(Reading time: 13 - 26 minutes)

22. வாராயோ வெண்ணிலவே - சகி

"லகின் உயிருள்ள அதிசயத்தை உன் கண்களாய் காண்கின்றேன்!இனிமையான தேன்சுவையை உன் இதழ்களில் சுவைக்கிறேன்!

கொஞ்சும் தமிழின் மொழிகளை வார்த்தைகளாய் உதிர்க்கின்றாய்!

அன்பே என்னுள் நீ வந்தாய்!

Vaarayo vennilave

ஆருயிர் வருடிடும் வெண்மதியாய்!!

இரவிலும் வெளிச்சமாய்

பகலிலும் பரிச்சியமாய்

எனக்குள்ளே உருகிடும் ஓர் உயிராய் நீயுமே!!

வாராயோ வெண்ணிலவே!!!"

எதற்காக இக்கவிதயை புனைந்தேன்??

இதுவே இக்கதையின் இறுதி அத்தியாயம்!!

வனால் ஏற்க இயலவில்லை.

தான் விரும்பிய ஒன்று தன்னிடமிருந்து அதிகாரப்பூர்வமாய் பறிக்கப்பட்டதை நிச்சயம் ஏற்க முடியாமல் தவித்தான் சங்கர்!

என்ன அகங்காரம் அவளுக்கு??

ஆணவத்தின் முழு உருவம் அவள்!!

பழி உணர்வு அறிவினை மழுங்கடித்து சாகடித்தது!

உண்மையில் அவன் நிலாவை விரும்பினான்.

அவன் காதலை அவனால் வெளிப்படுத்த இயலவில்லை.அவன் தலைக்கனம் தடுத்தது.

அவன் காதலை அதிகாரமாய் வெளிப்படுத்தினான்.

காதலை வெளிப்படுத்தும் உக்தி அவன் அறியவில்லை.

இன்று ரஞ்சித்தின் வார்த்தைகளுக்கு அவன்   அஞ்சவில்லை.

அவன் கண் முன்னால் தன் காதலுக்கு உரியவள் வேறு ஒருவன் கரம் பற்றியது அவனை கொன்றது!!

இறுதிவரை தன் காதலுக்கு அவள் மதிப்பு தரவில்லை என்பது அவனை வதம் செய்தது!!

பழி வாங்கவா நிலாவை அவன் அழைத்து வந்தான்?

அங்கிருந்த தினங்களில் எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருந்தனவே அதற்கு!!ஆனால்,அவன் அவளை நெருங்கவும் யோசிக்கவில்லை.

அவள் சிறு குழந்தையென உறங்கிய வேளையில் அவள் அறை கதவுவரை மட்டும் துணிந்து வந்து அவள் உறங்கிய அழகை ரசித்திருக்கிறான்.

அவள் துவேஷிக்கும் வேளையில் அவளின் கடும் வாரத்தைகள் அவன் மேலிருந்த அக்கறையாக ஒலித்தது அவனுக்கு!!

அவனும் மனிதன் தானே!!

மனித வாழ்வின் மிக சாதாரண உணர்வுகள் அவனுக்குள்ளும் இருக்கும் அல்லவா!

சிறுவயது முதல் அவனின் வளர்ப்பு தவறாகி போனதால் அவனது உணர்வுகள் அடக்கப்பட்டுள்ளன.

அவனோடு ஒரு துணை இருந்திருந்தால் அவன் மனம் ராட்சஷ குணம் கொண்டிருக்காது!!

அவனுக்கென இப்போது ஒருவரும் இல்லை.

அன்று நிலாவின் அனுமதி இல்லாமல் ரஞ்சித் அவளை கட்டாயமாக அழைத்து சென்றிருந்தால் நிச்சயம் அவன் நடவடிக்கை வேறாகி இருக்கும்!

ஆனால்,நிகழ்ந்ததோ வேறு!!

அவனது ஸ்பரிசத்தில் அவள் பாதுகாப்பை அல்லவா உணர்ந்தாள்.

இப்போதும் அவளை கட்டாயப்படுத்தலாம் என்றது ஒரு பக்கம்.விருப்பமில்லாதவாழ்வை அவளுக்கு தர போகிறாயா?என்றது ஒரு பக்கம்.

அவளுக்காக எண்ணற்ற குற்றங்களை செய்தான்.கொலையாளி ஆனான்!!

அவளே போய்விட்டாள்!!

இனி எல்லாம் எதற்கு??

"நீ என்ன அவ்வளவு கோழையா?ஒரு பெண்ணிடம் அச்சம் கொள்கிறாயா?"

