(Reading time: 17 - 34 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 22 - புவனேஸ்வரி கலைச்செல்வி

சுபாஷ் …டேய் சுபாஷ் ….” மகனை அழைத்துகொண்டேசமையல் அறையில் இருந்து வெளி வந்த,ஜானு பூஜை அறையில் அமர்ந்திருந்த மருமகளை பார்த்தார்.. இரண்டு மூன்று நாட்களாகவே இப்படி அடிக்கடி பூஜை அறையில் அமர்ந்து கொள்வது சைந்தவியின் வேலை ஆனாது.. ஜானகியின் கோபம் எல்லாம் சுபாஷின் மீதுதான்…கர்ப்பக் காலத்தின் பெண்  தாய் வீட்டில் இருக்க வேண்டும் என்று உரைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்..

கருவுற்று இருக்கும் பெண்ணின் மனதில் தேவை இல்லாத ஐயம் எழ கூடாது  என்று தான் அவளை தாய் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்..சுபாஷோ,சைந்தவியை  பிரியவே மாட்டேன் என்று விட்டான்..அவனுடைய  பாவமான பாவனையை பார்த்து  மனம் கறைந்தவளாய் சைந்தவியும்

“பரவாயில்லை அத்தை…நீங்களும் எனக்கு அம்மாதானே..?நம்ம குடும்பத்தின் முதல் வாரிசு நம்ம வீட்டிலேயே பிறக்கட்டும்’ என்று விட்டாள்.. மனைவி தன் மனம் அறிந்து நடப்பதை உணர்ந்த சுபாஷும், முடிந்த அளவு அவளைகண்ணுக்குள்  வைத்து பார்த்து கொண்டான்…

Enna thavam seithu vitten

இதோ  இப்போதும்,சைந்தவியின்  அருகில் தான் அமர்ந்து அவளுக்கு விசிறி கொண்டு இருந்தான் அவன்..

“டேய் சுபாஷ்..”

“என்னம்மா?”

“போதும்டா சாமியை  கும்பிட்டது…சைந்தவிக்கு எந்த நேரத்தில் வேணும்னாலும் வலி வந்திரும்ன்னு டாக்டர் சொல்லி இருக்கார்ல?இந்த  நேரத்தில் இப்படியே அவ ரொம்ப நேரம் உட்கார்ந்து இருக்க கூடாது டா கண்ணா..ரெண்டு பேரும் எழுந்து வாங்க”  என்றார் ஜானு கனிவாய் ..

விழிகளை மூடி இருந்த சைந்தவியின் கன்னத்தில் கண்ணீர் கோடுகலாய் இறங்கியது…

“சைந்து என்னடா ?” பதறியப்படி அவளது கண்ணீரை துடைத்தான் சுபாஷ்..அவர்களுக்கு தனிமையைகொடுக்க விரும்பி ஜானு திரும்பி சமையலறைக்கு சென்றார்..

“அத்தான் “

“என்னடா ? ஏன் அழற ?”

You might also like - Ennai edho seithu vittaai... A family drama...

“ தெரியல அத்தான்…ஏதோ  தப்பு நடக்குற மாதிரி இருக்கு…ரொம்ப வேண்டிய யாருக்கோ என்னவோஆகுற  மாதிரி தோணுது…”

“இல்லடா …அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது டா.. நம்ம பாப்பா வர போறாங்க… அதை நினைச்சு சந்தோஷப்படனும்..புரிஞ்சதா ?  அதை விட்டுட்டு வேறேதும் நினைக்க கூடாது…”

“ அத்தான் எனக்கு ஏதும் ஆகுமா அத்தான் ? எனக்கு எதாச்சும் ஆகிட்டா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்..”

“ஹேய் லூசாடி நீ ? அதான் டாக்டர்  தேன்நிலாவே  சொன்னாங்களே,உனக்கு  நார்மல் டெலிவரிதான்னு… அப்பறம் என்ன கவலை உனக்கு ?வேணும்னா அவங்களுக்கு  போன் போட்டு தரேன் பேசுறியா ?”

“இல்ல வேணாம் அத்தான்…அவங்க வேலையா இருப்பாங்க… நான் மட்டுமா அவங்க பேஷன்… பாவம்ல?”

“ம்ம்ம்ம் ஆமாடி கண்ணு,அதான்  சொல்றேன்ல,உனக்கு இங்கொருடாக்டர்  நான் இருக்கேன் கவலை வேணாம்னு” என்றப்படி மனைவியின் நெற்றியில் முட்டினான் சுபாஷ்…

“என்னங்க,எனக்கு சாஹித்யா கிட்ட பேசனும்”

“இதெல்லாம் அநியாயம்  அம்மு…இங்க  ஒருத்தன் குத்துக் கல்லாட்டம் உட்கார்ந்து இருக்கேன்..உன் கவனம் என்னை தவிற மத்த எல்லாரு மேலயும் இருக்கே”

“ச்சு,போங்க  அத்தான்….என்னமோ நான் உங்களை கவனிக்காமலே இருக்குற மாதிரி பேச வேண்டியது…அப்படியா ? என்னை எப்படி கவனிச்சிங்க மேடம் ? கொஞ்சம் டெமோகாட்டுங்க ப்லீஸ்”  என்றவாறு அவளை நெருங்கினான் சுபாஷ்….

“முதல்லசாஹித்யாவுக்கு போன் போட்டு கொடுங்க… நான் உங்களை கவனிக்கிறேன்….”

