(Reading time: 8 - 15 minutes)

07. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்

னுவை காண அறைக்கு வந்த திவ்யா, ஃபேனையே உற்று பார்த்துக் கொண்டிருக்கும் தன் தோழியை பார்த்த மாத்திரத்திலே, ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டாள். மெல்ல அனுவின் அருகில் சென்று அவளின் தலையை அன்போடு வருடினாள் திவ்யா. அப்போதுதான் தன் அருகில் திவ்யா அமர்ந்திருக்கிறாள் என்பதே அனுவிற்கு தெரிந்தது.

“என்னடீ ரொம்ப டல்லா இருக்க, மாப்பிளை சார் சீக்கிரம் போயிடாருனு கவலையா இருக்கியா?” கவலையாக இருக்கும் தோழியை உற்சாக படுத்துவதற்காக அவளை வம்பிற்கு இழுத்தாள் திவ்யா.

“அதலாம் ஒன்றும் இல்லை, நான் நல்லா தான் இருக்கேன், ஆண்டி தேட போறாங்க நீ வீட்டிற்குப் போ” பிரச்சனை ஒன்றும் இல்லை என்பதைப் போல் தன் தோழியை விரட்டினாள் அனு. அன்று அவள் மனம் ஏனோ தனிமையை விரும்பியது.

unakkaga mannil vanthen

“உங்க ஆண்டி ஒன்னும் என்னைத் தேட மாட்டாங்க, லேட்டா வருவேன் என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன். நீ என்னை விரட்டுவதை விட்டுவிட்டு என்ன நடந்தது என்று சொல்லு” அவளும் விடுவதாக இல்லை.

“அம்மா தாயே ஒன்னும் நடக்களா, நான் நல்லா தான் இருக்கேன். தனியா இருக்கனும் போல இருக்கு, நீ கிளம்பு” செல்லமாக தன் தோழியைக் கெஞ்சினாள் அனு.

“உனக்குத்தான் பொய் சொல்ல வராதே, அப்பறம் ஏன் வீணா ட்ரை பண்ற. நீ பொய்ச் சொல்லும் போது முகத்தைப் பார்க்க முடியல, ரொம்ப கேவளமா இருக்கு. என்னடீ, உனக்கும் திபக்கிற்கும் எதாவது சண்டையா?. இது வரைக்கும் நீ என்னிடம் எதுவும் மறைத்தது இல்லை. சோ தைரியமா சொல்லு, என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்” கூறிக்கொண்டே அனுவின் தலையைப் பரிவோடு வருடினாள்.

திவ்யாவும், அனுவும் சிறு வயது முதலே தோழிகள். திவ்யாவிடம் எந்த ஒரு விஷயத்தையும் அனு மறைத்தது கிடையாது. அனுவிற்கு எந்தத் துன்பம் என்றாலும் அவள் தேடும் முதல் ஆள் திவ்யாதான். இப்போது கூட அவளிடம் இருந்து மறைக்க வேண்டும் என்று அனு நினைக்கவில்லை. எதை, எப்படிக் கூறுவது என்று தெரியாமல் தான் விழிக்கிறாள்.

“என்னடீ நான் கேட்டுகிட்டே இருக்கேன், நீ ஒன்னும் சொல்லாமல் இருக்கே. உனக்கும் திபக்கிற்கு எதாவது சண்டையா?” திவ்யாவும் விடுவதாக இல்லை.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை திவி. ஹி இஸ் சோ நைஸ் டூ மீ. இது வேறு பிரச்சனை. அதை எப்படி சொல்றதுனு தெரியல” மென்று விழுங்கினாள் அனு.

“எல்லாம் வாயாலதான் சொல்லனும், சொல்லு” என்று கிண்டலாக பதில் கூறிய திவ்யாவை முறைத்தாள் அனு.

“சரி விடு, சீன் ரொம்ப நேரமா சிரியஸா போகுதேனு ஒரு காமடி ட்ரை பண்ணேன், அது மொக்கை ஆயிடுச்சு. நீ மேட்டர சொல்லு” ஓவராக கடித்தாள் திவ்யா.

“திவி, நான் செய்றது சரியா தப்பானு புரியல டீ” அறைக் குறையாகக் கூறினாள் அனு.

“என்னடீ ஆச்சி உனக்கு இன்னைக்கு. நீ பேசுறதுல தலையும் இல்ல வாளும் இல்ல. ஒழுங்கா சொல்லு” குழப்பத்தோடுக் கேட்டாள் திவ்யா.

“திவி, நான் இந்தக் கல்யாணத்திற்கு ஓகே சொன்னது சரியா?” கேள்வி கேட்டவளிடமே மீண்டும் கேள்வியைக் கேட்டாள் அனு.

You might also like - Vasantha bairavi... A neat family story...

“ஏய் அனு, ஏன் இந்தச் சந்தேகம் உனக்கு. திபக்கை பிடித்ததால்தானே இந்தக் கல்யாணத்திற்கு ஓகே சொன்ன. இப்ப என்ன திடீரென்று இப்படி கேக்குற” அனுவின் கேள்வியால் சற்று அதிர்ந்துதான் போனால் திவ்யா.

“திபக் இஸ் நைஸ் காய், அதை நான் மறுக்கவில்லை, அப்பா, அம்மாவிற்குப் பிடித்திருந்தது. திபக்கை பற்றி அவங்க சொன்னபோது எனக்கு பிடித்திருந்தது. அதனால்தான் ஓகே சொன்னேன்” குழப்பத்தேடு பேச்சை நிறுத்தினாள் அனு.

“சரி, இப்ப என்ன ஆச்சி” அனுவின் வாயில் இருந்து வார்த்தையைப் பிடுங்குவதில் குறியாக இருந்தாள் திவ்யா.

