(Reading time: 11 - 22 minutes)

10. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

"லர்கள் நனைந்தது பனியாலே

என் மனதும் குளிருந்தது இரவாலே

பொழும் விடிந்தது கதிராலே"

vasantha bairavi

மெல்ல வாய் தன் போக்கில் பாடியபடி இருக்க மரத்திலிருந்து உதிர்ந்திருந்த பவள மல்லி பூக்களை பொறுக்கி எடுத்து சேகரித்துக் கொண்டிருந்தாள் மஹதி.. அந்த ஜனவரி மாத மிதமான குளிரை அனுபவித்தபடியும் மெல்ல தவழ்ந்த தென்றலில் மிதந்து வந்த பவழ மல்லிகை பூவின் வாசனையை நுகர்ந்தபடியும் கை தன் போக்கில் மலர்களை சேகரித்து கொண்டிருக்க மனத்தில் இனம் புரியா பரவசம் நிறைந்திருக்க தன் பணியை செய்தபடி இருந்தாள்..அப்போதுதான் தலைக்கு குளித்திருந்ததினால் தலை முடி தோகையென விரிந்திருக்க மஞ்சள் வண்ண ஷிஃபான் புடவையில் தேவதை போல் பச்சை பின்னனியில் தோற்றமளித்தாள்.

அந்தப் பாடலை பாடியவள் அடுத்ததாக பூபாளத்தில்,

"சம்போ மகாதேவா சரணம் "

என்று பாபனாசம் சிவனின் பாடலை மெல்ல பாடிமுடித்தவள் யாரோ கைதட்டும் ஒலியில் தூக்கி வாரிப்போட திரும்பினாள்.

ஒரு கணம் மஹதிக்கு புரியவில்லை யார் அவன் என்று.. நெடு நெடுவென்று உயரமாய் கம்பீரமாய் நின்றிருந்தவனை ஒருகணம் பார்த்தவளுக்கு, பின் சட்டென்று நினைவுக்கு வந்தது.. 'ஒ இவன் தான் அந்த பைரவியின் பாய் ஃப்ரெண்டோ?.. இருக்கும் நான் டுயூடிக்கு போனபின் தானே அவர்கள் ஹோட்டலை காலி செய்துவிட்டு வந்தார்கள்' என்று ராத்திரி அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.. ஆள் பார்க்க ஸ்மார்ட்டாய் நன்றாய் இருக்கிறான்..சரி..எதுக்கும் ஒரு ஹலோ சொல்லி வைக்கலாம் என்று வாயை திறக்க முற்ப்பட்டவள்.. அவனும் அதே போல் ஏதோ சொல்ல முற்படுவதை பார்த்தவள் தன் சொல்ல வந்ததை நிறுத்தினாள்.. அவனும் ஒன்றும் பேசாமல் அவள் பேசுவதற்காக வெயிட் செய்வதை பார்த்தவள், திரும்பவும் பேச எத்தனிக்க.. அவனும் திரும்பவும் பேச முயன்றான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஒரு கணம் புன்னகைத்தார்கள்.. பின் மஹதி அவன் பக்கம் கையை காட்டி 'பேசு' என்பது போல் சைகை செய்தாள்.

மேலும் புன்னகை விரிந்தது அவன் இதழ்களில்.. பின் "ஹாய் ஐ யாம் அஜய்" என்று கையை நீட்டினான்.

ஒரு கணம் தடுமாறியவள் பின் கையை அவன் பக்கம் நீட்டி பற்றினாள்.

You might also like - En Uyirsakthi... A family oriented romantic story

 

"ஹாய் அஜய் ஐ யாம் மஹதி", என்றவளிடம்

"மஹதி .. யுவர் நேம் இஸ் ஆல்சோ ப்ரிட்டி லைக் யு.."

