(Reading time: 9 - 18 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 18 - புவனேஸ்வரி கலைச்செல்வி

கல் முழுக்க அன்னை தந்தையோடு செல்லம் கொஞ்சி கொண்டிருந்த கவிமதுராவிற்கு இரவானதும் அவளது அறைக்குள் செல்ல என்னவோ போல இருந்தது . ஜீவா நன்கு உறங்கி கொண்டிருந்தான் தனது தாயுடன் .. தந்தையும் அயர்வில் நன்றாய் உறங்கவும் உறக்கம் தொலைத்த விழிகளுடன் வீட்டை வளம் வந்தாள்  கவிமதுரா .. நீண்ட நாட்களுக்கு பிறகு அவள் மனதில் இருந்த ஒரு வித வெறுமை மறைந்து இருந்தது . கண்ணபிரான் - மீராவதி இருவரையும் சந்தித்த பின்புதான் அவள் இந்த முடிவை எடுத்தாள் .. ஒருவேளை , அவள் வாழ்வில் ஒரு விடியல் தேவை என்றெண்ணி , கடவுளே அவர்களை அனுப்பி வைத்தனரோ ? என்று அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை .. அவர்களிடம் பேச வேண்டும் போல இருந்தது .. ஆனால் மணியோ பன்னிரண்டை நெருங்கி கொண்டிருந்தது . " கண்ணன் மாமா தூங்கி இருக்க மாட்டாரே ?" என்று சிந்தித்தாள்  அவள் .. கண்ணபிரானின் உறங்கும் நேரத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தாள் .. எனினும் தயக்கமாய் இருந்தது .. ஒரே ஒரு முறை முயன்றுதான் பார்ப்போமே என்றெண்ணி , அவர்களது வீட்டு எண்ணிற்கு அழைத்தாள்  ..

 எதிர்முனையில் போனை யார் எடுப்பார்களோ என்ற தவிப்பில் நடந்துகொண்டிருந்தவள் அப்படியே நின்றாள்  .. அவளது இதயத்துடிப்பு அவளுக்கே வேகமாய் கேட்டது .. துடிக்கும் அவள் இதயத்தை சீண்டி பார்ப்பது போலவே போனை எடுத்தான் கிரிதரன் ..

" ஹலோ "

Enna thavam seithu vitten

"........."

" ஹெலோ "

ஸ்வாசமே  நிற்பது போல இருந்தது அவளுக்கு .. அன்று நாள் முழுக்க அவளது நினைவிலேயே இருந்தான் கிரிதரன் .. இப்போது எதிர்முனையில் ஓசை வராமல் போகவும் அவளாய்  இருக்குமோ என்று தோன்றியது அவனுக்கு .. அதே நேரம் அவள் ஏன்  இங்கு அழைக்க போகிறாள் , இந்நேரத்தில் என்று தோன்றியது .. ஏதும் பிரச்சனையோ ? முதலில் இது அவள் தானா ? குழம்பினான் கிரிதரன் .

" ஹெலோ யாருங்க ?"

தோட்டத்தில் இருந்தாள்  கவிமதுரா .. இருள் சூழ்ந்த அவ்விடத்தில் காலில் ஏதோ ஊர்வது போல இருக்கவும் தன்னையும் மீறி  " அம்மா " என்று காலை உதறினாள்  அவள் .. சில நொடிகள் ஆயினும் அவள் குரலை கேட்ட கிரிதரனின் மனம் குத்தாட்டம் போட்டது .. " நினைத்தவுடன் வந்துவிட்டாயே கண்ணம்மா " என்று மனதினுள் நினைத்தான் .. இதழோரம் வெற்றி புன்னகை ..

" ஹலோ " என்ற அவன் ஒரு வார்த்தையிலேயே , கிரிதரன் தான் என்று புரிந்தகொண்டவள் , இப்போது தன்னையே மானசீகமாய் திட்டி கொண்டாள்  .. மனதிற்குள் உற்சாகமாய் இருந்தாலும் அதை வெளியில் காட்டிகொள்ளவில்லை கிரி ..

" அப்பா , உங்களுக்கு தான போன் " என்று போனை வைத்துவிட்டு அருகில் அமர்ந்து தந்தையை பார்த்து கண்ணடித்தான் .. யாருடா ? என்று செய்கையில் தந்தை வினவ , வசீகரமாய் சிரித்து மட்டும் வைத்தான் கிரி ..

" ஹெலோ"

" ஹெலோ மாமா "

" கவி ?"

" ம்ம்ம் ஆமா மாமா .. "

" என்னம்மா இந்த நேரத்தில் ? ஏதும் பிரச்சனையா ?"

