(Reading time: 14 - 28 minutes)

09. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

புதிர் 9

Resume of Bharanidharan”, என்ற மின்னஞ்சல் செய்தி இவள் கண் முன் பட்டது.. இவள் கண் முன் பட்டதை ‘ரெஸ்யூம் ஆஃப் ....’, என் மனதிற்குள் படிக்க ஆரம்பித்தவள்.. அதன் நீளத்தை கண்டதும் பின்வாங்கினாள் - படிப்பதில் அவ்வ்வ்வளவு ஆர்வம்!!!!!

‘இவ்வளோ நீளமான பேரைப் படிச்சிருந்தா அஞ்சனா எப்பவோ டாக்டராகி இருப்பா!’, என்று எண்ணிக் கொண்டே ஆர்யமனிடம் நிமிர்ந்தவள்,

“ஏதோ மிஸ்டர் B ரெஸ்யூம் வந்து..”, என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த அலைபேசி ஆர்யமன் கையில் இருந்தது..

Puthir podum nenjam

மூண்ட கோபத்தால் அவன் அனல் பார்வை வீசினான் - தன் சொந்த விஷயங்களில் தலையிடுகிறாளே! ஆனால், அவன் வாயெடுக்கும் முன்பே,

“அஞ்சனா!!!! சீக்கிரம் வருவீங்களாம்.. சுகுமார் கூப்பிடுறார்”, என்று  தினேஷ்  அவசரமாக அழைக்க...

இதற்கிடையில்.. அஞ்சனாவின் கண்கள் பார்த்ததை கருத்தில் பதிக்காமல் போனாலும்.. ‘மிஸ்டர் B’ என்றதும்... உணர்வில் பதிந்த பரணிதரன் என்ற பெயர் நினைவிற்கு வந்திருந்தது அஞ்சனாவிற்கு... தினேஷ்ஷை பார்த்து, ‘இதோ வந்திடுறேன்...’, என்று சைகை காட்டி கிளம்ப ஆயத்தமானவளுக்குள் ஒரு வித தவிப்பா... ஆர்வமா.. இல்லை இரண்டுமேவா தெரியவில்லை.. ஆர்யமனை நோக்கி,

“ஆர்யா... அந்த மிஸ்டர் பி... பரணிதரன். பரணி நட்சத்திரம், மேஷ ரா..........???!!!”, என்று கேட்கும் பொழுது  எதிரே நின்றவன் ரௌத்திர மூர்த்தியாய் மாறிக் கொண்டிருப்பதை கண்டதும் உள்ளூர பயம் உருவாக இவள் குரல் மெல்ல மெல்ல தேய்ந்து முற்றிலுமாய் காணாமல் போக...

அப்பொழுது தூரத்தில் ஆரம்பித்த “ஜல்தி(சீக்கிரமா போ!) அஞ்சனா”, என்ற தினேஷ்ஷின் குரல் அவளை நெருங்கியிருக்க... பார்வையை அவனிடமிருந்து அகற்றி விட்டு ஹாலிற்குள் ஓடினாள். ஓடும் பொழுதே  அவள் மனமும் ஓடியது.. தெய்வத்தைத் தேடி...

‘பெல்லி பாய்.. அந்த பரணிதரனை கண்ணில் காட்டு’, என்ற வேண்டுதலுடன்..

“ஆர்சி... வா...  ப்ரோகிராம்ஸ் ஸ்டார்ட் ஆகிடுச்சு..”, என்று தினேஷ் ஆர்யமனையும் கிளப்ப, அவனுடன் அந்த ஹாலிற்குள் நுழையும் பொழுது...

