(Reading time: 17 - 33 minutes)

11. நகல் நிலா - அன்னா ஸ்வீட்டி

து….. உன் விருப்பம் என்னதா இருக்கும்னு தெரியலைப்பா….அதான்….மத்தபடி இப்ப சொல்லனும்னாலும் சொல்லு அவிவ் என் பேரன், மகனோட மகன்னு நாளைக்கே அனவ்ன்ஸ் செய்றேன்…” இசையின் அப்பா செல்வநாதன் எந்த பதற்றமும் இல்லாமல் சொல்லிக் கொண்டு போக கேட்டிருந்த சதீஷ் தன் தந்தையின் தலையிலிருந்து பிஸ்டலை எடுத்து தன் தலையில் யோசனையாக தட்டிக் கொண்டான்.

“ம்…அப்டில்லாம் எதையும் செய்து வைக்க வேண்டாம்…..”

“………………”

nagal nila

“என்னைக்கினாலும் அவன் நல்லிசை நிக்கியோட அடாப்டட் சன்னாவே இருக்கட்டும்…என் பேர் அவனுக்கு வேண்டாம்…”

நல்லிசைக்கு சதீஷ் தன் தகப்பன் தலையில் பிஸ்டல் வைத்து பார்த்தது முதல் அதிர்ச்சி என்றால்….அந்த நொடி தாடி வைத்த அவர்கள் இருவருக்கும் தெரிந்த ஏதோ ஒருவகை  உருவ ஒற்றுமை, இதுவரை இவளுக்கு ஸ்ட்ரைக் ஆகாத  அந்த சாயல் உயிர் போக்கும் இரண்டாவது அதிர்ச்சி.

அதில் அவளை பின்னிருந்து வாய் பொத்தி இழுத்த கையினால் கிடைத்த அதிர்ச்சி அளவு சற்று குறைவுதான். காரணம் இழுத்த நொடி புரியவில்லை எனினும் அந்த கைகாரன் தன் தோளோடு சேர்த்து இவளை சாய்க்கவும் பக்கவாட்டு பார்வையில் அது நிக்கி என புரிந்து விட்டதே.

அப்பா தலையில பிஸ்டல் இருக்கும் போது இவளை அசையவிடாமல் பிடிக்கிறானே என முதல் நொடி வந்த கோபம் கூட

 “அவங்க பேசிகிடட்டும் , அதை கெடுத்துடாத….இவ்ளவு நாள் உன் அண்ணன் அப்பாவை ஒன்னும் செய்யலைதானே…பயப்படாத” என்று இவள் காதில் காற்று போல் சொல்லிய  நிக்கியின் வார்த்தையில் இல்லாமல் போய்விட்டது.

இவள் திமிறலை நிறுத்தவும் இவள் வாய் பொத்தியிருந்த தன் கையை எடுத்துக் கொண்டான் நிக்கி. ஆனால் அவளை தன்னோடு வளைத்திருந்த கையை விலக்க அவன் விரும்பவில்லை. தெரிய வரும் செய்தியில் இடி விழும் இவள் மனதில் என எதிர் பார்த்தான் போலும். அடுத்து சதீஷ் பேசப் பேச அதுதான் நடந்தது இசைக்குள். ஆயிரம் பிரளயம் அவளுள்.

அவள் அப்பா இப்படிப் பட்டவரா?

“ என் மகன்ட்டயும் விளையாண்டு பார்க்ரீறோன்னு தோணுச்சு அதான் ரெண்டு போடலாம்னு வந்தேன்….” சதீஷ் குரலில் ஒரு மிரட்டலும்…தன் முடிவை மாற்றி இருக்கும் தொனி இரண்டும்.

“அப்பா முன்னாடி போல இல்லப்பா…” குற்றத்தை ஒத்துக் கொள்வதும் கெஞ்சலும் இவர் குரலில்.

