(Reading time: 10 - 19 minutes)

10. சதி என்று சரணடைந்தேன் - சகி

"நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்!"-ரவிக்குமாரின் முடிவு தீக்ஷாவை அதிர வைத்தது.

"தீக்ஷாவை ஸ்ரீதருக்கே தரேன்!"-ஆர்த்தியின் மனம் குதூகலித்தது.

"சந்தோஷம்!என் செல்ல தீக்ஷா என் வீட்டுக்கே மருமகளா வர போறாளா?"-அவர் தீக்ஷாவின் கேசத்தை கோதினார்.தீக்ஷா கண்ணீரோடு தன் தந்தையை பார்க்க அவர் கண்கள் எங்கோ வெறித்தது.

Sathi endru saranadainthen

"என்னோட இந்த முடிவுல மாற்றம் இல்லை!"-உறுதியோடு கூறிவிட்டு நகர்ந்தார்.

"நான் முதல்ல கோவிலுக்கு போகணும்!எல்லாம் அந்த நாராயணன் ஆசி தான்!"-இருதயத்தில் எரிந்த நெருப்பில் எண்ணெயை ஊற்றினார் ஆர்த்தி!தீக்ஷா கற்சிலையாய் தன்னறைக்கு சென்றாள்.

"தீக்ஷா!"-சம்யுக்தாவின் குரல் உலுக்க கண்ணீரோடு நிமிர்ந்தாள் அவள்.

அவளருகே அன்போடு அமர்ந்தவள்...

"ஏன்மா!இப்படி பண்ண?"என்றாள்.

அதற்கு மேல் முடியவில்லை.

"அண்ணி!"என்று அவள் மேல் சாய்ந்து அழுது தீர்த்தாள் அவள்.

அவள் அழட்டும் என்று அமைதி காத்தவள் அழுது முடித்ததும் வினவ ஆரம்பித்தாள்.

"நீ ராகுலை மனசார விரும்புறேன்னு எனக்கு தெரியும்!அப்பறம் ஏன்??"

"ந...நா...நான் அவரை விரும்பலை!"அவள் மனம் ராகுலை பழிக்க விரும்பவில்லை.

"பொய் சொல்ல கத்துக்கிட்ட!ஆனா,என்கிட்ட சொல்ல வேண்டாம்!அது வீண் முயற்சி தான்!"

"அண்ணி!எல்லா நேரமும் நாம ஆசைப்பட்டது கிடைக்கும்னு எதிர்ப்பார்க்க முடியாது!"

"புத்திசாலித்தனமான பேச்சு!இந்த விஷயத்துக்கு ஏற்க முடியாது!"

"இப்போ உன் வாழ்க்கையே கேள்விக்குறி ஆக போகுதே!"

"ஆகட்டும்...ஒருவேளை இது தான் விதின்னா!நான் ஏத்துக்கிறேன்!இல்லைன்னா முடிவை என் நாராயணர் எடுக்கட்டும்!"-மறைமுகமாக அவள் கூறியது இந்த திருமணம் என் மரணத்திற்கு சமம் என்பதாகும்!!!

இதுவரையில் இப்படி ஒரு தனிமை ரவிக்குமாரை பீடித்ததில்லை.அவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்தப்படி தன் மனையாளின் புகைப்படத்தை கவனித்து கொண்டிருந்தார்.

"ஒருவேளை நான் இறந்துட்டா!நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?நம்ம குழந்தைங்களுக்காக..."-என்றோ அவள் கேட்டதும்,பதிலுக்கு இவர் அறைந்ததும் நினைவு வந்தது.

"நீ இருந்திருந்தா!நான் இப்படி கஷ்டப்பட அவசியமே இருக்காது!"-வாய்விட்டு பேசினார்.

"என் வளர்ப்பு தப்பாயிடுச்சிம்மா!என்னை மன்னிச்சிடு!நான் கொடுத்த வாக்கை என்னால காப்பாற்ற முடியலை!"

"தீக்ஷா வாழ்க்கையை இனி நீயே கவனிச்சிக்கோ!என்னால இனி அதை பண்ண முடியாது!"-அவர் மனம் கனத்தது.கனத்த மனதை தேற்றிக்கொண்டு தன் பணியை நிறைவேற்ற கமிஷ்னராய் கிளம்பினார்.

ழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ராகுல்....

மெல்லிய தென்றல் காற்று அவன் மென்மையான கேசத்தை கலைத்தது.இன்னும் அவன் மாறவில்லை.சிறு குழந்தை போலவே உறங்கி கொண்டிருந்தான்.

இதமான கனவு ஒன்று அவனை தன்பால் இழுத்தது!!

மீண்டும் அதே கனவு!

அதே குளக்கரை!

"சதி!"அதே பெயர்!!!

இன்று அவளது நிலா முகம் தெள்ள தெளிவாய் தெரிந்தது.

"சதி!"-அவன் அழைத்ததும் நிமிர்ந்தவளின் கண்களில் ஏக்கம்!!!

அதன் காரணம் விளங்காது நிற்கின்றான் இவன்.

அவள் பின்னால் நகர்கிறாள்!!

அவனைவிட்டு வெகு தொலைவாய்!!

"சதி!"-அந்த நந்தவனம் பாலை நிலமானது!மணல் மட்டும் மிஞ்சியது!

அவனால் அவளை தடுக்க இயலவில்லை.

அவள் காணாமல் போனாள்.

ராகுலின் மனம் துணுக்குற்றது.

சற்று தூரத்தில் மீண்டும் அவள் தென்பட்டாள்!

முகத்தில் கசந்த புன்னகையோடு!

"சதி!"-அவன் ஒற்றை கரம் நீட்டி அவளை அழைத்தான்.அவள் மீண்டும் மறைந்தாள்.

ராகுல் அந்த மணல் நிலத்தில் மண்டியிட்டான்.

"மீண்டும் வா சதி!நீயில்லாது எவ்வாறு வாழ்வேன்?உன்னோடு வாழவே விரும்பினேன்.என்னை நீங்காதே!"

"திரும்பி வா சதி!"-அவன் கண்கள் கரைந்தன.

"சதி!"-என்று இறுதியாய் கத்த,உண்மையில் உறக்கம் கலைந்து சதி என்று பதறியப்படி எழுந்தான் ராகுல்!!

முகமெல்லாம் வியர்வைத்துளிகள்!

கனவை கனவாய் அறிந்தவனிடமிருந்து பெருமூச்சுகள்!!

மணி காலை மணி நான்கு!!!

அருகிலிருந்த தண்ணீரை எடுத்து குடித்தான்.

மனம் சற்று குளிர்ந்தது!

அதற்கு மேல் உறக்கம் வருமா?வரவில்லை....

"என்ன நடக்கிறது இங்கே?ஏன் நான் இப்படி மாறினேன்?"-குழப்பத்தோடு எழுந்து பலகனியில் நின்றான்.

வான்நிலவு அவனுக்காய் துணை நின்றது.

ராகுலின் கண்கள் அதனை விலகவில்லை...

ஞாபகம் இருக்கிறது...

ன்று ஒரு நாள்....

"சதி!"

"ம்"

"உனக்கு நிலாவை பிடிக்குமா?"

"ரொம்ப"

"ஏன் பிடிக்கும்?"

"ம்...பிடிக்கும்!"

"பிடிக்கறதுக்கு ஒரு காரணம் இருக்கணும்ல?"

"பிடிக்கறதுக்கு ஒரே காரணம் தான் இருக்கும்!அது நமக்கு பிடிக்கும்.அது மடடும் தான் காரணம்!"

"வாயாடி!எந்த கேள்வி கேட்டாளும் பதில் வைத்திருக்க!அதுவும் வித்தியாசமா!"-மிக சிறு வயதில் இது போன்ற ரசனைகளை எளிமையாக கூறியவள்.

"பிடிக்கறதுக்கு காரணம் பிடிக்கறதாம்!"-நகைத்துக்கொண்டான் ராகுல்!

ஒரு நொடி மனம் அவன் காதலை தூண்டிவிட்டது!!

இவன் விடுவானா!!

அப்படியே மீண்டும் பிடித்து புதைத்துவிட்டான்.

இவன் இப்படி...அவள் எப்படி?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.