“மேக்ஸ்சாஃப்ட்டின் சார்ப்பாக நடக்கும் இந்த கலாச்சார விழாவில், அழகிய தமிழ் மகன் மற்றும் அழகிய தமிழ் மகள் பட்டத்திற்கு தகுதியானவர்கள் யார் என்பதை எஸ். எம். எஸ். மூலம் அனுப்பி வைங்க”, என்ற அறிவிப்பு வர.... வேகமாக ஆர்யமனிடம் திரும்பிய தினேஷ்,

“டமில் ஆளுக்கு தானே போடுவாங்க ஓட்டு! மே (நான்) டக் அவுட் ஆகாம ஏக் ஒட்டு!”, என்று  ஒற்றை விரலை காட்டி தினேஷ்ஷின் நச்சரிப்பு தாங்க முடியாமல் தன் அலைபேசியின் திரையை தொடப் போனவனுக்கு...

அஞ்சனா அதில் பதித்த முத்தங்கள் நினைவுக்கு வர....  பின்வாங்கின அவன் விரல்கள்...

‘சே.. இதை முதல்ல துடைக்கணும்’, என்று தனக்குள் சலித்துக் கொண்டவனின்  எண்ணத்திற்கு தடையாக அவன் முன் வந்து நின்றார் நிறுவன டெக்னாலஜி டைரக்டர்.

டெக்னாலஜி விஷயங்களில் மேலோட்டமாக அறிந்து கொண்டு தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியில் எல்லோரிடமும் பேசுபவரால், ஆர்யமனிடம்  அப்படி பேச முடியாது - விவரம் தெரிந்தவனாயிற்றே! அதனால், சந்தர்ப்பம் கிடைத்தால், தன் பதவி அதிகாரத்தை  வைத்து அவனை மட்டம் தட்ட நினைப்பார். 

“ஹலோ ஆர்யமன் உங்ககிட்ட ஒரு நிமிஷம் பேசலாமா!!”, என்று அவர்  கேட்டதும் நாகரிகம் கருதி தினேஷ் கழண்டு கொள்ள...

அவர் எதுக்காக வந்திருக்கிறார் என்பதை யூகித்த பொழுதே அவர்,

“நீங்க ட்ரையிணீஸ்ஸ கேம் விளையாட என்கரேஜ் செய்றீங்களாமே!”, என்று ஆரம்பித்து குற்றப் பத்திரிக்கை வாசிக்கும் பொழுதே

‘அதுக்குள்ளே பத்த வைச்சிட்டியா முகுந்த்..........’

முட்டாள்த்தனமான கேள்விகள் என்றாலும் அதை உடல் மொழியில் கூட காட்டாது நிதானித்து, கூர்மையாக அவரைப் பார்த்தவன், அவர் முடிக்கும் வரை காத்திருந்து விட்டு பதில் தந்தான். இவன் தெளிவான பதில் அவர் சந்தேகத்தை தீர்த்து விட்டது என்பதை அங்கிருந்து அகலும் பொழுது அவன் தோளை தட்டிய விதத்தில் புரிந்தது ஆர்யமனுக்கு...

தூரத்திலிருந்து இதை வெறித்த முகுந்த்திற்கும் புரிந்தது. அவன் மனம் பொறாமையில் கொதிக்க.. ஆர்யமன் மனம் ஆற்றாமையில் கொதித்தது.

அவமானங்களை எதிர்கொள்வான். ஆனால், அவநம்பிக்கையை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியாது!

‘எந்த மாதிரி இடத்தில் வைத்து, எதைப் பற்றி பேசுகிறார்! இவருக்கு C பொசிஷன்னா??!!!’, என்று உள்ளுக்குள் புகைந்தவன்.. இதற்கு காரணம் அந்த அஞ்சனா!

‘காஞ்சனா நீ மட்டும் என்கிட்ட சிக்கு!!..... அப்புறம் இருக்கு!’, என்று முறுக்கியவன், மறந்தவாக்கில் அலைபேசியை சட்டைப் பைக்குள் போட்டு விட...

அதில் பதிந்த அவள் முத்தங்கள் உரிமையானவனின் நெஞ்சத்தை தொட்டு தொட்டு உரசுவதை அறியாமல்... அந்த கூட்டத்தில் அவளை தேட... அவள் அவன் விழியை எட்டும் முன்னே அவள் மொழி அவன் செவியை எட்டியது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.