(Reading time: 16 - 32 minutes)

06. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

டுக்கையில் போய் விழுந்த மனோஹரிக்கு தூக்கம் தான் வரவில்லை. ஒரு நொடி அவனை மொபைலில் அழைக்கலாமா என்று கூட தோன்றியது. அத்தனையாய் அவனைப் பற்றிய  அலைநிலை பெண் மனதில்.

அவன் அருகில் இல்லாமலே இப்படி அவன் எண்ணங்கள் பந்தாடுதே….இதில் அவனிடம் பேசினால் கதை என்னவாகும்….? ஆமா நாளைக்கு அவன் ஐ லவ் யூ சொன்னா நீ வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிப்பியா?.... புது புதிதாக பயம் வருகிறது பெண்மைக்குள்.

ஓ மை காட் இதெல்லாம் நான் முன்னால யோசிச்சதே இல்லையே…..

இருப்பு கொள்ளாமல் என்ன செய்யவென்றும் தெரியாமல்…. மீண்டுமாய் எழுந்து வெளியில் வந்தாள். மாடிப் படியில் இன்னும் வெளிச்சம் இருப்பதாக தோன்ற அந்த பக்கம் சென்றாள். யாரா இருக்கும்.?

அம்மா மற்றும் அகதனின் குரல். ஆஹா அண்ணன் காதல் காவியம் ஓடுதா…போய் அந்த கதையை கேட்கலாம்…. என நினைத்தபடி இவள் அங்கு போக அருகில் செல்லவும் காதில் விழுகிறது அம்மாவின் குரல்…

“அப்டில்லாம் அப்பா யோசிக்காம சொல்லிடுவாங்களா அகி…?” அம்மா அகதனுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

 அதெல்லாம் நீ காலைல அப்பாட்ட பேசுறப்ப மித்ரன்னு  பயோசி சி .இ. ஓ கூட நீயும் மகியும் ஹோட்டல் போனதால ஆஃபீஸ் போறது கொஞ்சம் லேட் ஆகிட்டுன்னதுமே அப்பாக்கு கொஞ்சம் தோணிட்டு….. உன்னை அதான் அங்க நடந்ததைப் பேசவிட்டு கேட்டுகிட்டு இருந்தாங்க….  “

வாசலை அடைந்த மனோஹரி அங்கேயே நின்றுவிட்டாள். என்னல்லாம் நடந்திருக்குன்னு பார்ப்போமே…

“அகதன் சொல்றதைப் பார்த்தா அந்த மித்ரனுக்கு நம்ம மகி மேல இஷ்டம் இருக்கும்னு தோணுது…. இது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு தெரியலையே….பெரிய இடத்து பையங்க மனமும் குணமும் எங்க எப்படி போகும்னு சொல்ல முடியாது… ன்னு சொல்லிட்டு இருந்தாங்க.

ஏற்கனவே இன்னைக்கு வியாழக் கிழமை இல்லையா….சர்ச்ல 11 மணி ப்ரேயர்க்கு போவமே…அதுக்கு போயிருந்தோம்…. உங்க ரெண்டு பேர் மேரேஜ் பத்தி தான் மெயினா ப்ரேயர் பண்ண போனதே….அப்பா ரிடயர் ஆகியாச்சு… நீங்களும் ரெண்டு பேரும் படிப்பு முடிஞ்சு வேலைக்கும் போயாச்சு…இந்த வருஷதுக்குள்ள உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜையும் முடிச்சுட்டா எங்களுக்கு ஒரு நிறைவு வந்துடுமில்லையா….

என்னமோ சர்ச்லயுமே இன்னைக்கு மெயினா ப்ரேயர் மேரேஜை பத்திதான்…. அடுத்து பாஸ்டரைப் பார்த்து மனோக்கு ஏத்த ப்ரோபோஸல் எதுவும் இருக்குதான்னு கேட்கலாம்னு போனோம்…… எங்களுக்கு முன்னால பாஸ்ட்டர்ட்ட பேசிகிட்டு இருந்தது மித்ரன் தம்பி…”

“வாட்?...ஆனா அவரை உங்களுக்கு தெரியாதே…..”

“ம்….அப்ப அது  தெரியாதுதான்….. அவர் எங்களைப் பார்க்கவும் இல்லை…..ஆனா அவர் பேசிகிட்டு இருந்தது மனோவைப் பத்தினு எங்களுக்கு புரிஞ்சுதே…..நம்ம வீட்டைப் பத்தி தான் விசாரிச்சுகிட்டு இருந்தார்…. எனக்கு அவங்க பொண்ணை மேரேஜ் செய்து தர ஒத்துப்பாங்களான்னு கேட்டுகிட்டு இருந்தார்….அடுத்து அவர் போனதும் பாஸ்ட்டர்ட்ட பேசுனோம்…. மாப்பிள்ளைய பாஸ்டருக்கு நல்ல பழக்கம் போல….அவர் சொன்னது திருப்தியா இருந்துச்சு….ஜெபம் பண்ணோம்……இது தான் கடவுள் சித்தம்னு தெரிஞ்சுது….. ஹாஸ்பிட்டல்லயும் அவர் நடந்துகிட்ட விதம் அப்பாவுக்கு ரொம்பவே பிடிச்சிது….. நாம பொண்னு கொடுக்க போறது அவருக்குத்தான்….பையன் கடவுளுக்கு பயப்படுற நல்ல பையனா…அவளை வச்சு வாழற அளவுக்கு இன்டிபென்டன்டா இருக்காங்களான்னு தான் பார்க்கனும்……பைபிள்ளயே அப்படித்தான இருக்கு…? மத்தபடி ஒரு குடும்பத்துல உள்ள எல்லாரும் நல்லவங்களா இருந்தாதான் பொண்ணு கொடுக்கலாம்னு இல்லையேப்பா….ஓரு ஆர்ஃபனேஜ்ல வளர்ந்த பையன் நல்ல பையனா இருந்த பொண்ணு கொடுக்க கூடாதுன்னு கடவுள் சொல்லுவாரா? அவர் வீட்ல இருந்து நாங்க எதையும் எதிர்பார்க்கலை…அவர் நல்ல வேலைல இருக்கார்…..பரம்பரை சொத்தை நம்பி இல்லை…..நல்ல குணம்…மனோவை அவருக்கு பிடிச்சிருக்குது…எல்லாத்துக்கும் மேல கடவுள் சொல்ற இடத்துல இருக்றதுதான் நமக்கு சேஃப்…மனோக்கு அதுதான் இடம்னா அவ அங்க இருந்தாதான் நமக்கு நிம்மதி….  ”

“நான் தான் மகிய குழப்பிட்டனோ…தேவையிலாம அவங்க மேரேஜை லேட்டாக்கிட்டனோமா?...நான் அவட்ட நாளைக்கு சொல்லிடட்டுமா?” அகதன் கன்வின்ஸாகி இருப்பது மனோவுக்கு புரிகின்றதுதான்.

“சே..இல்லடா…இதெல்லாம் அவ ப்ரேயர் பண்ணி அவளா டிசைட் பண்ணட்டும்…..நம்ம முடிவை அவ மேல திணிக்கிறமாதிரி ஆகிடக் கூடாது…..”

மனோ இப்பொழுது யோசனையுடன் தன் அறைக்கு திரும்பினாள்…… மித்ரன்  வீட்டைப் பத்தி அவளுக்கு என்ன தெரியும்? எது எப்படியோ எந்த சூழ்நிலையிலும் அவனை தனியாளாய் விடப் போவதில்லை இவள்.

இந்த முடிவுக்குத்தான் மறுநாள் வந்தது சோதனை…..   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.