(Reading time: 15 - 29 minutes)

24. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ல்லாரும் சென்னைக்கு கிளம்பலையா ?" என்று கேட்டான் ஆதிஷ்வர்.

" சென்னைக்கா எதுக்கு ? " என்று ஷக்தி கேள்வியுடன் மித்ராவை பார்க்க, மித்ரா வைஷ்ணவியை பார்க்க , ஆர்வகோளாரில் கணவனின் காலுக்கு பதிலாக மித்ராவின் காலை மிதித்தாள்  அவள் ..

" ஸ்ஸ்ஸ் ..ஆ அக்கா .. வலிக்கிறது " என்று மித்ரா குதிக்க , வயிற்றை  பிடித்து கொண்டு சிரித்தான் ஷக்தி ..

Ithanai naalai engirunthai

" டேய் மாமா சிரிக்காத "

" ஹீ ஹீ .."

" ப்ச்ச்ச் .. சிரிக்காதன்னு சொல்றேன்ல ?"

" ஹா ஹா "

" ஷக்தீ " என்று தீயாய்  அவள் முறைக்கவும் , சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டான் அவன் ..

" என்ன நடக்குது ? ஏதாவது சர்ப்ரைஸ் ஆ ?" என்று மிதுவை பார்த்து கேட்டான் ..

" ஹும்கும் சாதாரணமா கேட்டாலே உன் தங்கச்சி நல்லா உளறுவா , இதுல இவர் ரொமாண்டிக்  லுக் விடுறார் .. இன்னைக்கு உன் தங்கச்சி உளறி வைக்கிறதுல எல்லா ப்ளான்னும்  சொதப்ப போகுது பாரேன் " என்று காது கடித்தான்  ஆதிஷ்வர் .

"யாரு , என் தங்கச்சி உளறி கொட்ட போறாளா ? வீட்டுக்கு வாங்க யாரு உளறினான்னு சொல்லுறேன் " என்று அடிக்குரலில் மிரட்டினாள்  வைஷூ ..

" சொல்லு டீ, ஏதாச்சும் சர்ப்ரைஸ்ஸா  ? " என்று விடாமல் கேட்டான் அவன் .. வைஷ்ணவி அதற்குள் மித்ராவை கிள்ளி  வைக்க

" ஆங் .. அதெல்லாம் ஒண்ணுமில்ல டா.. இவங்க ரெண்டு பேரும்  என்ன பேசுறாங்கன்னே  தெரியல .. நான் காபி கொண்டு வரேன் .. நீயே இவங்களை கேட்டுக்க " என்று படபடவென பதற்றத்தில் பேசிவிட்டு அவள் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்  ..

" காபி போடுறேன்னு , பெட்ரூமுக்கு போறியா அத்தை பொண்ணு ?" ஷக்தியின் குரல் அவளை பின் தொடர்ந்தது .. " அட ச்ச .. மக்கு மக்கு " என்று தன்னையே திட்டி கொண்டு அவள் திரும்பவும் ஷக்தி அவள் பின்னால் நிற்கவும் , அதை கவனிக்காமல் அவன் மீது வேகமாய் மோதி தடுமாறிபோனாள்  சங்கமித்ரா .. அவளை தாங்கி பிடித்து கண் சிமிட்டினான் ஷக்தி ..

" ஷக்தீ "

" ம்ம்ம் "

" விடு நான் காபி போடணும் "

" காபி அம்மா போட்டு தருவாங்க "

" எனக்கு அக்காகிட்ட பேசணும் "

" சரி போ , அதுக்கு முன்னாடி என்ன விஷயம்ன்னு சொல்லிட்டு போ "

" எனக்கு ஒன்னும் தெரியாது "

" ஆஹான் "

" ஹான் ஜீ" என்று இமைகொட்டினாள்  மித்ரா ..

" சரி, சொல்ல மாட்டல ? அப்போ நான் எங்கயும் வரமாட்டேன் .."

" வராட்டி போடா ..நான் போறேன் " என்று நடந்தாள்  மித்ரா.. அவள் செல்வதாய் இருந்தால் , அவனும் உடன் வருவான் என்ற நம்பிக்கையில் ..

" என்னை தனியா விட்டுட்டு போயிருவியா நீ ?" என்று உல்லாசமாய் சிரித்தான் ஷக்தி .. உதடுகள் துடிக்க, கண்களில் அனல் பறக்க  அப்படியே தலையில் ரெண்டு கொட்டு வைத்தால் என்ன ? என்பது போல யோசித்தாள்  மித்ரா ..

" சான்ஸ் ஏ  இல்ல " என்றான் ஷக்தி .. அவன் சொல்வது புரியாமல்

" என்ன ?" என்றாள் ..

" இல்ல , இவ்வளவு குள்ளமாய் இருந்துகிட்டு , என்னை கொட்டனும்னு  நினைக்கிறது எல்லாம் பேராசை ..அதுக்கு சான்ஸ் ஏ  இல்ல " என்று ஷக்தி கூறவும் அவனை மீண்டும் முறைத்தாள்  மித்ரா ..

" பனைமரம் மாதிரி வளர்ந்தா , உனக்கு அமிதாப் பச்சன் கூட குள்ளமா இருக்குற மாதிரி தான் இருக்கும் மாமா .. " என்றாள் ..

" சரி சரி ..சென்னைக்கு கிளம்பலையா ? போ போயி ட்ரெஸ் மாத்து " என்றபடி தலைவார ஆரம்பித்தான் ஷக்தி ..

" என்ன இவன் ? என்ன ஏதுன்னு  கேட்காமல்  கிளம்புறானே , இந்த அன்பு லூசு எதாச்சும் உளறி இருப்பானோ ? " என்று யோசித்து கொண்டே தயாரானாள்  மித்ரா .. எப்படியோ அவன் தன்னோடு வந்தால் போதும் என்றே தோன்றிட,  அதன்பின் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் மொத்த குடும்பமும் தயாராகி கிளம்பினர் .

ன்று சற்று சீக்கிரமாகவே வேலையை முடித்து விட்டு கிளம்ப தயாரானாள்  காவியதர்ஷினி .. ஷக்தி  மித்ரா குடும்பத்தினர் அவளது வீட்டில் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தாள் . அன்பெழிலன் அவர்களை கவனித்து கொள்ள, இவளுக்குத் தான் இருப்புக்கொள்ளவில்லை .. கடிகாரத்தையே ஆயிரம் முறை பார்த்தவள், மணி 4 என்று காட்டியதுமே அனுமதி கேட்டுவிட்டு கிளம்ப , அவள் ஸ்கூட்டி அருகே வந்து நின்றான் கதிர்.

" ஹாய்  கதிர் சார் " என்றாள்  காவியா இயல்பாய் .. அவள் சார் என்று அழைத்ததில் அவன் முகம் சுளிக்க, அக்கம் பக்கம் பார்த்து விட்டு, " இல்ல நான் பாட்டுக்கு உங்களை உரிமையாய்  கதிர்ன்னு கூப்பிட்டு அதை யாரும் பார்த்துட்டு தப்பா பேசிடுவாங்களே .. நீங்கதான் இந்த விஷயத்துல ரொம்ப கறார் ஆச்சே அதான் " என்றாள்  காட்டமாய் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.