(Reading time: 15 - 29 minutes)

14. நேசம் நிறம் மாறுமா - தேவி

வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;

பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு; 

ஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்;

ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!

பாரதியார்

Nesam niram maaruma

ன்று முழுவதும் மதி ஆதியோடு இருந்தது அவனை மகிழ்ச்சியில் நிறைத்தது. அவன் எண்ணியது போல் மதி தன்னை மறக்கவில்லை. தன் மேல் அவளுக்கு அன்பு அப்படியே இருக்கிறது என்று உணர ஆரம்பித்தான். அவன் விபத்திற்கு பின்பே அதை உணர்ந்தாலும் , அது பரிதாபாமோ, மனிதாபிமானமோ என்று குழம்பியவன், இன்றைய தினத்தில் தெளிந்தான்.

மதிக்கோ ஆதிக்கு தன்னை மறக்கவில்லை என்பதே மிகப்பெரிய சந்தோஷம். அதனால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் படுத்தவுடன் உறங்கி விட்டாள்.

மறுநாள் எல்லோரும் சென்று தாலி மற்றும் நகைகள் வாங்குவதாக இருந்தது. ஆதி காலையிலேயே மதியை அழைத்தான்.

“மதி, இந்த கார்டை வைத்துக் கொள். இது நீ அதிதிக்கும், வாணிக்கும் பொருட்களோ உடைகளோ வாங்குவதற்கு வைத்துக் கொள். உனக்கும் தேவையானதை வாங்கி கொள். எல்லோரும் கல்யாண வேலையில் சென்றால், அலுவலக வேலை நின்று விடும். அதனால் நீ அவர்களோடு சென்று தேவையனதை வாங்கு. அவர்களுக்கு மட்டுமல்ல. உனக்கும் சேர்த்துதான். என்னை எதிர் பார்க்க வேண்டாம்”

“இன்று நகைகள் எடுக்க போகிறோமே. அதற்கும் நேற்று போல் நீங்கள் வரவில்லையா?”

“நேற்று சண்டே. மேலும் வெளியூர் என்பதால் நான் கூட வந்தேன். இன்று லோக்கல் தானே நீங்களே போய்க் கொள்ளுங்கள்”

சரி என்ற மதிக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆதியும் இன்று வருவான். தன்னோடு இருப்பான் என்று எண்ணினாள். அவளின் வாடிய முகத்தை பார்த்த , ஆதி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

அன்று காலை எல்லோரும் டைனிங் டேபிளில் அமர, சாப்பிடும் போது, சூர்யா

“ஆதி அண்ணா, நான் இன்றைக்கு அலுவலகம் வரவில்லை. நீயே பார்த்துக் கொள்”

“ஏன்டா.. காலையில்தானே கடைக்கு போவது. மதியத்திற்கு மேல் வரலாமே.”

“காலையில் எல்லோரும் போவது. மதியத்திற்கு மேல் நானும் என் டார்லிங்கும் மட்டும் போகிறோம்

இதற்கு யாரிடம் பெர்மிசன் கேட்டாய் ? அதுவும் வாணியோடு. .. மாமாவிடம் கேட்டு விட்டாயா?

நீதானே கேட்க போகிறாய் ?

ஹே.. இது என்ன? நான் எதற்காக கேட்க வேண்டும் ?

மற்றவர்கள் கவனிக்கத படி சூர்யா ரகசியமாக ஆதியின் அருகில் வந்து “உன் வினுவை நீ லவ் பண்ணுவதையும். வினுக் கண்ணம்மாவிற்கு நீ கொடுத்த கன்னத்து முத்தத்தைப் பற்றியும் இந்த வாண்டுகளிடம் போட்டு கொடுத்து விடுவேன். என் டார்லிங் ஒருத்தி போதும் உங்களை ஓட்டி எடுக்க.. எப்படி வசதி?”

You might also like - Enna thavam seithu vitten... A family drama

ஆதிக்கு புரையேற, “டேய் .. இது எப்படி உனக்கு தெரியும் ?”

“அதை நாம் தனியாக பேசிக் கொள்ளலாம் . நீ இப்போ வெளியில் போக பெர்மிசன் வாங்கி கொடு.” என்ற மிரட்டினான்.

“எல்லாம் நேரம்டா.. சரி சரி விடு. இப்போ சாப்பிட்டு தோட்டத்துக்கு வா.” என்றான்.

ஆதி எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அலுவலகம் கிளம்பியவன், தோட்டத்தில் நின்ற சூர்யாவிடம் “டேய்.. எப்படி இதெல்லாம் உனக்கு தெரியும்?”

“அது.. இவ்ளோ நாள் இதெல்லாம் நினைவு வரவில்லை. நேற்றைக்கு நீங்கள் சாப்பாடு ஷேர் செய்ததும், உன்னிடம் பேசியது, வாணியிடம் அண்ணியைப் பற்றி கேட்டதும் எனக்கு ஞாபகம் வந்து விட்டது. அப்போது நான் சின்னவன் என்றாலும், அந்த நிகழ்ச்சி மங்கலாக என் நினைவில் இருந்தது.

