(Reading time: 12 - 23 minutes)

04. என் மனதை தொட்டு போனவளே - VJ G

சிறிது நேரம் கழித்து வந்தான், அவர்கள் கொடுத்த ஆர்டர் வந்திருந்தது, ‘ஏன் நீங்கள் சாப்பிட ஆரம்பித்திருக்கலாமே?’என்று  கூறி அவரவர் டிபனை சாப்பிட ஆரம்பித்தார்கள்,

‘ருத்ரா, நான் அம்மாவிடம் பேசிவிட்டு, உங்கள் வீட்டுக்கு பெண் பார்க்க வருகிறேன், நீங்களும் வீட்டில் சொல்லிவிடுங்கள்,’ என்றான் குமார்

சந்தோஷமாக சிரித்துக் கொண்டே தன் தங்கையின் தலையை தடவிக்கொடுத்து, 'என்னடா?' என்றான்

en manathai thottu ponavale

அவள் கண் கலங்கி 'என் தப்பை, சொல்லிவிட்டேன் அண்ணா...' என்றாள்

அவனும் கண் கலங்கினான், 'தேங்க்ஸ்!' என்று குமாரைப் பார்த்து சொன்னான்

இது எங்க வீட்டில் யாருக்கும் தெரியாது, என்னையும், எங்கள் தாத்தாவைத் தவிற!' என்றான்

'என்ன சொல்றேண்ணா, தாத்தாவுக்குத் தெரியுமா, என்னை ஒரு வார்த்தை கூட கேக்கலையே?'என்றாள் வனிதா

'அதான் தாத்தாவின் குணம்..' என்றான் அண்ணன்

'சரி, இன்னிக்கே நான் தாத்தாவிடம் பேசறேன்..' என்றான் ருத்ரா

'அவள் கல்யாணத்துக்கு அப்புறம் படிக்கணும் என்றாள், நான் சரி என்று சொல்லிவிட்டேன், எனக்கும் அவள் படித்தால், சந்தோஷம் தான்,' என்றான் குமார்

'குட்!' என்றான் ருத்ரா, பிறகு, சிறிது நேரம் பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள் ….சாப்பிட்டவுடன் கிளம்பலாம் என்று சொல்லிவிட்டு , நான் முன்னால் போகிறேன்  நீங்கள் இரண்டு பேரும் பேசிவிட்டு வாருங்கள்...” என்று கிளம்பினான் ருத்ரா

“என்ன ரொம்ப பார்மாலிடீஸ் பாக்கறீங்க, ஹோட்டல்ல என்னங்க பண்ண முடியும், ஒன்னாவே போகலாம் வாங்க,” என்ற குமார்  சொல்ல வனிதாவுக்கு வெட்கம் வந்தது,” பரவாயில்லை ரெண்டு பேரும் பேசிவிட்டு  வாருங்கள்' என்று விடு விடு என்று முன்னால் போய் விட்டான்.

சிறிது நேரத்தில் இருவரும் வெளியே வந்தவுடன் அவனுடைய பைக் இருந்த இடத்திலிருந்து கிளப்பினான், குமார் அவளைக் கூட்டிக் கொண்டு வந்து அவள் பைக்கில் ஏறும் வரை இருந்து, கை ஆட்டிவிட்டு கிளம்பினான்.

மனம் பூராவும் வனிதாவே நிறைந்திருந்தாள்,  சின்ன பெண் என்றாலும் தான் செய்த தப்பை சொல்லி, ‘இனி இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ண மாட்டேங்க, என்னை நம்புங்க,’ என்று சொன்னாளே,பாவம் நல்லப் பெண், இந்த வயதில் கல்யாணம் பண்ணிக் கொண்டால், தன்னைப் புரிந்து நம் விருப்பப் படி இருப்பாள், அது மட்டுமில்லை, அவள் படிக்கும் நேரத்தில் தானும் படிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் குமார் .

ருத்ராவும், வனிதாவும் வீடு வந்து சேர்ந்தனர்,

‘எதிரே வந்த அம்மா, என்னடா இவ்வளவு லேட், டிபன் சாப்பிட வாருங்கள்' என்று கூப்பிட்டாள்,

'ஆமாம் அதென்ன, நீ வேறே டிரஸ் போட்டிருக்கே,காலையில் யுனிபார்மிலே தானே போனே 'என்று கேட்டார்  கற்பகம்

'இல்லம்மா, நான்தான் ஒரு பிசினெஸ் மீட்டிங் இருந்தது, அவளையும் கூட்டிக் கொண்டு போனேன், நேத்தே சொன்னேன் ஒரு டிரஸ் எடுத்து கொண்டு ஸ்கூல்லே மாத்திக்கோன்னு, அதாம்மா….  நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டாச்சு,' என்று சொல்லி விட்டு ....

தாத்தா ரூமுக்கு போனான்,

கற்பகமோ ஒரு சந்தேகப் பார்வையை அவன் மீது வீசினாள்..

அவன் தாத்தா ரூமுக்குப் போய் விஷயத்தை சொன்னான்..

தாத்தா யோசித்தார்,” ஏன் நீ நேத்தே என்கிட்டே சொல்லலே?'

'இல்லை தாத்தா, அவர்களுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் பிடித்தால் உங்களிடம் சொல்லலாம் என்றிருந்தேன், இல்லையென்றாலும் சொல்லியிருப்பேன், ஆனால் ரிசல்ட் தெரிந்தால் எதுவானாலும் ஈஸியாக எடுத்துப்பீங்க, முதலிலேயே சொன்னால் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும் அதான்,' என்றான்

'சரி! பாமிலி எப்படி?'

'பையனும், அவன் அம்மாவும் மட்டும்தான், குமார் அப்பா, கொஞ்ச வருஷம் முன்னாடியே இறந்துட்டார், பையன்  பாங்கில் ஆபிசர், இதுக்கு மேலே என்ன வேண்டும்...'

'நான் சிவேஷ், கணேஷ் கிட்ட பேசணும் அதுக்கு முன்னாடி பாட்டியிடம் பேசணும், எல்லோரும் ஏன் இப்பவே இவளுக்கு கல்யாணம் என்று கேட்பார்கள், அதற்கு ஏதாவது  பதில்யோசித்து சொல்லனும்,'

“தாத்தா, இப்படி சொன்னால் என்ன, அவள் என்னோடு பிசினெஸ் மீட்டிங் வந்திருந்த இடத்தில், அவளைப் பார்த்தவுடன் அந்தப் பையனுக்கு வனிதாவை பிடித்துவிட்டது என்று சொல்லலாமா ?“

‘நல்ல ஐடியா தான்…..சரி, இதை நீ வனிதாகிட்ட சொல்லிடு,  அதான் நல்லது, அது மட்டும் இல்லை, அந்தப் பையனுக்கும் சொல்லிடு...’ என்றார்

“பாட்டியை வரச் சொல்..” என்று சொன்னார், “நீயும் இங்கேயே இரு அவள் ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல சரியா இருக்கும்,' என்றார்

'சரி' என்று கூறிவிட்டு ,  பாட்டியை கூப்பிட சென்றான், ‘தாத்தா உங்களை உடனே வரச் சொன்னார்  பாட்டி’ என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.