(Reading time: 12 - 24 minutes)

மூங்கில் குழலானதே – 08 - புவனேஸ்வரி

காலம்..! மனிதனை,ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்ம் உலகத்தையே தனது ஆளுமையில் வைத்திருக்கும் ஷக்தி தான் காலம்! யாரின் கட்டுப்பாட்டிற்கும்  அடங்கி நிற்கும் குணம் காலத்திற்கு இல்லை .. இன்பமான சூழ்நிலைகளில் காலம் விருந்தாகவும், துன்பமான தருணங்களில் காலம் மருந்தாகவும் திகழ்கிறது..

கால இடைவெளி தான்,மனிதனை சிந்திக்க தூண்டுகிறது ..காலம் தரும் மௌனமும் தனிமையும்தான் அன்பின் ஆழத்தை நமக்கு உணர்த்துகிறது.. அது என்னவோ அனுதினமும் அருகில் இருந்து அன்பு காட்ட ஒருவர்  கிடைத்து விட்டால் மனமானது உரிமை  என்ற பெயரில் அவர்களின்மீது அலட்சியத்தை  உருவாக்கி விடுகிறது.. இதுவே அன்பினை காட்டும் அந்த நபர் கொஞ்ச நாள் விலகி போய்விட்டால், பயமும் விரக்தியும் கவலையும் நம்மை சூழ்ந்து கொள்கிறது ..

ஆக,அன்பின் ஆணவத்தில் ஆடும் மனிதனை கொஞ்சம் கட்டி வைக்கவும் காலதிற்கு தான் தெரிகிறதுஇந்த உண்மையை  உணர்ந்தவர்கள், தங்களது அன்பிற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காலத்தின் மீது  பாரத்தை போட்டு விட்டு தள்ளி நிற்கின்றனர்..ஆனால் அவர்களது மௌனமான விளகல் சரியாய் புரிந்து கொள்ள படுகிறதா ? அப்படி தவராக  புரிந்து கொள்ளப்பட்டால் அந்த அன்பின் நிலை என்ன ? சிந்திக்கிறேன் சகிதீபன் !

Moongil kuzhalanathe

(ஹாய் ப்ரண்ட்ஸ்நம்ம காலதேவனுக்கு டிமிக்கி கொடுத்து காலச்சக்கரத்தை டொய்ங்ன்னு சுழற்றி மூன்று மாதங்களுக்கு பின்னர் என்ன ஆச்சுன்னு சொல்லலாம்னு நினைச்சேன்ஆனா அவர் எனக்கு மேல உஷார் ..அதனால்  அவரிடம் கையும் களவுமா மாட்டிகிட்டேன்ஆக, இதோ அவர்கிட்ட செம்ம டோஸ் வாங்கின பிறகு அடுத்து நடந்த சம்பவங்களை உங்க கிட்ட சொல்லுறேன்)

மிதமான வெப்பத்தை தரும் சூரியன், இதமான குளிரை அள்ளி தரும் குளிர் காற்று ..பச்சை பசேலென்ற இயற்கை அழகியை அள்ளி வாரி அணைத்து கொண்டு அதனை இம்மியளவும்  பிரியாத  சாலைகள்… அவர்களது சேர்க்கையை கண்டு நாணி தலைகுனியும் பனிமூட்டம் … ஆம், நமது கற்பனையில் விரிந்து நிற்கும் இந்த சொர்க்கம் ஊட்டியேதான் ..!

“ சாம்பவி பாட்டி யாருன்னு கேட்டா ஊட்டியே சொல்லும் ! “என்று பெருமை பாட முடியாவிட்டாலும், இதோ அவரது அழகான வீடு அமைதிருக்கும் அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்று பாட்டியின் பேரை கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லும்.. அந்த அளவிற்கு பாட்டி அங்கு பிரபலம்..

விஷ்வானிகா அங்கு வந்து சரியாய் ஒரு வாரம் ஆகிவிட்டது .. பாட்டியின் பேத்தி என்ற அறிமுகம் தந்த உரிமையில் கண்ணில் தென்படுபவர்கள்  எல்லாருமே அவளுடன் சினேகமாய் பேசினர்… விஷ்வாவும் பாட்டியின் கவனிப்பிலும் போதனையிலும் கொஞ்சம் மாறித்தான் இருந்தாள்… பாட்டி போட்டு தந்த காஃபியை குடித்து கொண்டே சாலையோரம் நடக்க தொடங்கினாள் அவள்..

“அடடே, இந்த பாட்டியை விட்டுட்டு இயற்கையை ரசிக்கலாம்னு காலையிலேயே வந்துட்டியா கண்ணம்மா” என்று கேட்டபடி அவளொடு இணைந்து நடந்தார் சாம்பவி பாட்டி .. முதுமை தீண்டாத கலையான முகம் ,சற்றெ கூன் வளைந்த தோற்றம், ஆனால் நேர்கொண்ட பார்வை என இருந்தார் சாம்பவி பாட்டி ..

