(Reading time: 16 - 32 minutes)

21. கிருஷ்ண சகி - மீரா ராம்

ஹே… நதிகா… என்னடி எங்க பார்த்துட்டு வர்ற?... யாரு இருக்கா அங்க?..” என அவளுடன் படிக்கும் சிறுமி ஒருத்தி கேட்டுக்கொண்டே வர, அவள் எதுவுமில்லை என தலைஅசைத்துவிட்டு உள்ளே செல்ல, அங்கே ராகேஷ் அவளைப் பார்த்து இவள் எப்படி அடிபடாமல் வந்தாள் என யோசிக்க, அவனை கோபமாக முறைத்தவள், “ராகேஷ்… சோகேஷ்…” என அவனுக்கு கேட்கும்படி சொல்லிவிட்டு சென்றாள்…

பள்ளி முடிந்ததும், வெளியே மெதுவாக நடந்துவந்து கொண்டிருந்தாள்… அப்போது காலையில் அவள் விழுந்த இடம் வந்ததும் அங்கேயே நின்றாள் சற்று நேரம்… தனக்கு உதவி செய்தவனையும் அப்போது தான் அவள் நினைக்க,

“சே பேர் கூட கேட்கலையே நாம?... நமக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணினாங்க…” என யோசித்துக்கொண்டே அவள் நிற்க,

krishna saki

“காலையில தப்பிச்சிட்ட…. இப்போ நல்லா உனக்கு அடிபடட்டும்…” என சொல்லிக்கொண்டே அவள் நடக்கும்போது குறுக்கே கால் வைத்து ராகேஷ் தடுக்க, அவள் தடுமாறி கீழே விழுந்தாள்…

அவள் கீழே விழுந்ததைப் பார்த்து சிரித்தபடி அவன் ஓடிவிட,

“டேய்… நில்லுடா… டேய்…” என்ற குரல் பக்கத்தில் கேட்க, திடுக்கிட்டு நிமிர்ந்தாள் அவள்…

எவனைப் பார்த்து பேர் கூட கேட்கவில்லை என நினைத்தாளோ அவனே தன் முன் நிற்பதைக் கண்டவளுக்கு சிரிப்பு வந்தது முகத்தில் அவளுக்கு அந்த நிலையிலும்…

முழங்காலில் லேசாக சிராய்ப்பு இருக்க, “மெதுவா… பார்த்து…” என அவளை தூக்கிவிட்டான் அவன்…

“அவன் யாரு?... உன்னை எதுக்கு தள்ளி விட்டுப் போறான்?...”

“அது….” என அவள் இழுக்க,

“சரி விடு… சொல்ல வேண்டாம்…” என்றவன், திரும்பி நடக்க ஆரம்பிக்க,

“அவன் என் கூட படிக்கிற பையன்…” என்றாள் அவள் சட்டென்று…

அவள் பதிலில் திரும்பி நின்று சிரித்தவன், “ஹ்ம்ம்… சரி… ஆனா உன்னை…” என அவன் முடிக்கும் முன்னே,

“அவனை விட நான் நிறைய மார்க் எடுத்துட்டேன்… அந்த கோபத்துல எங்கிட்ட வம்பிழுப்பான் எப்பவும்…” என்றாள்…

“ஓ… அப்போ காலையில விழுந்தது கூட இவனாலதானா?...”

“ஹ்ம்ம்… ஆமா….”

“நீ ஏன் மிஸ் கிட்ட சொல்லலை?...”

“சொன்னா அவனை அடிப்பாங்களே… அதான்…” என இலகுவாக சொல்ல, அவன் அவள் பேச்சில் புரியாமல் நின்றான்…

“அடிக்கதான் செய்வாங்க தப்பு பண்ணினா… அவன் தப்பு செய்யுறான் தான?.. பின்னே என்ன?...” என அவன் வாதிட,

“என்னால அடிவாங்குவானே… என்னால எதுக்கு அவனுக்கு அந்த கஷ்டம்?... அவன் பண்ணுற தப்பை அவனே ஒருநாள் புரிஞ்சிப்பான்….” என அவள் சொன்னதும் அவன் வியந்தான்….

சற்று நேரம் கழித்து, “சரி… அப்போ உன் அப்பாகிட்ட சொல்லு…. அவர் அவனை கூப்பிட்டு சத்தம் போட்டா அவன் திருந்திடுவான்…” என சொல்ல, அவள் கையை பிசைந்து கொண்டிருந்தாள்…

“என்னம்மா?... என்னாச்சு?...” என அவன் கேட்க

“அவர் கிட்ட சொன்னா அவனுக்கு திட்டு விழாது…. நேக்கு தான் விழும் நிறைய…” என அவள் வாடிப்போன முகத்துடன் சொல்ல, அவளின் பாஷையில் அவள் பிராமின் என புரிந்து கொண்டான் அவன்…

“ஹ்ம்ம்… சரி… அப்போ அம்மாகிட்ட சொல்லி அப்பாகிட்ட சொல்லு…” என்றதும், அவள் முகம் மேலும் வாடிப்போனது…

“என்னாச்சும்மா?... அம்மாவும் திட்டுவாங்களா?...” என அவன் அக்கறையாய் கேட்க, அவள் மெல்ல நடந்தாள்… அவனும் அவளுடனே நடக்க,

அவள் மெதுவாக அவனை திரும்பி பார்த்து, “அம்மா சாமிகிட்ட போயிட்டாங்க…” என்றதும் அவன் நடை நின்றது…

“சின்னப்பெண்ணின் மனதை கேள்வி கேட்டு கஷ்டப்படுத்திட்டேனே…” என அவன் மனம் நொந்து “சாரிம்மா….” என சொல்ல,

“பரவாயில்லை… உங்களுக்கு தெரிஞ்சிருந்தா கேட்டிருக்க மாட்டீங்கல்ல, தெரியாமத்தான கேட்டீங்க…” என அவனுக்கு ஆதரவாய் அவள் பேச, அவனுக்கு அவளின் அந்த அனுசரனையான பேச்சு பிடித்திருந்தது…

“ஹ்ம்ம்… நீ எந்த க்ளாஸ் படிக்குற?...” என அவன் பேச்சை திசை திருப்ப கேட்க

“நான் 3rd standard… நீங்க?...” என்றாள் அவள்…

“8th standard….”

“ஓ… அப்போ என்னை விட நீங்க 5 வயசு பெரியவனா?...” என தன் குட்டி கண்களை உருட்டி அவள் கேட்க, அவனுக்கு அவளின் அந்த செயல் பிடித்திருந்தது…

“ஹ்ம்ம்… சரி நீ ஏன் இப்படி தனியா வர்ற?... உன் ஃபிரெண்ட்ஸ் கூட நடந்து வரலாம்ல?...” என அவன் கேட்டதும்,

“இல்ல… எல்லாரும் அவங்க அம்மா இல்ல அப்பா கூட போவாங்க…”  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.