(Reading time: 5 - 9 minutes)

04. ஊனமறு நல்லழகே - ப்ரியா

ஸ்ரவந்தியின் மிரண்ட விழிகளுக்குள் தெரிந்த தன் முகத்தை வெகு தீவரமாய் ஆராய்ந்து கொண்டிருந்தான் மிதுர்வன். அவன் பார்வையின் தாக்கம் குறையாமல் போக மெல்ல விழிகளை தளர்த்தியவளின் முகத்தில் மென்மையின் சாயல். மையலுடன் அவனை மீண்டும் அவள் பார்க்க, அவன் பிடி கொஞ்சம் இறுகியது.

சட்டென்று ஏற்பட்ட மிரட்சியுடனும் சிறு எரிச்சலுடனும் துள்ளி குதித்து படுக்கையை விட்டு எழுந்தாள் ஸ்ரவந்தி.புருவங்கள் முடிச்சிட எழுந்தமர்ந்த மிதுர்வனுக்குள்ளும் எரிச்சல். முகத்தில் கோபத்தின் ரேகைகள்.

அவள் புறம் திரும்பாமல்,

oonamaru-nalazhage

"ஐயம் சாரி" என கூறி விடு அவன் காத்திருக்க, அவளிடம் மௌனமே பதிலாய் வந்தது. இன்னமும் கோபம் தலைகேற திரும்பியவனின் பார்வை வட்டத்திற்குள் அவள் இல்லை.

"ஒ அப்போவே போயிட்டாளா?", வாய் விட்டு கூறியவன் ஒரு பெருமூச்சுடன் மாடியிலிருந்து கீழிறங்கினான். டைனிங் டேபிளில் அமர்ந்து மதுமதி ஏதோ பேசிய படி இருக்க அதற்கு தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு சரளா தந்த காப்பியை வாங்கி கொண்டு மாடிப்படிகளை நோக்கி வந்தால் அவள். அவள் அவனை பார்க்கும் முன் சட்டென இரண்டு படிகளாய் தாவி ஏறி தங்கள் அறைக்குள் சென்று விட்டான் மிதுர்வன்.

அவளிடம் பேசிவிட வேண்டும் தீர்மானித்திருந்தான். அறைக்குள் அமைதியாக பிரவேசித்தவள் அவன் கைகளில் காபி கோப்பையை கொடுக்க, வாங்காமல் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான் அவன்.

"ம்ம்ம் ஹ்ம்ம்" லேசாக தொண்டையை செருமிய படி அவனை அவள் ஓரக்கண்ணால் பார்க்க, இந்த இனிய கண்ணாமூச்சி ஆட்டத்தை நடந்ததை பற்றி பேசி அவன் கலைக்க விரும்பவில்லை.

அவள் கைகளை வருடிய படி காபி கோப்பையை வாங்கி கொண்டவன், அவள் செல்ல எத்தனிக்கும் முன் அவள் கையை மற்றொரு கையில் பிடித்தபடி காப்பியை மெதுவாக ரசித்து குடித்து முடித்தான்.

அவன் காப்பியை குடிக்கும் வரையிலும் அகப்பட்டு கொண்ட தன் கையை விடுவிக்க முடியாமல் அவள் போராட அதில் தோல்வியை தான் தழுவ முடிந்தது.

கோப்பையில் அருகில் இருந்த டீப்பாயில் வைத்தவன், அவளை ஏறிட்டான்.அவள் விழிகளின் தவிப்பு ஏனோ ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்த, அவள் பார்வை மெல்ல அந்த அறையின் ஒவ்வொரு பொருளாய் அப்பொழுது தான் ஆராய்ந்து கொண்டிருந்தது.

"உன் கைய விடணும்னா நான் உன்கூட கொஞ்சம் பேசணும், அது வரைக்கும் நீ ஓடாம நிக்கணும், உனக்கு ஓகேனா நான் விடறேன்" மெதுவாக சொன்னான் மிதுர்வன்.

அவளிடம் பதிலில்லை.

"அப்போ நான் விட முடியாது, முடிஞ்சத பண்ணிக்கோ" இப்பொழுது குரலில் சற்று கடினமும் திமிரும்.

அவன் காப்பியை குடிக்கும் வரையிலும் அகப்பட்டு கொண்ட தன் கையை விடுவிக்க முடியாமல் அவள் போராட அதில் தோல்வியை தான் தழுவ முடிந்தது.

கோப்பையில் அருகில் இருந்த டீப்பாயில் வைத்தவன், அவளை ஏறிட்டான்.அவள் விழிகளின் தவிப்பு ஏனோ ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்த, அவள் பார்வை மெல்ல அந்த அறையின் ஒவ்வொரு பொருளாய் அப்பொழுது தான் ஆராய்ந்து கொண்டிருந்தது.

