(Reading time: 12 - 23 minutes)

19. நேசம் நிறம் மாறுமா - தேவி

னவு கண்டதிலே -- ஒரு நாள் கண்ணுக்குத் தோன்றாமல்,

இனம் விளங்கவில்லை, -- எவனோ என்னகந் தொட்டு விட்டான்.

வினவக் கண்விழித்தேன்; -- சகியே, மேனி மறைந்துவிட்டான்;

மனதில் மட்டிலுமே – புதிதோர் மகிழ்ச்சி கண்டதடீ.

                                                பாரதியார்

Nesam niram maaruma

தியின் “நான் எப்படி வேறோர் திருமணத்திற்கு சம்மதிசிருப்பென்னு நினைச்சீங்க?” என்ற கேள்வியில் அவளை பார்த்த ஆதி, அவளை இழுத்து தன்னோடு அணைத்தவன்,

 “நீ பிறந்த போது என்னிடம்  உன்னை காட்டி என் அம்மா. இந்த பாப்பா பேர் வெண்மதி. நீதான் பாப்பாவ பத்திரமா பார்த்துக்கணும் னு சொன்னங்க. அன்னிலேர்ந்து உனக்கு எல்லாமே நான் தான்னு தோணும். உன்னோட விளையாடுறது, நீ அழுதா சமாதானப் படுத்தறது என்று என்னுடைய பொழுதுகள் எல்லாமே உன்னோடுதான் கழியும்.

சூர்யாவும், வந்தனாவும் பிறந்த போது அவங்க கூட எல்லாம் எனக்கு அந்த உரிமை தோணினது இல்ல. சூர்யா பெரும் பாலும் அம்மாவை ஓட்டிகிட்டு இருப்பான். அதனால என்னையே உங்க அம்மாதான் அப்பவெல்லாம் கவனிச்சாங்க.

உங்க அப்பா வேலைக்காக வெளியூர் போன போது கூட உன் மேல எனக்கிருந்த அந்த உரிமை உணர்வு அப்படியேதான் இருந்தது. நாம வருஷம் ஒரு தடவை பார்த்தா கூட நீயும் நானும் சேர்ந்தேதான் இருப்போம்.

உனக்கு ஞாபகம் இருக்காணு தெரியல. நான் பாட்டு கத்துக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பாரதியார் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதெல்லாம் ஊருக்கு வரும் போது நான் உனக்கு பாடி காட்டுவேன். நீயும் அதை உனக்கு சொல்லி தர சொல்லி என்னோடு சேர்ந்து பாடுவ.

அப்போ உன்கிட்ட நான் “ நீ இந்த பாட்டு திரும்பி பாடாமல் ஆடினா நல்லாருக்கும்னு சொன்னேன்.

அதுக்கு அடுத்த வருஷம்தான் நீ வந்து எனக்கு அந்த பாட்டுக்கு ஆடிக் காமிச்ச. அப்போ எனக்கு நான் சொன்னதுக்காக டான்ஸ் கத்துகிட்டு வந்து நீ ஆடின சந்தோஷத்திலே உன்னை பாராட்டும் விதமா நான் உன் கன்னத்திலே முத்தமிட்டேன். அது அம்மா தன் குழந்தையை மத்தவங்க பாராட்டும்போது மகிழ்ச்சியில் குடுக்குற முத்தம் மாதிரிதான்.

ஆனா அதை அத்தை தப்பா எடுத்துகிட்டதோடு இல்லாம, மத்தவங்களையும் அதே மாதிரி நினைக்க வைச்சுகிட்டங்களே னு ரொம்ப வருத்தம். அதோட நீயும் அழவும் ஒரு மாதிரி ஆகி அதற்கு பிறகு அன்றைக்கு யாரிடமும் பேசாமல் இருந்தேன்.

You might also like - Vasantha bairavi... A neat family story...