" அப்படி எல்லாம் இல்ல மாமா .. உங்க கிட்ட பேசணும்போல இருந்தது "

" என்னனு சொல்லுமா "

" நான் .... நான் இங்க தேனிக்கு வந்துட்டேன் மாமா "

" அடடே, நல்ல விஷயம் கவி .. அம்மா அப்பா எப்படி இருக்காங்க "

" இப்போ சந்தோஷமா இருக்காங்க மாமா "

" நல்லதும்மா .. இனி எப்பவும் சந்தோஷமாதான் இருப்பாங்க "

" உங்களுக்கு தான்  நான் நன்றி சொல்லணும் மாமா .. நீங்க அன்னைக்கு அட்வைஸ் பண்ணலன்னா இதெல்லாம் நடந்து இருக்குமா தெரியல "

" அதுக்கு நன்றி சொல்லத்தான் இப்போ கூப்பிட்டியாம்மா "

" ம்ம்ம்ம்"

" அன்னைக்கு சொன்னதுதான் இப்பவும் சொல்லுறேன் கவிம்மா , நீ எப்பவும் எங்களுக்கு மகள்தான் .. இப்படி நன்றி எல்லாம் சொல்லி பிரிச்சு பேசாதே "

" சரி மாமா .. நீங்க இன்னும் தூங்கலையா ?"

" உனக்கு தான் தெரியுமேம்மா ... ஐ பி எல் மேட்ச் பார்த்துட்டு இருக்கேன் .. உன் அத்தை இப்போதான் என்னை திட்டுட்டு போனா " என்று அவர் சோகமாய் சொல்லவும் மெல்ல சிரித்தாள் மதுரா ..அடுத்து என்ன பேசுவது ? அவனை பற்றி கேட்கலாமா வேணாமா ? என்று தவித்தாள் .. அவள் தவிப்பை அறியாமல்

" நீ தூங்கவில்லையா ?" என்றார் அவர் ..

" இல்ல மாமா .. தூக்கம் வரலை "

" அது எப்படிம்மா வரமால் போகும் ? நடந்தது எதையும் யோசிக்காமல் போயி தூங்கு கவி "

" ம்ம்ம் சரி மாமா .. நான் நாளைக்கு பேசறேன் "

" ராத்திரி கண் முழிக்க வேணாம்னு சொன்னா கேட்கற பழக்கமே இல்லையா ? இப்போ தூங்க முடியுமா முடியாதா ?" என்று கிரி தூரத்தில் இருந்து அதட்டல் போட்டான் .. பார்பதற்கு அவன் தனது தந்தைக்கு சொல்வது போல இருந்தாலும் , அவன் சொன்னது என்னவோ அவளுக்கு தான் .. நீண்ட நாட்களக்கு பிறகு  அவன் பேசுவதை கேட்டவளின் மனம் சிலிர்த்தது ..

" என்னை அவனுக்கு தெரியவில்லையா ? அல்லது தெரிந்தும் தவிர்த்து விட்டானா ? எப்படி இருக்கிறாய் என்று ஒரு வார்த்தை கேட்டால் தான் என்னவாம் ?" என்று சிணுங்கிய மனதை கண்டு திடுகிட்டு போனாள்  மதுரா ..

" நீங்க தூங்குங்க மாமா ..நான் வைக்கிறேன் " என்றாள்  மெதுவாய் ..

" நாளைக்கு என்ன நாள் நியாபகம் இல்லையா கவி ?"

" என்ன மாமா ?"

" சரியா போச்சு போ .. நாளை விநாயகர் சதுர்த்தி மா .. குடும்பத்தோடு அந்த கணபதியை கும்பிடுட்டு வா ... நல்லதே நடக்கும் " என்றார் அவர் இதமாய் ..

" சரி மாமா .. வெச்சிடுறேன் " என்றபடி போனை வைத்தாள்  கவிமதுரா .. மனதில் புதிதாய் தெளிவு உண்டானது .. இங்கு கிரி தனது தந்தையை கட்டி கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டான் ..

" டேய் .... என்னடா இது .. உங்கம்மா பார்த்தா பொறாமை படுவா " என்று அவர் சொல்லவும்

" நெனப்புதான் உங்க அப்பா பொழப்பை கெடுக்குதுன்னு சொல்லு கிரி " என்று சிரித்தார் மீரா .. அவ்வளவு நேரம் நடந்ததை  எல்லாம் அவரும் பார்த்து கொண்டுதான் இருந்தார் ... கண்ணன் கவியிடம் பேசிகொண்டிருக்க , மகனின்  முகத்தில் தெரிந்த உற்சாகத்தை தெவிட்டாமல் ரசித்து கொண்டிருந்தார் அவர் ..

தனது அறையை எட்டி பார்த்தாள்  கவிமதுரா .. அரவிந்த்தின் குரல் அறையெங்கும் கேட்பது போல இருந்தது .. அவள் வாழ்வின் கருப்பு பக்கங்களை ஏந்திய தினங்கள் கண்முன்னே வந்தது ... அன்றைய நினைவில் மூழ்கிபோனாள்  கவிமதுரா ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.