(Reading time: 18 - 36 minutes)

03. கிருஷ்ண சகி - மீரா ராம்

காரில் வந்து அமர்ந்தவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை… தாறுமாறாய் அவளைப் பார்த்த உடனே துடித்த இதயம் இப்போது தறிகெட்டு நிலைகொள்ளாமல் ஓடியது அங்கும் இங்கும்…

கண்களில் அவள் முகம் வந்து வந்து செல்ல, மனமோ தவியாய் தவித்தது…

காரின் ஸ்டியரிங்கில் தலை சாய்த்துக்கொண்டவனுக்குள் மாலையில் அருள் இல்லத்தில் நடந்த நிகழ்வு கண் முன்னே வந்தாடியது…

krishna saki

“வா.. ராஜா… வா…” என இன்முகத்துடன் வரவேற்ற காவேரியிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டவன்,

“எப்படி இருக்கீங்க மதர்?...” எனக்கேட்க,

“எனக்கென்னப்பா… ஒரு குறையும் இல்லை… சந்தோஷமா இருக்குறேன்…” என்றபடி அவன் முகத்தினைப் பார்த்தார்…

“அதுதானே… உங்களைப் பார்த்த உடனேயே அம்மாவுக்கு தானா சந்தோஷம் வந்திடுமே… இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ… ஆனா எனக்கு நல்லாவே தெரியும்….” என சொல்லிக்கொண்டே பவித்ரா வந்தாள்…

‘வா பவித்ரா… நல்லா இருக்குறீயா?... எப்படி போகுது உன் படிப்பு எல்லாம்?...”  -மகத்…

“நான் நல்லா இருக்கேன் சார்… என் படிப்பும் ரொம்ப நல்லா போகுது…”

“குட்…” என்றவனின் விழிகள் அங்கும் இங்கும் யாரையோத் தேட, பவித்ரா மட்டும் அல்ல காவேரியும் அதனை இனம் கண்டு கொண்டார்…

“சார்… நீங்க தேடுற ஆள் பார்க்க இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணித்தான் ஆகணும்… மேடம் இப்போ ஹோம்வொர்க் செஞ்சிட்டு இருக்குறாங்க…” – பவித்ரா…

“ஓ… சரி… பவித்ரா… நான் வந்ததை சொல்ல வேண்டாம்… நானே அவளைத்தேடி வரேன் இன்னும் கொஞ்ச நேரத்துல…”

“டீல் சார்…” –பவித்ரா…

“பவித்ரா… பழகுற வரைக்கும் உன்னை அந்த பொண்ணு கூட இருக்க சொன்னேன்ல… நீ என்னடான்னா இங்க வந்து நின்னுட்டிருக்கிற?....” – காவேரி

“அச்சோ… சார் வந்திருக்கார்ன்னு தெரிஞ்சதும் அவங்களை விட்டுட்டு வந்துட்டேன்மா சாரிம்மா… நான் போய் ருணதி கூட இருக்குறேன்ம்மா….” என காவேரியிடம் சொன்னவள், “வரேன் சார்…” என மகத்திடமும் சொல்லிக்கொண்டு நகர்ந்ததும்,

“ராஜா… நான் சொன்னேன்ல…. ருணதி…. புதுசா வேலைக்கு….” என சொல்லிக்கொண்டே போன காவேரியை தடுத்தவன்,

“இப்போ நான் அந்த பொண்ணு பத்தின டீடெயில்ஸ் பார்க்கணும்… அப்படித்தானே மதர்?...” என்று அவன் கேட்க

அவரும் சிரித்துக்கொண்டே “ஆம்…” என தலை அசைத்தார்…

“இது தான் அந்த பொண்ணோட பயோடேட்டா ராஜா… நீ பார்த்துட்டிரு… நான் இப்போ வந்திடுறேன்….” என அங்கிருந்து அகல முற்பட்டவரை தடுத்தவன்,