அதற்கு பிறகு நடந்ததைத்தான் இப்போ எல்லோரும் பேசினோம். அதற்கு பிறகு உன்னை பற்றிய எந்த விஷயமும் நான் கேட்டுகல. ஏன்னா உன் பேர் கேட்டாலே எனக்கு உன்னை பற்றிய எண்ணங்கள் தோணும். அதோட அந்த சம்பவமும் நினைவுக்கு வரும். அதனால் இன்னும் கோபம் ஜாஸ்தியாக வரும்.

அதற்கு பிறகு அப்படியே என்னுடைய படிப்பு, மேற்படிப்பு எல்லாம் போக போக உன்னை நினைக்காமல் இருக்க பழகி கொண்டேன். எல்லாம் முடித்து தொழிலும் செய்ய ஆரம்பித்த போது தான், அத்தை மதிக்கு கல்யாணம் என்ற பேச்சை ஆரம்பித்தார்கள், என்னுடைய அன்றைய மன நிலை இன்னும் ஞாபகம் இருக்கிறது” என்றவன், கனவில் சொல்வது போல் பேச ஆரம்பித்தான்.

“என் வினுவிற்கா கல்யாணம். அட வினு அவ்வளவு பெரியவள்  ஆகி விட்டாளா என்று எண்ணும் போதே அவன் மனம் அவனிடம் “ஏன்டா .. உனக்கு 27 வயசு ஆச்சின்னா அவளுக்கும் 24 வயசாகாதா? என்றது.. அட ஆமாம் இல்ல... இப்போ அவ எப்படி இருப்பா .. என்று யோசிக்கும் போது குதிரை வால், பிங்க் கலரில் அப்போ பிரபலமாயிருந்த நதியா மிடி போட்ட உன் சிறு வயது முகம் தான் ஞாபகம் வந்தது. அன்று முழுவதும் என்னால் ஒரு வேலை செய்ய முடிய வில்லை.

அது மட்டும் இல்லாமல் , மனதுக்குள் அப்போ இனிமே அவள் என்னோட வினு இல்லியா ? அவள எல்லோரும் கூப்பிடற மாதிரி நானும் மதின்னு கூப்பிடனுமா ? அவள் கிட்ட நான் டிஸ்டன்ஸ் மைண்டைன் செய்யனுமா என்ற எண்ணமே இருந்தது.

அப்போ மனசாட்சி “அடேய் மடையா .. இப்போ மட்டும் நீ என்னவோ அவளுக்கு நெருக்கமா இருக்கற மாதிரி பேசற.. நீதான் பதினைந்து வருஷமா அவள பார்க்கல .. .பேசல.. அட்லீஸ்ட் அவள் என்ன பண்றானு கூட கேட்டுகல. இப்போ வந்து இப்படி சொல்ற? “ என்றவுடன், என்னால் வேதனை தாங்க முடிய வில்லை.

இத்தனை நாள் அவளை பார்க்காமல், எல்லார்கிட்டயும் கோபமா இருந்துட்டு இப்போ எப்படி யார்கிட்ட கேட்கிறதுனு புரியாம, என் வேதனை, வருத்தம் இதெல்லாம் அடக்கிட்டு சாதரணமா நடிச்சுக்கிட்டிருந்தேன்.

அப்போ கூட அவள் கல்யாணத்திற்கு யாரும் என்னை கூப்பிடவில்லையே. அந்த அளவுக்கு நான் வேண்டாதவனா என்று வேறு கவலை. திருமணத்திற்கு போய் விட்டு வந்த அப்பா அம்மா வேற நல்ல ஜோடி, காதல் கல்யாணம் என்று எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கவே என் கோபம் அதிகமாகி விட்டது.

இத்தனை வருஷம் அவளை பார்க்கலனால் கூட என்னால அவள மறக்க முடியல. ஆனா அவளுக்கோ கல்யாணமே ஆகிடிச்சு .. இந்த எண்ணம் தோன்றும் போது தான் , அவளுக்கு என்னை எப்படி நினைவு இருக்கும்? ஊருக்கு அவள் வருகிறாளா என்றாவது பார்த்திருக்கலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.