(Reading time: 9 - 18 minutes)

10. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்

விஷ்ணு அனுவின் முகத்தைப் பார்க்காமல் கீழே குனிந்தவாறு “ஸாரி” என்றான்.

அனு இதை எதிர் பார்க்கவில்லை. அவன் ஏதேதோ பேசுவான், திட்டிவிடலாம் என்றுதான் தன்னை தயார் செய்து கொண்டு அவனிடம் பேசினாள் ஆனால் அவன் இதைக் கூறுவான் என்று எதிர்பார்க்கவில்லை.

அவள் மீண்டும் “என்ன” என்று தன் காதுகளை நம்ப முடியாமல் கேட்டாள்.

unakkaga mannil vanthen

“என்னை மன்னீச்சிடுங்க அனு, உங்களுக்குத் திருமணம் நிச்சயம் ஆனது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்த நான் இங்கே வந்திருக்கவே மாட்டேன்.  காலையில் நடந்த அனைத்துக்கும் ஸாரி” என்று தலையை குனிந்து கொண்டே கூறினான்.

அனுவிற்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை, மௌனமாக இருந்தாள். அவளின் அமைதி புரியாமல் தலையை நிமிர்ந்து அனுவின் முகத்தைப் பார்த்தான் விஷ்ணு. இம்முறை அவளின் முகத்தைப் பார்த்து “என்னை மன்னிச்சிடீங்களா?” என்று மென்மையாகக் கேட்டான்.

அனுவிற்கு என்ன செல்வது என்று தெரியவில்லை, இந்தச் சமயத்தில் திவ்யா இருந்திருக்கக் கூடாதா என்று அனுவின் மனம் தன் தோழியின் உதவியை நாடியது.

எதுவும் பேசாமல் பலமாக யோசித்துக் கொண்டிருந்த அழகிய முகத்தையே உற்றுப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.

“ச்ச எண்ணமா இருக்கா, இப்போ ஸாரினுக்  கேட்டதிற்குப் பதிலா லவ் யுனு சொல்லிருக்கலாமோ? அந்த பத்ர காளி திவ்யா கூட இங்க இல்ல. இப்ப கூட என்ன  கெட்டுப் போச்சு, டக்குனு லவ் யு சொல்லிடளாமா?” விஷ்ணு மனதில் சல சலப்பு.

“டேய் லூசா நீ, அவங்க தான் அவ்வளவு தெளிவா சொல்லிடாங்க இல்லை கல்யாணம், நிச்சயம் ஆயிடுச்சினு அப்புறம் என்ன?. ஒழுங்கா எதற்கு வந்தியோ அதை மட்டும் சொல்லிட்டு போ, வினாக எதையும் யோசிக்காத” என்று தனக்கு தோன்றிய அந்த எண்ணத்திற்காகத் தன்னை தானே திட்டிக் கொண்டான்.

இப்படி ஒரு அழகு பதுமை, அதுவும் சிறுவயதில் இருந்து தன் உலகமே அவள்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு பெண் எதிரில், அதுவும் இவ்வளவு அருகில் இருக்கும் போது அப்படி மனம் யோசிக்கத்தானே செய்யும், விஷ்ணு மட்டும் அதற்கு விதிவிலக்கா?.

இதற்கு மேலும் இங்கு நின்றிருந்தால் கண்டிப்பாக வாய் தவறி உளறி விடுவோம் என்று பயம் வர “அனு எதாவது சொல்லுங்க, என்னை மன்னிச்சிட்டீங்களா?” மீண்டும்க் கேட்டான்.

அவளும் எதுவும் பேசாமல் “ஆம்” என்பது போல தலை அசைத்துவிட்டுத் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

“அனு ஒரு நிமிடம்” நடக்கத் தொடங்கியவளை மீண்டும் தடுத்து நிறுத்தினான்.

அவளும், முடிந்தது என்று நினைத்தால் என்ன இவன் முடிக்காமல் தொடங்குகிறான் என்று யோசித்துக் கொண்டே திருப்பி அவனைப் பார்த்தாள்.