செல்வநாதனே அவசரமாக தொடர்ந்தார். “ உன்னையும் உன் அம்மாவையும் விட்டுட்டு பணத்துக்காக, பணக்காரனாகனுங்கிறதுக்காக அடுத்த கல்யாணம் செய்தது தப்புன்னு நல்லாவே புரிஞ்சிட்டு…..…. ”

“……………………………..”

“உன் பிள்ளய பிரிஞ்சு உனக்கு எவ்ளவு வலிக்கும்னு தெரியுதுப்பா………..”

“……………………………”

“மருமகளோட அவிவையும் கூட்டிட்டுப் போய்…..லிசிகாக பார்க்றேன்னு நினச்சுறாதப்பா….நிஜமாவே உன் மனசுக்காகதான் சொல்றேன்…”

You might also like - Rose and Thorn... Free English romantic story 

“நவி கூடயா?” ஒரு மாதிரியாய் சிரித்தான்.

“அவ அவளோட மாமியார் கூட போயாச்சு…”

“சதீஷ்…” அதிர்ச்சியாய் அலறினார் செல்வநாதன்.

“ப்ச்…விடுங்க….”தன் நெற்றியை தேய்த்தான் “அவளாவது நிம்மதியா இருக்கட்டும்….” என்றவன் குரலில் அத்தனை ஏக்கம்.

 “சரி உள்ள போங்க….சின்னவளையாவது நல்லபடியா வாழவிடுங்க….உங்க பாவப்பட்ட காசுல பைசா கூட அவளுக்கோ என் பிள்ளைக்கோ கொடுத்துடாதீங்க… அவங்க  வாழ்க்கையாவது நல்லா அமையனும்…”

மகனை விதமாய் பார்த்திருந்தார் அப்பா. “ஒரு வாரம் பத்துநாள் அவிவை எங்க கூட கூட்டிட்டுப் போய் வச்சுகிடட்டுமாபா…?”

“அதெல்லாம் வேண்டாம்…” சள்ளென எரிந்து விழுந்தான் சதீஷ்.

“இப்பதான் சொல்றேன் ஒரு பைசா உங்க காசு அவனுக்கு வரக் கூடாதுன்னு…..” சொன்னவன் ஒரு கணம் என்ன யோசித்தானோ

 “ சின்னவளுக்கு இப்பதான மேரேஜாகிருக்கு….அவளுக்கும் மாப்ளைக்கும் கொஞ்சம் டைம் வேணும்ல…சரி பிள்ளய கூட்டிட்டுப் போய் வச்சிருந்துட்டு வாங்க….”

தன் கழுத்திலிருந்த செயினை கழற்றி அவரிடம் நீட்டியவன்….இத வித்து அத அவன் செலவுக்கு வச்சுகோங்க….அவன் அம்மாவோட செயின்…”

ஒரு பெரு மூச்சுடன் அதை தன் கையில் வாங்கிக் கொண்டார் சதீஷின் அப்பா செல்வநாதன்.

“சின்னவட்ட அவ அம்மாட்டன்னு எதையாவது உளறி வச்சுறாதீங்க…..அவங்க வருத்தப்படுறதால எதுவும் மாறிடப் போறதுல்ல…”

“ஏன்பா இன்னொரு பொண்ணப் பார்த்து….” அப்பா இழுத்தார்.

“என் வாழ்க்கையில ரெண்டாவது கல்யாணம்னு ஒன்னு வராது…” சொன்னவன் சிட்அவுட்டிலிருந்து கீழே குதித்திருந்தான்.

அப்படி சட்டென கிளம்புவான் என  இசையும் நிக்கியும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனைப் பார்த்து இவர்கள் ஓட சட்டென அதை செய்தான் சதீஷ். சில நொடிகள் நிக்கியின் வீட்டு தோட்டத்தில் ஓடியவன் பார்வையிலிருந்து மறைந்தும் போனான். இத்தனைக்கும் இவர்கள் அவனை நோக்கி வருவதை கூட அவன் கவனிக்கவில்லை.

முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் அடுத்து செய்தியின் தாக்கத்தில் நல்லிசை உள்ளுக்குள் நொருங்கிப் போயிருந்தாள்.

இவள் அப்பா இப்படிப் பட்டவரா? சமீபத்தில்தான் அவர் தப்பு எதுவும் செய்திருக்க மாட்டார். மதுர் விஷயத்தில் முதலில் ஒரு இன்செக்யூரிடி இருந்திருக்கும்….பின்பு அவர் மதுரனை முழுமனதாகத் தான் ஏற்றுக் கொண்டுவிட்டார்…ஆக்சிடெண்ட் உண்மையில் ஆக்சிடென்ட்…என நினைக்க தொடங்கி இருந்தாள்.

ஆனால் இப்பொழுது பார்த்தால் அவர் மதுருக்கு தீங்கு செய்யவில்லை போலும்…ஆனால் மற்ற எல்லோருக்கும்…இவள் உலகத்திலிருக்கும் எல்லோருக்கும் செய்திருக்கிறார்……. அம்மாவுக்கு…இவளுக்கு……எல்லோற்றிற்கும் மேலாக அந்த சதீஷுக்கு….

சதீஷை இவளுக்கு முதல் மீட்டிங்கிலேயே பிடிக்கவில்லை…..அவனை ஒரு நாளும் இவள் மரியாதையாய் நடத்தியதும் இல்லை….ஆனால் இப்பொழுது பார்த்தால்….. அவனது இவள் மீதான  பாசம் உண்மையானது மட்டுமல்ல….அதிசயமானதும் கூட…..அதோடு அவன்தான் அவிவின் அப்பா…..

நினைத்துப் பார்க்கவே தலைசுற்றுகிறது….. இத்தனை வருஷத்தில் அவன் இவள் அப்பாவைப் பத்தி இவளது அம்மாவிடம் சொல்லிக் கொடுக்கவில்லை….. இவளிடமோ முன்பு மதுரிடமோ கூட அப்பாவை அவன் முழுதாகவிட்டு கொடுத்ததாக இப்பொழுது தோன்றவில்லை…. சதீஷுக்கு நவ்யாவுடன் குழந்தை இருந்திருக்கிறது….அதையும் சொல்லிக் காண்பிக்கவில்லை….

இவளுக்கு மனிதர்களை புரிந்து கொள்ள தெரியவில்லை…… சுத்தமாக தெரியவில்லை….  

 “இசை…. சாப்டவா” நிக்கியின் அழுத்தமான குரலில் தான் சற்று சுய நிலைக்கு வந்தாள் இசை. காலையில் வந்து படுக்கையில் விழுந்தவள் தான்….

நிமிர்ந்து நிக்கியைப் பார்த்தாள். கையில் தட்டுடன் நின்றிருந்தான் அவன். “வேணாம்….. ப்ளீஸ்”

“ப்ரேக்ஃபாஸ்ட் ஸ்கிப் செய்த….சரின்னு விட்டாச்சு……. தென் லன்ச்….இப்ப நைட்டும்..” அவனை பேசி முடிக்க விடவில்லை அவள்

“எல்லாம் கசக்குது நிக்கி….. வாய் வயிறு மொத்த உலகம் எல்லாம் ரொம்ப கசக்குதே…”

தட்டை அருகிலிருந்த டேபிள் மேல் வைத்துவிட்டு அவளருகில் வந்து அமர்ந்தான். படுத்திருந்தவள் மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

கலைந்து முன் நெற்றியில் விழுந்து கிடந்த அவளது சில முடிகளை பின்னாக தள்ளி வைத்தவன் “எல்லாமே ஏற்கனவே முடிஞ்சு போன விஷயம்டா…. அதுக்காக இப்ப கவலைபடுறதால எதாவது மாறிடப் போகுதா” அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான்.

ஏனோ அழுகை அதுவாய் வருகிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.