“ ஹா ஹா உங்களை விட்டுட்டு எப்படி போவேன் பாட்டிம்மா… நேற்றே நீங்க எதிர்வீட்டு முத்து அண்ணாவுக்கு பண உதவி செய்யனும்னு சொல்லி இருந்திங்களே ..அதான்,  அந்த மாதிரியான நேரத்தில் நான் இருந்தா அவர் சங்கோஜப்படுவாரேன்னு நடந்து வந்துத்துட்டேன்” என்று சிரித்தவளை ரசித்து பார்த்தார் சாம்பவி பாட்டி ..

என்னதான் பாட்டி ஊட்டியில் இருந்தாலுமே,சென்னையில்  அவர்களது வீட்டில் நடக்கும் அத்தனையும் அவருக்கு தெரிய வந்துவிடும்..அதற்கு பெரிய காரணம் நம்ம சாரதா அம்மாதான்.. அவர் கூறியதை வைத்து பார்த்தால்,விஷ்வா பெண்ணியம் பேசுபவள், சிரிப்பதற்கும் பேசுவதற்கும் கணக்கு பார்ப்பவள், எதையும் வெளியில் சொல்லாமல் மறைத்து கொள்பவள்..(சுருக்கமா சொல்லனும்னா அவ ஒரு லேடி அபிநந்தன்!)… இங்கு வந்த முதல் நாள் கூட அப்படித்தான் ஒதுங்கியே பழகினாள் அவள்…விடுவாறா பாட்டி ?

“ ஏம்மா, அந்த செல்ஃபோனை பார்த்துகிட்டு உட்கார தான் இங்க வந்தியா ?வா எனக்கு பூமாலை கட்டி கொடு,  காய்கறி வாங்கிட்டு வா,  தோட்டத்து செடிக்கெல்லாம் தண்ணீர் ஊற்று” என ஏதாவது வேலையை ஏவி கொண்டே இருந்தார்…எதைப்பற்றியும் சிந்திக்க நேரம் இல்லாமல் பாட்டியுடன் ஓடி ஆடினாள் விஷ்வா..

அதோடு நிற்காமல், “நீ என்ன விருந்தாளியா ?உனக்கு சமைச்சு போடனுமா,  நான் ?பாட்டிக்காக நீ சமைச்சு தர மாட்டியா ?” என்று கேட்டு அவளை சமையல்கட்டுக்கும் இழுத்து வந்தார் பாட்டி.. ஏதாவது புத்தகத்தை அவள் கையில் தினித்து விட்டு  கையில் அகப்பையுடன் நின்று கொண்ட பாட்டி “சரி அடுத்து என்ன போடனும்? வெங்காயம் அதிகமா கொஞ்சமா? மஞ்சள் போடனுமா ?” இப்படி ஒன்றுமே தெரியாதவர் போல அவளை புத்தகத்தில் பார்த்து சொல்ல வைத்தார்… விஷ்வாவே சலித்து கொண்டு “ ஏன் பாட்டிமா ,இவ்வளவு நாள் சமைக்க தெரியாதவராய் இருந்த மாதிரி இப்படி அழிச்சாட்டியம் பண்ணுறிங்க ?” என்று கேட்டு வைத்தாள் ..பாட்டியும் அசராமல் “அம்மாடி , இந்த சமையல் குறிப்பு எல்லாம் எனக்காக இல்லை … பிற்காலத்தில் உனக்கிது தேவைப்படும்ல” என்றார்…

பிற்காலம் என்று பாட்டி திருமணத்தை தான் குறிப்பிடுகிறார் என்ற அனுமானத்தில் கோபத்தில் முகம் சிவந்தாள் விஷ்வா..அதை கவனித்த பாட்டி “ கண்ணம்மா, சமையல் கத்துக்கோ, இல்லன்னா போற இடத்தில் பேரு போட முடியாதுன்னு சொல்லுறது எல்லாம் அந்த காலம்… நான் அதை பத்தி பேசவும் இல்ல… இந்த காலத்துல உங்க சொந்த பசியை தீர்த்து கொள்வதற்கு சமையல் தெரிஞ்சிருக்க வேணமா? இப்போ இருக்குற விலைவாசிக்கு முப்பது நாளும் பிட்சா பர்கர் கட்டுபிடி ஆகுமா ? அப்பறம் கொடி இடை அன்ன நடை எல்லாமே பகல் கனவாகிடும்.. அதனால்தான் சொன்னேன்” என்று விளக்கம் அளித்த பாட்டியை கட்டி கொண்டாள் விஷ்வா…  அன்றைய நினைவில் இருந்த பாட்டியை  உலுக்கினாள் விஷ்வானிகா…

“ என்ன ஆச்சு பாட்டிம்மா ?”

“ஆ…ஆங்க்….. எப்படி இருந்த  நீ இப்படி கிட்டன்னு மலைச்சு போயிட்டேன்”

“ச்சு… போங்க பாட்டிம்மா…. “

“பாருடா, என் கண்ணம்மாவுக்கு வெட்கமெல்லாம் வருமா ?”

