(Reading time: 15 - 30 minutes)

25. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

க்ஷ்மி டிபார்ட்மண்ட் ஸ்டோர்,

சந்தோஷத்தின் கருவறையாய்,

சிரிப்பின் ஸ்வர்கவாசலாய்

Ithanai naalai engirunthai

நம்பிக்கையின் ஆதாரமாய்

நின்றது !

இந்த திட்டத்தின் மூலக்காரணமாய் விளங்கிய சங்கமித்ராவை தொடங்கி , இதற்கு உதவி புரிந்த கடைநிலை பணியாட்கள் வரை அத்தனை பேர் முகத்திலும் பூரிப்பு..நம்பிக்கை பாத்திரமான சில பேரை ஏற்கனவே பணியாற்றுவதற்காக ஏற்பாடு செய்திருந்தான் மதியழகன்… அவர்களின் கண்கள் ஷக்தியை ஆர்வமாய் ஆராந்தன.. “ இவர்தான் நம்ம புதிய முதலாளி” லேசாய் அவர்களுக்குள் பேச்சுக்கள் பரிமாறப்பட்டது..

இவர்களுக்கு நடுவில், எதையும் சிந்தையில் ஏற்றிக் கொள்ளாமல் ஷக்தியை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தாள் சங்கமித்ரா.. “ ஹேய் சங்கு,கல்யாண மேடையில சைட் அடிக்க ஆரம்பிச்சவ நீ,இன்னுமா இதை விடல?” என்று குறும்புடன் முணுமுணுத்தாள் தேன்நிலா.. அதை கவனித்து பதில்சொல்லும் நிலையில் நம்ம மித்ரா இருந்தா தானே ? இப்படியே விட்டால் சரிவராதே, என்றெண்ணி, நிலா மதியிடம் கண்ஜாடை காட்ட, அவனோ பதிலுக்கு கண்ணடித்து சிரித்தான்..

“டியூப் லைட்..சைட் அடிக்கிறத பாரேன்..”என்று வெளியில் அவள் முறைத்தாலும் மனதிற்குள் காதல் கர்வமாய் சிரித்தது..அவளை அதிக நேரம் சோதிக்காமல்

“தம்பி, ரிப்பனை கட் பண்ணுடா”என்றான் மதியழகன்.. மதியை பார்த்து புன்னகைத்துவிட்டு, “மாட்டேன்” என்பது போல, தலையசைத்தான் ஷக்தி..(அடடே என்னப்பா எப்போ பார்த்தாலும் சந்தோஷமான நேரத்துலேயே சடன் ப்ரேக் போடுறீங்க ?)

“என்ன ஷக்தி உன் வைஃப் தான் ரிப்பன் கட் பண்ணனுமா?” என்று கேலியாய் ஆரம்பித்தான் எழில்.

“ அப்போ அம்மா கட் பண்ண கூடாதா ?” என்றான் ஷக்தி.. லக்ஷ்மியின் முகத்தில் நிறைவும் புன்னகையும் போட்டியிட,

“ அம்மா மட்டும் தானா ? ஏன் எங்க சித்ரா அத்தை கூட வந்தா ஆகாதா ?” என்று மித்ராவின் தாயாரை பார்த்தான் ஷக்தி.. அவரும் புன்னகையுடன் இணைந்துகொள்ள,

“அப்பாடி..இப்போ ஓகே தானே” என்று கதிர் கேட்கவும்

“அப்போ என் தங்கச்சி ? “ என்றான் ஷக்தி.. அவனது பாவனையில் களுக்கென்று மித்ரா சிரித்துவிட,

“அப்போ என் அத்தை பொண்ணு” என்று மனைவி பக்கம் திரும்பினான் ஷக்தி..

“ அடியே வெத்தளை பாக்கு வேணுமா உனக்கு ?” என்று எழில்குரல்கொடுக்க

“அதெப்படி அக்காவை வேடிக்கை பார்க்கவிட்டு , தங்கச்சி மட்டும் ரிபன் கட் பண்ணலாம்? அப்போ வைஷூ வர வேணாமா?” என்று அவன் மீண்டும் ஆரம்பிக்க ஷக்தியின் எண்ணத்தை புரிந்துகொண்டு சிரித்தாள் மித்ரா..

“எனக்கு புரிஞ்சு போச்சு, ஆண்கள் அணி எல்லாரும் எங்களுக்கு பாடிகார்ட் மாதிரி பின்னாடி போங்க” என்றவள், தேன்நிலா, காவியா, முகில்மதி,சித்ரா,லக்ஷ்மி அனைவருடன் ஒன்றாய் நிற்க வைத்திவிட்டு

“இப்போ ஓகேயா மாமா ?” என்று மித்ரா கேட்க

“நூத்துக்கு நூறு” என்று ஆமோதித்து பாராட்டினான் ஷக்தி ..

“அட அட அட …தாங்க முடியலைடா உங்க செண்டிமண்ட்” என்று அன்பெழிலன் கண்கலங்குவதை போல நடிக்க பெண்கள்  அனைவருமே  ஒரே வேளையில் இறைவனை வேண்டிதிறப்பு விழாவை சிறப்பாக தொடங்கி வைத்தனர்..ஷக்தியின் சிறிய முடிவு அனைவரின் மனதிலும் சாரலாய் நனைத்தது.. பார்வையாளர்களாய் நின்றவர்களுக்கு கூட அவன் மீது மரியாதை தோன்றியது என்றுத்தான் கூறவேண்டும்..

பேச்சுக்கும் சிரிப்பிற்கும் , சந்தோஷத்திற்கும் குறைவில்லாமல் சற்று வேகமாகவே நகர்ந்தது அன்றைய தினம் .. மாலை நேரம் , அனைவரும் காவியாவின் வீட்டில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்க, காவியா மட்டும் அவ்வப்போது செல்போனை பார்த்து கொண்டே இருந்தாள் ..யார் கவனிக்காமல் இருந்தாலும் இதை கதிரேசன் கவனிக்காமல் இருப்பானா  ? ஓரிரு அவளை அணுகி என்னவென்று கேட்டதற்கு எதையும் கூறாமல் மறுத்து விட்டாள்  காவியதர்ஷினி..

" ஆமா அண்ணா , எப்படி இருந்துச்சு எங்க சர்ப்ரைஸ் ? உங்களுக்கு புடிச்சதா ?" கண்கள் மின்ன தமையனை பார்த்து கேட்டாள்  முகில்மதி .. வெளியில் சலனமில்லாமல் இருந்தாலும் மித்ராவிற்கும்  பதிலை தெரிந்துகொள்ள ஆர்வமாய் தான் இருந்தது ..

" சுப்பர் டா... இப்படி ஒரு சர்ப்ரைஸ் எதிர்ப்பார்க்கவே இல்லை ..நான் ரொம்ப லக்கி " என்று ஷக்தியை  போல குரலை மாற்றி இடைப்புகுந்து பேசினான் அன்பெழிலன் ..

" ஹே இது ஒன்னும் என் மாமா ஸ்டைல் இல்ல " என்று சிலுப்பி கொண்டு நின்றாள்  சங்கமித்ரா ..

" உங்க எல்லாருக்கும் நான் ஒரு விஷயம் சொல்ல போறேன் " என்றான் ஷக்தி அமைதியாய் .. பெரியவர்கள் உட்பட அனைவருமே அவனை பார்க்க , திருமணம் முடிந்ததுமே தான் அவசரமாய் துபாய்க்கு சென்றதின் காரணத்தை  அனைவரிடமும் கூறினான் ஷக்தி ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.