“அடடா இதோ மஹாராணி” என்றப்படி அவனது ஃபோனை எடுக்க  விரைந்தான் சுபாஷ்…

ந்த, சாலை நெரிசலின் மத்தியில் , மக்கள் கூட்டம் சற்று அதிகமாய்  தான் இருந்தது..ஒவ்வொருவரும்,ஒவ்வோர்விமர்சனகள்  கூற, ஆம்புலன்சின்  ஒலியில் சந்தோஷுக்கு மட்டும் சாஹித்யாவின் குரல் மட்டும்தான் காதில்கேட்டது…ரத்த வெள்ளத்தில் மொத்தமாய் மயங்கி இருந்தாள் அவள்..

“சந்தூ “ என்று எப்போதும் அவள் அவனை அழைப்பது மட்டுமே அவன் காதில் விழுந்தது… குழந்தைத்தனம் ததும்பும் அவள் முகத்தின் குருதி வழிந்தது… கோபத்தில் கூட முகம் சிவக்காதவள், இப்போது சிவந்த இரத்தத்தில் தனது முகத்தையே தொலைத்து இருந்தாள்.. அவளைஆம்புலன்சில் ஏற்றி கொண்டிருக்கையில்,சரியாய்  அவளது செல்ஃபோன் சிணுங்கியது.. இயந்திரத்தனமாய், அதை எடுத்து பார்த்தான் சந்தோஷ்…”சைந்து அக்கா”என்ற பெயரில்  சத்யாவும்  சைந்தவியும்  சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் திரையில் வந்தது… அதை எடுக்காமல் பாக்கெட்டில் போட்டபடி ஆம்புலன்சில் ஏறினான் சந்தோஷ்.. 

அவள் கைகளைதனது  கரங்களுக்குள் பொத்தி வைத்தான் சந்தோஷ்… மெல்ல  அவள் செவியொரம் சாய்ந்து பேச தொடங்கினான்..

“ஹேய் பொண்டாட்டி…. நான் பேசுறது உனக்கு கண்டிப்பா கேட்கும்…கேட்கனும்…! நீ என்னை விட்டு போக முடியாது ..! அதுக்கு நான்  அனுமதியே தர மாட்டேன் டீ… சா…..ஹி…..த்….யாஅ……. நான் உன் சந்தோஷ் கூப்டறேன்… நீ எங்க போயிடகிட்டு இருந்தாலும் திரும்பி பாரு ..நான் உன் பக்கத்துல உன்னொடு தான் இருக்கேன்… உன் கை என் கைக்குள்ள தான் இருக்கு …. நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்”

“..”

“எமன் இல்லை, வெற எவனுக்கு உன்னை தர மாட்டேன் டீ!” என்று நடுக்கத்துடன் கர்ஜித்தான் சந்தோஷ்….

“கொஞ்சம் நினைச்சு பாரு சத்யா… நான் உங்கிட்ட கொஞ்ச நேரம் முன்னாடி சொன்ன உண்மையை எல்லாம் நினைச்சு பாரு …நான் உனக்காவன் சத்யூ.. நீ எனக்கானவள்… தூங்காதே சஹி…. மயக்கமாகிடாதெ டீ பொண்டாட்டி… நான் உங்கூட தான் இருக்கேன்…. கார்ல நான் சொன்னதை நினைச்சு பாரு டா” என்று அவள் செவிகளுக்குள் குரலாய்  தனது உயிரையே அனுப்பி வைத்தான் சந்தோஷ்…சற்று முன் காரில் பேசியது, இப்போது மீண்டும் அவளுக்காக உரைக்க தொடங்கினான் சந்தோஷ்…! அவளை விட்டுகொடுப்பதாய் இல்லை என்றபிடிவாதம்  அவனுக்குள் தீயாய் எழுந்தது…

ங்களை மன்னிச்சுட்டியா வானதிம்மா ?”மகளின் தலையை வருடிக்கொண்டே ஆசையாய் கேட்டார் அவளது  அம்மா ..

“ ஏன் அம்மா  பெரிய  வார்த்தை எல்லாம்..எனக்கு உங்க மேல , கோபம் என்பதை விட வருத்தம் தான் அதிகம் …ஆனா,இப்போ என் மனசுல எதுவுமே இல்லை அம்மா…அரவிந்த் அண்ணா கூட நம்மை பார்த்து சந்தோஷப்படுவார் பாருங்க “ என்றாள்  வானதி கண்ணீருடன்..

“எல்லாத்துக்கும் காரணம் கிரி தம்பியும், அருள் தம்பியும்தான் “என்று அவளது அம்மா பூரித்து போனார்.. அருளின் பெயரை கேட்டதும் வானதியின் முகத்தின் நாணம் குடிக்கொண்டது… அதை கண்டுகொண்ட அவளது தாயாரும் நிம்மதியாய் புன்னகைத்தார்..

“அ….ஆஅமா, அருள் எங்கம்மா ?” என்றபடி வரவேற்ப்பறையை பார்த்தாள்வானதி.. “அடடே நானும்  உன்னை பார்த்த சந்தோஷத்தில் மாப்பிள்ளைய கவனிக்காம போயிட்டேனே”   என்றவர் வாசலில்காரை  காணாமல்  புருவம் உயர்த்தினார்..

“மாப்பிள்ளை கெளம்பிட்டார் போல வானதிம்மா “

“என்னம்மா சொல்லுறிங்க ? அதெல்லாமிருக்காது…. அவர் என்  கிட்ட சொல்லாம கெளம்ப மாட்டார்” என்றபடி போனை எடுத்தாள்…வாகனங்கள் இங்கும் அங்கும் மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த சாலையில் அரை மயக்கத்தில் இருந்தான் அருள்…அந்த வலியிலும், வானதிக்காக வாங்கிய புடவையை நெஞ்சோடு இறுக்கி கொண்டான்.. சற்று நேரத்திலே அங்கு ஆம்புலன்ஸ்  வந்துவிட  சரியாய் அவனது கைப்பேசி, அங்கு இருந்த தாதியின் கையில் கிடைத்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.