“ஒரு நிமிஷம் மதர்….” என்றபடி அவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு வெளியே சென்றவன், சற்று நிமிடத்தில் இரண்டு பேரை அழைத்து வந்தான்…

‘மதர்… நான் அன்னைக்கு போனில் சொன்னேன்ல… அவங்க இவங்க தான்… இவர் சரவணப்பெருமாள், இவங்க அவரோட மனைவி அலமேலு ஆச்சி…” என காவேரியிடம் அறிமுகம் செய்து வைத்தவன்,

“இனி இவங்க எப்பவும் நம்மக்கூட தான் இருப்பாங்க… எல்லார்கிட்டயும் சொல்லிடுங்க மதர்…” என சொல்லியவனிடம்,

“கண்டிப்பா ராஜா,….” என்றவர், “நீங்க வாங்க ஐயா, வாங்கம்மா…. போகலாம்….” என அவர்களை அழைத்துச்சென்றார் காவேரி…

ற்று நேரம் ஜன்னலின் வழியே குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கைப் பார்த்தான்… பின்னர், மதர் சொன்னது நினைவு வர, டேபிளின் மத்தியில் இருந்த அந்த பயோடேட்டாவை நோக்கி அவன் கால்கள் சென்றது…

கைநீட்டி அதை எடுத்தவனின் கண்கள் அதிலிருந்த பெயரைப் பார்த்ததும் அழகாக விரிந்தது…

ஏனோ அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவன், பின் என்ன நினைத்தானோ, இது சரியில்லை என்றவாறு தலையை அசைத்து, அவள் பெயரின் கீழே, அவள் குறிப்பிட்டிருந்த மற்ற தகவல்கள் எதையும் படிக்காமல் அப்படியே டேபிளின் மேல் வைத்துவிட்டான்…

சேரில் அமர்ந்தவன், தனது இருகைகளையும் தலைக்கு பின்னே சென்று கோர்த்து கண் மூடிட, அவள் பெயர் மட்டும் அவன் நினைவில் நடனமாடியது…

“உங்க நேம் ரொம்ப நல்லா இருக்கு…. வித்தியாசமா… அழகா… ஹ்ம்ம்… மொத்தத்துல பிடிச்சிருக்கு….”

“ஹ்ம்ம்… ஆனா உன் பெயரை விட என் பெயர் நல்லா இருக்குதுன்னு எனக்கு தோணலை….”

“அதுசரி உங்களுக்கு எப்படி தோணும்…. என் பேருதான் ஏதோ அதிசயம்னு நினைச்சிட்டிருக்கீங்க… ஒரு நாள் இல்ல ஒருநாள் என் பேர் உள்ள ஒரு பொண்ணை நீங்க கண்டிப்பா பார்க்குற நிலைமை வர தான் போகுது….”

“கண்டிப்பா அது மட்டும் நடக்காது….” என அழுத்தி சொன்னவனிடத்தில்

“ஹாஹா…. ஊர் உலகத்துல என் பேரு வேறு யாருக்கும் இருந்திடாதா என்ன?...” என அவள் சொல்லி சிரித்த நாளில் அவன் அவளையே தான் பார்த்திருந்தான்…

“நிச்சயம் உன் பெயர் உள்ள ஒருத்தி என் வாழ்வில் நான் சந்தித்தேன் என்றால் அது நீ மட்டும் தான்….” என அந்நேரம் அவளுக்கு சட்டென்று பதிலளித்துவிட்டு அவன் சென்றுவிட அவள் அவன் சென்ற திசையேயேப் பார்த்துக்கொண்டிருந்தாள்….

டந்த கால நினைவு கண்களுக்குள் உருண்டோட, அவன் அதில் சிக்கி வெளிவந்த நேரம், அன்று அவள் சொன்ன வார்த்தைகளே அவனது காதுகளில் ஒலித்தது…

“ஊர் உலகத்துல என் பேரு வேறு யாருக்குமே இருந்திடாதா என்ன?...”