“அது வந்து, நான் இன்னும் 3 மாசத்தில் ரொம்ப துரமான இடத்துக்கு போகப் போறேன். அதுவரைக்கும்….” இக்கு வைத்து நிறுத்தினான்.

இவன் எங்கே போனா நமக்கு என்ன. இதை எதுக்கு நம்மகிட்ட சொல்றான் என்று மனதில் நினைத்துக் கொண்டு, “உங்களுக்கு என்னதான் வேண்டும், ஏன் இப்படி என்னைத் தொந்தரவு செய்றீங்க” சற்று கோவமாகவே கேட்டாள். அவளின் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கும் அல்லவா?.

“தயவுசெய்து கோபப்படாதீங்க அனு. காலையில் உங்க ஃபிரெண்ட் பேசும்போது இனி உங்களை நான் பார்க்க கூடாது என்று சொன்னாங்க. ஆனால் உங்களைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. 20 வருடப் பழக்கம் இல்ல, டக்கென்று மாற்ற முடியாது” அவன் கூறி முடிப்பதற்குள் இடையில் குறுக்கிட்டாள் அனு.

“என்ன 20 வருடமா? என்ன சொல்றீங்க. நான் உங்களை ஒரு 5-6 மாசமா தான்ப் பார்க்கிறேன். யாருங்க நீங்க, என்னை எப்படி  உங்களுக்குத் தெரியும்” அவன் கூறியதை நம்பமுடியாமல் கேள்வி கனைகளை தொடுத்துக் கொண்டே போனாள் அனு.

“5 – 6 மாசமா, அடி பாவி. 20 வருசம் அனு . இந்த 20 வருடத்தில் உன்னைப் பார்க்காத நாளே இல்ல. இப்படி உன் கூட நின்னு பேசமாட்டோமா? என்று ஏங்காத நிமிஷமே இல்ல, நீ என்னடான 5 – 6 மாசமென்று அவ்வளவு ஈஸியா சொல்லிட்டே” என்று தன் விதியை நினைத்துக் கொண்டு பெருமூச்சுவிட்டான் விஷ்ணு. வேறு என்ன செய்ய முடியும் அவனால், இதை எல்லாம் அவளிடம் கூற முடியுமா?. அதைக் கூறி மட்டும் என்ன ஆகப் போகிறது.

“ப்ளீஸ் அனு என்னை எதுவும் கேட்காதீங்க. இப்போ அதைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப் போவது இல்லை.  உங்களை நான் துரத்தில் இருந்து பார்க்கிறதுக்கு மட்டும் அனுமதி குடுங்க. கண்டிப்பா நான் உங்களை எந்தத் தொந்தரவும் செய்யமாட்டேன்” பாவமாகக் கேட்டான் விஷ்ணு.

விஷ்ணு பேசுவதில், தலையும் புரியாமல், வாலும் புரியாமல் நின்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள் அனு. இவன் என்ன கூறுகிறான்?, அதற்குத் தான் என்ன கூறுவது? என்று எதுவும் தெரியாமல் அவனையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். 20 வருடம் என்றால், என்னைச் சின்ன வயசில் இருந்து இவனுக்குத் தெரியுமா?. இவன் உண்மையைத்தான் பேசுறானா? இல்ல நம்மைக் குழப்ப சதி எதுவும் செய்கிறானா?. ச்சீ பார்ப்பதற்கு அப்படித் தெரியவில்லை.  அது மட்டும் இல்லாமல், தூரத்தில் இருந்து பார்ப்பதற்குத்தானே அனுமதி கேட்கிறான். இவன் நம்மைத் தொந்தரவு செய்யாத வரையில் நமக்கு ஒன்றும் ஆகப் போவது இல்லை. “ஓகேனு” என்று சொல்லிவிட்டு இந்த இடத்தை விட்டு முதலில் கிளம்புவோம், அப்பா பார்த்தால் கண்டிப்பாகப் பிரச்சனைதான் என்று பலதரப்பட்ட எண்ணங்கள் அனுவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது, அது அப்படியே கண்ணாடி போல் அவள் முகத்திலும் தெரிந்தது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.