"உன் கைய விடணும்னா நான் உன்கூட கொஞ்சம் பேசணும், அது வரைக்கும் நீ ஓடாம நிக்கணும், உனக்கு ஓகேனா நான் விடறேன்" மெதுவாக சொன்னான் மிதுர்வன்.

அவளிடம் பதிலில்லை.

"அப்போ நான் விட முடியாது, முடிஞ்சத பண்ணிக்கோ" இப்பொழுது குரலில் சற்று கடினமும் திமிரும்.

தவிப்பின் பிடியில் ஸ்ரவந்தி.

யோசித்து மெல்ல மெல்ல திக்கி பேசினாள்.

"எ..என்ன பேசணும்?"

"ம்ம்ம்ம் இப்படி உட்காரு சொல்றேன்"

"இ.. இல்ல ப..பரவ..ல்ல"

"பயப்படமா உட்காரு உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன் வேணும்னா உன் கையை விட்டுடறேன்"

என சொல்லி கொண்டே அவன் பிடியை தளர்த்த விடுபட்ட கையை பிடித்து கொண்டு அவனுக்கு இடைவெளி விட்டு அமர்ந்தாள் ஸ்ரவந்தி.

"நான் ஏன் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன் தெரிய வேண்டாமா உனக்கு?"

அவள் பதில் பேசாமல் அவனை பெரு பார்வை பார்த்து திரும்பி கொண்டாள். அடிபட்ட பார்வை. அதனை வலி பார்வையில் மிதுர்வன் சட்டென்று எழுந்து கொண்டான்.

அவன் மீதே அவனுக்கு கோபம். எப்படி இவளுக்கு புரிய வைப்பான். ஏதேதோ யோசித்து கொண்டு சுவர் அருகில் சென்றவன் அதில் ஓங்கி குத்த, மாட்டியிருந்த புகைப்படம் ஒன்று கீழே விழுந்து அந்த பிரேம் கண்ணாடி சில்லு சில்லாய் உடைந்தது.

பயத்தில் தூக்கி வாரி போட எழுந்தால் ஸ்ரவந்தி. வேகமாக அவன் அருகில் ஓடி அவன் கையை பார்க்க நினைத்து இரண்டடி எடுத்து வைக்க காலில் கண்ணாடி துண்டு ஏற அப்படியே அமர்ந்து விட்டாள்.

மிதுர்வன் இதை எல்லாம் பார்க்கும் நிலையில் இல்லை, உடைந்த சட்டத்திற்குள் அமைதியை அழகாய் சிரித்து கொண்டிருந்த அந்த பெண்ணின் மேல் இருந்தது அவன் பார்வை.

மிகவும் அழகான பெண்.. இளம் வயது கண்களில் துறுதுறுப்புடன்.. அவன் குனிந்து அதை கையில் எடுக்கும் நேரம் மதுமதியும் சரளாவும் அரை வாயிலை அடைந்திருந்தனர்.

"ஐயையோ சரோ என்னடா என்னமா ஆச்சு?" என்று பதறி கொண்டே அவள் காலை பற்றி பார்த்த மதுமதி மிதுர்வனை பார்க்க, அவன் அப்போது தான் ஸ்ரவந்தியை பார்த்தான்.

"அது ஒண்ணுமில்ல அத்தம்மா சும்மா லேசா.. நான் தான் பார்க்காம.." என அவள் திணற அவள் அத்தம்மா என்று இயல்பாக அழைத்ததை இருவருமே குறித்து கொண்டனர்.

"சரளா போய் மருந்து எடுத்துட்டு வா, அப்படியே பூஜாவா வர சொல்லு இத எல்லாம் சுத்தம் பண்ணட்டும்" என சொல்லி கொண்டே அவள் காலில் இருந்த கண்ணாடி சில்லை அகற்றினார்.

ரூமை பூஜா சுத்தம் செய்து விட்டு சென்ற பின்  சரளா உதவி செய்ய ஸ்ரவந்தி தடுத்தும் அவளுக்கு மருந்தை தானே போட்டு விட்டதும் தான் நிம்மதி ஆனார் மதுமதி.

அது வரையிலும் அவள் அருகிலும் மிதுர்வன் செல்லவில்லை யாருடனும் பேசவும் இல்லை. யார் புகைப்படம் உடைந்தது என்றதை பார்த்தபின் மதுமதியும் எதுவும் கேட்கவில்லை.

அதன் பின் அவளை தன்னோடு அழைத்து சென்று விட்டார் மதுமதி. மிதுர்வனுக்கும் தனிமை தேவைபட்டது.

எவ்வளவு அழகாய் விடிந்த நாள் அது..!! சற்று நேரத்தில் அனைத்தும் தலைகீழ் !!

தொடரும்…

Episode # 03

Episode # 05

{kunena_discuss:804}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.