"ஒஹ்.. தாங்க்ஸ் ஃபார் தெ காம்ப்ளிமென்ட்.. டு யு ஸ்பீக் டமில்?", என்று கேட்டவளை பார்த்தவன்

"ஒஹ்.. அஃப்கொர்ஸ்.. நான் கொஞ்சம் சுமாரா நல்லாவே பேசுவேன்.. கொஞ்சம் ஆக்சென்ட் ஹெவியா இருக்கும்.. ஒகேவா.."

"நோ ப்ராப்ஸ்.. தமிழ் தெரியறதே பெரிய விஷயம் இப்போ.. சோ.. இப்போ சொல்லுங்கோ அஜய்.. நீங்க தான் பைரவியோட ஃப்ரெண்டா?...வீடு சௌகர்யமா இருக்கா?.. பழங்காலத்து வீடு.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ண வேண்டி இருக்கும்", என்று இழுத்தவளை ஸ்னேஹத்துடன் பார்த்தவன்

"ஹேய் நோ வொர்ரிஸ்.. எங்களுக்கு பரவாயில்லை.. சில சமயம் ஃபீல்ட் ட்ரிப்பில் எங்களுக்கு பேசிக் ஃபெசிலிடீஸ் கூட இல்லாத இடங்களில் செர்வ் பண்ணியிருக்கேன் .. சோ இதெல்லாம் ப்ராப்ளம் இல்லை."

"அப்படியா.. பைரவி சொன்னா நீங்களும் டாக்டர்னு.. ஆனா கேன்சர் மெடிசின்ல புதுசா ஏதோ ரிசர்ச் பண்ணறேள்னு சொன்னா.. நான் கூட பேத்தாலஜிஸ்டா இருக்கேன்.. உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் செய்யனும்னா சொல்லுங்கோ.. எங்க ஹாஸ்பிட்டல் சீஃப் டாக்டர் ரொம்ப நல்லவர்.."

"ஒ.. தாங்க்ஸ்.. நிச்சயம் எனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேக்கறேன்..அதை விடு மஹதி.. உன் பேரே இவ்ளோ அழகா இருக்கு வாட் டஸ் இட் மீன்?"

"மஹதின்னா நாரதர் கையில் இருக்கும் ஸ்பெஷல் வீணைன்னு அர்த்தம்.. எங்கம்மாக்கு மியூசிக்கிலே ரொம்ப இன்டிரெஸ்ட்.. அதான் எங்க எல்லாருடைய பேரிலேயும் இசை சம்பந்தப்பட்ட ஏதாவது இருக்கும்.. மத்த மூணு பேருக்கும் ராகங்களின் பேரு.. எனக்கு இந்த பேரு..என் பேரிலும் ஒரு ராகம் இருக்கு.."

"இன்ட்ரெஸ்டிங்க்.. நிச்சயம் அந்த ராகத்திலேயும் ஒரு நாள் நீ பாடு அதை நான் கேக்கறேன்.. சோ இந்த வீணையை மீட்டப் போவது யார்?.. உனக்கு யாராவது பாய் ஃப்ரெண்ட் இருக்கானா?.. ஹூ இஸ் தட் லக்கி கை?", என்று சுவாரசியமாய் கேட்டவனை பார்த்து ஒரு கணம் திகைத்தவள், இதென்ன இவன் அமெரிக்கா ஸ்டைல்ல பேசறான்.. இந்தப் பக்கம் போல் அங்கே யாரும் கிடையாது.. ரொம்ப ஃப்ரீயா பேசுவாப் போலே இந்தியனா இருந்தாக்கூட', என்று நினைத்தவள் மெல்ல,

"ஹேய் திஸ் இஸ் இண்டியா.. நாட் அமெரிக்கா.....சோ.. இதுவரை.. பாய் ஃப்ரெண்டுன்னு யாரும் கிடையாது...நேரே கல்யாணம் தான்". என்று சிரித்தாள்.

யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டு திரும்பியவர்கள்.. கையில் காஃபி டம்ப்ளருடன் வசந்தை பார்த்தார்கள்.

