(Reading time: 7 - 14 minutes)

04. கல்யாணம் முதல் காதல் வரை - சஹானி 

திவ்யா தன் நிலை மறந்து அவனுக்கு மார்க் போட்டு கொண்டு இருக்க...

நம்ம ஹீரோவோ ,

ச்ச... என்ன இது யாரும் பேச்சு துணைக்கு கூட வர மாட்டேங்றாங்க... எதோ இந்த வீட்ட விலைக்கு வாங்க வந்த மாறி எவ்ளோ நேரம் தான் சுவத்தையும் சன்னலையும் மாறி மாறி பாக்றதாம்....என்று எண்ணி கொண்டிருக்கும் போதே...

Kalyanam muthal kathal varai

என்ன தோன்றியதோ அவன் சமையலறை பக்கம் பார்வையை திருப்பினான். சட்டென்று இவள் தலை உள் புறம் சென்று கொண்டது.

சுற்றும் முற்றும் தேடியவள் ,

டேய் அண்ணா ... என்றாள்

அங்கு எழிலோ தன்  முன்னும் பின்னும்  பார்த்து விட்டு யாரடி கூப்டற .. என்றான் கேள்வியோடு

டேய், எலி உன்ன தாண்டா ..

அது அப்படி கூப்டா தானே எனக்கு புரிபடும் அத விட்டுட்டு அண்ணான்னு சொன்னா மனுஷனுக்கு என்னனு விளங்குறதாம் என்றவாறு அவள் அருகில் சென்றான் ஆனால் உள்ளுக்குள்ளோ இவ மரியாத கொடுக்கும் போதே போயிருக்கனும் எல்லாம் ஸ்டான்ட் அப் காமிடி பண்றேன் நினச்சி என் இமேஜ நானே டாமேஜ் பண்ணிக்கிறேன் என்று கூறியது அவளுக்கு கேட்க வில்லை (ஆனா  எனக்கு கேட்டுருச்சே )

எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு டா

என்ன ஹெல்ப் ,ஓ  அந்த கண்ணாட்ட கடலை மிட்டாய் கேட்டியே அத வாங்கி கொண்டு வந்து தரவா? 

அவள் இல்லை என்று எதோ கூற வரும் முன்னரே அவன் ,

அப்போ ஓ ஐஸ் பார் விளையாடுறியா ,யார்ட்டயும் சொல்ல கூடாதா சரி சரி நீ அந்த ட்ரம் பின்னாடி ஒளிஞ்சிக்கோ யாருக்கும் தெரியாது . என்ன நீ இருக்குற சைஸ் க்கு இங்க நின்னாலே யாருக்கும் தெரியாது சோ டோன்ட் வொர்ரி . 

அப்புறம் யாரும் உன்ன சமையல் கட்டுல தேடவே மாட்டாங்க .ஏன்னா இந்த உலகத்துலேயே நீ போகாத ... போக விரும்பாத ஒரே இடம் இது தான்னு எல்லாருக்கும் தெரியும் .யு கேரி ஆன் 

ஹப்பா நான் ஸ்டாப் டேமேஜ் ஐ அம் வெரி ஹாப்பி .....

டேய் கொரங்கே என்ன பேச விடு ( திவ்யா வாயையே அடைத்த பெருமை உன்னையே சேரும் எழில்.)

அதோ பாரு.... என்று அவள் அவனை நோக்கி கை காட்ட  அவளின் கை வழி அவனை அடைந்தது எழிலின் பார்வை .

ம்ம்ம் ...அவர் தான் நீ சொன்ன மாப்பிள்ளை தம்பி ..  அதுக்கு என்ன இப்போ ?

அவர பாரேன் எதோ இந்த வீட்ட விலைக்கு வாங்க வந்த மாறி விட்டதையும் தரையையும் மாறிமாறி பாக்குறத ( பார்டா ரெண்டு பேருக்கும் வேவ் லென் த் கரக்ட்டா பொருந்துதே)

போடா அவர் கூட கொஞ்சம் பேசிட்டு இரு , என்று கூற அவனோ

இல்லப்பா எனக்கு நிறைய வேல இருக்கு நா ரொம்ப பிஸி என்று கூற அவனின் தலையில் கரண்டியால் ஒரு இடி ,

உன் வேலைய பத்தி எனக்கு தெரியாதா எட்டணாக்கு வாங்கிய இந்த கண்ணாடிய போட்டுக்கிட்டு  அம்பது காசு மொபைல காதுல வச்சு எதிர் வீடு பொண்ணு கிட்ட சீன போட போற அதானே ..ஒழுங்கா போய் சொன்னத செய்  இல்ல இதையும் கோமதி கிட்ட போட்டு கொடுக்க வேண்டி இருக்கும்  சொல்லிட்டேன் .

