(Reading time: 5 - 10 minutes)

05. கிருஷ்ண சகி - மீரா ராம்

பார்வைகள் பேசும் மொழி அறிய காதலும் கூட காதலர்களானால் தான் முடியுமோ என்னவோ….

ருணதி-மகத் இருவரும் மௌனமாக ஒருவரை ஒருவர் சற்று நேரம் பார்த்துக்கொண்டு பார்வையை விலக்கி கொள்ளும்போது,

“ஏன், இங்கேயே நின்னுட்டிருக்கீங்க?... வாங்க உள்ளே போகலாம்…” என பவித்ரா, கோகிலவாணியைப் பார்த்துக்கூற,

krishna saki

காவேரியும், “வாங்கம்மா… உள்ளே போகலாம்…” என சொல்ல, மூவரும் சென்றனர்…

ருணதியும் மகத்-ம் தனித்து விடப்பட, விழிகள் சந்தித்துக்கொள்ளவா வேண்டாமா என்று போராடிக்கொண்டிருக்க, மகத் அதனை கலைக்க முடிவெடுத்தான்…

“எப்படி இருக்கீங்க?... உங்க கணவர் எப்படி இருக்குறார்?...” என மகத் கேட்டதும்,

அவன் தான் பேசினானா?... என்ற ஆச்சரியத்துடன் நின்றிருந்தவள், அவன் கேட்டதற்கு பதிலை கோர்த்துக்கொண்டிருந்தாள்…

“ம்ம்… நல்லா இருக்கேன்… அவரும் நல்லா இருக்குறார்… நீங்க எப்படி இருக்கீங்க?... உங்க ஒய்ஃப் எப்படி இருக்குறாங்க…?... அவங்க எங்க?... அவங்களை கூட்டிட்டு வரலையா?...”

அவள் கேட்டதும், சட்டென்று, “ஹ்ம்ம்… நல்லா இருக்குறா… அவளுக்கென்ன…. பிசினெஸ் விஷயமா வெளியூர் போயிருக்குறா… அதான் இங்க வரலை…” என்றான் அவனும் புன்னகையோடு…

“ஓ… சரி… வந்ததும் ஒருநாள் வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க… மறந்துடாதீங்க….”

“கண்டிப்பா…” என அவனும் சொல்லிவிட்டு நிற்க,

அவள் சிரித்தாள்…. பதிலுக்கு அவனும் புன்னகைக்க, அவளும் புன்னகைத்தாள்…

மாறி மாறி இருவரும் புன்னகைத்துக்கொண்டே இருக்க, இருவருக்கும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை…

அந்நேரம்,

“சரி… பார்க்கலாம்….” என இருவரும் ஒருங்கே சொல்ல, இருவரின் உதட்டிலும் சட்டென்று உதயமானது புன்னகை அழகாய்…

தலை அசைத்துக்கொண்டு இருவரும் ஒருவரிடத்தில் ஒருவர் விடைபெற்றுக்கொள்ள, நடந்து கொண்டிருந்த மகத் அப்படியே கால் போன போக்கில் சென்றான்…

“துருவ்…. உன் பேரா?... ஹ்ம்ம்.. அது என் அப்பா பேரு….” என கொஞ்சம் பெருமையோடு நதிகா பேசிக்கொண்டிருந்தாள் துருவுடன்…

“நிஜமாவா?...” என தன் சின்னக்கண்களை உருட்டி அவளிடம் வினவிக்கொண்டிருந்தான் துருவ்…

“ஹ்ம்ம்… நிஜமாதான் துருவ்…. எனக்கு என் அப்பாவை ரொம்ப பிடிக்கும்…” -நதி

“எனக்கு என் அம்மாவ தான் ரொம்ப பிடிக்கும்…” -துருவ்

“ஓ… நீ அம்மா செல்லமா?...” - நதி

“ஆமா… நான் அம்மா செல்லம்… அம்மா என் செல்லம்….” என தன் இருகைதட்டி துருவ் சொல்ல, அவனை தன் கண்கள் உருட்டி பார்த்தாள் நதிகா…

“ஏன் இப்படி பார்க்குற?...” – துருவ்

“இல்ல நான் என் அப்பாகிட்ட அடிக்கடி இப்படித்தான் சொல்லுவேன்…. நீயும் அப்படியே சொல்லுறீயா அதான்…” – நதி

“ஓ… அப்போ நீயும் என்ன மாதிரியா?....” –துருவ்

“ஹ்ம்ம்… ஆமா துருவ்…. நானும் நீயும் ஒன்னுபோல இருக்குறோம்…” என நதிகா சிரித்துக்கொண்டே சொல்ல, துருவும் சிரித்தான்…

“என்ன குட்டீஸ்…. ஒரே சிரிப்பு சத்தமா இருக்கு இங்க… என்ன நடக்குது?... ஹ்ம்ம்…” என பவித்ரா அங்கே வர,

“அத்தை… துருவ்… என்னை மாதிரியே இருக்குறான் அத்தை…” என அவளின் கையைப்பிடித்துக்கொண்டு சொன்னாள் நதிகா…

“ஓஹோ… உன்னை மாதிரியே இருக்குறானா துருவ் குட்டி…” என்றவள், அவனிடம், “துருவ் குட்டி நீ நதிகா மாதிரியா?... அப்படியா?... நிஜமாவா?...” என கேட்க