அன்று அவள் கேட்ட கேள்வியே அவனுள் திரும்ப திரும்ப ஒலிக்க, இன்று அவளின் பெயரில் உள்ள ஒருத்தியின் பெயர் அவன் கண்களில் தென்பட, நிச்சயம் தான் பார்ப்பது உண்மை இல்லை என்ற முடிவுக்கு வந்தான் அவன்…

அந்த பெயர் அவன் மனதினுள் இருக்கும் அவளுக்கு மட்டுமே உரியது… ஆம்… அவளுக்கு மட்டுமே… வேறு யாருக்கும் இருந்திடாது… இருக்காது… என தனக்கே புத்தி சொல்வதை போல் சொல்லிக்கொண்டவனுக்கு ஏனோ அந்நேரம் தோன்றிடவில்லை, ருணதி என்ற பெயரின் கீழ் உள்ள விவரங்களை வாசிக்க வேண்டும் என…

அதன் பின் அவன் மனதில் உள்ளவளின் நினைவே அதிகம் ஆக்கிரமிக்க, இதற்கு மேலும் இப்படியே இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றிவிட, அதற்கு மேலும் தாமதிக்காமல் தனது மகள் நதியைத் தேடிச்சென்றான்…

தனது மகளை கண்களில் நிறைத்ததும், அவன் மனது லேசானது போல் இருந்தது… அதுவரை அவன் கொண்டிருந்த குழப்பங்கள், சஞ்சலங்கள் அனைத்தும் அகன்றது போல் இருக்க மகளை வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டான்…

நதியைத் தூக்கி சுற்றியவனின் பார்வையில் அவன் மனதில் நீங்காமல் இருந்தவளின் முகம் தென்பட, தன்னையே மறந்தான் அவன் சில நிமிடங்கள்…

“இதுதான் நான் சொன்ன ருணதி…” என காவேரி அவனிடம் அறிமுகப்படுத்தி வைத்த வேளையில், அவளைப் பார்த்துவிட்டோம் என்ற திருப்தியும், கூடவே,

“நிச்சயம் உன் பெயர் உள்ள ஒருத்தி என் வாழ்வில் நான் சந்தித்தேன் என்றால் அது நீ மட்டும் தான்….” என்று அவளிடத்தில் அவன் அன்று சொன்ன வார்த்தையும் மெய்யானதைக் கண்டு சற்றே நிம்மதியும் கொண்டான் அவன்…

ரவின் முழு அமைதி காரில் நிலவ, பழைய நினைவுகள் அவனுக்குள் மலை என எழ, அதை தடுக்கவே அவன் காரினில் பாட்டை ஒலிக்க விட்டான்…

ஆனால், விதியோ அவனுக்கு சதி செய்தது… எந்த பாட்டு அவன் வாழ்வில் மறக்க முடியாததாய் அமைந்ததோ, அந்த பாடல், அதுவும் அவன் நேசித்த பெண்ணுடன் கேட்க வேண்டி வந்தால் பாவம் அவன் தான் என்ன செய்வான்??...

மனம் அலைபாய, அடங்காமல் துடித்த மனதை கட்டுப்படுத்த அவன் மிக சிரமப்பட்டான்… அவன் கஷ்டத்தைப் பொறுக்காது சீக்கிரமே வீடு வந்துவிட, அவளை இறக்கிவிட்டவன் சற்றே நிம்மதி அடைந்தான்…

ஆனால் அந்த நிம்மதி, அவள் காலை வந்து கட்டிக்கொண்ட மழலையைப் பார்த்ததும் சுத்தமாய் கலைந்து போனது கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல்…

இது அவன் எதிர்பார்த்தது தான்… எனினும், அதைக் கண்கூடே கண்டவனுக்கு மனம் தாங்கவில்லை…

தலை சாய்த்து ஸ்டியரிங்கில் படுத்தவனுக்கு எழும் எண்ணமே இல்லை கொஞ்சமும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.