(Reading time: 29 - 57 minutes)

08. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

புதிர் 8

"எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் - அவசர பதிவு "

பிஜூ பொதுவாக பயந்த சுபாவம். அவனுக்கு தன்னம்பிக்கை வர வேண்டும் என்று தான் ட்ரைனிங் கோ-ஆர்டினேட்டராக போட்டது. அவன் அனுப்பிய தகவலில்,

‘என்ன நடக்குதோ!!’, என்று குழம்பிய ஆர்யமன், அங்கிருந்து கிளம்பும் சமயம், ஹர்ஷவர்தனிடம் இருந்து குறுந்தகவல் வந்தது..

“அஞ்சனா மீட் செய்தாளா? அவளை ரீச் பண்ண முடியலை!”, என்றது அந்த  தகவல்...

Puthir podum nenjam

இவன் அவள் வந்து விட்டாள் என்று பதில் அனுப்பவும்,

“FYI - என் கசின்னு காட்டிக் கொள்ள அஞ்சனாக்கு விருப்பம் இல்லை! CEOக்கு மட்டும் தான் தெரியும்!”

என்ற செய்தியையும் அனுப்பினான் ஹர்ஷவர்தன். ‘இதை அப்பவே சொல்லியிருக்கலாம்ல.... அந்த ஹீல்ஸ் என் வேட்டியை எப்படி மிரட்டிச்சு’, மனதிற்குள் அலுத்துக் கொண்டவன் கிளம்பி ட்ரையினிங் நடக்கும் அறையை நோக்கி வந்தவாறு.. அதன்  கண்ணாடி சுவரை ஊடுருவியது அவன் ஆராய்ச்சி பார்வை!

போதை வஸ்து உண்டது போன்ற தோரணையிலே பாதி மயக்கத்தில், சேரில் சரிந்து அமர்ந்திருந்த அஞ்சனாவை பார்க்க..

அந்த சமயம் தற்செயலாக திரும்பியவள்... அவனைப் பார்த்ததும், அவள் கண்களில் ஒரு குறும்பு தோன்றி மறைய,

‘அடப்பாவி!!!! அநியாயமா பிஜூவோட ஒரு மணி நேர உழைப்பை வீணாக்கிட்டியே’, என்ற கோபம் வர..

அதை அடக்கியவனாக... அந்த அறைக்குள் நுழைய..

இவனைப் பார்த்ததும் பிஜூ பீதியுடன் நடந்ததை சொல்ல வாயெடுக்க, அவனை கையமர்த்தியவன்,

“’செஷன்’னை டாகுமென்ட் செய்து இருக்கீங்க தானே?”, என்று கேட்ட படி அஞ்சனாவின் அருகே வந்து அமர்ந்து கையோடு கொண்டு வந்திருந்த லேப்டாப்பை உயிர்ப்பித்தான்...

“எஸ் ஆர்யமன்! எவ்ரி திங் இஸ் ரெகார்டட்”, என்றான் பிஜூ நடுங்கிக் கொண்டே...

“டேட்டா கேபிளும்,  கேம்கார்டரையும் கொடுத்துட்டு கிளம்புங்க!”, என்று அவன் சொல்லவும், அதை  செய்து விட்டு அங்கிருந்து பிஜூ கிளம்ப..

காம்கார்டரை ஓட்டிப் பார்த்தான்.. அதில் இவள் டீயில் ஏதோ கலந்து குடிப்பதைப் பார்த்து, பிஜூ என்னவென்று கேட்க இவள் ஓபியம் என்று சொல்லி விட்டு,

“நான் ட்ரக் அடிக்.. இது இல்லைன்னா கை எல்லாம் கிடுகிடுன்னு நடுங்கிடும்”, என்று அவனிடம் சொல்வதையும்... அதைக் கேட்டதும் பிஜூ பதட்டமாகி, டென்ஷனுடன் தனது ட்ரையினிங் ப்ரெசென்ட்டேஷன்னை தொடர்வதையும் பார்த்து நடந்ததை புரிந்து கொண்டவன்...

பின்  அதை கணினியோடு இணைத்து, விடியோவை எடிட் செய்து அதன்  ஒலி வடிவத்தையும் பிரித்தெடுத்தான்..

இதையெல்லாம் செய்யும் பொழுது மறந்தும் அஞ்சனாவின் பக்கம் திரும்பவில்லை அவன்... அவ்வப் பொழுது அவளிடம் இருந்து வந்த  உளறல் சத்தத்தையும் கண்டு கொள்ளாது அமைதியாக இருந்தவன், இப்பொழுது தான் வாய் திறந்தான்..

கணினி மீது வைத்த கண்ணை அகற்றாமல்,

“உங்க போன்ல, நான் அனுப்பின இமெயில்லை ஓபன் பண்ணுங்க”, என்றான்  அதிகாரக் குரலில்...

அஞ்சனாவோ இன்னும்  போதை தெளியாமல்???!!!

“வாஆஆஆஆ......ட்ட்ட்”, என்றாள் வாய் குளற...

“நல்லா தான் நடிக்கிறீங்க! இப்போ ஈமெயிலை செக் பண்ணுங்க!”, என்று  அவன் சொன்னதும், அவள் முகத்தில் திகைப்பு!!

‘ஹூம்.. நடிக்கிறேன்னு எப்படி கண்டுபிடிச்சான்? அஞ்சு செல்லம்  இவனுக்கு கொஞ்சம் வெயிட் ஆக்டிங் கொடுடி...’, தனக்குள்ளே தீர்மானித்தவள்..

“என...க்கு இன்...னொர்ர்ர்ர் டீஈஈஈ ப்ளீஸ்ஸ்....”

என்று சொல்லிக் கொண்டே.. கைகள் நடுங்க, தனது பையில் இருந்து ஒரு சிறு கவரை எடுத்துக் கொண்டே,

“டோப் போட்டட்ண்ணும்.. ப்ளீஸ்.. டீஈஈஈ”, என்று வாய் குளற சொல்ல..

இப்பொழுது அவள் பக்கம் திருஅவள் கையில் இருந்ததை பறித்தவனுக்கு.. அது என்னவென்று திறந்து பார்க்கும் முன்னே அவன் நாசியை தொட்டிருந்தது அதன் வாசனை..

அது போதுமே அவள் வைத்திருக்கும் பொருள் என்னவென்று அறிய.. அந்த பொருள் என்னவென்று மூளை அறிந்ததும்... தவிக்கிறது இவன் இதயம்....

பப்பியின் முத்து முத்து எழுத்துக்களை சுமக்கும் சிப்பியாகிப் போன இதயத்திற்குள் தேடி பார்க்கிறான்... அவள் அறிமுகம் கிடைத்த அன்று விடையை தேடியவன்.. இன்று கேள்வியைத் தேடுகிறான்..

மனம் முழுதும் பரப்பி கிடக்கும் பப்பியின் புதிர்களிலிருந்து... அவளின் முதல்  புதிர் பிரதானமாக zoom ஆகிறது இவன் மனத்திரையில்...

மணக்க பிறந்தவள் நான் - பூவல்ல.. பூவையும் அல்ல..

கனியும் அல்ல.. கனி தரும் மரமும் அல்ல..

பெண்ணின் கருப்பை போல - என்னுள் கருவில்லை..

நான் யார்? கண்டுபிடி கண்டுபிடி...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.