நீ முதலில் கல்யாணம் வேண்டாம் என்றது, வந்தனாவோடு திருமணத்திற்கு சரி என்றது, அந்த விபத்து, அண்ணியோடு திருமணம், எல்லாவற்றையும் யோசித்து பார்த்தேன். என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சில விஷயங்களுக்கு காரணம் புரியவில்லை என்றாலும், இதில் பத்மா அத்தையின் சூழ்ச்சி நிறைய என்று புரிந்து கொள்ள முடிந்தது.

இதை நாம் இப்போது வெளிப்படையாக கேட்டோமானால், அப்பாவிற்கு வருத்தமாக இருக்கும். அதனால்தான் நானும் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் உன்னை சமாளிக்க, எனக்கு முக்கியமான ஆயுதம் கிடைத்து விட்டது. அதனால் இனிமேல் நீ என்னிடம் மாட்டிக் கொண்டாய்”

“இதை வைத்து எல்லாம் என்னை மிரட்ட வேண்டாம். இன்று ஒருநாள் உனக்கு சம்மதம் தருகிறேன். இனி கல்யாணம் வரை நோ தனியாக சந்திப்பு. அது இரண்டு பேருக்கும் நல்ல பெயரை தராது. அதனால் இன்று மட்டும் போய் வா. “

“அண்ணா.. ப்ளீஸ்..”

“நோ சூர்யா. இது வேண்டாம். “

சூர்யா ஆதியை திட்டிக் கொண்டே நகர, “சூர்யா, இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம். நான் மதியிடம் இதப் பற்றி பேசும் வரை.. ப்ளீஸ் “ என

“அண்ணா .. இதெல்லாம் என்ன. சும்மா உன்னைக் கேலி செய்தேன். நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் போதுமா

தேங்க்ஸ் டா.. “ என்று கிளம்பி விட்டான். சூர்யாதான் வீட்டில் எல்லோரையும் கடைக்கு அழைத்து செல்வதால் அவன் வரவில்லை.

வாணியின் வீட்டினரும், பிரகாஷ் வீட்டினரும் நேராக கடைக்கு வருவதாக சொல்லவே, இவர்கள் எல்லோரும் வீட்டிலிருந்து கிளம்பினர்.

ரியாக எல்லோரும் பத்தரை மணி அளவில் கடைக்கு வந்தனர். ஆதி இல்லாததால் மதி சற்று டல்லாக உணர்ந்தாள். முந்தைய நாள் உற்சாகம் அவளிடம் இல்லை.

இவர்கள் சென்ற பதினைந்து நிமிஷத்தில், ஆதியும் கடைக்கு வந்தான். அவன் வருவது மதியை தவிர எல்லோருக்கும் தெரியும். அதனால் எல்லோரும் நகை தேர்வில் இருக்க, மதியும் அவர்களோடு பார்த்துக் கொண்டிருந்தாள். வாணியும், அதிதியும், தங்கள் ஜோடியோடு அமர்ந்து இருக்க, அவன் வருவதைப் பார்த்த மதியின் அம்மா எழுந்து சற்று தள்ளி அமர்ந்தாள்.

சத்தமில்லாமல் அவளருகில் அமர்ந்த ஆதி, “என்ன மதி மேடம், எதை செலக்ட் செய்துருக்கிறாய்?” என,

ஆதியின் குரல் கேட்டு திகைத்து திரும்பிய மதி, அவனை பார்த்து கண்ணகல விழித்தாள். அவன் அவள் கன்னத்தில் தட்ட, சுதரித்தவள்

“நீங்கள் வரவில்லை என்றீர்களே?”

“நான் இன்றைக்கு வரவில்லை என்றா சொன்னேன்? கல்யாண ஷாப்பிங் இல்லாமல், மற்ற தேவைகளுக்கு வாங்க போகும்போது வரவில்லை என்றேன். ஏன் மதி நான் வரவில்லை என்று சொன்னது உனக்கு ஏமாற்றமா?”

கன்னம் சிவக்க “அதெல்லாம் இல்லை. ஆனால் முக்கியமான ஷாப்பிங்காயிற்றே என்று எண்ணினேன்” என்று சமாளித்தாள்.

“அது சரி. “ என்றவன், வேறு ஒன்றும் சொல்லாமல் “காலையில் ஒரு மீட்டிங் இருந்தது. அதை முடித்து விட்டு நேராக வந்தேன். இந்த வேலை முடிந்த பிறகு மீண்டும் போக வேண்டும்.”

பெரியவர்கள் தாலி, மெட்டி போன்ற சமாச்சரங்களை முடிக்க, சின்னவர்கள் தங்கள் உடைகேற்ப நகை தேர்வில் ஈடுபட்டனர்.

“அதிதி, வாணி முகூர்த்தத்திற்கு இருவரும் வைர நகை எடுத்துக் கொள்ளுங்கள். அரக்கு கலருக்கு எடுப்பாக இருக்கும். “ என

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.