You might also like - Nanaikindrathu nathiyin karai... A fast paced romantic thriller story 

மறந்துடாதே... அவ என் கூட தான் மார்க் சீட் வாங்க வருவா...

அவளின் இந்த மிரட்டலில் மீண்டும் அவளிடம் சரணடைந்து  அவளின் சொல்லுக்கு கீழ் படிந்தான்.

ஹாய் , நான் எழில் , பொண்ணுக்கு தம்பி முறை வேணும்.

ஒஹ்ஹ் , ஹாய் நான் சரவணன்  . முறைலாம் இல்ல நா பையனுக்கு தம்பியே தான். 

பேச்சு துணைக்கு ஆள் கிடைத்து விட்ட சந்தோசத்தில் அவன் மனம் துள்ளி குதித்து கூற...

பார்டா புது இடம் புது மக்கள்னு கூச்சம் நாச்சம்லாம் இல்லாம பய புள்ள தெளிவா பேசுது .

ம்ம்ம் எதோ சொல்வாங்களே புலியூர்க்கு பயந்து எலியூர்க்கு வந்தா எலியூரும் புலியூராச்சாம் ...

அவளுக்கு பயந்து இங்க வந்தா இங்க உயிரே போய்டும் போல டேய், எலி உன் பாடு ஏண்டா இப்டி போய்டுச்சு ...

அவனின் மிரண்ட விழிகளை கண்டவன் தன் இயல்பான சிநேக புன்னகையை சிந்த அதன் பின்பு தான் இவன் சமாதானம் அடைந்ததே ( நீ ரொம்பவே வீக்கா இருக்க எலி )

அங்கு சமையல் அறையில்,

காபிக்கு மொதல்ல சக்கரைய போடணுமா இல்ல காபித் தூள்ள போடணுமா ????

( மொதல்ல அடுப்ப பத்த வச்சி பால் சூடேத்தனும்  ஹாஹாஹா ஹாஹ் இந்த காபிய குடிக்க போறவன் நிலை இப்போவே நமக்கு தெரியுதுல ப்ரண்ட்ஸ் )

எப்படியோ அவள் ஒரு வழியாக இருவருக்கும் காபி போட்டு வைப்பதற்குள்  ஒரு மினி வேர்ல்ட் வாரே நடத்தி விட்டாள் .( இருவருக்கா  அப்டினா  எலிக்கும் எலி பாய்சன் ரெடியா ..)

தன் முன்னே ட்ரேயை நீட்டிய சந்தியாவினை கண்டவன் , புன்னகையோடு  அதை  வாங்கி கொண்டான்.

மற்றொரு கப்பை எழில் முன்பு நீட்ட அவன்  அதை எடுக்க எத்தனிக்கும் போதே கைகள் செயல்பட மறுக்க 

விரல் கோர்க்க மறுக்க  அதை கட்டு படுத்தி அந்த கப்பை வாயின் அருகே கொண்டு சென்றவன் கட்டளையை  மறுத்து உதடுகள் பிரிய மறுத்து விடவே மிகவும் சிரம பட்டு அதை பிரித்தி விட அங்கு நாக்கோ 

பற்கதவு கொண்டு  தன்னை

மூடிக்கொள்ள  அதை தகர்த்தெறிந்து துடிதுடித்த நாக்கினுல் அந்த காபியை விட தொண்டை வழி செல்லும் முன்னே அடி வயிற்றில் இருந்துஓர் 

அலரல் அய்யோ  

  என்னை கொல்லாதே என்று....

அவ்வளவு தான் அவன் முகம் என்றோ தன் தாய் நில வேம்பு கசாயம் குடிக்க சொன்ன போது கூட இவ்வளவு அஷ்டகோணலாய் மாறியது இல்லை.   இன்று அவன் முகம் நவ ரசத்தையும் பிழிந்து தள்ளியது. சட்டென்று தன் புதிய நண்பனின்  முகம் நோக்க அவன் இதற்குள் தன்னை ஓரளவு சமாளித்து விட்டிருந்தான் சரவணன்.

இருவரின் பார்வையும் வொய் ப்ளட் சேம் ப்ளட் என்று கூறி கொண்டன,

சரோவின் பார்வையை  தொடர்ந்து எலியின் பார்வை சமையல்அறை பக்கம் கொலை வெறியொடு திரும்பியது.அவனின் பார்வையை பின்பற்றி சரோவின் பார்வையும் அங்கு செல்ல , டட்ட டய்ங்...

என்ன கண்ணு இது  கோலி குண்டு கண்ணு.. அதுல ஒரு வெற்றி புன்னகையும் கூட ( கண்ணுல புன்னகையா உனக்கு என்னமோ ஆய்டுச்சு ப்ரோ)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.