(Reading time: 3 - 6 minutes)

09. நறுமீன் காதல் - அனு.ஆர்

Narumeen

பழகுதமிழில் புழங்காத சில வார்த்தைகளுக்கு tool tip (கோடிட்ட வார்த்தைகள்) ஆக அருஞ்சொற்பொருள் கொடுத்துள்ளேன். நன்றி 

நறுமீன் செஷாங்கன் நினைவில் நலிதல்

பகலவன் பொழுதில்

பாராளும் அவையில்

பார்வேந்தன் அருகில்

பனியாய் உருகி

பல் இதழ் மலரின்

பரவி தேயும்

பாங்கு நறுமணமாய்

பரியாள் தேய்ந்தாள்

பாராள்பவன் பாரததால் (1)

 

ஊர் {tooltip}துஞ்ச{end-link} தூங்க{end-tooltip}

உளி துஞ்ச

{tooltip}உரவோர்{end-link}  அறிவுடையோர்{end-tooltip} துஞ்ச

{tooltip}உளம்பும்{end-link}  ஒலி எழுப்பும்{end-tooltip} யாவும் துஞ்ச

{tooltip}உண்கண்{end-link}  மையிட்ட கண்{end-tooltip} மாது

{tooltip}உவனை{end-link}  அவனை{end-tooltip} {tooltip}உள்ளாது {end-link} நினைக்காது{end-tooltip} துஞ்ச

உளதோ வழியே

உரைப்பாய் உள் நெஞ்சென்றே

உவப்பற்ற {tooltip}எல்லில்{end-link}  இரவில்{end-tooltip}

உழன்ற படி {tooltip}உவள்{end-link}  அவள்{end-tooltip} துஞ்சாதே உருக

உரு மெலிந்தாள் உன்னதன் பாவை (2)

 

நறுமீனை அவைக்கு வராதே என செஷாங்கன் சொலல்

அலை சூழும் அவனி  அரை ஆள்பவன்

ஆயிரமாயிரம் யோசனை தூரம்

இயல்பாய் பார்ப்பவன் இடறின்றி காப்பவன்

ஈண்டு இவனருகில் இருக்கும் இல்லாள்

{tooltip}உணங்கல், {end-link}  உருகுதல்{end-tooltip} உவப்பின்றி மெலிதல்,

ஊண் உருகி நலிதல் காணானோ?

என் என்று {tooltip}அறியினும் {end-link} அறியவில்லை ஆயினும்{end-tooltip}

{tooltip}ஏவல்{end-link}  வேலை{end-tooltip} குறைப்பின்

{tooltip}ஐயனை{end-link}  தலைவனை{end-tooltip} விலக்கின்

{tooltip}ஒண் பூ{end-link}பிரகாசமான மலர்{end-tooltip} பாவை {tooltip}இன்னாது {end-link} துன்புறாது {end-tooltip}

ஓரளவேனும் உவக்கும்

{tooltip}ஔவியம்{end-link}  பொறாமை{end-tooltip} நீக்கிய அகம் போல் சுகிக்கும்

அஃதெண்ணி அவை {tooltip}வரேல்{end-link}  வாராதே{end-tooltip} என்றே நீக்கினன் (3)

 

காரணம் புரியாமல் நறுமீன் குழப்பம்

மருண்டனள் பாவை

இருண்டனள் இன்னுமாய்

சுருண்டனள் சூது ஏதென்றெண்ணி

துடித்தனள் துங்கவனைக் காணாமல்

வெடித்தனள் நெஞ்சுக்குள்; ஆயினும்

வடிந்தனள் நீரற்ற வெள்ளமாய்

சேடியவள் சொல் செய்தியில்

அடைந்தனள் அருங்கடி அகலாது அணங்கிவள் (4)

 

தோழி சொன்ன சதி செய்தி

ஆங்கொன்று கேட்டேன்

அகோர செய்தியொன்று

ஓங்கு நிலை மதில் புறம்

ஒளிந்திருந்த மனு இருவர்

மன்னவனை மாய்த்திடவே

மறைந்து நின்றே தாக்கிடவே

செய்திட்டார் சதியொன்று

செஷாங்கனை சாய்த்திடவே (5)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.