"ஹாய் வசந்த்.. குட் மார்னிங்க்", என்று வசந்த்தை பார்த்து புன்னகைத்தான்.

"குட் மார்னிங்க் சார்.." என்று முறுவலித்தவனை பார்த்த அஜய்..

"சாராவது மோராவது.. கால் மீ அஜய்.. நீ சார்னெல்லாம் கூப்பிட்டா எனக்கு ஏதோ வயசான இந்தியன் ப்ரொஃபெசரை கூப்படற மாதிரி இருக்கு.. இன் ஃபேக்ட் நான் என்னோட ப்ரொஃபெசர்ஸையே பேர் சொல்லி தான் கூப்பிடுவேன்..சோ..பீ கூல் ..ப்ரோ"

"சரி அஜய்.. காஃபி குடிக்கறேளா?.. அம்மா கேட்டுண்டு வரச் சொன்னா.. மாடிக்கு போய் பார்த்தேன்..நீங்க இல்லை..அதான் கீழே வந்தேன்.. தோட்டத்துலே குரல் கேட்டுது.. பார்த்த நீங்க இங்க இருக்கேள்".

"ம்ம்.. காலங்கார்த்தாலே.. ஃபில்டர் காஃபி வாசனை என்னை கீழே கூட்டிண்டு வந்துது அப்புறம் பார்த்தா யாரோ ஸ்வீட் வாய்ஸ்ல பாடினா.. அதான் பாட்டை கேட்டுண்டே தோட்டத்துக்கு வந்துட்டேன்.. சரி..காஃபி நானே போய் வாங்கிக்கறேன்.. இங்கேர்ந்து உள்ளே நான் போகலாமா?" என்று கேட்டவனை பார்த்த மஹதி.. நீங்க இங்க உக்காருங்கோ நான் போய் எடுத்துண்டு வரேன்", என்று திரும்பினாள்..

"மஹதி இன்னும் ஒரு டம்ளர் ப்ளீஸ்".. என்றவாறு தோட்டத்துக்குள் வந்து சேர்ந்தாள் பைரவி..

மஹதிக்கு பைரவியின் அந்த தோற்றமும் எலெகன்ட்டான நடையும் ஏதோ யாரையோ நினைவு படுத்தியது..'ம்ம்..அந்த நடிகையின் சாயலில் இருக்கிறாள் இவள்..' என்று நினைத்தவாறு தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள். அதற்குள் துணி துவைக்கும் கல்லின் மேல் குதித்து ஏறி அமர்ந்தான் அஜய்.. பைரவியோ கிணற்று பிடி சுவற்றின் மேலே அமர்ந்து கொண்டாள்.

அதைப் பார்த்த வசந்த்", பத்திரம் பத்திரம்.. விழுந்துடப் போறேள்.. எங்காத்து கிணறு அதிகமா வத்தாது.. நிறைய தண்ணி எப்பவும் இருக்கும்.", என்று எச்சரித்தவனை பார்த்து சிரித்த மஹதி..

"டோன்ட் வொர்ரி.. எனக்கு நன்னா நீச்சல் தெரியும்.. நிறைய டிராஃபில்லாம் கூட வாங்கியிருக்கேன்.. அப்பப்போ டீப் சீ டைவிங்க் கூட போவேன்..", என்றவள்,

"அதிருக்கட்டும் வசந்த்.. உங்கக்கா ரொம்ப ஸ்வீட் இல்லை.. ரொம்ப அழகா இருக்கா.. ஏன் இன்னமும் கல்யாணம் பண்ணலை.. ஹேய் டோன்ட் மிஸ்டேக் மீ.. நான் அட்வான்டேஜ் எடுத்துக்கறாப் போலே தோணினா சொல்ல வேண்டாம்.. ஏதோ அவளை பார்த்தா கேக்கணும்னு தோணித்து", என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.