல்லை போலும்.

அதிகமாய் வாங்கி வைக்கப் பட்டிருந்த விஷயம் நூடுல்ஸ் பாக்கெட்….அடுத்து ஓட்ஸ்…கார்ன் ஃப்ளேக்‌ஸ்...ப்ரெட்…எக்ஸ்…சுண்டைக்காய்…. அரிசி இருந்தது தான்…ஆனால் மசாலா ஜாமன்கள் பருப்பு ஒன்று இருந்தால் மற்றொன்று இல்லை என்ற கதையாக இருந்தது.

இப்ப சாப்பாட்டுக்கு என்ன செய்யனும்?

நூடுல்ஸ் கொடுத்து அவிவ ஸ்கூல்க்கு அனுப்பவா? ஆனால் இன்று எப்படியும் அவனை பள்ளிக்கு அனுப்பிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள் நல்லிசை.

நேத்தே லீவ். அதோட வீட்ல இருந்தா நிக்கியோட தான் கும்மாளம் அடிப்பான்…நல்லதுக்கு இல்ல…..

ஃப்ரிஜில் இருந்த பால் பாக்கெட்டை பிரித்து காய்ச்சி அவிவ்க்கு  கார்ன்ஃப்ளேக்ஸுக்கு வழி செய்தவள் மகனை தேடி கிளம்பிய நேரம் அவன் நிக்கியுடன் வந்து நின்றான்.

புது கேஷுவல் வேரில் அவிவ்.

“அவிவ் இன்னைக்கு ஸ்கூல்க்கு போகனும்….” எங்கோ பார்த்து சொன்னவள் மகனை கொஞ்சம் முரட்டடியாய் தூக்கி அங்கிருந்த டைனிங் டேபிளில் வைத்தாள்.

டைனிங் ரூம் என தனியாக இல்லாமல் அந்த பெரிய கிட்ச்சனிலே இட புறமும் வலபுறமுமாக இரண்டு குட்டி வட்ட வடிவ டைனிங் டேபிள்கள் . ஒவ்வொன்றை சுற்றியும் மூன்று மூன்று நாற்காலிகள்.

இடவலமாக நீண்டிருந்த அந்த அறைக்கு இப்படி அமைப்பது அழகாய் இருக்கும் என்பதால் தான் அப்படி இரு மேஜைகள் என அவளுக்கு தெரிந்தாலும் நக்கலாய் ஒரு தாட்.

“அந்த டேபிள் யாருக்கு?”

அவள் கேள்வியின் அர்த்தம் புரியாமல் அவளை ஒரு விதமாகப் பார்த்தான் நிக்கி.

“ஏன்?”

“இல்ல இன்னொரு ஃபேமிலி எதுவும் வச்சுருக்கீங்களோன்னு பார்த்தேன்….”

“அந்த காலத்து ராஜா மாதிரி அப்டக்ட் பண்ணி கல்யாணம் செய்றீங்களே அதான் சந்தேகம்…”

கேட்ட படி மகன் முன் கார்ன்ஃப்ளேக்‌ஸை எடுத்து வைத்து அவனுக்கு ஊட்டத் தொடங்கினாள்.

“குழந்த முன்னால என்ன பேசனும்னு தெரியலை…..” பல்லைக் கடித்தபடி முனங்கிய நிக்கியோ கிட்ச்சன் மேடைப் புறம் நகர்ந்தான்.

அதே நேரம் “மாம்…. அங்கிளோட அந்த டேபிள் ஃபேமிலி எப்ப வரும்? அங்க என்ன மாதிரி கிட் இருக்காங்களா?” என அதி சிரத்தையாய் விசாரித்தான் அவிவ்.

எரிச்சலில் கொட்டிவிட்ட தன் வார்த்தைகளின் பின் விளைவுகளில் நல்லிசை ஷாக்காகிப் போனாள் எனில் நிக்கி இவளை முறைத்தான்.

ஆமா…இவன் என்னனாலும் செய்யலாமாம்…..இவ அத சொல்லிக் காமிச்சாதான் குழந்தைக்கு தெரிஞ்சு போய்டுமாம்? எப்டி பார்த்தாலும்…பின்னால .ஒரு நாள் அவிவ்க்கு நிக்கி தன்ன பணயமா வச்சுதான் நல்லிசைய கல்யாணம் செய்தான்னு தெரிய வரும்தானே…அவன் பக்கம் ஆயிரம் தப்ப வச்சுகிட்டு என்ன முறைக்கிறான்….’

“டேய்…” என இவள் அவிவை நோக்கி ஆரம்பிக்கும் முன்னே அவன் அருகில் சென்று முழந்தாளிட்டிருந்தான் நிக்கி.

“நம்ம வீட்டுக்கு இனிமே அவிவ்க்கு தம்பி தங்கைனு குட்டிப் பாப்பாலாம் வருவாங்க…அவங்க எல்லோருக்கும் அவிவ் தான் பெரிய அண்ணா….எல்லோரையும் அந்த டேபிள்ள வச்சு சாப்ட சொல்லி ஒழுங்கா சாப்டுறாங்களான்னு நீங்க தான் மானிடர் செய்யனும்…அப்ப நானும் மம்மாவும் இந்த டேபிள்ள இருந்து அதைப் பார்ப்போம்…அதுக்குதான் ரெண்டு டேபிள்….”

நிக்கியின் விளக்கம் இவளுக்குள் ஆசிட் மழை செய்தது என்றால் அதற்கான அவிவின் ரெஸ்பான்ஸோ  எரிகின்ற எரிச்சல் தீயில் இன்னுமாய் எண்ணெய் ஷவர்.

“வாவ்,…அப்போ நான் தான் அந்த டேபிள் மானிடரா ….சூப்பர்…அப்ப பாப்பாலாம் எங்க…வரச்சொல்லுங்க……நான் இப்பவே பிக் பாய்…7இயர்ஸ் ஓல்ட்….நான் பார்த்துபேன்…”  நிக்கி இவளை ஒரே ஒரு நொடி குறும்பாய் ஒரு பார்வை பார்த்தவன் அவிவிடம்

“நீ கிட் மானிடர் ஆகனும்னா உனக்கு 9இயர்ஸ் ஆகனும்….அதோட நீ 3ர்ட் ஸ்டாண்டர்ட் வேற படிக்கனும்…..சோ அதானல் இப்ப சீக்கிரம் ஸ்கூலுக்கு கிளம்பு…அதை அப்றம் பார்த்துகிடலாம்….” என சொல்லி அவன் வாயடைத்தான்.

பல்லை கடித்தபடி நின்றிருந்தாள் இசை.

“நீ அவனுக்கு ஊட்டலைனா சொல்லு…நான் பார்த்துகிடுறேன்….ஸ்கூலுக்கு போகனும்னா டைம்க்கு கிளம்ப வேண்டாமா….? எனக்கு தெரிஞ்சு இன்னைக்கு ஒரு நாள் லீவ் எடுக்கலாம்…சொன்னா கேட்பியா நீ….சரி கிளம்ப வை….உன் பழைய வீட்ல போய் அவன் யூனிஃபார்ம் சேஞ்ச் செய்துட்டு அப்டியே ஸ்கூல்ல ட்ராப் பண்ணிடலாம்…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.