(Reading time: 26 - 51 minutes)

25. என் உயிர்சக்தி! - நீலா

ன் இடது கையால் பலம் கொண்ட மட்டும் முயற்சித்து பிரபுவை தள்ளிவிட்டாள் குழலீ.

ஸ்ஸ்ஸ்...ஆஆஆஆ' - என்ற முனகலோடு அவனை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள்.

என்ன முறைக்கற முட்டகண்ணி.......எவ்வளவு நாள் தான் நானும் பொருமையாவே போறது சொல்லு...என்ன சொல்றது புரியுதா?? எத்தனை நாள் நானும்தான் உன் இஷ்டபடியே உன்னோட ஸ்கிரிப்ட் படியே வாழ்றது! கொஞ்ச நாள் இந்த டேரக்டர் ஸ்கிரிப்ட் படியும் வாழலாம்...எப்படிடீ இப்படி விடாம பேசிட்டே போற? அதுவும் முழுசா எதையும் கேட்காம... அட்லீஸ்ட் புரிஞ்சிக்கவாது செய்யலாமே? இனி இப்படி விடாம பேசு... உன் பேச்சை நிறுத்த இதே வழி தான்!' என்று அவன் கண்சிமிட்ட

En Uyirsakthi

மௌனம் மட்டுமே பதில் அவளிடம்! அவனையே பார்த்து இருந்தவள் கண்களில் கண்ணீர் சேர்ந்தது. பிரபு அருகில் வருவதற்குள் அழ தொடங்கியிருந்தாள் பூங்குழலீ.

ஏய் சக்தி! என்னடீ ஆச்சு? ஏன் அழற?? சொல்லுடீ...' என்று அவள் முகம் பற்ற அவன் கையை தட்டிவிட்டாள் குழலீ.

கிட்டவராதீங்க! வராதீங்க னா வராதீங்க... அண்ட் டோண்ட் டச் மீ!

என்னடீ பிரச்சனை உனக்கு? இப்ப சொல்ல போறியா இல்லையா??

நீங்க தான் பிரச்சனை! முதல்ல இந்த 'டீ' போட்டு பேசுற பழக்கத்தை நிறுத்தறீங்களா?

சரி சொல்லுங்க மேடம்! நான் என்ன செய்தேன்?

என்ன செய்யல?? எனக்கு எவ்வளவு வலிக்குது தெரியுமா??

எங்கடா வலிக்குது?? டாக்டரை கூப்பிடவா??'என்று பதட்டமடைந்தான் பிரபு. 

'ஹம்ம்.. இதிலேல்லாம் ஒரு கொறச்சலும் இல்ல! முழிய பாரு ஒன்னுமே தெரியாத பாப்பா..' என்று மனதில் மானசீகமாய் திட்டினாள் கணவனை. 

எனக்கு வேற எதுல கொறச்சல்?? என்ன பாக்குற? என்னடா மனசுல நினைச்சத இந்த பிகே அப்படியே சொல்லுறானேனு பார்க்கறியா??

ப்ச்ச்...

எதுக்குடீ சலிச்சுக்கிற??' என்று துடிக்கும் அவள் உதடுகளை வருடினான். அவள் கைகளை தட்டிவிட்டாள்.

எனக்கு வலிக்குது! தயவுசெய்து கையை எடுங்க! எதிலுமே பொருமையில்ல! எல்லாத்தையும் தடாலடியாக செய்யனும். 

அப்போ பொறுமையா நிதானமா எதையும் செய்தா பரவாயில்லையா உனக்கு? சாரிடா ரொம்ப ஹார்ஷா நடந்துகிட்டேன்! இனி பொறுமையா நடந்துக்கறேன்!

....

சொல்லு? ஏன் அமைதியா இருக்கறீங்க மேடம்?

எனக்கு மனசு வலிக்குது பிரபு! எனக்கு சத்தியமா பைத்தியமே பிடிச்சிடும்...தயவுசெய்து என்னை விட்டுடூங்க பிரபு! நான் உங்களுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்... உங்க வாழ்க்கை முறை வேற எனது வேற... எனக்குனு சில கொள்கைகள் கோட்பாடுகள்... வாழ்க்கை இப்படிதான் வாழனும்னு சில நெறிமுறைகள் வெச்சிருக்கேன்...உங்களுக்காக எல்லாம் அதை மாத்திக்கமுடியாது.. 

உன்னை யாரு மாத்திக்க சொன்னா? சரி.. அப்படி நான் என்ன நெறிமுறை தவறி வாழுறேனு சொல்லறியா? அப்படி நான் வாழ்ந்தா என்னை சீர் படுத்த வேண்டியது மனைவியான என் குழலீயோட கடமை... உன் கடமையை தவற போறியா நீ?

ப்ச்ச்...

உன்னை எங்கேயும் விட முடியாது குழலீ.... இந்த வாழ்க்கையில நம்ம வாழ்நாள் முழுதும் நாம ஒன்னா தான் கழிக்கபோறோம்... எதுக்காகவும் யாருக்காகவும்... ஏன் உனக்காகக்கூட உன்னை விட்டுக்கொடுக்க நான் தயாராயில்ல... புரியுதா? - சற்றே கடுமையிருந்தது அவன் குரலில்!

நான் இங்க இருந்தா தான் உனக்கு பிடிக்காதே... நான் வெளியில இருக்கேன்... நீ ரெஸ்ட் எடு! - என்று வெளியில் எழுந்து சென்றுவிட்டான்.

ற்கனவே ஏகப்பட்ட குழப்பத்தில் இருந்தவள் பிரபுவை ஏர்போர்டில் பார்த்த அதிர்ச்சி, அடுத்து யாழினி அரங்கேற்றிய நாடகம் என்று மேலும் அதிர்ச்சி கொடுக்க அவர்களை பார்த்த நொடியில் நின்றவள் அங்கே வந்து கொண்டிருந்த டிரக்கை கவனியாது நின்றுவிட்டாள். இவள் தீடீரென்று நடுவில் நின்றதால் எவ்வளவு முயற்சித்தும் அந்த டிரக் குழலீயின் மீது மோதிவிட்டது. விழுந்தவள் காலினில் ஏர் லைன் பிராக்சர், கையினில் ஏர் லைன் பிராக்சர் அண்ட் லிகமண்ட் டியர்! இதை தவிர தலையில் ரத்த காயம் அதுவும் வெளியில் மட்டும் தான். உள்ளே எந்த பிரச்சனையும் இல்லை என்றது மருத்துவ அறிக்கை! 

நினைவு திரும்பியதிலிருந்து பிரபு நடந்துக்கொள்ளும் முறையை பார்த்ததும் இன்னும் குழம்பி போனாள் பெண்ணவள். தன் கொள்கைகள் எல்லாவற்றையும் தன் ஈகோவையும் தூக்கி போட்டுவிட்டு அவன் காலடியில் கிடக்க... அவன் அன்பில் கரைய...தன்னவனாய் மாறிட பெண் மனம் துடிக்கிறது...ஆனால் அறிவு அதை ஏற்க மறுத்து அவள் மனதுடன் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தது. 

அவனின் அந்த இதழ் ஒற்றல் தேனாய் தித்திதது பெண் மனதில்..அவனை விலக்கிவிட அவள் மனதால் முடியவில்லை..அந்த நொடி அப்படியே உறையாதா என்று அவள் நினைத்த மாத்திரம் அவள் அறிவு அவளை அடித்து அமர வைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.