“ம்ம்ம் ,எல்லாம் பாட்டி வீட்டு சீதனம்  போதுமா ?” அழகாய் சலித்து கொண்டாள் அவள்..

“ ம்ம்ம் , உன்னை இப்படி பார்க்க சந்தோஷமா இருக்கு டா.. எப்பவும் இப்படியே இரு .. பழசை எல்லாம் மறந்துடு.. சரியா ?”

பழசு, என்றதுமே விஷ்வாவின் முகம் அனிச்சையாய் வாடியது.. மீண்டும் இறுகிய குரலில்,

“அது எப்படி என்னால் முடியும் பாட்டி ? “என்றாள்.. முகத்தில் லேசாய் இறுக்கம் பரவியதை கண்டார் பாட்டி..எனினும் சொல்ல வந்ததை சொல்லாமல் முடிப்பது என்பது சாம்பவி பாட்டியின் அகராதியிலேயே இல்லாத ஒன்றல்லவா ?

“ மறந்துதான் ஆகனும் கண்ணம்மா… இதோ இதே ஊட்டியில் தானே எல்லாமும் நடந்து முடிஞ்சது? நீயும் இங்க வந்தா , நடந்ததை மட்டும் நினைச்சுகிட்டு இருப்பன்னு வராமலே இருந்த…இதோ இப்போ நீ எனக்காக வரலையா ? சந்தோஷமா இல்லையா ? காரணம் என்ன ? அன்பு தானே கண்ணம்மா ? என்மேல உனக்கிருக்கும் அன்பு தானே ?அதே அன்பு எல்லாத்தையும் மாத்தும் .”

“அன்பா ? அது எங்க இருக்கு பாட்டிம்மா ? எல்லாமே மாயை தான்..” விரக்தியாய் புன்னகைத்தாள் பெண்ணவள்”

“அன்பில்லாத மனிதனே இல்லை கண்ணம்மா… உன் அம்மா, அப்பா, தாத்தா , அபி, சகி..இப்படி எல்லா மனுஷங்க மனசுலயும் அன்பு கொட்டி கிடக்கு”

“சகி அண்ணா என் கிட்ட சரியாய் பேசி எத்தனை வருஷம் ஆச்சு, தெரியுமா பாட்டி உங்களுக்கு ? எப்போ பார்த்தாலும் வார்த்தையில் கத்தி வெச்சு பேசுறான்..என்னை அவனுக்கு பிடிக்கவே இல்லை… அபி அண்ணா ஆவது இயல்பிலேயே அமைதி , அம்மா மாதிரி குணம்.. அப்பா வேலை, சமூகம்னு இருப்பார்.. தாத்தா எப்பவும் போலதான் இருக்கார்… ஆனா இந்த சகீ அண்ணாதான் என்னை மொத்தமாய் வெறுத்துவிட்டான்…” அவளது குரலில் கோபத்திற்கு பதிலாய், சோகமும் ஏக்கமும் தான் நிறைந்து இருக்கிறது என்பதை பாட்டி உணர்ந்து கொண்டார்..

“ம்ம்ம் சகீயும் நீயும் எவ்வளவு ஒற்றுமையா இருந்திங்கன்னு எனக்கே தெரியும் … அவனை மீறி உன்னை திட்ட முடியுமா ? இல்ல உன்னை தாண்டி அவனை ஒரு வார்த்தை தான் பேச முடியுமா ? உன் அம்மாவை விட நீ அவன்பின்னாடிதான் குட்டி போட்ட பூனை மாதிரி சுத்துவ…அப்படி இருந்த உங்க ரெண்டு பேருக்குள்ள் என்ன பிரச்சனை ?”

“ உங்களுக்கு தெரியாததா பாட்டி ?எல்லாம் இங்க நடந்த சம்பவம்ன்னால தான் ..!”

“அப்படின்னு நீதானே சொல்லுற கண்ணம்மா ?சகீ சொன்னானா ? நல்லா யோசி ? அவனா உன்னை விலகி போனான் ? இத்தனை வருஷத்தில் ஏதாவது ஒரு பேச்சின் ஊடே, அவன் இங்கு நடந்ததைபற்றி சொல்லி காட்டி இருக்கானா ?”

பாட்டியின் கேள்வியில் விழிகளை விரித்தாள் விஷ்வானிகா.. இல்லைதான்..சகீயாய் இன்றுவரை நடந்ததைப் பற்றி பேசியதே இல்லை…அவளை சீண்டுவான் தான்.. தாழ்த்தி பேசுவான் தான்..ஆனால் மறந்தும் அவன் இங்கு நடந்ததைப் பற்றி பேசியதே இல்லை.. ஆனால்,

அப்படி என்றால் , அவன் கோபத்தின் காரணம் வேறெதுவாக இருக்க முடியும் ? ஒருவேளை அவன் வாய் திறந்து சொல்லாமல் இருந்து கொண்டு மனதில் இந்த சம்பவத்தை நினைத்து இருக்கலாமே ..மீண்டும் அவளது சிந்தனை தவறான இலக்கை அடைந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.