"இல்லை...நான் என் காதல் மேல் அச்சம் கொள்கிறேன்!"-எழுந்த கொடிய எண்ணங்களை அறவே கடிந்தான்.

அவனிடமிருந்து பெருமூச்சு வந்தது!!

இப்போது பல ஆண்டுகளின் தவத்தின் பயன் அவன் மனதை மாற்றியது ஒரு காதல்!!!

தன் கைப்பேசியை எடுத்தான்!!

"போலீஸ் ஸ்டேஷன்?"-

சற்றே சிந்தியுங்கள் பரநத இந்த உலகம் நம்மில் யாருக்கு சொந்தம்??

எதை நாம் கொண்டு வந்தோம்!

இதை கொண்டு செல்வேன் என்று அடம் பிடிக்க??

எதன் அடிப்படையில் இது எனது!இது உனது!என்று பிரிக்க முற்பட்டோம்!

மலைகளும்,நதிகளும்,வனங்களும் நாடுகளை பிரிக்கின்றன...

அதுதான் மெய்யான பிரிவினையா?

இல்லாத ஒன்றுக்கு இருக்கிறது என்று பொய் கூறி....

ஏந்து உன் ஆயுதம் தன்னை...என்று முழங்குகிறோம்!

என்ன கிடைக்க போகிறது இதனால்??

வீரத்தினால் நாம் பெற்ற ஆஸ்தியும் நமக்கு நிலைக்கவா போகிறது??

பின் ஏன் போர்கள்??ஆயுதங்கள்?சட்டங்கள்?

மனிதனின் இச்சைகளை பூர்த்தி செய்ய இயற்கை படைக்கப்பட்டுள்ளது!

இயற்கையாக நம்முள் தோன்றும் உணர்வுகளே காலத்தை வெல்லும் ஆயுதமாகும்!காதல் காதலையே வெல்லும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும்!!

காதலித்து பாருங்கள்...

உங்களை சுற்றி பரவிய காற்றையும் காதலியுங்கள்...

ஒவ்வொரு நொடியையும் காதலியுங்கள்...

அதனால் நிகழ்ந்ததை என்னிடம் கூறுங்கள்...

ன்றாக உறங்கி கொண்டிருந்தாள் வெண்ணிலா.

அவளை எழுப்புவதற்காக மெல்லிய புல்லாங்குழல் இசையோடு ரஞ்சித்தின் அழைப்பு எடுத்துவந்தது அவள் கைப்பேசி.

"ஹலோ!"

"அம்மூ!உடனே நியூஸ் பாரு!"

"என்னாச்சு ரஞ்சு?"

"பாரு!"-நிலா பரபரப்பாக எழுந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள்.

"முக்கிய செய்திகள்!பிரபல தொழிலதிபர் பிரபாகரனின் மரணம் இயற்கையானது அல்ல!தானே அவரை கொன்றதாக காவல் துறையினரிடம் சரண் அடைந்தார் அவர் தங்கை மகன்!"-இதனை கேட்டவளின் சர்வ நாடியும் ஒடுங்கியது.

"அம்மூ!"

"................."

"ஏ...செல்லம்!"-அவள் கண்கள் கண்ணீரால் நனைந்திருந்தன.

மனம் சொல்ல இயலாத அளவிற்கு துயரத்தில் மூழ்கியது.

சங்கரின் முகம் காணவே அருவருப்பாய் இருந்தது.

ஏதும் கூறாமல் இணைப்பை துண்டித்தாள்.

"ஹலோ!"-அவளின் நிலையை உணர்த்தியது அணைக்கப்பட்ட அந்த அழைப்பு!

ஆனாலும்,அவன் மனம் ஏதோ சலனப்பட்டது.

ன் காரை எடுத்து கொண்டு புறப்பட்டான் சங்கரை காண....

சிறையில் கண்கள் மூடியப்படி அமர்ந்திருந்தான் சங்கர்!

"உங்களை பார்க்க வந்திருக்காங்க!"-சமூகத்தில் அவன் மதிப்பு இன்னும் குறையாததால் மரியாதையான அழைப்பு!!

"நான் யாரையும் பார்க்க மாட்டேன்!"

"பெயர் ரஞ்சித்னு சொல்ல சொன்னார்!"-சங்கர் அதிர்ச்சியானான்.

நீண்ட மௌனத்திற்கு பின்,எழுந்து வந்தான்.

அவனைக்கண்ட ரஞ்சித்தின் மனம் பேச முடியாமல் தவித்தது.அவன் கண்களில் இருந்த கர்வம் தொலைந்து இருந்தது.

"எதுக்கு வந்த?சந்தோஷப்படுறதுக்கா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.