அவன் “ஆம்…” என்றான் தலை அசைத்து…

“பார்த்தீயா?... துருவ் கூட ஆமா தான் சொல்லுறான்… ஜாலி… ஜாலி…” என தன் இரு கைதட்டி நதிகா சிரிக்க,

“ஹே நீ கூட என்னை மாதிரியே கைதட்டி சிரிக்குற?...” என்ற துருவ் முகமெங்கும் ஒளிர,

“ஆமா… துருவ்… நதிகா பாரு உன்னை துருவ்-னு பேர் சொல்லி கூப்பிடுறால்ல, நீ ஏன் அவளை பேர் சொல்லி கூப்பிடமாட்டிக்குற?... ஹ்ம்ம்…” என பவித்ரா கேட்க

“அது… என் அம்மாவ பாட்டி நதி தான் சொல்லுவாங்க…” என்றதும்,

“ஓ… அம்மா பேர சொல்லக்கூடாதா?... அவ்வளவு நல்ல பிள்ளையா நீ?...” என்ற பவித்ரா, அவனின் கன்னம் தொட்டு,

“அப்போ நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?...” எனக் கேட்க

“சொல்லு அத்தை… என்ன ஐடியா?....” – நதிகா

“இரு நதி… நீ கேட்டா சொல்ல மாட்டேன்… துருவ் குட்டி கேட்டா தான் சொல்லுவேன்….” என்றாள் அவளும் சற்றே முறுக்கிக்கொண்டு…

“துருவ் நீ கேளு… அப்பதான் அத்தை சொல்லுவா… நீ கேளு துருவ்….” – நதிகா

“சரி… கேட்குறேன்… சொல்லுங்க ஆன்ட்டி…” -துருவ்

“ஹ்ம்ம்… நான் சொல்லமாட்டேன்… அதென்ன நீ நான் எதும் சொன்னா கூட, நீ என் பேச்சை கேட்காம, நதிகா சொன்னாதான் கேட்குற?...” –பவித்ரா

“ஹைய்யோ… அத்தை… துருவ் பாவம்… நீ ஏன் இப்படி பண்ணுற?... பாரு துருவ் முகமே டல்லாயிடுச்சு…” என வாடிப்போன துருவின் முகத்தை கை காட்டி நதிகா சொல்ல

“அச்சோ… துருவ் குட்டி… கோபமா என் மேல?... சாரி…” என பவித்ரா கெஞ்சுதலாக சொல்ல

“சாரி எல்லாம் வேண்டாம் ஆன்ட்டி… நான் கோபமா இல்ல… நீங்க சொல்லுங்க… என்ன ஐடியா?...” – துருவ்

“அதுவா… நீ நதிகாவ நதி சொல்ல வேண்டாம்… பட் வேற பேரு சொல்லி கூப்பிடலாமே… என்ன கூப்பிடுறீயா?....” என பவித்ரா கேட்க துருவ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்…

அவன் மௌனமாக இருப்பதை பார்த்த நதிகா, பவித்ராவிடம், “அத்தை… நீ என்ன லூசா?... என்ன பேருன்னு சொன்னா தான அவன் சரின்னு சொல்லி கூப்பிடுவான்… அதை விட்டுட்டு மொட்டையா சொன்னா அவனுக்கு எப்படி தெரியும்?...” என நதிகா துருவிற்கு சப்போர்ட்டாக பேச, பவித்ரா அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள்…

“அத்தை… என்ன எதுக்கு இப்படி பார்க்குற?...” என அவள் கேட்க, “ஒன்றுமில்லை…” என தலை அசைத்தவள்,

துருவிடம், “துருவ் குட்டி, உனக்கு நதிகாவை பிடிச்சிருக்கா?...” எனக் கேட்க

அவன் சட்டென்று “பிடிச்சிருக்கே….” என்றான்…

“சரி…” என்றவள், “எவ்வளவு பிடிக்கும்?...” எனக் கேட்க,

“அதெல்லாம் தெரியலை… ஆனா பிடிக்கும்…” என அவன் எதார்த்தமாக சொல்ல,

“அத்தை… நீ எதுக்கு துருவ் கிட்ட இப்போ இப்படி கேள்வியா கேட்குற?...” – நதிகா

“காரணமாத்தான் நதி…” என்றவள், “துருவ்… நதிகாவ பிடிக்கும்தான… அப்போ நீ அக்கா சொல்லலாம் தான?... ஹ்ம்ம்ம்…. அவளுக்கும் உன்ன மாதிரி குட்டி தம்பி கிடைப்பான்ல… என்ன உனக்கு ஓகேயா…?...” என சற்று தயக்கத்துடன் பவித்ரா கேட்க

“தேங்க்ஸ் ஆன்ட்டி….” என்றவன், பவித்ரா கன்னத்தில் சட்டென்று முத்தமிட்டு சிரித்தான்…

“ஹேய்… குட்டி… நீ….” என சந்தோஷத்தில் மிதந்தவளாக பவித்ரா சொல்ல,

“துருவ்….” என நதிகா நீட்டிய கையைப் பிடித்துக்கொண்ட துருவ், தன் இன்னொரு கை கொண்டு பவித்ராவின் கையைப் பிடித்தான்……

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.