“நேற்று வரைக்கும் என் மனதில் எந்தக் குழப்பமும் இல்ல திவி, பட் இன்றைக்கு திபக் மோதிரம் போட கையைப் பிடித்த போது, சம் திங் மிஸ்ஸிங் டீ. அது மட்டும் இல்ல, இன்றைக்கு ஈவீனிங் அபிஸ்ல இருந்து வரும்போது நான் ஒருத்தனிடம் பேசினேன் ஞாபகம் இருக்கா? அவனுடைய முகம் வேற என் கண் முன்னாடி வந்து டிஸ்ட்ரப் பண்ணுதுடி. அவன் யார் என்று கூட எனக்குத் தெரியாது, கொஞ்ச நாளா நான் போர வர இடத்தில் எல்லாம் அவனைப் பார்த்தேன், அதனால் ஃபாலோ பண்றானு நினைத்து, அவனிடம் இது எல்லாம் வேண்டாம், என்னை ஃபாலோ பண்ணாத என்று கூறத்தான் அவனிடம் ஈவீனிங் நான் பேசினேன்” மூச்சுவிடாமல் கூறி முடித்தாள் அனு.

“சரி அதற்கு அவன் என்ன சொன்னான்” என்ன நடந்தது என்பதை முழுமையாக அரிய விரும்பினாள் திவ்யா.

“அவன் எதுவும் பேசலா, சிலை மாதிரிதான் நின்று கொண்டிருந்தான். கடைசியா நான் சொன்னது எல்லாம் புரிஞ்சிதானுக் கேட்டதற்கு, புரிஞ்சிதுனு தலையை மட்டும் ஆட்டினான். நானும் அந்த இடத்தில் இருந்து வந்து விட்டேன்” நடந்ததை அப்படியே தன் தோழியிடம் கூறினாள் அனு.

னு கூறியது அனைத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு, சற்று நேரம் யோசித்தாள் திவ்யா. பின் பேச துவங்கினாள்.

“அனு இதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்ல. திபக் கையைப் பிடித்தபோது எதோ மிஸ் ஆகுதுனு சொன்னியே அது வேற ஒன்னும் இல்லை. லவ் தான் மிஸ்” கூறி நிறுத்தினாள் திவ்யா.

“லவ்வா?, என்ன திவி சொல்ற. கொஞ்சம் தெளிவா சொல்லு” சிறு குழந்தை போல் ஆர்வத்தோடுக் கேட்டாள்.

“ஆமாம் அனு. காதல்தான் மிஸ். நீ இதுவரையிலும் யாரையும் காதல் செய்தது இல்லை. திபக் மீது உனக்கு நல்ல அபிமானம் இருக்கு, அதோடு அவரை உங்க அப்பா அம்மாவிற்கு பிடித்திருந்தது அதனால் நீயும் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்ட. சரிதானே” கேள்வியோடு பேச்சை முடித்துவிட்டு பதிலுக்கு எதிர்பார்த்து தோழியின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

திவ்யா கேட்ட கேள்வி சரியென அனுவிற்கும் பட்டது. ஆம் என்று தலையசைத்தாள் அனு.

“நீ திபக் கூட எத்தனை முறை இதுவரைக்கும் பேசிருப்பாய், போனில், நேரில் என்று ஒரு 5-6 தடவை இருக்குமா?” மீண்டும் திவ்யாவின் கேள்வி.

அதற்கு அனுவின் ஆம் என்று தலையாட்டல் மட்டும்தான்.

‘ஸோ இந்த 5-6 தடவை பேசியதில் நீ திபக்கை எவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறாய் என்று உன் மனதைக் கேட்டுப் பார், அது உன்மையைச் சொல்லும்” தோழி சிந்திக்க நேரம் விட்டு நிறுத்தினாள் திவ்யா.

திவ்யா கூறியது சரிதான், அனுவிற்கு திபக் பற்றி ஒன்றுமே தெரியாதுதான். இந்த 5-6 சந்திப்பில் அவன்தான் அதிகம் பேசுவான், அதிலும் இவளைப் பற்றி கேள்விகள்தான் அதிகம் இருக்கும், இவளும் அவனின் கேள்விகளுக்கான விடையை மட்டும்தான் கூறி இருக்கிறாள். அதற்கு மேல் அவனைப் பற்றி இவள் ஒன்றும் விசாரித்தது இல்லை.

அனுவின் மௌனமே திவ்யாவின் கேள்விக்கு விடை அளித்தது. தலையைக் குனிந்தவாறு யோசித்துக் கொண்டிருந்த தன் தோழியின் கன்னங்களைப் பிடித்து நிமிர்த்தினாள் திவ்யா.

“காலையில் சாட்டிங், மதியம் டேட்டிங், ஈவீனிங் பிரேக்கிங் என்று காதல் போயிட்டு இருக்கின்ற இந்த காலத்தில் இன்னும் நீ இப்படியே இருக்கிறது, எனக்குப் பொறாமையாகவும் இருக்கு, கவலையாகவும் இருக்கு. இங்க பாருடீ அனு, இந்தக் கவலை எல்லாம் தூக்கி தூரப் போட்டுவிட்டு நான் சொல்லுவது மாதிரி செய். இன்னும் உனக்கு 3 மாதம் டைம் இருக்கு. திபக் கூட நிறையப் பேசு, பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன? என்று எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணிக்கோ. அதான் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது இல்ல, திபக் கூட அடிக்கடி வெளியே போ. அவரை பற்றி புரிஞ்சிக்க பார். இப்படி செஞ்சாலே மோஸ்டிலி உனக்கு திபக் மேல் லவ் வந்துடும். இல்ல வரனும்” திவி கூறி நிறுத்தினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.